மண்டோதரி பற்றி இரண்டு விசித்திரக் கதைகள் (Post No.3680)

0e629-mandodari-in-siya-ke-ram-piyali-munsi

Written by London swaminathan

 

Date: 1 March 2017

 

Time uploaded in London:- 8-27 am

 

Post No. 3680

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ராவணனின் மனைவியான மண்டோதரியை இந்துப் பெண்கள் தினமும் காலையில் வணங்குகின்றனர்சீதை.அஹல்யா,திரவுபதி, குந்தி, தாரா, மண்டோதரி என்ற பஞ்சகன்யைகளை (5 பெண்களை) யார் தினமும் நினைக்கிறார்களோ அவர்களுடைய பாபங்கள் அகன்று அவர்கள் புண்ணியம் அடைவார்கள் என்பது இந்துக்களின் வௌவான நம்பிக்கை.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் , மாணிக்கவாசகரும் மண்டோதரி பற்றி சொல்லும் கதைகள் விநோதமானவை.

 

மண்டோதரி மயன் என்னும் அசுரனின் மகள்; இந்திரஜித்தின் தாய்; ராவணன் உயிர் துறந்தவுடன் உயிர் நீத்த பத்தினி; சீதையை விட்டுவிடும்படி ராவணனுக்கு புத்திமதி சொன்ன வீராங்கனை!

 

 

“ஸீதையைத் தங்கள் நாயகியாக்கிக் கொள்வது கருத்தானால், தங்களுடைய மாயா சக்தியால் ராமனுடைய உருவத்தை எடுத்துக்கொண்டு அந்த ஸீதையைத் தாங்கள் ஏன் ஏமாற்றிவிடக் கூடாது? என்று மண்டோதரி தன் கணவனான ராவணனைக் கேட்டாள்.

 

அதற்கு ராவணன் “சீ! போ, ராமனை நினைத்த மாத்திரத்தில் எனக்குச் சொல்லவொண்ணாத ஆனந்தமும் இன்பமும் உண்டாகின்றன. பரமபதமான சொர்கமும்கூட வெறுப்பாகிவிடும் போலத் தோன்றுகிறது. அப்படியிருக்க அவனுடைய திவ்விய ரூபத்தை எடுத்துக்கொண்டால் எனக்குச் சிற்றின்பத்தில் எப்படி மனம் செல்லும்?” என்று பதில் சொன்னான்.

 

ஆதாரம்:— ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் உபதேச மொழிகள், பக்கம் 152 (ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர், சென்னை)

 

மாணிக்க வாசகர், திருவாசகத்தில் இரண்டு இடங்களில் மண்டோதரி பெயரைக் குறிப்பிடுகிறார்.

 

உந்து திரைக்கடலைக் கடந்தன்

றோங்கு மதிலிலங்கையதனில்

பந்தணை மெல்விரலாட்கருளும்

பரிசறி வாரெம்பிரானவாரே

–திருவார்த்தை, திருவாசகம்

 

 

இதற்கு வியாக்கியானக்காரர்கள் சொல்லும் விளக்க உரை:-

 

மண்டோதரி ராவணன் மாளிகையில் இருந்து இறைவனைத் தியானித்தாளாக, இறைவன் குருமேனி தாங்கியிருந்த  கோலத்துடன், அங்குச் சென்று அவளுக்குக் காட்சியளிக்க, இறைவனுடைய பேரழகில் ஈடுபட்டுப் பேரின்பத்தைக் கேட்கவிருந்த அவள் மயங்கிச் சிற்றின்பத்தில் தன்னுடைய சிந்தையைச் செலுத்தினாள். அவளுடைய அறியாமையைக் கண்ட இறைவன், அவள் கற்பொழுக்கம் கெடாதிருக்க, உடனே அந்த இடத்தை விட்டு மறைந்தார். அவள் வருந்தினாள். அவள் கொண்டது ஒருதலைக் காமம் ஆதலின் பெண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது. அதனைப் பெட்டியுள் வைத்துக் கடலில் விட்டாள். அதுவே மிதிலையில் வந்து ஒதுங்கிப் புதையுண்டு ஜனகனுடைய உழுகால் நுனியில் வெளிவந்தது என்பது வரலாறு.

 

ஆதாரம்:–பக்கம் 1168,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

3510a-mandodari-stopping-ravan

ராவணனைத் தடுத்து நிறுத்தும் மண்டோதரி

 

இன்னொரு இடம்:

 

ஏர்தரு மேழுல கேத்த எவ்வுரு வுந்தன் நுருவாய்

ஆர்கலி சூழ்தென்னி லங்கை யழகமர் வண்டோதரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவுவாய்

–குயில்பத்து, திருவாசகம்

 

 

பொருள்:

 

கடல் சூழ்ந்த அழகிய இலங்கையில் வண்டோதரிக்கு எழுச்சியை விளைவிக்கும் ஏழுலகத்தவர்களும் போற்றக் காணப்பெறும் எல்லா வடிவங்களும் தன் வடிவேயாய்ப் போந்து பேரருளால் பேரின்பத்தையளித்த பெருந்துறைக்கண் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானை, தென்பாண்டி நாட்டானை உனது புகழமைந்த வாயால் வரக்கூவுவாயாக குயிலே என்றவாறு.

 

ஆதாரம்:–பக்கம் 748,  திருவாசகம் ,திருவாவடுதுறை ஆதீனம், 1964

 

அசுரப் பெண்களையும் இந்துக்கள் தினமும் கொண்டாடுவது ஆரிய-திராவிட மாயையைப் பரப்பும் அறிவிலிகளுக்கு செமையடி கொடுக்கும்; எல்லா அசுரர்களும், இராக்கதர்களும் சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்து வரம் வாங்கியது அவர்களும் இந்துக்களே; ஆனால் சக்தியைத் தீய வழியில் பயன்படுத்தியவர்கள் என்பதை காட்டுகின்றன. ‘அசுரர்களும் இராக்கதர்களும் திராவிடர்கள்’ என்று அங்கலாய்க்கும் பொந்தெலிகளுக்கும் பேதிலிகளுக்கும், ஆரிய-திராவிட இனவாதம் பேசும் அசிங்கங்களுக்கும் இது செமையடி தரும்.

 

–subaham–

Leave a comment

Leave a comment