மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்! (Post No.3745)

1000 Pillar Mandap at Madurai Temple

Written by S NAGARAJAN

 

Date: 22 March 2017

 

Time uploaded in London:-  7-02 am

 

 

Post No.3745

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

10-3-2017 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்!

 

by ச.நாகராஜன்

 

 

நம்முடைய ஆலயங்களில் நமது முன்னோர்கள் பல அதிச்ய தொழில்நுட்ப அதிசயங்களைச் செய்துள்ளனர் என்பதை ந்வீன அறிவியல் கருவிகளின் மூலம் ஆராயும் போது தெரிய வருகிறது.

 

 

மதுரையில் பழங்காலந்தொட்டு இருந்து வரும் மீனாட்சி அம்மன் கோவில் அதிசயங்களையெல்லாம் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு மாபெரும் அதிசயமாகும்.

அவற்றில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம்.

ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் இருந்தாலும் கூட இதில் இருப்பது 985 தூண்கள் மட்டுமே!

இந்த மண்டபத்தின் தூண்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் அதிசயம்.

 

1983ஆம் ஆண்டு மதுரையின் பிரபல இ.என்.டி (தொண்டை காது மூக்கு மருத்துவ நிபுணர்) மருத்துவ நிபுணரான காமேஸ்வரன் ஒரு பெரும் குழுவுடன் இந்த மண்டபத்தை நவீன கருவிகளுடன் ஆராய்ந்தார்.

 

இந்த மண்டபத்தில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அற்புத கட்டிட உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை தன் ஆய்வின்  முடிவில் அவர் கண்டு பிடித்தார்.

முழுக் கோவிலுமே மிகுந்த ஜன சந்தடியுட்ன இருந்தாலும் கூட எப்போதாவது ஒரு முறை தான் 80 டெசிபல் என்ற அளவை எட்டுகிறது என்பது அவரது ஆய்வின் முடிவு.

1000 Pillar Mandapam at Madurai Temple

 

ஒரு அமைதியான் அறை அல்லது சூழலில் 40 டெசிபல் என்ற அளவில் ஒலி இருக்கும். ஜன சந்தடியுள்ள இடங்களில் 80 முதல் 85 டெசிபல் என்ற அளவில் ஒலியின் அளவு இருக்கும். ஒரு ஜெட் விமானம் மேலெழும்பும் போது விமான நிலையங்களில் 100 டெசிபல் என்ற அளவில் ஒலி இருக்கும்.

 

சாலையின் அருகே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட சக்தி மண்டபத்திலேயே 40 டெசிபல் தான் ஒலியின் அளவு இருக்கிறது!

 

இந்த குறைந்த அளவு ஒலி சிற்பிகளால் கோவிலுள் வருபவர்கள் அமைதியாக வழிபாடு ந்டத்தவும் தியானம் செய்யவும் வசதியாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது,

ஒரு நாளைக்கு சுமார் 5000 முதல் 6000 பேர்கள் வரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். இதில் உச்ச கட்ட அளவாக ஒலியின் அளவு  70 முதல் 80 டெசிபலே இருக்கிறது.

 

 

இது எதைச் சுட்டிக்காட்டுகிறது என்றால் சிற்பிகள் ஒலி இயலில் மிகவும் தேர்ந்த நிபுணர்கள் என்பதைக் காட்டுகிறது.

இங்குள்ள பாலிஷ் செய்யப்படாத தூண்கள், ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் சாளரக் க்ட்டமைப்புகள், காற்று துவாரங்கள், மணடபத்தைச் சுற்றி திறம்பட அமைக்கப்பட்டிருக்கும் திறந்த வெளிகள் இவை யனைத்தும் ஒலியைக் கட்டுக்குள் வைப்பதற்கான அதிச்ய உத்திகளாகும்.

இந்த அமைப்புகளை நேர்த்தியான வடிவமைப்பின் அம்சமாக ஆக்கி அழகுடன் விஞ்ஞானத்தையும் இணைத்த சிற்பிகளின் அறிவு ஆச்சரியகரமான ஒன்று.

 

 

இப்போது நவீன் கட்டிடங்களில் ஒலியைக் கட்டுப்படுத்த செய்யப்படும் ஏற்பாடுகள் கட்டிடத்தின் அழகைக் குலைத்து கூரையிலிருந்து ஆங்காங்கே கீழே தொங்க விடப்படும் பல் அமைப்புகளைக் கொண்டுள்ளன.

 

ஆனால் ஆயிரங்கால்  மண்டபத்திலோ அழகுடன அறிவியல் இணைகிறது. ஒவ்வொரு தூணும் சுமார் 12 அடி உயரம் உள்ளது. ஒவ்வொரு தூணும் ஒரு வித வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒன்றில் சதுர அமைப்பு, ஒன்றில் ஒரு தேவதை, இன்னொன்றில் யாளி, இன்னொன்றில் ஆலயத்திற்கு சேவை செய்த குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சிறபம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறந்த உத்தியாகும்.

 

ஒரே அளவுள்ள தூண்கள் கணிதவியலின் அளவுப்படி சரியான் இடங்களில் துல்லியமாக நிறுவப்பட்டுள்ளன.

இந்த அத்தனை அம்சங்களும் சேர்ந்தே இதை ஒலியியல் அதிசயத்தின் உச்சகட்ட மண்டபமாக ஆக்கியுள்ளது.

 

இந்த மண்டபத்தின் மையத்தில் வீற்றிருக்கும் ஒருவரை மண்டபத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அவரை ஒரு தூணும் மறைக்காது என்பது பெரிய அதிசயம். வெவ்வேறு அகலம் மற்றும் நீளமுடைய 16 பகுதிகள் இந்தத் தூண்களைக் கொண்டு நேர்த்தியுடன் அமைக்கப்பட்டவையாக இருப்பதால் மண்டபமே உலகின் தலை சிறந்த அதிசய மண்டபமாக ஆகும் பெருமையைப் பெறுகிறது.

 

 

இந்த மண்டபத்தை ஆராய்ந்த தெரஸ் மேரி என்ற கிறிஸ்தவ கன்யா ஸ்தீரி தனது ஆய்வுக் கட்டுரையை பிரான்ஸிலுள்ள சார்ன்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.

 

அவரை இந்தக் கட்டுரையாசிரியர் 38 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி கதிர் இதழுக்காகப் பேட்டி கண்ட போது இதன் அதிச்யங்களை ஒன்றன் பின் ஒன்றாக விவரித்து இது போன்ற ஒரு அதிசயத்தைத் தான் கண்டதில்லை என்றும் அதனாலேயே ஈர்க்கப்பட்டு இந்த ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

பல அதிசயங்களைக் கொண்டு ஆன்மீகத்துடன் அறிவியலை இணக்கும் இந்த மண்டபம் தமிழர்களின் கட்டிடக்கலையைச் சுட்டிக் காட்டி தலை நிமிர வைக்கும் மண்டபம் என்றால் அதில் சந்தேகம் இல்லை!

***                                                                (ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையை அவரே மொழியாக்கம் செய்து தரப்பட்டுள்ள கட்டுரை இது)

 

xxxx

 

 1000 Pillar Mandap at Hanumakonda

 

ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்தவர்

 

by ச.நாகராஜன்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் ஒரு பிரெஞ்சுப் பெண்மணி என்றால் ஆச்சரியமாயில்லை? இந்தச் சிறப்புக்குரியவர் மதுரை காமராஜ் பலக்லைக் கழகத்தில் பிரெஞ்சுத்துறைத் தலைவி சிஸ்டர் தெரஸ் மேரி ஆவார். கிறிஸ்துவ ‘நன்’னுக்கே உரிய தூய எளிமையான வெண்ணிற ஆடை, சிரித்த முகம்; குழந்தைகள் போல பால் பொங்கி நிற்கும்; அன்பை விளக்கும் இனிய மெல்லிய குரல். சிறிது நேரம்  பேசினாலும் நட்பிற்கு நிரந்தரப் பாலம் வகுக்கும் பண்பு. ஆழ்ந்த அறிவுடன் கூடிய அடக்கம். இவர் தான் தெரஸ் மேரி.

 

கிறிஸ்துவ மதத்தின் சாரம் பிரெஞ்சு தேசத்து சர்ச்சுகளில் சிற்பமாகவும் சித்திரமாகவும் இருப்பதை ஊன்றிக் கவனித்த இவர் இந்து  மதத்தின் சாரம் ஆலயங்களின் சிற்பத்திலும் சித்திரத்திலும் இருப்பதைக் கண்டார். மீனாட்சி அம்மன் கோவிலுள்ள ஆயிரங்கால் மண்பத்தை அணு அணுவாக ஆராய்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுடைய ஆராய்ச்சி உரை ஒன்றை எழுதி பாரிஸிலுள்ள சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து டாக்டரேட் பட்டத்தைப் பெற்றார்.

1000 Pillar temple at Moodbidri

“மண்டபம் சைவ, வைணவத்தின் மொத்தக் களஞ்சியமாக விளங்குகிறது. பல தூண்கள் பூர்த்தி செய்யப்படாமலும் சிறபங்கள் இல்லாமலும் இருக்கின்றன. இருக்கும் சிற்பங்களோ ஏராளமான புராண சம்ப்வங்களை விளக்கிக் காட்டுகின்றன” என்று கூறிய அவர் சிவனுடைய திருவிளையாடல்கள் அற்புதங்களை அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதை முக்கியமாகக் கூறுகிறார்.

 

 

1966-ல் இந்தியா வந்த இவர் முதலில் திருச்சியிலும் நாகர்கோவிலிலும் ஹோலி கிராஸ் கல்லூரியில் வேலை பார்த்து விட்டுப் பின்னர் மதுரை பல்கலைக் கழகப் பிரெஞ்சுத் துறைக்கு வந்ஹார். பிரெஞ்சு கற்றுக் கொடுப்பதில் மறக்க முடியாதவராக ஒரு  மாணவியைக் குறிப்பிடுகிறார் இவர். இந்துமதி என்ற அந்த மாணவி பிரெஞ்சு மொழியில் இருந்த ஒரு துணைப்பாட நூல் முழுவதையும் மனப்பாடமாக எந்த வரியிலிருந்து கேட்டாலும் ஒப்பிப்பாராம்.. அபாரமான அவரது நினைவுத் திறனை இவரால் இன்னமும் வியக்காமல் இருக்க  முடியவில்லை.

 

 

மதர் தெரஸாவைச் சந்தித்த சம்பவம் இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. மதுரை பாத்திமாக் கல்லூரியில் மதர் தெரஸா பேசுகையில், பங்களா தேஷில் சேவை புரிய வருமாறு அறைகூவல் விடுத்தார். அவரது பேச்சைப் போற்றச் சென்ற இவரிடம் , “நீங்கள் பங்களாதேஷ் வர வேண்டாம்” என்று கூறி விட்டார் மதர் தெரஸா. காரணம்? “நீங்கள் அங்கு வந்தால் சேவை புரிய இரண்டு கரங்களே எனக்குக் கிடைக்கும். ஆனால் இந்தப் பல்கலைக் கழகப் பொறுப்பினாலோ இந்தச் சேவை உணர்வை உங்களிடமிருந்து பலர் பெறும் போது பல நூறு சேவைக் கரங்கள் உருவாகும். ஆகவே தான் பங்களா தேஷ் வர வேண்டாம் என்கிறேன்” என்றாராம் தெரஸா. “அவர்து இந்தப் பதிலால் எனது பணியை ஒரு புது நோக்கிலே காண – உணர என்னால் முடிந்தது: என்கிறார் இவர்.

 

 

“கடவுளிடம் அர்ப்பணிக்கும் மனப்பான்மையுடன் கூடிய சேவையின் மூலம் மத் எல்லையைக் க்டந்து நாம் ஒருவரை ஒருவர் நெருங்குகிறோம். இதுவே வாழ்க்கையில் நான் கற்ற பாடம்” என்று கூறும் இவர் கீதை உபநிடதத்தை ந்ன்கு படித்திருக்கிறார்.

 

ஆண்டுக்கு ஒரு முறை அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு பெரிய முகாம் நடத்தி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்த முயற்சி செய்யும் இவருக்கு ஒரே ஒரு ஆசை – “குழந்தைகளுக்கான கிராமம்” ஒன்றை உருவாக்க வேண்டும் எனப்து தான்.

 

 

தையலும், இசையும் இவரது பொழுதுபோக்குகள். லத்தின், தமிழ் (கொஞ்ச்சம் கொஞ்ச்சம் தெரியும்) ஆங்கிலம் உட்படப் பல மொழிகள் அறிந்தவர் இவர் ஆயிரங்கால் மண்டப ஆய்வுரையை பிரெஞ்சு இலக்கியத்திற்கு அளித்த 51 வயதான இப் பெண்மணி ஒரு ‘குழந்தைகள் கிராமத்தை’ உருவாக்க எண்ணும் குழந்தை உள்ளம் கொண்டவராக இருப்பதை அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பேட்டி : கிருஷ்ணபிரகாஷ்

Mayan 1000 Pillar Temple in Mexico

 

கட்டுரை பிறந்த கதை

 

22-9-78 தினமணி கதிர் இதழில் முதல் பக்கத்தில் வெளியான இந்தக் கட்டுரை எழுதப்பட்ட விதத்தை இங்கு நினைவு கூர்கிறேன்.

 

1978இல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பகுதி நேரப் படிப்புகள் தல்லாகுளம் தாண்டி புதூர் சாலையில் இருந்த ஒரு வளாகத்தில் மாலை நேரத்தில் நடை பெற்று வந்தன. அதில் பிரெஞ்சு மொழி படித்து வந்த எனது இளைய சகோதரர் திரு சுவாமிநாதன் என்னிடம் தெரஸ் மேரியைப் பற்றிக் கூற அவரைக் காண ஆவல் எழுந்தது.

 

அந்தச் சமயம் தினமணி கதிர ஆசிரியப் பொறுப்பில் இருந்த திரு கே.ஆர்.வாசுதேவன் (தற்போதைய அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி. டாக்டர் மைத்ரேயன் இவரது புதல்வர்) எனது இல்லத்திற்கு வந்தார். அவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னிடம், “இதை ஒரு பேட்டிக் கட்டுரையாக அனுப்பேன்” என்றார்.

 

 

தெரஸ்மேரி அவர்களை ஒரு நாள் மாலை நேரத்தில் சந்தித்து ஆயிரங்கால் மண்டபத்தின் பெருமையை விரிவாக அறிந்து கொண்டேன்.

 

பேட்டிக் கட்டுரை வெளியான் பின்னர் சில நாட்கள் கழித்து மகிழ்வுடன் அவர் தந்த ஃஃபீட் பேக் : இந்தக் கட்டுரையைப் பார்த்து விட்டு ஹிந்து உள்ளிட்ட பல பத்திரிகைகள் அவரைப் பேட்டி கண்டனவாம். : .

 

பேட்டிக் கட்டுரை எனது புனைபெயரில் வெளியானது.

 

xxxxx

 

1000 Pillar Mandap at Chichenitza, Mexico

Previous Articles on 1000 Pillar Mandap and Madurai Meenakshi Temple in my blogs:-

 

1).Vedic Origin of Thousand Pillar Halls in Indian and Mayan Culture!; posted on 5 July 2014

2).Acoustic Marvel of Madurai Temple; posted on 12 May 2013

3).Musical Pillars in Hindu Temples; posted on 12 May 2013

4).The Wonder that is Madurai Meenakshi Temple; posted on 29 September 2013

 5).Madurai Temple Photos; posted on 31 May 2013

6).MADURAI TEMPLE VAHANA PICTURES; posted on 2 June 2013

7).21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?; posted on 30 May 2013

8).Tirupparangkundram Temple Pictures; posted on 31 May 2013

9).உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் !! posted on 6 July 2014

 

10).Who is Dhananjayan? posted on 12 January 2013 (about Madurai temple)

 

11).Thousand Pillar Hall – An Acoustic Marvel in Madurai Meenakshi Temple(Post No.3632); posted on 13 February 2017

 

–SUBHAM–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: