அதிசய புத்த துறவி ஸு யுன்! – 27 (Post No.3542)

Written by S NAGARAJAN

 

Date: 14 January 2017

 

Time uploaded in London:-  6-13 am

 

 

Post No.3542

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 27

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 91. முந்தைய  வருடம் ‘மவுண்ட் கு’ வில் இருந்த போது மடாலயத்தின் நிர்வாகம் செம்மையாக நடைபெறும் படி மேம்படுத்தப்பட்டது. ப்ரஹ்ம நெட் சூத்ரங்களின் விளக்கவுரையை ஸு யுன் சொல்லி வந்தார். பிட்சுக்கள் தங்கும் விடுதியின் பின்னால் இருந்த முற்றத்தில் இரண்டு பனை  மரங்கள் இருந்தன. அவை டாங் வமிசம் இருந்த போது ‘மின்’ மாகாண இளவரசரால் பல நூற்றாண்டுகளுக்கு  முன்னால் நடப்பட்டவையாம். அந்த மரங்கள் மெதுவாக வளர்பவை என்பதோடு வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இலைகளை மட்டுமே துளிர் விடுமாம். பத்து அடி உய்ரமே இருந்த அந்த ம்ரங்கள் பூப்பதில்லை.  அது பூக்க ஆயிரம் வருடங்கள் ஆகுமாம். ஆனால் ஸு யுன் சூத்திரங்கள் சொன்ன போது அவை பூத்தன. இந்த அதிசயத்தைக் கேட்டு மடாலயத்தின் அருகிலிருந்தோரும் வெகு தொலைவிலிருந்தோரும் கூட்டம் கூட்டமாக் வந்து அந்தப் பனை  மரங்களைப் பார்த்தனர். மாஸ்டர் வெங்-ஜி இந்த அதிசயத்தை கல்வெட்டில் பொறித்து மடாலயத்தில் நிறுவினார்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 92. கு ஷான்  மடாலயத்தில் சூத்ரங்களை இசைத்து வந்தார் ஸு யுன். வினய மார்க்கத்திற்கான பள்ளி ஒன்றையும் திறந்து வைத்தார். அத்துடன் பிங்-கு மறு ஸி – லின், யுன் –வோ ஆகிய  இடங்களில் ஆலயங்களையும் கட்டினார்.

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 93. வசந்த காலத்தில் சூத்ரங்கள் இசைக்கப்பட்டன. நரைத்த முடி, தாடியுடன் வந்த ஒரு முதியவர் நேராக ஸு யுன் இருந்த அறைக்கு வந்து நமஸ்கரித்து வினய விதிகளைப் போதிக்குமாறு கேட்டுக் கொண்டார். விசாரித்ததில் அவர்  பெயர் யாங் என்றும் அவர் நான் – டாய் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. நான் – டாய் நகரைச் சேர்ந்த இன்னொருவரான மியாவோ-ஜாங் என்பவரும் அப்போது சூத்ரங்களைப் பெற அங்கு வந்திருந்தார். அவர் அந்த முதியவரைத் தான் நான் – டாயில் ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறினார். சூத்ரங்கள் இசைக்கப்பட்டு போதிசத்வரின் ந்ற்சான்றிதழகள் அனைவருக்கும் தரபப்ட்டன,. அதன் பின் அந்த முதியவரைக் காணோம்.

சொந்த ஊருக்குத் திரும்பிய மியாவோ – ஜாங்,  ட்ராகன் கிங் என்னும் ஆலயத்திற்குச் சென்ற போது அங்கிருந்த சிலையைப் பார்த்து அதிசயித்தார். ஏனெனில் அந்த சிலை தான் பார்த்த  முதியவரைப் போலவே இருந்தது. அத்துடன் அந்த சிலையின் கையில் ஸு யுன் வழங்கிய போதிசத்வரின் நற்சான்றிதழும் இருந்தது. முதியவர் வேடத்தில் வந்து கிங் டிராகன் போதிசத்வரின் நற்சான்றிதழ் பெற்ற செய்தி காட்டுத் தீ போல வெகு வேகமாகப் பரவியது. அனைவரும் அதிசமான இந்த நிகழ்வைப் பற்றிப் பேசியவாறு இருந்தனர்.

 

 

அந்த வருடம் 66 வயதான காண்டனீஸ் உபாசகரான ஜாங் யு டாவ் என்பவர மடாலயத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு தர்மத்தின் நாமமான குவான் பென் என்ற பெயர் புதிதாக சூட்டப்பட்டது. ம்டாலய நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் வரிசைப்படுத்தும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. அவர் வினய விதிமுறைகளை அனைவருக்கும் விளக்கும்படி கோரப்பட்டார். வருடம் இனிதே முடிந்தது.

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 94. வசந்த காலத்தில் தர்ம குருவான யின் – சி ப்ரஹ்ம நெட் சூத்ரங்களை விளக்கினார். முதல் மாதத்தில் ஜப்பானிய ராணுவம் ஷாங்காய் கண்வாயை ஆக்கிரமித்து ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது.  19வது தடத்தின் படை ஒரு அவசரநிலையை பிரகடனம் செய்யவே எந்த மடாலயமும் புதிதாக வரும் விருந்தினர்களை அனுமதிக்க மறுத்தது. கு ஷான்  மடாலயம் மட்டும் கடல் வழியே வரும் விருந்தினரகளை அனுமதித்தது. 1500 முதல் 1600 பேர்  மடாலயத்தில் தங்கி இருந்தனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.குறைந்த ப்ட்சம் அரிசிக் கஞ்சியாவது அனைவருக்கும் உண்டு.

அந்த வருடத்தில் ஐந்தறிவு ஜீவராசிகளுக்கான பூங்கா கட்டி முடிக்கப்பட்டது.அங்கு அசாதாரணமான் எடையுடன் இருந்த ஒரு வாத்து. பிரதான ஹாலில் வந்து நின்றது. அதை  ம்ரமீனால் தட்டிய போது சிறகை விரித்து ஆடியது. நாள் முழுவதும் புத்தரின் விக்ரஹத்தைப் பார்த்தவாறே அது நின்று கொண்டிருந்தது. ஒரு  மாதம் கழித்து அது இறந்தது. இறந்தும் கீழே விழாமல் அப்படியே நின்ற நிலையில் அது நின்ற்வாறு இருந்த அதிசயத்தை எல்லோரும் பார்த்த வண்ணம் இருந்தனர். உபாசகர்  ஜியாங்  இந்த் அதிசய சம்பவத்தைக் கண்டு அதை புத்த தர்ம சடங்குகளின் படி எரியூட்டினார். ஏழு நாட்கள் கழித்தே அது எரியூட்டப்பட்டது என்றாலும் அழுகிப் போய் நாற்றம் அடிக்கவே இல்லை. எல்லாப் பறவைகளுக்கும் பொதுவாக ஒரு குழி வெட்டப்பட்டு அதில் அஸ்தி சாம்பல்கள் வைக்கப்பட்டன.

நாட்கள் மாதங்களாகி வருடமும் முடிவுக்கு வந்தது.

-தொடரும்

***

 

 

Leave a comment

Leave a comment