திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!! (Post No.3267)

gourd-mask-1

Written by London Swaminathan

 

Date: 19 October 2016

 

Time uploaded in London: 8-44 AM

 

Post No.3267

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

 

வெள்ளைக்காரர்கள் நரிகளுக்குப் பிறந்தவர்கள். திராவிடர்களைப் புகழ்வது போல நிறையவே திட்டிவைத்துள்ளார்கள் முதலில் போண்டா மூக்கு, முண்டக்கண்ணூ, சுருட்டை முடி, கருப்புத் தோல் உள்ளவர்கள் எல்லாம் திராவிடன் என்று எழுதினான். பின்னர் திராவிடர்கள் மத்தியதரை கடல் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று எழுதினான். பின்னர் பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்று எழுதினான். அப்புறம் இந்த இந்தியாவில் பார்ப்பனர்களைத் தவிர உள்ளா எல்லா ஜாதிகள் பற்றியும் பிட்டுப் பிட்டு வைத்து, இவை எல்லாம் திராவிடர்கள் வழக்கம் என்று எழுதி வைத்தான். கள்ளர், மறவன், சாணார், குயவர், குறவன் பள்ளன், பறையன் இவர்கள் பற்றி எல்லாம் வெள்ளைக்காரன் எழுதியதைப் படித்தால், மனு தர்ம சாத்திரம் எழுதிய மனுவுக்கு மாலை போட்டு நீதான் ஐயா நல்லவன் என்று சொல்லிவிடுவார்கள்.

என் கருத்து: வெள்ளைக்காரன் எழுதிய எல்லாம் தப்பு. நிற்க.

 

 

கோண்ட் என்னும் திராவிடர்களின் இரத்த பலி — நரபலி – மனித யாகம் பற்றி ஆர்தர் மைல்ஸ் எழுதியதைக் காண்போம்:–

 

 

“கோண்ட் இன மக்கள் திராவிடர்கள்; இவர்கள் ஒரிஸ்ஸா, ஆந்திரம், வங்கம், மத்திய இந்தியாவில் வசிக்கின்றனர்.

இவர்கள் இரத்த பலி கேட்கும் ‘பாரி பெண்ணு, பேரா பெண்ணு’ ஆகிய , கடவுளருக்கு மனிதனைப் பலி கொடுப்பார்கள் ஆனால் அரசாங்கம் இதைத் தடை செய்துவிட்டதால் இப்பொழுது ஆடுகளையும், எருமைகளையும் பலி கொடுக்கிறார்கள். 1860 ஆம் ஆண்டு வரை மனித பலி நடந்து வந்தது. இந்த பலி கொடுக்கும் சடங்கிற்கு ‘மரியா’ என்று பெயர்.

kondh-implements

Meriah Post

மரியா சடங்கு

ஒரு ஆறு அடி உயர கம்பின் மேலே சிலுவை போல ஒரு குறுக்குச் சட்டம் இருக்கும். அதைத் தரையில் ஊன்றி வைத்து பலி கொடுக்கும் மனிதனின் முடியை மேலே கட்டித் தொங்க விடுவார்கள் அவனுக்குக் கீழேயே அவனைப் புதைக்க ஒரு குழியும் தோண்டி வைத்துவிடுவர். நாலு பேர் அந்த மனிதனின் இரண்டு கைகளை யும் காலகளையும் பிடித்துக் கொண்டு நிற்பர். நரபலி கொடுக்கும் பூசாரி நீண்ட உச்சாடனம் செய்வார். அதே நேரத்தில் அவனது முதுகிலிருந்து கத்தியால் வெட்டி சதையை எடுப்  பார். இந்த மரியா தூண்களில் ஒன்று சென்னை மியூசியத்தில் காட்சியில் உள்ளது.

 

மனிதனின் சதையைச் சாப்பிடும் கடவுள்— கோண்ட் இன மக்களுக்கு ஆயுதமும் வெற்றியும் வழங்குவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ராஜா மற்றும் ராஜாங்கத்திடமிருந்து தங்கள் ஜாதியைக் காப்பாற்றும் பிரார்த்தனை அவர்களுடைய பிரார்த்தனையில் முக்கிய இடம் வகிக்கிறது.

 

மனித பலி முடியும் போது பூசாரி பினவரும் வசனங்களைச் சொல்லுவார்:– துக்கப்படாதே. கடவுள் உன்னை உடனே சாப்பிட்டு விடுவார். உன்னுடைய பெற்றோர்களிடமிருந்து உன்னை விலைக்கு வாங்கினோம். உன்னை பலியிடுவதற்காகவே, தெரிந்தே உன்னை எங்களுக்கு விற்றார்கள். ஆகையால் எங்கள் கைகளில் பாவம் ஒட்டாது. ஆனால் உங்கள் பெற்றோர்களின் தலையில்தான் பாபம் விழும்’. இப்படிச் சொல்லி முடித்தவுடன் அந்த ஆளின் தலையையும் ஒரே வெட்டாக வெட்டி விடுவார். உடல் மட்டும் கீழே குழியில் விழும். தலை முடியுடன் கம்பததில் கட்டப்பட்டதால் அப்படியே தொங்கும். அதை மிருகங்கள் சாப்பிட்டு விடும். அந்த ஆளை வெட்டிய கத்தியை அந்தக் கம்பத்திலேயே குத்திவைப்பார். இதை தொடர்ந்து இன்னும் இருவரைப் பலி கொடுக்க இப்படிச் செய்வார். ஒவ்வொரு முறையும் மூன்று ஆட்களைப் பலி கொடுப்பர்.

 

இந்த நரபலியைக் காண பெரிய கூட்டம் காத்திருக்கும். அந்த ஆளின் முதுகுச் சதையை வெட்டியவுடன் எல்லோரும் நரபலி ஆளை நோக்கி ஓடிவருவர். இந்தச் சடங்கிற்காகவே கைகளில் விசேஷமாக அணிந்திருக்கும் வளையங்களால் அவன் தலையை உடைப்பர். அப்போதும் அவன் உயிர் போகாவிடில் ஒரு மூங்கில் கம்பை இரண்டாகப் பிளந்து அதற்கிடையில் அவன் தலையை நசுக்குவர் . பூசாரியானவர் ஆளுக்குக் கொஞ்சம் சதையை வெட்டிப் பிரசாதமாக கொடுப்பார். அந்த பொக்கிஷத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் எல்லோரும் அவரவர் நிலத்துக்கு ஓடிப்போய் ஒரு கம்பத்தில் அந்த சதைத் துண்டை தொங்க விடுவர். அந்த சதை தண்ணீருக்கு மேலே இருந்தால், அந்த நீர்ப்பாசனம் செய்யும் இடமெல்லாம் அதிக விளைச்சல் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர்.

 

இதற்குப் பின்னர் மிச்சம் இருக்கும் உடற்பகுதியை முறையாக அடக்கம் செய்வர்!

kondh-priestess

ஜெய்ப்பூர் மஹாராஜா இறந்தவுடன், புதிய பட்டம் ஆட்சிக்கு வந்தபோது 13 வயதுச் சிறுமியை துர்கா தேவிக்குப் பலி கொடுத்ததாக மரியா  சடங்கிற்கு ஆட்களைப் பிடித்துத் தரும் ஏஜண்டுகள் கூறுகின்றனர். மரியா சடங்கிற்கு ஆட்களைப் பிடித்துச் சென்றது, கடத்திச் சென்றது பற்றி நிறைய புகார்கள் வந்ததை வெள்ளைக்கார்கள் பதிவு செய்துவைத்துள்ளனர்.

 

ஜெய்ப்பூர் பகுதியில் பெண் குழந்தை பிறந்தால் கொன்றுவிடும் வழக்கமும் இருந்தது. ஆண்டு தோறும் 1500 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடுகின்றனர். கோண்ட் இன மக்கள் பெண் குழந்தைகளை விரும்புவதில்லை. நிறைய குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே இருப்பர். ஆன்மா மீண்டும் மீண்டும் ஒரே குடும்பத்திற்குதான் வரும் என்றும் பெண் சிசுக்களைக் கொன்றாலும் அவர்கள் ஆண்களாகத் திரும்பிவந்து பிறப்பர் என்றும் கருதுகின்றனர்.

 

பெண் சிசுக்களைக் கொல்லும் பணி ஏலத்துக்கு விடப்பட்டு, அதை விலைக்கு வாங்கிய வணிகர் ஆண்டுதோறும் ஜெய்ப்பூர் மன்னருக்கு 300 ரூபாய் (Year 1930s) கொடுத்ததாகவும் தெரிகிறது. அந்த ஏஜெண்ட் வயதான பெண்களை வைத்து சிசுக் கொலை செய்வாராம்.

 

கோண்ட் இனப் பீரிவுகள் பல உண்டு. சிலர் நரபலி கொடுப்பதிலை விலைகொடுத்து வாங்கிய ஆளைத்தான் நரபலி கொடுக்க வேண்டும்; அல்லது இறைவன் ஏற்க மாட்டார் என்றும் கொண்ட் இனத்தினர் கருதுவர். சில நேரங்களில் இளம் வயதிலேயே பலி கொடுக்க என்று ஒருவனை வாங்கிவிடுவர். அவனை எல்லா விஷயங்களையும் அனுபவிக்க வைப்பர். வயதாக ஆக அவனுக்குத் தெரியும் தான் நரபலிக்கான ஆள் என்று. அப்போதிருந்து அந்த ஆளின் மீது கண்காணிப்பு அதிகரிக்கும் அவனுக்கு குடி, அபினி முதலியவற்றைக் கொடுத்துக் கொடுத்து மயக்க நிலையில் ஆழ்த்திவிடுவர்.

 

பலி கொடுப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே மரியா விருந்து மரியா நடனம் எல்லாம் ஆரம்பமாகிவிடும். பலிக்கு முதல் நாளன்று அவனை உட்காரவைத்து “ஓ, தடா பெண்ணு, உனக்கு இவனைப் பலி கொடுக்கப் போகிறோம். எங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் விளைச்சலும் கிடைக்க வேண்டும்” என்று வேண்டுவர். இரண்டாம் நாளன்று அவன் மீது தைலம் பூசுவார்கள் அதை ஒவ்வொருவரும் தொட்டு தன் மீது தடவிக்கொள்வர் பின்னர் அந்த ஆளை அவ னைக் கட்டிய கம்பத்துடன் தூக்கிக் கொண்டு ஊர்வலம் செல்லுவர். பின்னர் பலி பீடத்துக்கு வந்த பின்னர் பூசாரி சதைக ளைக் கிழிக்கும் பணியைத் துவங்குவார். எல்லோரும், ஆளுக்குக் கொஞ்சம் சதை வாங்கியவுடன் திருவிழா முடியும். பின்னர் அங்கே ஒரு எருமை மாட்டை பலி இடுவர். பெண்கள் எல்லோரும் ஆண் உடை தரித்து நடனம் ஆடுவர்.

 

இது பற்றி விசாகப்பட்டிணம் கலெக்டர் ஆர்புத் நாட், கர்னல் கேம்ப் பெல் முதலியோரும் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். சில இடங்களில் யானை போன்ற உருவம் செய்து அதன் துதிக்கையில் நரபலி மனிதனைத் தொங்கவிடுவர். இந்த வழக்கத்துக்கு வெள்ளைக்காரர் ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் 1902-ம் ஆண்டுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நரபலி நடந்தது. சிலர் இதை பகிரங்கமாக ஆதரித்து நரபலி கொடுக்க அனுமதியும் கோரினர். ஆனால் அவை எல்லாம் நிராகரிக்கப்பட்டன.

dongria-kondh-tribe-membe-006

என் கருத்து:–

 

வெள்ளைக்காரர் சொல்லுவது போல நடந்திருக்கலாம். ஆனால் பண்பாடுமிக்க நகர நாகரீகம் நிலவியபோதே கானக மாக்கள் அவர்களுக்கே உரித்தான வாழ்க்கை முறையினைப் பின்பற்றியதை சம்ஸ்கிருத தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. ஆகையால் திராவிடர் என்று எல்லோருக்கும் முத்திரை குத்துவது சரியல்ல. தோலின் நிறமோ, ஒருவர் பேசும் மொழியோ மட்டும் — ஒரு இனத்தின் அடையாளங்கள் என்று சொல்லுவது தவறு.

 

–சுபம்–

Leave a comment

Leave a comment