மஹாலெட்சுமி வசிக்கும் இடங்கள்: புறநானூறு தகவல் (Post No.3560)

Written by London swaminathan

 

Date: 20 January 2017

 

Time uploaded in London:- 10-01 am

 

Post No.3560

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள், திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

–வான்மீகியார், புறம் 358

பொருள்:

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில் லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

 

இந்தப் பாட்டில் பல சுவையான செய்திகள் உள்ளன:

 

லெட்சுமி இல்லறத்தாரிடம் இருப்பதைவிட துறவறத்தாரிடமே அதிகம் இருப்பாள்.

 

இரண்டாவது, வால்மீகி, மார்கண்டேயன், கௌதமன், சங்க வருணன், தாமோதரன், கேசவன் போன்ற நிறைய சம்ஸ்கிருதப் பெயர்களை உடைய புலவர்கள் சங்கத் தமிழ் புலவர்களாக இருந்துள்ளனர். ஆரிய- திராவிட வாதம் பேசும் பேதிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

 

மூன்றாவதாக, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நாளில் 7 பேர் அரசாண்ட வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.

 

நாலாவதாக, இதற்கு உரைஎழுதிய அறிஞர்கள் இது ராமாயணக் கதை பற்றியதால் இந்த புலவருக்கும் வால்மீகி என்று பெயர் என்று எழுதியுள்ளனர். அதாவது ராமாயணம் எழுதிய வால்மீகி வேறு; அவரை மிகவும் விரும்புபவர் என்பதால் இவரையும் வால்மீகி என்றழைத்தனர்.

ராமபிரான் எனக்கு ராஜ்யமே (திரு, லெட்சுமி) வேண்டாம் என்று சொல்லி கானகம் ஏகினான். இறுதியில் அவனிடமே ராஜ்ய லெட்சுமி வந்தாள்.

ஐந்தாவதாக, கிரேக்க மொழியில் ஏராளமான தமிழ் சொற்கள் இருப்பது பற்றி ஏற்கனவே கட்டுரைகள் எழுதினேன். ஐயவி என்ற தமிழ்ச் சொல்லே IOTA ஐயோடா என்ற கிரேக்க, ஆங்கிலச் சொல்லாக மாறியது. ஆங்கிலத்தில் துளிக்கூட இல்லை என்பதை  NOT ONE IOTA என்று விளம்புவர்

இதோ இன்னொரு லெட்சுமி பாடல்:–

 

பதுமம் கொடி நகர் மின் பைந்துளவு வில்வம்

கதிர் விளைவு சங்கு கடறீபம் –வதுவை மனை

நற்பரிபாற் பாண்டமிவை நாண் மலரா ணீங்காது

நிற்பிட நல்லோர் நெஞ்சுமே

 

–உவமான சங்கிரகம், ரத்தினச் சுருக்கம்

 

 

லெட்சுமி வசிக்கும் இடங்கள்:-

பதுமம்= தாமரை

கொடி – த்வஜம்

நகர் = நகரம்

மின் = மின்னல் ஒளி

பைந்துளவு = பச்சைத் துளசி

வில்வம் = வில்வம்

 

கதிர் விளைவு = நெற்கதிர்/ தானியம்

சங்கு = சங்கு (வலம்புரிச் சங்கு)

கடல் = சமுத்திரம்

தீபம் = விளக்கு

வதுவை மனை = கல்யாண வீடு

நற் பரி = நல்ல குதிரை

பால் பாண்டம் = பால் பொங்கும் பானை

இவை = இவை எல்லாம்

நாண்மலராள் = மஹலெட்சுமி

நிற்பிடம் = நிலைத்து நிற்கும் இடங்களாம்

நல்லோர் நெஞ்சுமே = நல்லவர்கள் உள்ளத்திலும் கூட (வசிக்கிறாள்)

 

–Subham–

 

Leave a comment

1 Comment

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    புறம் 358க்கு அளித்த உரைக்கு நன்றி.
    இப்பொழுதெல்லாம் உரை என்ற பெயரில் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள். பல இடங்களில் மழுப்புகிறார்கள்.
    விட்டோரை விடா அள், திருவே;
    விடாஅதோர் இவள் விடப்பட்டாரே
    இது தெளிவாகவே இருக்கிறது. ‘விடாள் திருவே’ என்பதால் இங்கு திருமகளே குறிக்கப்படுகிறார், வெறும் திரு அல்ல. இருந்தும் இதற்கு ‘செல்வம்’ என்றே பொருள் எழுதுகிறார்கள்.
    இந்த வரிகளுக்கு,
    “உலக இன்பம் தரும் செல்வமும் இல்லறத்தாரையே விடாது பற்றி நிற்கும்.
    உலக வாழ்க்கையை வெறுத்துத் தவத்தின்பால் உள்ளவர்களிடம் செல்வமும் சேராது” என்று ஒருவர் தெளிவுரை எழுதியிருக்கிறார்! அதாவது, நேரெதிரிடையான உரை! “விரும்பி வந்தால் விலகிப் போகும்;விலகிப் போனால் விரும்பி வரும்” என்பதுதான் நாம் கேட்டுள்ள பழமொழி.

Leave a comment