
Compiled by London swaminathan
Date: 6 December 2016
Time uploaded in London: 5-58 am
Post No.3422
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
Jayalalitha’s Strange Elephant Story (Dinamani 6-12-2016)
காலஞ்சென்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்ட கதை தினமணி பத்திரிகையில் வெளியானது. இது போல யானைகளின் அபார, அபூர்வ அறிவு பற்றிய கதைகளை நான் வெளியிட்டுள்ளேன். உ. வே.சாமிநாத அய்யர் எழுதிய கதையையும், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் யானையை சமாதானப் படுத்திய கதையையும் வெளியிட்டேன். ஆகவே இந்தக் கதையில் உண்மை இருக்கும்:–
யானைகளின் மனதையும் அறிந்தவராக முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார். ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டார். யானைகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்பது குறித்து ஜெயலலிதாவே கூறியதாவது:
நீரும் நெருப்பும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக முதுமலை காட்டுக்குச் சென்றிருந்தேன். அந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாநாயகன். நாங்கள் இருவரும் நடித்த ஒரு காதல் காட்சியில் நிறைய யானைகள் இடம் பெற்றன. முதுமலைக் காட்டில் மரங்களை வீழ்த்துவது, அந்த மரங்களை வெட்டும் இடத்துக்கு கொண்டு சேர்ப்பது, வெட்டிய மரத் துண்டுகளை வரிசையாக அடுக்கி வைப்பது, பின்னர் அவற்றை லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகளுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அந்த யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்டு மிகவும் சாதுவாக இருந்தன. அங்கே அவற்றில் மிகப்பெரிய யானை ஒன்று என் கவனத்தைஈர்த்தது.
அந்த யானை குறித்து பாகன் சொன்னவை:
அந்தப் பாகனுக்கு மிகவும் அழகான இளம் மனைவி இருந்தாளாம். ஆனால், அவள் மிகவும் முன் கோபியாம். அண்மையில் பாகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏதோ மனப் பூசல் ஏற்பட, இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை வலுத்தது. இதனால், கோபம் அடைந்த பாகனின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறி, தனது பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவளைச் சமாதானம் செய்வதற்காக எத்தனையோ முறை அங்கு சென்று பாகன் அவளைத் தன்னுடன் திரும்பி வருமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதிலும், அந்தப் பெண் பிடிவாதமாக வர மறுத்துவிட்டாள். இதனால், சோகத்துடன் பாகன் இருந்து வந்துள்ளான்.
ஓர் இரவு எப்படியோ அந்த யானை, பூட்டப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல், 15 மைல் தொலைவில் இருக்கும் பாகனின் மனைவி ஊருக்குப் புறப்பட்டுவிட்டது. நேராக அந்த ஊருக்குச் சென்று, பாகன் மனைவி இருக்கும் வீட்டை உடைத்து, அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டதாம்.
யானை என்பது அதிசயப் பிறவி. விலங்குகளில் ராஜா யானைதான் என்று குறிப்பிட்டார்ஜெயலலிதா.
குருவாயூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கு யானைகளை முதல்வர் ஜெயலலிதா தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TRUE ELEPHANT STORIES posted by me in my blogs
திருமூலர் சொன்ன யானைக் கதை: தெரிந்த கதை, தெரியாத உண்மைகள்! Posted on 14-3-2014
ஒரு யானையின் சோகக் கதை!(Post No.3379)-posted on 22-11-2016
செய்நன்றி:- நன்றியுள்ள யானையும், குடிகாரப் பாம்பும்! Posted on 12 July 2015
யானையின் பெயர்கள் Posted on 25-11-2014
“மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்” Posted on 12 Sept.2014
யானை பற்றிய நூறு பழமொழிகள் (posted on 5 June 2012)
யானையை விழுங்கிய மலைப்பாம்புகள் 7 மார்ச் 20114
Elephant Miracles
45 Words for Elephant
xxxxx