HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108 (Post16,158)

Written by London Swaminathan

Post No. 16,158

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

துளசிதாஸ்

கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa),  துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச்  சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.

***

தொல்காப்பியர்


(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).

தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை  இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவிகவிதைகாவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

தொல்காப்பியம் எழுத்துசொல்பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன

இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப்  பிரியர்கள்  இது  2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும்  (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி  200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு,  நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )

***

திருவாசகம்

நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும்  திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை.  இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .

***

திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .

பன்னிரு திருமுறைகள் விவரம்

1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.

7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.

8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).

10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.

11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.

12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.

***

திருமூலர் – திருமந்திரம்

திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .

திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்  இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.

***

திரு வள்ளுவர் – திருக்குறள்

திரு வள்ளுவர் எழுதிய  திருக்குறள் பாரத நாடு உலகிற்கு  வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்

இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா,  சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப்  பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர்  ரிப்ப்பேர் ஆகி விடும்மானம் விமானத்தில் பறந்துவிடும்,  திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும்  ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு  கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***

திரயம்பகேஸ்வரர்

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை  இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று  .

***

துருக்கி – துரகம்

சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000  ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி  சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன்  முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள்,  தொல்காப்பியம் , தொல்காப்பியர்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105 (Post.16,143)

Written by London Swaminathan

Post No. 16,143

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேவாரம்

சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ; தேவர்களுக்கு அதாவது தெய்வங்களுக்குப் போடப்பட்ட பா மாலை (ஆரம்). இவைகளைப் பிற்காலத்தில் தொகுத்து வகுத்தவர்கள் பன்னிரு திருமுறைகளில் முதலில் வைத்தனர் ; சுமா 9000 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன . இதன் மூலம் தெரியவரும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டில் சுமார் 275 கோவில்கள் மஹேந்திர பல்லவன் காலத்திலேயே புகழ்பெற்றவையாக விளங்கின அதனால்தான் தேவார மூவரான அப்பர்சம்பந்தர், சுந்தரர் அங்கே சென்று பாடிப் பரவினர் ; அதைவிட அதிசயம் என்னவென்றால், யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட நம சிவாய என்ற சம்ஸ்க்ருத மந்திரம் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பரவியதை தேவார மூவர் காட்டுகின்றனர் . அதைவிட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், திராவிட விஷமிகளும் வெள்ளைக்கார இந்து விரோதிகளும் சிவன் வேறு , ருத்திரன் வேறு என்று பரப்பியோருக்கு செமை அடி கொடுக்கின்றனர் தேவார மூவர் ; அதை விட அதிசயம் என்னவென்றால், சிவன் கோவில்கள் எல்லாம் சமணர் இடங்கள், புத்தர் இடங்கள் என்போருக்குத் தேவாரப்   பாடல்களும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணமும் வகையடி, தொகையடி, செமையடி கொடுக்கின்றன ; இதையெல்லாம் விட உலக மஹா அதிசயம்- பெளத்தர்களும் சமணர்களும் பரப்பிய  பாலி, பிராக்ருதத்துக்கு சமாதி கட்டி நம்மை எல்லாம் இன்று வரை தமிழரகளாகவே காத்த பெருமை அப்பர் சம்பந்தரையே சாரும்! அதைவிட அதிசயம்– தமிழ் இசையை முதலில் பண்ணோடு அமைத்துப் பாடியவர்கள் இவர்களதான் .

பாடல் எண்ணிக்கை

  முதலாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,469 பாடல்கள்

  இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,331 பாடல்கள்

  மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,346 பாடல்கள்

  நான்காம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,060 பாடல்கள்

  ஐந்தாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,015 பாடல்கள்

  ஆறாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 980 பாடல்கள்

  ஏழாம் திருமுறை (சுந்தரர்): 1,026 பாடல்கள்

வேத பண்டிதர்கள் வேதங்களை குருமார்களிடம் வாய்மொழியாக கற்று, பாதுகாத்து வருவதுபோல ஓதுவார்கள் அவர்களுடைய குருவிடமிருந்து கற்று இன்றுவரை சிவன் கோவில்களில் பாடி வருகின்றனர் இதன் மூலம் தமிழ் இசை பரவியது ; ஓதுவார்கள் இல்லாவிடில் தமிழ் இசை இல்லை.

*** 

தாயுமானவர் (thaayumaanavar)

 1705 to 1744 CE. செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர். சைவ சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துப் பாடியது இவருடைய ஒப்பற்ற அணுகுமுறைக்குச் சான்றாகத் திகழ்கிறது ; இந்துக்களின் சமயப்பிரிவுகள் அனைத்தும் ஒரே இறைவனை நாடுவதை பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்; தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன. ஸ்வாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து வருகிறது.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார். கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவர்களுக்குப்பிறந்த முதல் குழந்தையை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.பின்னர் பிறந்த குழந்தைக்கு  தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் திருச்சியில்  கோயில் கொண்டுள்ள சிவபெருமானின்  பெயர்.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின. தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசன், அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆன்மீக தாகம் அதிகரிக்கவே , மௌனகுருசாமிகள் என்ற பெரியாரைக் குருவாக ஏற்றார். இதற்கிடையில் திருமணம் நடந்து மட்டுவார் குழலம்மை என்ற நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார் குழலியார் சிவபதம் அடைந்தார். இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். இறுதியில் ராமநாதபுரத்தில் சமாதி ஆனார் .அவருடைய பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பாடல்கள் :

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா

யானந்த பூர்த்தியாகி

யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

யகிலாண்ட கோடி யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினிற்

றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

யென்றைக்கு முள்ள தெது மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது

கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

XXXXX

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;

கண் செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;

மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;

ஜலம் மேல் நடக்கலாம்;

கனல் மேல் இருக்கலாம்;

தன் நிகர் இல் சித்தி பெறலாம்;

என்று பட்டியலிடும் அவர்

“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!

தேஜோமயானந்தமே.

****

தில்லை (சிதம்பரம்)

தமிழ் நாட்டிலுள்ள சைவர்களுக்கு கோயில் என்றால் அது தில்லை என்னும் சிதம்பரமே . சோழ,  பல்லவ மன்னர்கள் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடும் இடம் ; நாட்டியத்துக்கு மூல காரணமான இறைவன் என்பதால் புகழ் வாய்ந்த கோவிலில் நாட்டிய கரணங்களும் உள்ளன; அரியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் வகையில் ஒரே கோயிலில் கோவிந்தப்பெருமாளும் சந்நிதி கொண்டுள்ளார் ; ஊரில் உள்ள தில்லை காளியம்மன் கோயிலும் முழு சக்தி பெற்ற தெய்வமாக தரிசனம் தருகிறார் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுந்தரர் முதலியோரால் புகழப்பட்ட தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்கள் இந்தக் கோவிலை சீரும் சிறப்புடனும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது . சென்னையிலிருந்து தெற்கே 229 கிலோமீட்டர் தூ ரத்திலுள்ள இக்கோயிலை ஐந்து மணி நேரத்தில் அடையலாம் . கோவிலில் உள்ள பொன்னம்பலம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க  நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம். இங்கு உருவம் இல்லாத இடத்துக்கு திரை போட்டு மூடியிருப்பார்கள் அதைத்த திறந்தால் வில்வ இலைகளும் வெற்றிடமும் மட்டுமே இருக்கும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் பஞ்ச பூதங்களில் ஆகாச வடிவினன் என்பதைக் காட்டும் இந்த இடத்தை சிதம்பர ரஹஸ்யம் என்றும் சொல்லுவார்கள்  .

***

திலகம்

இந்துக்களின் நெற்றியிலும் உடலின் பன்னிரு பாகங்களிலும் வரையப்படும் சமய சின்னங்கள் இவை; பொட்டு  என்று பெண்கள் அழைக்கும் இந்தக் குறியீடுகள், புத்தரின் பழைய சிலைகளிலும் உள்ளதால் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்துக்களின் உட்பிரிவுகளான  சாக்தம், வைணவம், சைவம் முதலிய ஆறு பிரிவினரும் விபூதிநாமம், கோபி, குங்குமம் என்று பலபெயர்களில் விதவிதமாக இட்டுக்கொள்வார்கள்; சந்தனம், குங்குமம், விபூதி, நாமக்கட்டி முதலியன முக்கிய இடுபொருட்கள் ஆகும். பெண்களை பொறுத்த மட்டில் திருமணமான  சுமங்கலியாக இருக்கும் வரை இது கட்டாயச் சின்னம் . வெளிநாட்டில் வாழ்வோர் இனவேற்றுமைத் தாக்குதால்களால் இதை முழுதும் பின்பற்றுவதில்லை . நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை பாடிப் போற்றியுள்ளனர்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர்  விபூதி பூசி பாண்டிய  மன்னன் நெடுமாறனின் நோய் நீக்கி அற்புதம் செய்ததை தமிழ் நூல்களில் காணலாம்.

***

பால கங்காதர திலகர் 1856-1920

மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் . பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்; கணேஷ் சதுர்த்தியை பிரபலமாக்கி அதன் மூலம் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இப்போது அது மஹாராஷ்டிரீயர்களின் தேசீயத் திருவிழாவாக மாறிவிட்டது . இவர் வானசாஸ்திரக்  குறிப்புகளைப் பயன்படுத்தி ரிக்வேதம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிரூபித்தார் ;அதிசயம் என்னவென்றால் ஜெர்மனியில் ஹெர்மன் ஜாகோபியும் ஆராய்ந்து இதே காலத்தைக் குறிப்பிட்டார்; இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்த ஆராய்ச்சியின் முடிவு இது.

***

திலோத்தமை

அப்சரஸ்; மூவுலகிலும் கிடைத்த நல்ல பொருட்களைக்கொண்டு பிரம்மா படைத்த பேரழகி . பூவுலகில் சுந்தன்உப சுந்தன் என்ற இரண்டு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர் . இவளைத் தேவர்கள் பூமிக்கு அனுப்பி அவர்கள் முன்னால் ஆடவைத்தார்கள் . இருவரும் இவள் எனக்கே சொந்தம் என்று சண்டை போட்டு ஒருவரின் மண்டையை அடுத்தவன் வெட்டி மாய்ந்தார்கள் .

***

த்ரஸாதஸ்யு

அகஸ்திய முனிவருக்கு  அவரது மனைவி லோபாமுத்ரா ஒரு நிபந்தனை போட்டாள்; படுக்கை அறைக்குள் வருவதற்கு முன்னால், எனக்கு ஏராளமான நகை நட்டுகளைக் கொண்டு வாருங்கள்; பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்று ; அவர் முதலில் பணம் கேட்ட இரண்டு மன்னர்களும் பணம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த மன்னரிடம்தான் வந்தார்.  இவரும் இல்லை என்று கைவிரித்தவுடன்  மிகப்பெரும்  பணக்காரனான அரக்கன் இல்வலனிடம் அகஸ்தியர் சென்றார் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம்– தஸ்யு என்ற சொல் பற்றி வெள்ளைக்காரன் கிளப்பியது  எல்லாம் புரளி என்பதாகும்; அதைவிட முக்கிய விஷயம், இல்வலன் என்ற அரக்கன் மூன்று மன்னர்களும் வந்து கேட்கும் அளவுக்கு பணக்காரனாக இருந்ததாகும்; இவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகையால் வெள்ளைக்காரர்களின் வாதங்கள் பொய் என்பதைக் காட்டும் இலக்கியச் சான்றுகள்ய்வை  ; ஆகையால்  தஸ்யு என்பவனோ அரக்கன் என்பவனோ கீழ் ஜாதியும் இல்லை; திராவிடனும் இல்லை .மன்னர்கள் செல்வந்தர்கள்.

****

த்ரிஜடை (திரிசடை)

ராமாயணத்தில் வரும் நற்பண்புகள் கொண்ட அரக்கர் குல பெண்மணி த்ரிஜடை ஆவார். இலங்கையில் ராவணனால் கடத்தி வரப்பட்டு, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவிக்கு காவல் இருக்கும்படி நியமிக்கப்பட்ட அரக்கிகளில் இவரும் ஒருவர். இவர் ராவணனின் தம்பியும் தர்மவானுமான விபீஷணனின் மகள் ஆவார்.அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தன் தந்தை விபீஷணனைப் போலவே தர்ம சிந்தனையும், கருணையும், நற்குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்தார். அசோக வனத்தில் மற்ற அரக்கிகள் சீதையை மிரட்டி, துன்புறுத்தி, ராவணனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது, த்ரிஜடை மட்டுமே சீதைக்கு ஆதரவாக இருந்தார்.சீதைக்கு தாயைப் போலவும், ஒரு நல்ல தோழியைப் போலவும் இருந்து, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.சீதை துயரம் தாங்காமல் தற்கொலை செய்ய முயன்ற பல தருணங்களில், அவரை தடுத்துப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்.

த்ரிஜடையின் தீர்க்கதரிசனக் கனவு (திரிசடை சொப்பனம்)

ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் த்ரிஜடையின் கனவு மிகவும் பிரபலமானது.அவர் ஒரு தீர்க்கதரிசனக் கனவு கண்டார்; அதில் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணன் வெற்றி பெறுவதையும், ராவணனும் அவனது அரக்கர் குலமும் முற்றிலும் அழிவதையும், லங்காபுரி எரிவதையும் கண்டார்.இக்கனவை அசோக வனத்து அரக்கிகளிடம் கூறி, “இனி சீதையைத் துன்புறுத்தாதீர்கள், அவளிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று எச்சரித்தார். இது சீதையின் மனக்கவலையைப் போக்கி, ராமன் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை அளித்தது. போர்க்களத்தில் ராம-லட்சுமணர்கள் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்தபோது, ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி அதைக் காட்டி கலங்கடித்தான்.அப்போதும் த்ரிஜடை சீதையுடன் சென்று, “அம்மா, கவலைப்படாதே! ராம-லட்சுமணர்கள் இறக்கவில்லை, இது அரக்கர்களின் மாயாஜாலம். புஷ்பக விமானம் சுமங்கலிகளை மட்டுமே சுமக்கும், ஸ்ரீராமனுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் இந்த விமானம் உன்னைச் சுமக்காது” என்று கூறி சீதையின் கற்பின் வலிமையையும் ராமனின் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதையும் உணர்த்தினார். யுத்தம் முடிந்து ராவணன் மடிந்த பிறகு, ஆஞ்சநேயர் சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி கேட்டார்.ஆனால் சீதா தேவி, த்ரிஜடையின் காவலால்தான் தான் உயிர் பிழைத்ததாகக் கூறி, மற்ற அரக்கிகளையும் மன்னித்து விடுவித்தார். ஸ்ரீராமனும் சீதையும் த்ரிஜடைக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

***

திரி-லோக

திரி என்றால் மூன்று ; ஆங்கில எண் த்ரீ என்பதும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததை நாம் அறிவோம் 

மூடு உலகங்கள் என்பது பூ லோகம் புவர் லோகம் ஸ்வர் லோகம் ஆகும் . பிராமணர்கள் இன்றும் மூன்றுமுறை   செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த மூண்டு உலகங்களுடன் மொத்தமுள்ள ஏழு உலகங்களையும் சொல்லி வணங்குவார்கள்

போர் புவசுவரோம் என்பது சுருக்கம்

Triloka (त्रिलोक).—அவையாவன —பூமி, பூமிக்கு மேலுள்ள வெளி,  ஸ்வர்கம்

தேவ ரிஷியான நாரதரை திரிலோக சஞ் சாரி என்பார்கள் ; இவர் ஐன்ஸ்ட்டின் தத்துவத்தை எல்லாம் பொய்யாக்கி ஒளியை மிஞ்சும் வேகத்தில் பயணம் செய்ட்வார் .

பூர்லோக: நாம் வாழும் பூமி;

புவர்லோக: காற்று மண்டலம்; தெய் வீக புருஷர்கள் வலம் வரும் இடம்;

ஸ்வர்(க)லோக (Svargaloka): திண்திறன் வாழும் சுவர்க்கம்;

மஹர்லோக: ரிஷிகளும் ஞானிகளும் வாழும் இடம்;

ஜனலோக: பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் இருக்கும் இடம்;

தபோலோக: தவசீலர்கள் எப்போதும் தவம் செய்யும் இடம்;

சத்தியலோக (ப்ரஹ்மலோக): சத்தியத்தின் உறைவிடம்; பிரம்மா வாழும் இடம் .

மூன்று அல்லது ஏழு உலகங்களுக்கு யோக சாஸ்திரப்படியும் விளக்கம் உண்டு

***

திரிசங்கு

அயோத்திலிருந்து ஆட்சிபுரிந்த சூர்ய வம்ச அரசர்களில் ஒருவன் ; இளவரசனாக இருந்தபோது தந்தையால் நாடு கடத்தப்பட்டு பின்னர் விசுவாமித்திரர் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தார் . அவருக்கு ஒரு ணப்பபஸ்ஸை பிறந்தது உடலோடு சுவர்க்கத்துக்குப் போகவேண்டும் என்று வசிஷ்ட முனிவரிடம் போய் சொன்னார் அவர் முடியவே முடியாது என்றார் ; திரும்பாத திரும்ப சொன்னதையே சொன்னவுடன் வசிட்டரின் மகன் சாபம் கொடுத்தார் பின்னர் விச்வாமித்திரரிடம் வைத்து அதே கோரிக்கையை முன்வைத்தார் அதுக்கென்ன செய்கிறேன் என்று யாகாதீ வளர்த்தார் ; முடிவில் போ போ மேலே போ என்று உடலோடு திரிசங்குவை ஏற்றினார் .உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.

அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால்  நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான். உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார். உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான். இதை திரிசங்கு சுவர்க்கம் என்பார்கள் . தமிழில் அரைக்க கிணறு தாண்டியவன் என்போம்; இங்கும் இல்லை அங்கும் இல்லை என்ற அந்தர  நிலைமை!. சிலுவை போலத் தோன்றும் நட்சத்திரக் கூட்டத்தை இந்துக்கள் திரிசங்கு நட்சத்திரம் என்பார்கள் மேலை  நாட்டினர் இதை சதர் ன்  க்ராஸ் என்பார்கள் ஆஸ்திரேலியா பிரேசில் நியூசிலாந்து, சமோவா , பப்புவா நியூ கினி என்ற ஐந்து நட்டுக்கொடிகளில் இந்த நட் சத் திரத்தைக்  காணலாம் .

பத்துப்பாட்டு என்னும் சங்கநூல்களில் பதிற்றுப்பத்து என்ற ஒரு நூல் இருக்கிறது; அதில் ஒரு  புலவரும் மனைவியும் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பியவு டன் அவர்கள் சொன்னபடி, சேர மன்னன் யாகம் செய்தான். பத்தாவது யாக முடிவில் இருவரும் மாயமாய் மறைந்தனர் .

***

த்ரித

த்ரித,  த்வித,  ஏகத என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; மூவரும் பெரிய ரிஷிகள். தமிழில் மொழிபெயர்த்தால் ரிஷிக ளின் பெயர்கள் 3, 2, 1 எண்கள் ஆகும் ; மூவரும் யாக யக்ஞங்களுக்குச் சென்று நிறைய பசு மாடுகளைத் தானம் வாங்கி இருந்தார்கள் . ஒரு முறை காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஓநாய் தாக்கவே மூவரும் ஓடினார்கள் அவர்களில் திரித ரிஷி கிணற்றில் விழுந்து விட்டார் வேறு பக்கம் ஒடிய ஏகத ரிஷியும் த்வித ரிஷியும் அவர்களுடைய அண்ணன் கூக் குரலைக் கேட்ட போதும் காப்பாற்றச் செல்லவில்லை ; மூத்தவருடைய பசுமாடுகளையும்  எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசை பிறந்தது . ஆனால் திரித மனம் தளரவில்லை ;பூசலார் நாயனார் மனத்திலே கோவில் எழுப்பி, சிவபெருமானை அழைத்தது போல இவரும் மனத்திலே யாகப்பொருட்களைத் தருவித்து பெரிய யாகம் செய்தார். இந்திரனும் தேவர்களும் மனம் மகிழ்ந்து அவரைக் காப்பாற்றினார்கள்; வெளியே வந்த இவர் மற்ற இருவரையும் ஓநாயாக  போகும்படி சாபம் இட்டார் என்பது மஹாபாரதத்தில்உள்ள கதை.  மனத்தின் அபாரசக்தியை விளக்கும் கதை இது. 

To be continued…………………

–subham—

Tags- திரிசங்கு,த்ரித, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105, தாயுமானவர்

கடவுள் செய்த கற்பழிப்பு! பெரிய விஞ்ஞானச் செய்தி! (Post No.16,117)

Written by London Swaminathan

Post No. 16,117

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நவக்கிரக துதியில் 8 விஞ்ஞான உண்மைகள்

ஜபா குஸும ஸங்காசம் என்னும் சம்ஸ்க்ருத நவக்கிரஹ துதியைத் தினமும் படிப்போர் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனமான நாசாவும் (NASA= National Aeronautics and Space Administration) அறியாத மிகப்பெரிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றனர் ! பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் நர்மதாயை நமஹ மந்திரத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் செய்தியை தினமும் நினைவுபடுத்துகின்றனர்  (சில பிராமணர்கள் இந்த மந்திரத்தைச் சொல்வதில்லை) . அந்தக்காலத்தில் நாகா பழங்குடி மக்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே குறைந்தது நான்கு தலைமுறைகளுக்கு மோதல் நடந்தது; இறுதியில் ஜனமேஜயன் என்ற மன்னன் நாகர்களை படுகொலை செய்யத் துவங்கியவுடன் ஆஸ்தீக மகரிஷி தலையிட்டு நாகா– யாதவ சமாதான உடன்படிக்கையைச் செய்வித்தார்; இதன் விளைவாக தென் அமெரிக்காவில் மாயா நாகரீகம் உருவானது (இதுபற்றி மாயா நாகரீகம் பற்றிய எனது கட்டுரைகளிலும் அவைகளைக் கொண்ட எனது புஸ்தகத்திலும் உள்ளது) . புறநானூற்றிலும் புராணங்ககளிலும் கூறப்படும் கட்டை விரல் அளவிலான வாலகில்ய முனிவர்கள் சூரியனை நாள்தோறும்  வலம் வருவது பற்றி மட்டும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுக்கும் கேடயம்/ ஷீல்ட் என்று ஊகித்து எழுதியுள்ளேன் (பழைய கட்டுரைகளைக் காண்க) .

NASA stands for the National Aeronautics and Space Administration. It is an official agency of the United States government. This group is in charge of the country’s space program, space travel, and scientific research on airplanes and flight.

***

இப்போது கடவுளின் கற்பழிப்பைக் கண்டு மகிழ்வோம்

இந்து மதத்தில் ஏதேனும் செக்ஸ் SEX விஷயங்கள் வந்தால் வெள்ளைக்காரர்களுக்கு ஒரே குஷி ! கிளுகிளுப்பு ! உடனே அதை வெளியிட்டு அவர்களுடைய பொன்மொழிகளையும் திருவாய் மலர்ந்து கொட்டியிருப்பதைக் காணலாம் . பிரம்மா, ஒரு பேரழகியைப் படைத்தார் அவள் பெயர் சதரூபா; அவள் படைத்த மகள் மீதே அவர் காதல் கொண்டார் . அவள் போன பக்கம் எல்லாம் அவருடைய தலை திரும்பியது ; அதனால் அவருக்குப் பல தலைகள். இப்படி ஒரு கதை ! ரிக் வேதத்தில் பல SEXY செக்சி (இந்திராணி – வ்ருஷாகபி) உரையாடல்கள் உள்ளன . இவைகள் எல்லாம் நம்முடைய காமன் பண்டிகை தெருக்கூத்து போன்ற நாடக வசனங்கள் ; அவை நாடகம் என்று அறியாத வெள்ளைத்  தோல்கள், அதை செக்ஸ் SEX என்று எழுதி மகிழ்கின்றன ! வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலைப் படங்களுடன் வெளியிட்டு மகிழ்கின்றன; அதே காலத்தில் எழுந்த பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைக் கண்டு மகிழ்வதில்லை ; இது வெள்ளைக்காரன் அணுகுமுறை!

பல விஷயங்களை பாமர மக்களுக்காக இந்துக்கள், சிம்பாலிக் SYMBOLIC காகக், கதைகளாகச் சொல்லுவார்கள் ! கிரஹணம் பற்றிச் சொன்னால் புரியாது என்பதற்காகப் பாம்பு விழுங்குகிறது என்பார்கள்; இது 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது .

இப்போது ஒரு கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம்.

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 MOONS FOR JUPITER.

நிலவு எப்படி உருவானது என்பதையும் நம் புராணங்கள் எழுதி வைத்துள்ளன .

பாற்கடலைக் கடைந்த போது, நிலவு உருவானது ; இப்போது பசிபிக் மஹா சமுத்திரத்தில் நிலவை வைக்கும் அளவுக்கு அதன் விட்டம் உள்ளதைக் கண்டு அது பூமியிலிருந்து பிய்த்து எறியப்பட்ட துண்டு துன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவை எல்லாம் பில்லியன்– கோடி கோடி ஆண்டுகளில் நடந்தவை. இதை நாம் பாற்கடலைக் கடைந்த போது நிலவும் வெளியே வந்தது என்று சொல்கிறோம் .

பாற்கடல் என்பதை மில்கி வே காலக்சி MILKY WAY= MILKY OCEAN  என்று பொருள்கொள்ள வேண்டும்

சுருங்கச் சொன்னால், சோலார் சிஸ்டம் ஆரிஜினை ORIGIN OF SOLAR SYSTEM விளக்குவதே இந்துக் குழந்தைகள் நாள்தோறும் சொல்லும் நவக்கிரஹ ஸ்தோத்திரம்!

***

எட்டு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு எட்டு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

–subham—

Tags- கடவுள் செய்த கற்பழிப்பு, விஞ்ஞானச் செய்தி, நவக்கிரக துதி, 8  விஞ்ஞான உண்மைகள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 (Post.16,103)

Written by London Swaminathan

Post No. 16,103

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

சுபத்ரா

வாசுதேவனின் பெண் ; கிருஷ்ணர், பலராமன் ஆகியோரின் சகோதரி; அர்ஜுனனின் மனைவி; அபிமன்யுவின் தாய். இதே பெயரில் பலர் இருந்ததை மஹாபாரதம் தெரிவிக்கிறது. பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரையில் சுபத்ராவுக்கு ஒரு ரதம் உள்ளதால், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகம் முழுதும் நடத்தும் ரத யாத்திரையில் சுபத்ரா ரதத்தையும் கொண்டுவருவதால், மேலும் பிரபலமாகிய பெயர் ஆகிவிட்டது. தமிழ் நாடு வரை பெண்களின் பெயராகவும் இருக்கிறது; சங்க இலக்கியத்தில் வரும் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண் கவிஞரின் பெயர் சுபத்ரா என்பது நான் ஆராய்ச்சியில் கண்ட துணிபு. தமிழ் நாட்டைப்போலவே அம்மான் மகளான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தான் . ஆகவே முறைப் பெண்ணை மணப்பது வடக்கிலும் இருந்தது உறுதியாகிறது . துவாரகாவுக்கு விருந்தினராக வந்த அர்ஜுனன் , சுபத்ராவைக் கடத்தி கல்யாணம் கட்டியதை பலராமன் கடுமையாக ஆட்சேபித்தார். ஏனெனில் சுபத்திராவை துர்யோதணனுக்கு மணம் செய்விக்க பலராமன் திட்டமிட்டிருந்தார் ;கடைசியில் கிருஷ்ணன் தனது அண்ணனை சமாதானப்படுத்தினார்.

***

சுக்ரன் / சுக்ராச்சார்யா

சுக்ரன் என்பது வெள்ளி கிரகம் ; சுக்ல என்றால் வெள்ளை நிறம் . வெள்ளி என்னும் கிரகத்தையும் மழையையையும் தொடர்புபடுத்தி பல செய்யுட்கள் புறநானூற்றிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் உள்ளன ; விஞ்ஞானிகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது .

சுக்ராச்சார்யா என்ற பிராமணன் அசுரர்களின் குரு;  பிருஹஸ்பதி என்ற பிராமணன் தேவர்களின் குரு. இருவரையும் இரு அந்தணர் என்று சங்க இலக்க்கி யம் பாடுகிறது; சுக்ராசார்யாரின் மகள் தேவயானி , பிருஹஸ்பதியின் மகன் கச்சனின் மீது கொண்ட காதல் கதை திரைப்படமாக வந்ததால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் தேவயானி. (இந்த பிளாக்கில்  கச்ச-தேவயானி கதை முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ).

பிராமணர்கள் தான் அசுரர்களுக்கும் குரு என்ற உண்மையும் அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடமிருந்தும் சிவ பெருமானிடமிருந்தும் வரங்களைப் பெற்றனர் என்ற புராண உண்மையும் திராவிட- ஆரிய வாதத்துக்கு செமை அடி கொடுக்கிறது; வெளிநாட்டு விஷமிகள் அசுரர்களை திராவிடர் என்று வருணித்து இந்துக்களை பிரிக்கப்ப்பார்த்தனர்  ; அந்த வாதம் செல்லாக்காசாகிவிட்டது .

***

சுக்ர நீதி

சுக்ராசார்யார் அல்லது உஷனர் என்பவர் தங்களுடைய அரசியல், சமூகம், தர்மம், நீதி முதலிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டனர் ; அவை சுக்ர நீதி என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது.

***

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம்  இது;  சுந்தர காண்டத்தைப் படித்தால்ர்      ஆ  அஞ்சசனேயரைப் போல எடடுத்த காரியம் யாவினும் வெற்றியும் மங்களமு ம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் சம்ஸ்க்ருத சுந்தர காண்டம் அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது வழக்கத்தில் உள்ளது அதை பூஜை அறையில் வைத்து மரியாதை செய்வார்கள்  . சுந்தர காண்டஉபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளுக்கு கணையாழி அத்தியாயம் சொல்லும்போது பட்டு சால்வை, தங்க மோதிரம் ஆகியவற்றையும் பரிசாக அளிப்பார்கள் . இதில் முக்கிய அத்தியாயங்கள் என்னவென்றால் அனுமன் சீதையை சந்த்தித்து ராமனனின்  மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அவளுடைய மோதிரத்தை ராமனுக்கு அளித்தது மற்றும் இலங்கைக்கு தீ வைத்தது முதலியன ஆகும்; அனுமனின் வெற்றிப்பயணத்தால் இதைப்படித்தாலோ கேட்டாலோ எல்லா காரியங்களும் வெற்றியடையும், சுபமாக முடியும், கல்யாணங்கள் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

முக்கிய அத்தியாயங்கள்

Chapter 1 – அனுமனின் புறப்பாடு;

Chapter 6 – ஹனுமான் ராவணன் அரண்மனையை நோட்டம் விடுதல்;

Chapter 7 – புஷ்பக விமான வருணனை

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 15 – ஹனுமான் சீதா தேவியைக் காணுதல்; 

Chapter 22 – சீதைக்கு ராவணன் விடும் மிரட்டல்

Chapter 27 – திரிஜடையின் சுபக் கனவு

Chapter 32 –  ஹனுமான் சீதையின் முன் தோன்றி ராமபிரானைப் புகழ்தல்

Chapter 37 – ஹனுமான்சொன்ன மீட்பு திட்டாத்தை சீதா தேவி நிராகரித்தல்

Chapter 38 – சீதாதேவி தனது நகையை ராமனுக்கு கொடுத்து அனுப்புதல் ;

Chapter 49 – ஹனுமான் பல இடங்களை அளித்து பல தளபதிகளைக் கொன்றதால் அரக்கர்கள் பிடித்தல்

Chapter 53 – அனுமனை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்படி ராவணன் உத்தரவு; வாலில் வைத்த தீயை அவன் இலங்கை நகருக்கு இட்டான்

Chapter 54 – லங்கா நகரம் தீக்கிரை

Chapter 64 – சுக்ரீவன் , ராமபிரானுக்கு ஆறுதல் சொல்லல்;

Chapter 65 – கண்டேன் சீதையை என்ற தலைப்புச் செய்தியுடன் ராமனை அனுமன் சந்தித்து அளவளாவுதல்

Chapter 68 – சீதாதேவிக்கு சொன்ன ஆறுதலை ராமனுக்கு அப்படியே எடுத்துரைத்தல்

***

சுமேரு

இமய மலைக்கும் அப்பாலுள்ள ஒரு தங்க நிற மலை என்றும் வடதுருவம்தான் சுமேரு என்றும் கருத்துக்கள் உள்ளன இதை சூரியனும் சந்திரனும் வலம் வருவதாகச் சொல்வதால் வடதுருவம் அல்லது ஆர்ட்டிக் வட்ட நா டுகள் என்பது ஒரு வாதம்.

வித்யாதரர்கள், கிம்புருஷர்கள் முதலிய தெய்வீக புருஷர்கள் சுமேருவில் வசிக்கிறார்கள் .

***

சுரா  பானம்

இது சோம ரசத்திலிருந்து வேறுபட்ட பானம்; இந்த வேற்றுமைகளை விளக்கிவிட்டு  இதைத்  தவிர்க்கும்படி வேதம் புத்தி சொல்கிறது.  அரிசியை அல்லது தேனை அல்லது கரும்புச் சாற்றை புளிக்கவைத்து இதைச் செய்வதையும் சம்ஸ்க்ருத நூல்கள் விளக்குகின்றன

***

சூர்ய வம்சம் 

புராதன மன்னர்களை சந்திர வம்சம் என்றும் சூரிய வம்சம் என்றும் இந்துமத புராணங்கள் பிரிக்கின்றன. அதன்படி இக்ஷ்வாகு முதல் 145-க்கும் மேற்பட்ட மன்ன ர்களின் பட்டியலைப் புராணங்கள் தருகின்றன . இதன் கடைசி மன்னர் சுமித்ரன், நந்த வம்ஸத்துக்கு முன்னால் வாழ்ந்தவன் ; அதாவது 2600 ஆண்டுகளுக்கு முந்தையவன் சுமித்ரன்! ஒரு மன்னனுக்கு 20 அல்லது 25 ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் ஒதுக்குகின்றனர்;

ராம பிரான் , சோழ மன்னர்கள் ஆகியோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்துமத புராணங்களை நம்புவோர் சிந்து வெளி நாகரீகமும்  சூர்ய வம்ச ஆட்சிக்குள் வந்துவிடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஏனெனில் இக்சிவாகு 2800+600=3400 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியை ஆண்டிருப்பார் ; அயோத்தியிலிருந்து ஹரப்பாவும் மொஹன்சதாரோவும் அதிக தூரம் இல்லை.

ஆரிய- திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இது செமை அடி கொடுக்கும் ;மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த பேராசிரியர் வில்சன் சொல்வது போல ரிக்வேதத்துக்கு 2000 BCE  கொடுத்தாலும் சிந்து வெளி நாகரிகத்துக்கு , அடி உதை விழும் !

***

சூர்யன்

சோலார் என்ற ஆங்கிலச் சொல் சூர்ய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே; ர+ல இடம் மாறும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கண விதி

 சூரியனுக்கு ஒரு சக்கரமும் ஏழு குதிரைகளும் இருப்பதாக புராணங்கள் சொல்லுவதை சங்கத் தமிழ் புலவர்களும் செப்புகின்றனர் வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை ஏழு குதிரைகள் என்று அடையாள பூர்வமாகச் சொல்லுவார்கள். சூரியனுக்கு முன்னால், பல்லாயிரம் குள்ள  முனிவர்கள் — வாலகில்யர்கள்–  செல்வதை புராணங்களும் சங்கப்புலவர்களும் செப்புகின்றனர்; இதுவரை விஞ்ஞானிகள் இதை விளக்கவில்லை . அவர்கள் விளங்காதவர்களே! காஷ்மீர் முதல் பாகிஸ்தானில் இப்போதுள்ள மூல்டான் முதல் ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் வரை சூரியனுக்கு கோவில்கள் இருந்தன . முஸ்லீம் வெறியர்கள்  அவைகளை உடைத்து அழித்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சூரிய கிரஹணம் பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புறநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன; சூரியனுக்கு மனைவிககள் உண்டு என்று சொல்லுவதும் அடையாள பூர்வ செய்திகளே நிழல் / சாயா ஒரு மனைவி!

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா =

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

அக்கினியே ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

***

சுஸ்ருதர் 

சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது. அவர் அட்டை என்னும் பூச்சியைப் பயன்படுத்தி ரத்தம் எடுக்கும் வைத்தியம், செயற்கை மூக்கு ஆபரேஷன், 145 வகையான கருவிகளைக் கொண்டு ஆபரேஷன் செய்வது முதலியன பற்றி எழுதி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன .

சர்ஜரி என்னும் அறுவைச் சிகிச்சையின் தந்தை இவரே என்று இப்போது உலகம் ஒப்புக்கொண்டு ஆஸ்திரேலியா முதலிய இட்டங்களில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் இவருடைய சிலையை வைத்துள்ளனர்.

சுஸ்ருத ஸம்ஹிதாவில் 186 அத்தியாயங்கள் உள.  பூர்வ-தந்த்ராவில் 120-ம்  , உத்தர-தந்த்ரா வில் 66-ம் உள்ளன.

பூர்வ-தந்த்ராவில்

•             சூத்ர ஸ்தான (46 அத்தியாயங்கள் ): மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகள்; மருத்துவ மாணவர் பயிற்சி, மருந்தியல்

•             நிதான ஸ்தான (16 ): நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பொருள்களும்

•             சரீர ஸ்தான (10 ): மனித உடற்கூறு, கருவின் வளர்ச்சி, முக்கிய உ டல் உறுப்புகள் , மர்ம ஸ்தானங்கள்

•             சிகித்ஸா ஸ்தான (40 ): பொதுவான சிகிச்சை , அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி;

•             கல்ப ஸ்தான (8 ): விஷங்களும் , விஷத்தை அகற்றும் சிகிச்சைகளும்

•            

உத்தர-தந்த்ரா ( – 66 அத்தியாயங்கள் )

•             கண், காது மூக்கு நோய்களும் சிகிச்சைகளும் (சாலக்கிய தந்த்ரா), குழந்தை வைத்தியம் (கௌமார பிரித்ய), மன நோய் வைத்தியம் (பூத வித்யா), பொதுவான மருந்துகள்  (காய சிகித்ஸா)

To be continued…..

Tags- சுஸ்ருதர் , சுபத்ரா , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 , சூரியன், சூர்ய வம்சம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 (Post.16,058)

Written by London Swaminathan

Post No. 16,058

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted on 5-8-26

சந்தியா வந்தனம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலம் சந்திக்கும் நேரங்களில் — அதாவது இரவும் காலையும், காலையும் பகலும், பகலும் மாலையும் சந்திக்கும் மூன்று நேரங்களில் செய்யும் சூரிய வழிபாடு இது. காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது இதன் முக்கிய உபாசனை. முன் காலத்தில் ஏனைய  ஜாதியினரும், பெண்களும் சந்திரா வந்தனம் செய்ததை வாலமீகி ராமாயணம் முதலிய நூல்கள் செப்புகின்றன. ஒருவேளை அதிலுள்ள மந்திரங்கள் வேறு பட்டிருக்கலாம்.இந்த வழிபாட்டுக்கு தண்ணீர் வேண்டும். ஆரியர்கள் குளிர் பிரதேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொல்லும் அரைவேக்காடுகளுக்கு இந்து மதச்சடங்குகள் வேட்டு வைக்கின்றன .

***

சாந்திபனி

கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த குரு/ ஆசிரியரின் பெயர்.  மகரிஷி சாந்திபனியிடம் கிருஷ்ணர், பலராமன், குசேலர் என்னும் சுதாமா முதலியோர் சகல சாஸ்திரங்களையும் கற்றனர் . உஜ்ஜயினி நகரில் இப்படி ஒரு ஆஸ்ரமம் இருந்தது .

***

சங்கம்  /குழு , கூட்டம்

இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழ் வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறது ; தமிழ் மொழியை வளர்க்க பாண்டிய மன்னர்கள் மூன்று இதனங்களில் முதல், இதை, கட்டைச் சங்கங்களை நிறுவியதாக பிற்கால உரைநடை  நூல்கள்   கூறுகின்றன . அதில் கூறப்படும் பத்தாயிரம் ஆண்டுக்காலம் முதலியன நமப்புக்கொட்டியதாக இல்லை . தொல்காப்பியரின் விதிப்படி ச என்னும் எழுத்தில் சொற்கள் துவங்க முடியாது . 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப்புகளைப்பெற்ற இலக்கண வித்தகன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி நூலில் சங்கம் என்னும் சொல் வருகிறது அவர் இதற்கான பல பொருள்களை இலக்கண விதிகளுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார் ; அதில் ஒரு பொருள் குழு, பலர் இருக்கும் அமைப்பு என்பதாகும் ; ஆயத்தங்களை விருப் பிழைக்கும் ஆயுதஜீவி சங்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் . ப்புத்தர் இறந்த பின்னர் , பிட்சுக்கள் சங்கங்களை ஏற்படுத்தினார் கள். அவர்களைப்போலவே சமணர்களும் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் ; அவை எல்லாம் சமய அமைப்புகள் ; மொழியுடன் தொடர்புடையவை அல்ல 

தமிழ்ச் சங்கப்புலவர்களிடையே நடந்த கோஷ்டி ஓதல்களைத் திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களில் காணலாம் .

சத்சங்கம் என்ற சொல்லை ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் முதலிய திதிகளில் காணலாம்.

***

சனி- சனைச்சரன் — சனிக் கிரகம்

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் –நீளா தேவி; இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “.

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி- இவள் மகன் “தரித்திரன்” .

மந்தா தேவி-

பூமியிலிருந்து சனி இருக்கும் அதிக பட்ச தூரம்- 88,லட்சத்து 66 ஆயிரம்மைல்கள்

குறைந்த பட்ச தூரம் – 74 லட்சத்து 66ஆயிரம்மைல்கள்

சூரியனை ஒருமுறை சுற்றி வர – 30 வருடங்கள்!!!!

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு; தானியம் – எள் – கறுப்பு; உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு; வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி; புஷ்பம் – கருங் குவளை. இஷ்ட காலம் – சாயும்காலம், பிரதோஷ வேளை

குணம் – தாமசம்; உத்யோகம் – அடிமை;  அதிதேவதை – யமன்;  பிரத்யதி தேவதை- பிரஜாபதி; ஜாதி – சண்டாளர்/ கலப்பு இனம்;

திசை – மேற்கு;  பூதம் – காற்று; தன்மை – ஆண் அலி;  மொழி – நீச பாஷை;  உடல் அதிபதி -நரம்புக்கு;

அவஸ்தை – விருத்தர் அல்லது வயதானவர்; சுவை – துவர்ப்பு; சமித்து – வன்னி; ரத்தினம் – நீலம்; சுபாபவம் – குரூரம்;

குணம் – பாவி; நாடி – வாத நாடி; ஆசனம் – வில்; தேசம் – சௌராஷ்டிரம்; கண்டம்- ஆப்ரிக்கா; கோத்திரம் – காஸ்யபம்;

ருது- வஸந்த ருது; காரகன்- ஆயுள் காரகன்;  உச்சம் – துலா ராசியில்; நீசம் – மேஷ ராசியில்;  சொந்த வீடுகள் – மகரம், கும்பம்;

பார்வை – 3, 7, 10;  நண்பர்கள் – புதன், சுக்கிரன்; எதிரிகள் – சூரியன், சந்திரன், செவ்வாய்; சமமானவர் – குரு; ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி; தைலம் – நல்லெண்ணெய்; ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு;  ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்.

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர், மதுரை அருகில் உள்ள குச்சனூர், சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்.

கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு விசேஷமான மாதம்.அதே மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று ரோகிணி

நடசத்திரத்தில் பிறந்தவரே சனீஸ்வரன்!!! ஆகையால், புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்தவர்களையும், ரோகிணி நட்சத்திரத்தில்

பிறந்தவர்களையும் அவர் ஒன்றும் செய்ய மாட்டார்!!!

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்;

பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்.

சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில்

கடுமையான நீதிபதி!!! தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி வைக்கும் சூரர்!!!

அஸ்வ ரகசியத்தை தெரிந்தவன், சிறந்த ஆட்சியாளன்,அழகான ராஜ குமாரன், சமையல் கலை வல்லுனன், நளன்!!!

காலை சரியாக கழுவ வில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாட்டை விட்டு ஓட்டி, மனைவியைப் பிரிந்து, தனது ஆடையை இழந்து ,

மனைவியின் புடவைத் தலைப்பில் அலைய விட்டு, கடைசியில் தனது க்ஷேத்திரமான திருநள்ளாறுக்கு வந்து தன்னை வழிபட்ட பின்னரே

அவனுக்கு விடுதலை அளித்தார் சனீஸ்வர பகவான்!!!

கறுப்பு ஆடை

சனீஸ்வர பகவானுக்குப் பிடித்த கறுப்பு ஆடை அணிந்து, அல்லது கரு நீல ஆடை

அணிந்து 45 நாட்கள் விரதம் இருந்து, தரையில் படுத்து, உயரமான மலையிலேற்றி ஐயப்ப பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம்

செய்வித்து திருப்பி அனுப்புகிறார்.

சனீஸ்வர பகவான் !!!

சிறை வாசம், தீராத நோய், கடும் கடன், அவமானம், ஆயுளுக்கு

அதிபதி இத்தனை அதிகாரமும் கொண்டவர் சனி!!!

நமது உடல் முழுவதும் பரவி இருக்கும் நரம்புக்கு அதிபதி சனி!!.,

சனியில் பலமில்லாததினால் வரும் வியாதியே காக்காய் வலிப்பு!!!

கர்ம வியாதி என்றும், தீராத நோய் என்று ஜோதிடர்களினால் வரணிக்கப் படுகிறது இது ……

சனியின் உலோகமான இரும்பைக் கொடுத்தவுடன் நிற்கிறது……

இவ்வளவு பெருமையும், கடூரமான, கண்டிப்பான, தலைவிதிப்படி

தண்டிப்பதில் தனக்கு நிகரற்ற அனைவரையும் நடுநடுங்க

வைக்கும் சனீஸ்வரரை பணியவைக்கும் தெய்வம் ஆஞ்சனேயர்!!!

சனிக்கிழமை சனிஸ்வரனை எள் விளக்கேற்றி வணங்கி வழிபட்டாலும் சரி ஆஞ்சனேயரை

வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் சரி , கருணை வைத்து அருள்புரிவார்!!!

அனைவரும் சனீஸ்வரனை வணங்கி அவனருள் பெறுமாறு வேண்டி

விடை பெறுகிறேன் சீனிவாசன்!!! நன்றி , வணக்கம்!!! (From Gnanamayam Broadcast from London; Speaker Santanam Srinivasan)

XXXX

ஶ்ரீ சனீஸ்வர காயத்ரி

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி

தன்னோ சனி: ப்ரசோயதயாத்

XXXX

ச்லோகம்

நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா

மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

****

சஞ்சயன் 

மஹாபாரதத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ; பெயரின் பொருள்- வெற்றி  ; திருதராஷ்டிரனின் ஆலோ சகர்; தேரோட்டி;  வியாசரின் சீடர்; அவர் கொடுத்த வரத்தால் இருந்த இடத்திலிருந்தே மஹாபாரதப் போர் முழுதையும் நேரடி ஒளிபரப்பு செய்தவர் ; இந்த பூர்வ சக்தி துரியோதனன் இறந்த நாளில் கதறிக்கொண்டு யுத்தகாலத்துக்குச் சென்றவுடன் மறைந்துவிட்டது ; பகவத் கீதையில் சஞ்சயர் சொன்னார் என்று அடி கடி வரும்; இவர் மூலமே நமக்கு பகவத் கீதை கிடைத்தது ; ஒரு காலத்தில் பாணடவர்களிடத்தில் சமாதானத் தூதும் சென்றார் ; நடுநிலைவாதி ; உள்ளதை உள்ளபடியே உரைத்தவர் .

***

சங்கரர் – ஆதிசங்கரர்

அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மிகப்பெரிய ஞானி. காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை;.ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம் என்று போதித்தார் . இந்தியா முழுதும் வலம் வந்து பல தத்துவ ஞானிகளை வாதத்தில் வென்று பெரும் பக்தர் கூட்டத்தை உருவாக்கினார் நாட்டின் நான்கு மூலைகளில் — ஜோஷிமத், பூரி, துவாரகா, சிருங்கேரி – மடங்களை நிறுவி காஞ்சீபுரத்தில் முக்தி அடைந்தார் ; சிலர் இவர் இமயமலையில் முக்தி அடைந்ததாகவும் சொல்வர் ; சென்ற இடமெல்லாம் சக்தி வாய்ந்த லிங்கங்களையும் யந்திரங்களையும் அமைத்து கோவில்களுக்கு சக்தி ஊட்டினார் . இவர் பெயரில் உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இன்றும் பல லட்சக் கணக்கானோரால் பாடப்படுகின்றன ; விவேக சூடாமணி, செளந்தர்ய லஹரி, பஜகோவிந்தம்,  கனகதாரா ஸ்தோத்திரம் முதலிய ஒவ்வொன்றின் பின்னாலும் கதைகளும் அற்புதங்களும் உள்ளன ;  இவர் பகவத் கீதைவிஷ்னு சஹஸ்ரநாமம் , முக்கிய உபநிஷதங்களுக்கு எழுதிய உரைகளே இவரது புலமைக்குச் சான்று பகரும் ; சிறுவயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றார் ; இவரது காலம் எடடாம் நூற்றாண்டு என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன ; இவரைப் போலவே பிற்காலத்தில் வாழ்ந்த அபிநவ சங்கரரின் வாழ்வும் ஆதி சங்கரர் வாழ்வும் அதிசயங்கள்  நிறைந்தவை; ஆகையால் காலத்தைத்  தெளிவாகச் சொல்லமுடியவில்லை . இவரது சீடர்கள் பரம்பரை, இன்றும் சங்கராசார்யார் என்ற பெயரில் இந்துமதத்தைப்  பரப்பிவருகின்றனர்.

***

சனத் குமாரர்

இந்து புராணங்களின் படி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றிய முதல் நான்கு ஞானிகளில் (மானச புத்திரர்களில்) சனத்குமாரரும் ஒருவர். ஏனைய மூவர் சனகர், சனாதனர், சனந்தனர் ஆவர். எப்போதுமே ஐந்த வயதுடைய குழந்தைப் பருவத் தோற்றத்துடன் இருக்கக்கூடிய இவர்கள், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து மெய்ஞானம் பெற்ற ரிஷிகள் ஆவர்.

காஞ்சி  மஹாசுவாமிகள் (1894-1994) உரையில் சொல்வதாவது: ONLY SUMMARY IS GIVEN BELOW

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

………………………..

ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

“……………………………..

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ………..

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

TO BE CONTINUED…………….

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 , சனத் குமாரர் , ஏழரை நாட்டு சனி, சந்தியா வந்தனம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91 (Post.16,044)

Written by London Swaminathan

Post No. 16,044

Date uploaded in London – 2 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

91HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91

English version was posted yesterday. Here is the Tamil version.

சகுந்தலா

சகுந்தலா என்றால் பறவைப் பெண் என்று பொருள்; அதாவது கானகத்தில் பறவைகளால் வளர்க்கப்பட்டாள். இதிலிருந்துதான் நாம் பயன்படுத்தும் சகுனம் என்ற சொல் பிறந்தது. விஸ்வமித்திரனுக்கும் தேவ லோக அழகி மேனகாவுக்கும் பிறந்த பெண் குழந்தையை அவர்கள் காட்டில் விட்டுச் செல்லவே, கண்வர் என்ற முனிவர் அவளை வளர்த்து வந்தார். ஒரு நாள் துஷ்யந்தன் என்ற மன்னன் அவளைக் கண்டு கானகத்தில் அவளை கந்தர்வ முறையில் மணந்து கொண்டு நாட்டுக்குப்  போய்விட்டான் அவள் கர்ப்பமுற்று உலகத்தையே ஆண்டு இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயரைத் தந்த பரதனைப் பெற்றுக்கொடுத்தாள்; அவளது முழுக் கதையை சாகுந்தலம் நாடகத்தில் காணலாம் 

சாகுந்தலம்

உலகப்புகழ்பெற்ற ஸம்ஸ்க்குக நாடகத்தை அபிக்ஞான சாகுந்தலம் என்ற பெயரில் காளிதாசன் எழுதி உலகையே வியக்க வைத்தான்;  இதை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் ஜோன்ஸ், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பாரதத்தின் பெருமை பரவியது; சாகுந்தல நாடக சகுந்தலாவைக் காப்பி அடித்து ஷேக்ஸ்பியர் டெம்பஸ்ட் என்னும் நாடகத்தில்  மிராண்டா என்ற கானகப் பெண்ணை உண்டாக்கினார். கானகத்தில் சகுந்தலாவை கர்ப்பவதியாக்கிவிட்டு நாட்டுக்குத் திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விடுகிறான்; கண்வ முனிவர் சீடர்கள் புடை சூழ, அவளை அனுப்பிவைத்தபோது, அவளை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறான் துஷ்யந்தன்; அவன் கொடுத்த மோதிரமும் ஒரு அசரீரியும் அவளை உண்மைபெண் என்று காட்டியவுடன் ஏற்கிறான் என்பது சாகுந்தல நாடகத்தின் கதை ; இதில் பறவைகள் , மான்களுடன் அவள் வாழ்ந்த அப்பாவிப் பெண் வாழ்க்கையும் குடும்பப்பெண் எப்படி நடக்க வேண்டும் என்ற கண்வ மஹரிஷியின் வசனமும், ஆஸ்ரம அழகும் அக்கால பாரதத்தின் அழகினை வருணிக்கிறது ; ஐரோப்பாவின் அறிஞர்கள், கவிஞர்கள் அனைவரும் காளிதாசனுக்குப் புகழாரம் சூட்டியதோடு சம்ஸ்க்ருத மொழியையும் பயிலத் துவங்கினார்கள்.  

சால்மலி த்வீபம்

புராணத்தில் பூமியை அல்லது அவர்கள் அறிந்த நிலப்பரப்பினை ஏழு தீவுகளாக , அதாவது கடல் சூழ்ந்த பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் அங்குள்ள தாவரம் அல்லது பறவையின் பெயரைச் சூட்டினார்கள்; அதில் ஒன்று சால்மலி த்வீபம் .சால்மலி என்றால் இலவம் பஞ்சு மரம்; அது பல நாடுகளில் காணப்படுவதால் இந்த இடத்தைக் கண்டு பிடிப்பதில் குழப்பம் நிலவுகிறது; இதைச் சுற்றி கரும்புக் கடல் உள்ளதாகவும் புராணங்கள் செப்புகின்றன ; சிலர் இதை ஆஸ்திரேலிய பகுதி என்றும் வேறு சிலர் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதி என்றும் எழுதியுள்ளார்கள் .

எனது கருத்து

புராணத்திலுள்ள இடங்கள் பெரும்பாலும் ஆசிய கண்டத்தையே குறிக்கிறது; ஒருவேளை ஆப்பிரிக்காவின்  கிழக்குப்பகுதியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் ; அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்றவைகளை அவர்கள் பாதாள லோகங்களில் சேர்த்துவிட்டனர்; ஆகவே இவைகளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தைச் செலவழிப்பதை விட அவர்கள் ஏன் இப்படிப்பிரித்தார்கள் என்று ஆராய்வது நல்லது ; புராண பூகோளம் என்று ஆங்கிலத்தில் புஸ்தகங்களை எழுதியோரிடையேயும் ஒருமித்த கருத்து இல்லை ; சம்ஸ்க்ருத புராணங்களிடையேயும் ஒரே கருத்து இல்லை .

சாலாதூரா

உலகப்புகழ் பெற்ற, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதி , உலகையே வியப்பில் ஆழ்த்திய சம்ஸ்க்ருத இலக்கண வித்தகன் பாணினிபிறந்த ஊர் இது இப்போது பாகிஸ்தானில் லாகூர் நகருக்கு அருகில் உள்ளது . பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னால் நூலை எழுதினார் ; அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் வந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்ரீகனும் பாணிணிக்கு சாலாதூரா நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறான்

Xuanzang’s Record: Writing in CE 646, Xuanzang recorded visiting the town (calling it Suoluoduluo), noted that it was the birthplace of Pāṇini (the author of the Vyākaraṇa or Qingming-lun), and stated that a commemorative statue of Pāṇini still existed there during his visit.

***

சாம வேதம்

நான்கு வேதங்களில் சாம வேதம் மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ளது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என்பதை நான்மறை என்று சங்கப்புலவர்களும் போற்றியுள்ளனர் . பாரத நாட்டில் இசையை தோற்றத்தை மெய்ப்பிக்கும் நூல் இது; இதை இசையின் ஓதுவார்கள் வேத பண்டிதர்கள்; இதை அப்படியே காப்பி அடித்து புத்த பிட்சுக்களும் பாலி மொழி கிரந்தங்களை ஓதி வருகின்றனர்  ஒவ்வொரு யாக யக்ஞத்திலும் வேத பாண்டிதர்கள் சாமத்தை இசைப்பார்கள்; அந்த அளவுக்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் இந்துக்கள்த்திலுள்ள மந்திரங்கள் முக்கால் வாசி ரிக்வேத மந்திரங்களே நூற்றுக்கும் குறைவான மந்திரங்களே புதியவை; ஆகையால் ரிக்வேத காலத்தையே இதற்கும் சூட்ட வேண்டும்; அதாவது 3500 முதல் 6000 ஆண்டு வரை பழமையானவை

ரிக் வேதத்தின் எட்டாவது ஒன்பதாவது மண்டல பாக்கள் இதில் இடம்பெறுகின்றன

மொத்தமுள்ள துதிகள் -1,771.

சாம வேதத்தில் பாரம்பரியமாக 1,000 சாகைகள் (கிளைகள்) இருந்ததாகக் கூறப்பட்டாலும், தற்போது கிடைத்து, புழக்கத்தில் உள்ள முக்கிய சாகைகள் மூன்று மட்டுமே ஆகும். அவையாவன: கௌதம சாகை, ரணாயனிய சாகை, ஜைமினி சாகை (தலவகார சாகை)

ஒவ்வொரு வேதத்திலும் சாகைகள் என்ற கிளைகள் உண்டு; அதாவது அந்தந்த ஆசிரியரின் பாணி அல்லது ஸ்டைல் அல்லது உத்தி என்று சொல்லலாம் அவ்வகையில் குஜராத்தில் கெளதும சாகாவும் மகாராஷ்டிரத்தில் ராணாயணீய சாகாவும் தமிழ்நாட்டில் ஜைமினீய சாகாவும் பயிலப்படுகின்றன 

Regional Schools (Sakhas): Preserved through oral traditions across different parts of India, notably the Kauthuma tradition in Gujarat, Ranayaniya in Maharashtra, and Jaiminiya in Southern India.

சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம்  ஆகிய இரண்டும் இந்த  வேதத்தைச் சேர்ந்தவை

***.

ஷம்பு

Śaṃbhu (शंभु).—a. சிவபெருமானின் பெயர்களில் ஓன்று; இன்பத்தை மகிழ்ச்சியை அளிப்பவர் என்பது பொருள்; சம்போ சங்கரா என்ற கோஷங்களை பஜனைகளில் கேட்கலாம் 

***

சமிதி – கமிட்டி

ரிக் வேதத்தில் காணப்படும் இந்தக்குழு அமைப்பினை நம் இப்போதும் கமிட்டி என்று சொல்லி வருகிறோம்; உண்மையான உச்சரிப்பு சமிதி; அதை ஆங்கிலத்தில் க உச்சரிப்புடன் சொல்லி வருகிறவம்; ரிக் வேதத்தில் சபா (அவை) சமிதி என்ற இரண்டு அமைப்புகளையும் பயன்படுத்தினர் 

இரண்டு குழுக்களிலும் உள்ள உறுப்பினர்கள் வேறுபட்டனர் . தமிழில் எண்பேராயம் ஐம்பெருங்குழு என்று இருந்ததைப் போல.

***

சாமுத்திரிகா லக்ஷணம்

உடலின் உறுப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதைக்கொண்டு அவர்களின் குண நலன்களை, ஆரோக்கியம் , திறமை ஆகியவற்றைக் குறிக்கும் இந்துமத சாஸ்திரம் சாமுத்ரிகா லக்ஷணம்  என்று அழைக்கப்படுகிறது. தாமரை இதழ் போன்ற கண்கள், மீன் போன்ற கண்கள் , தாள் தோய் தடக்கை (ஆஜானுபாஹு) என்றெல்லாம் இலக்கியங்களில் காணலாம். ஆயினும் இவைகளின் பலன்களை சாமுத்ரிகா லட்சண நூல்களில் மட்டுமே காண முடியும் ; ஆளைப்பார்த்தால் ராஜா போல இருப்பான் என்று நாம் சொல்லும்போது நம் உள்ளத்தில் ராஜ களை என்பது ஊன்றியிருப்பது தெரிகிறது ; இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நூல்கள் உண்டு ;பத்மினி வகைப் பெண்களுக்கு உடலில் இயற்கை மணம் உண்டு என்ற திருவிளையாடல் புராண வசனம் போன்றவை சாமுத்ரிகா லட்சணத்தின் ஒரு பகுதியே  

அகத்தியர் பெயரிலும் ரதி ரஹஸ்யம் என்ற பெயரிலும் நூல்கள் இருக்கின்றன ; உலகத்தில் பெண்கள் படிப்பதற்கு முதல் முதலில் சிலபஸ் போட்டவர்கள் இந்துக்களே ; அவள் கற்க வேண்டிய 64 கலைகளை வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் பட்டியலிட்டுள்ளார் அதில் ஒரு கலை- சாமுத்ரிகா லக்ஷணம் ஆகும் .

***

சந்தனம்

சந்தன மரம்—( Santalum album)—இந்த மரத்தின் எல்லா பகுதிகளும் மனம் நிறைந்தவை; இதன் எண்ணெய் , பொடி,  அரைத்த விழுது ஆகிய அனைத்தும் இறைவன் பூஜைகளில், அபிஷேகத்தில், குளிர்ச்சி தருவதற்காக மனித உடலில் பூசுவது வளாகம்; ஆயுர்வேத சிகிச்சைகளிலும் பயன்படும்; இறைவன் சிலைகளில் சந்தன விழுதை அப்பி பூஜை செய்வார்கள் மணம் தரும் இந்த மரக்கட்டைகள் தென்னிந்தியாவில் அதிகம் கிடைக்கிறது

***

சந்தான லட்சுமி

சந்தானம் என்றால் புத்திரப் பேறு ; அஷ்ட லட்சுமி என்னும் எட்டு லக்ஷ்மிக்களில் ஒருவர் சந்தான லக்ஷ்மி; அஷ்ட ஐசுவர்யங்களையும் வேண்டும்   துதிகளில் இவள் பெயரும் இடம்பெறுகிறது .

அஷ்ட லக்ஷ்மிக்களும் என்ன என்ன தருவார்கள் என்பது அவர்களுடைய பெயர்களிலேயே உள்ளது

•  ஆதி லக்ஷ்மி: ஆன்மீக செல்வம்; எதிலும் முன்னேற்றம்;

•  தன லக்ஷ்மி: செல்வம்; நீங்காத சம்பத்து;

•  தான்ய லக்ஷ்மி: அளவற்ற தானியம், உணவு, அமோக விளைச்சல்;

•  கஜ லக்ஷ்மி: ராஜ போகம் , அந்தஸ்து ;

•  சந்தான லக்ஷ்மி: குழந்தை பாக்கியம்;

•  தைர்ய லக்ஷ்மி (வீர லக்ஷ்மி): வீரம், பலம், துணிவு,

•  விஜய லக்ஷ்மி: வெற்றி;

•  வித்யா லக்ஷ்மி: கல்வி, அறிவு, புத்தி;

………

Tags- சந்தான லக்ஷ்மி, சகுந்தலா, பகுதி 91, Hindu Dictionary, அஷ்ட லக்ஷ்மி.

ராமாயணத்தில் வரங்கள் 70  –  ஶ்ரீ ராமர் சீதைக்கு வரம் அளித்தது! (Post.16,011)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,011

Date uploaded in London – 24 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 70  –  ஶ்ரீ ராமர் சீதைக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் நாற்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘சீதையை கங்கைக்கரைக்கு அழைத்துச் செல்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் சீதையிடம் கர்ப்பமாயிருக்கும் சமயத்தில், ‘உனது இஷ்டம் என்ன? அதை நான் பூர்த்தி செய்கிறேன்’ என்கிறார். சீதை, ‘கங்கைக்கரையில் தவம் செய்யும் முனிவர்களைப் பார்க்க் ஆசைப்படுகிறேன்” என்கிறாள்.

பின்னர் ஒருநாள் ராமர் தனது மந்திரிகளிடம் ஜனங்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்க அவர்கள் ராமர் ராவணனை அழித்தது பற்றிப் பெருமையுடன் பேசுகிறார்கள் என்கின்றனர். என்னைப் பற்றிய நிந்தனை ஏதேனும் இருந்தால் அதையும் சொல்ல வேண்டும் என்று ராமர் கூற பத்திரன் என்பவர், “ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் இருந்த சீதையை ஏன் ராமர் விலக்கவில்லை” என்று ஜனங்கள் பேசிக் கொள்கின்றனர் என்கிறார்.

இதைக் கேட்ட ராமர் வருத்தமுற்றார்.

அவர் லக்ஷ்மணரை அழைத்து சீதையை நகரத்திற்கு வெளியே ஜனசஞ்சாரமில்லாத பிரதேசத்தில் கொண்டு சென்று விடுமாறு கூறுகிறார்.

லக்ஷ்மணர் சீதையிடம் சென்று இப்படிக் கூறுகிறார்:

த்வயா கிலைஷ ந்ருபதிர்வரம் வை யாசித: ப்ரபு: |                                  ந்ருபேண ச ப்ரதிஞாதமாஞப்தச்சாஸ்ரமம் ப்ரதி ||

      உத்தரகாண்டம் நாற்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 7

ஏஷ: – ‘இந்த                                                                                     ப்ரபு: – சர்வேஸ்வரரால்                                                          ந்ருபதி: – மன்னர்                                                                      த்வயா – தேவரீரால்                                                                   ஆஸ்ரமம் – ஆஸ்ரமத்தி/ற்கு                                                      ப்ரதி – போகும் விஷயத்தில்                                                                     வரம் – மனோரதத்தை                                                                   ஆஞப்த: வை -அறிவிக்கப்பட்டவராகவும்                                                    யாசித: ச – வேண்டிக்கொள்ளப்பட்டவராகவும் ஆகிறார்                                                  ந்ருபேண – மன்னரால்                                            ப்ரதிஞாதம் ச – அனுமதி தந்தருளப்பட்டதாகவும்                                   கில – தெரியவருகிறது

கங்காதீரே மயா தேவி ருஷீணாமாஸ்ரமாஞ்சச்சுமான் |                          சீக்ரம் கத்வா து வைதேஹி ஷாஸனாத்பார்திவஸ்ய ந: ||                 அரண்யே முனிபிர்ஜுஷ்டே அவனேயா பவிஷ்யஸி ||

                உத்தரகாண்டம் நாற்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 8

வைதேஹி – வைதேஹி                                                       தேவி – தேவியாரே                                                               து – இவ்விஷயத்தில்                                                     ந: – நமது                                                                                                                                                        பார்திவஸ்ய – மன்னவரது                                                                                                                   ஷாஸனாத் – நியமனத்தால்                                                                                                       கங்காதீரே – கங்கைக் கரையில்                                                                                                     ருஷீணாம் – ரிஷிகளுடைய                                                                                                                            சுமான் – புண்ணிய                                                                                                                                    ஆஸ்ரமான் – ஆஸ்ரமங்களுக்கு                                                                                                                        மயா – என்னோடு                                                                                                                                             சீக்ரம் – இப்போது                                                                                                                                               கத்வா – எழுந்தருளி                                                                                                                                       முனிபி: – முனிவர்களால்                                                         ஜுஷ்டே – வசிக்கப்பட்ட                                                   அரண்யே – அரண்யத்தினுள்                                                 அவனேயா – அழைத்துக் கொண்டு போகப்பட்டவராக                      பவிஷ்யஸி – ஆகுவீராக’

இப்படி லக்ஷ்மணரால் சொல்லப்பட்டவுடன் சீதை மிகுந்த சந்தோஷத்தை அடைந்து கிளம்ப ஆயத்தமாகிறார்.

இங்கு வரம் என்ற சொல் கூறப்படுகிறது. ஆனால் சீதையைப் பிரிக்கும் இந்தச் சொல் நிஜமாகப் பார்த்தால் ஒரு சாபம் தான்!

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 84; இந்து மத கலைச்சொல் அகராதி-84 (Post.16,000)

Written by London Swaminathan

Post No. 16,000

Date uploaded in London – 21 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

ராதா

கிருஷ்ணரைப் போற்றிய கோபியர் பெண்களில் மிகவும் புகழ்பெற்றவள் ; முதலில் பாகவத புராணத்தில் பெயர் சொல்லாமல் இவரைப் பற்றிய குறிப்பு வருகிறது ; பின்னர் பத்ம புராணம், பிரம்ம வைவஸ்வத புராணத்தில் இவர் தெய்வீக அந்தஸ்த்தைப் பெறுகிறார் ; குழப்பம் நிறைந்த பிராகிருத நூலான காதா  சப்தசதியில் இவர்பெயர் காணப்பட்டாலும் அது நம்பற்குரியதல்ல ; 700 பாடல்களுக்குப் பதில் 1000  பாடல் இருப்பதால் அதை ஐந்தாம் நூற்றாண்டு நூலாகக் கருதுகிறார்கள்.  தமிழில் இவரை நப்பின்னை என்று சொல்கிறார்கள் ; பிற்காலத்தில் ஜெயதேவரின் கீத கோவிந்தம் (அஷ்டபதி) நூல் மூலமும் மீரா பஜன் மூலமும் இவர் தினசரி பஜனை துதிகளில் இடம்பெறுகிறார் ; கோபியர் காதல் தோல் மூலம் எழும் புலன் இன்பக் காதல் அல்ல அது தெய்வீக நாயக நாயகி பாவம் உடைய  காதல் என்று சுவாமி விவேகானந்தர் அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார்.

***

ராகவேந்திரா (சுவாமிகள் )

தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள புவனகிரியில் மத்வ பிராம்மணக் குடும்பத்தில் பிறந்து, நீண்ட பயணம் செய்து ஆந்திர மாநிலத்தில் கர்நூலுக்கு அருகில் மந்த்ராலயம் என்னும் இடத்தில் சமாதி ஆனார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இவர் மத்வரின் த்வைதக் கொள்கையைப் பரப்பும் நூல்களை எழுதினார். பிரம்ம சூத்திர உரை, பகவத் கீதை உரை மிகவும் புகழ்பெற்றவை; பக்கதர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இவரது மந்திரத்தை லட்சக் கணக்கானோர் நாள் தோறும் சொல்லிவருவதோடு பல அற்புதங்களை அவர் நிகழ்த்துவதையும் காண்கின்றனர் ; அந்த மந்திரம் :

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே

Poojyaaya Raaghavendraaya

Satya Dharma Rathaayacha

Bhajathaam Kalpa Vrikshaaya

Namathaam Kaamadhenuvey

पूजयाया राघवेंद्राय सत्य धर्म रतायच

भजतां कल्प वृक्षाय नमतां कामधेनुवे

தமிழ் அர்த்தம்:ஸத்யத்திற்கும், தர்மத்திற்கும் உரியவரான ஸ்ரீ ராகவேந்திரருக்கு நமஸ்காரம். தன்னை வணங்குபவர்களின் குறைகளைத் தீர்த்து, அவர்கள் வேண்டியதை அளிக்கும் கற்பகவிருட்சமாகவும், காமதேனுவாகவும் அவர் விளங்குகிறார்.

கர்நாடகத்திலும் ஆந்திரத்தில் இவர் பயணம் செய்த காலத்தில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தினார் .

1624 -ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் விஜயேந்திர மடத்தின் அதிபதி ஆனார் ;பின்னர் மதுரை , உடுப்பி, பண்டரிபுரம் கோலாப்பூர் ஆகியவற்றில் தங்கி மந்திராலயத்துக்குச் சென்றார் ; வழிநெடுகிலும் உபன்யாசங்களைச் செய்து பக்தர் கூட்டத்தைப் பெருக்கினார் . 1663 ஆம் ஆண்டில் மைசூரைவிட்டுப் புறப்பட்டார். 1671 -ஆம் ஆண்டில் மந்திராலயத்தில் சமாதி ஆனார்.

(கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன், மந்த்ராலயத்துக்கும் புவனகிரிக்கும் சென்று தரிசனம் செய்த பாக்கியம் உடையவர்.)

***

ரமண மகரிஷி

திருச்சுழியில் பிறந்து, மதுரையில் வாழ்ந்து திருவண்ணாமலையில் சமாதி ஆகி உலகப் புகழ்பெற்றவர் ரமணர் ; நான் யார் என்ற கேள்வியை எழுப்பி ஆத்ம விசாரணை செய்து உள்முகப் பார்வை மூலம் அமைதி அடையலாம் என்பது இவரது போதனை ; வெளிநாட்டினரையும் ஈர்த்த இவர் மெளனத்தின் சிறப்பினை வாழ்ந்து காட்டினார் . மதுரையில் படித்த காலத்தில் சாதாரண மாணவராகவே இருந்த இவரை ஒரு நாள் (August 1896, at the age of 16 )திடீரென்று மரணபயம் கவ்வியது ; அப்போது நான் யார் இந்த உடல் என்பது என்ன? அப்படியே செத்தாலும் என்னதான் நடந்துவிடும்? என்ற சிந்தனை தோன்றியது பெரிய புராணத்தைப் படித்ததால் அந்த பயத்தை வென்றதோடு திருவண்ணாமலையில் சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. என்னை யாரும் தேட வேண்டாம் என்று சீட்டு எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்குப் பயணமானார் அந்த அருணாசல மலை இவரைக் காந்தம் போல ஈர்த்தது; அங்கு பல குகைகளில் தவம் செய்து இறைவனைக் கண்டார் ; பக்தர் கூட்டம் பெருகியது. இறுதிக் காலத்தில் கையில் புற்றுநோய் வந்தபோதும் பெரிய சிகிச்சைக்குச் செல்ல மறுத்து, உடல் வேறு ஆன்மா வேறு ஆகவே இந்த உடலைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றார் . இவரது தாயார் அழகம்மாள் சமாதியும் ரமணர் சமாதியும்  ரமாணாசிரமும் திருவண்ணாமலையில் உள்ளன 

பிறந்த தேதி – டிசம்பர்  30, 1879,

சமாதி ஆன தேதி – ஏப்ரல் 14, 1950,

தாய் தந்தையர் இட்ட பெயர்- வெங்கட்ராமன்.

தந்தை பெயர்  சுந்தரம் ஐயர்,

அவர் உயிர்நீத்த நாளன்று வானத்தில் ஒரு ஜோதி தென்பட்டது; அவர் அருணாசல இறைவனுடன் ஐக்கியமானதை பக்தர்கள் கண்டு அமைதி  அடைந்தனர் .

***

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ரமண மஹரிஷியைப் போலவே வாழ்க்கை மூலம் இந்து மத்ததை போதித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்; சுவாமி விவேகானந்தா என்ற சீடர் மூலம் இந்து மதத்தை உலகெங்கும் பரப்பியவர் ; சிறுவயதில் வங்காளத்தில் கமார்புக்கூர் என்ற ஊரில் கதாதரர் என்ற பெயரில் அவதரித்தார் . சிறுவயது முதல் படிப்பில் கவனம் செலுத்தாமல் இறைவனை நாடுவதில் ஆர்வம் கொண்டார்; கடவுளின் நாமமும் பஜனைகளும் இவரை வசப்படுத்தின . இஸ்லாமிய கிருஸ்தவ மதக் கொள்கைககளையும் கற்று இந்துமதத்தைப் பின்பற்றினார். பைரவி பிராமணி என்பவரிடம் தாந்திர விஷயங்களையும் தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தையும் கற்றார்

சிறுவயதில் இராமாயண, மஹாபாரத நாடகங்களில் நடித்த போதே அந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார் ; மாணவப் பருவத்தில் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியில் நடந்த போது நீலமேகம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளை நிறக்கொக்குகள் கூட்டமாகப் பறந்து செல்வதைக் கண்டு இறைவனின் அற்புதமான படைப்பினை கண்டு ஆனந்தம் அடைந்தவுடன் சமாதி கிட்டி வயல் வெளியில் வீழந்தார்; பல நாட்களுக்குப் பின்னர் உணர்வு திரும்பியது . தாயார் சந்திரமணி தேவிக்கு இது கவலை ஊட்டியது; அவருக்கு 20 வயதானபோது ஆறு வயது சாரதா தேவியைத் திருமணம் செய்துவைத்தார் ; இதற்கிடையில் சகோதரர் ராம்குமாருக்கு கல்கத்தாவில் ராணி ராஷ்மணி தேவி உருவாக்கிய தட்சினேஸ்வர காளி கோவிலில் பூஜாரி வேலை கிடைத்தது;  அவருக்கு உதவ கல்கத்தாவுக்குச் சென்ற ராம கிருஷ்ணர் தட்சிணேஸ்வர   காளியைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தார் . மனைவி வயதுக்கு வந்தபோதும் அவரை தேவியின் வடிவமாகக்கண்டு பூஜை செய்யத் துவங்கினார் அவர் மீதும் பக்தி பரவவே அவரும் சன்யாசினி போல வாழத்துவங்கினார் . இருவரின் புகழும் பரவவே பக்தர் கூட்டம் திரண்டது. கடவுளைக் காட்ட முடியுமா? இப்போதே காட்டு!  என்ற கேள்வியுடன் வந்த விவேகானந்தருக்கு அந்த நிமிடமே கடவுள் அனுபவத்தைக் காட்டினார் .

1885- ஆம் ஆண்டில் அவருக்குத் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது; சிகிச்சை எடுக்க மறுத்தார் ; காளிதேவியின் மூலம் ஏன் நோயைத் தீர்க்கக்கூடாது என்று பக்தர்கள் கெஞ்சினார்கள். காளி தேவிக்கு முன்னால் போனால் இந்த உடல் ஞாபத்துக்கு வராது என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ; உடல் நிலை மோசமாகவே அவரைக் காசிப்பூருக்கு கொண்டு சென்றனர் ; இறுதிக்காலம் நெருங்கிவி ட்டதை அறிந்த அவர் சீடர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துவிட்டு தனது சக்தி முழுதையும் சுவாமி விவேகானந்தருக்கு மாற்றினார் ; அவரும் சீடர்களும் சேர்ந்து ராமகிருஷ்ன ஆஸ்ரமத்தை, மிஷனை உருவாக்கினார்கள் ; ராமகிருஷ்ணர் புஸ்தகம் எதையும் எழுதவில்லை ; புதிய கொளகை எதையும் சொல்லவில்லை; வேத உபநிஷதக் கருத்துக்களை அற்புதமான பொன்மொழிகள் மூலமும் குட்டிக் கதைகள் மூலமும் சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார். எப்போது சீடர்கள் அனைவரும் என்னைச் சூழ்ந்து இருப்பார்களோ அப்போது என் ஆவி பிரியும் என்று ஆரூடம் சொன்ன பரமஹம்சரின் ஆவி 1886–ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ல்  உடலைவிட்டு நீங்கியது; 

இறுதி மூச்சின்போதும் சாந்தமே தவழ்ந்தது அவரது புனித முகத்தில்!

(இந்து மதத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள, வேத- உபநிஷத- பகவத் கீதை-யைக் படிக்கத் தேவை இல்லை; அவருடைய ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி என்ற சிறிய நூலைப்படித்தாலே போதும் ; எல்லா மொழிகளிலும் கிடைக்கும் ; கடைசி பகுதியில் உள்ள குட்டிக்கதைகளை முதலில் படியுங்கள். (கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதனின் அனுபவம் இது)

***

ரத யாத்திரை- தேர்த் திருவிழா

இந்துக்களின் ஒப்பற்ற கண்டுபிடிப்பு  ரத யாத்திரை ; கோவிலுக்கு வரமுடியாதவர்களுக்கு இறைவனே வந்து காட்சி தரும் விழா இது; மேலும் ஜாதி மத வேறுபாடின்றி ஒன்றுபட்டால் இறைவனை எளிதில் அடையலாம் என்பதையும் காட்டும் விழா இது. பிரம்மாண்டமான ரதங்களில் இறைவனை எழுந்தருளச் செய்து நீண்ட கனமான கயிறுகளால் ஆண்களும் பெண்களும் அதை  இழுத்து  நிலைக்கு கொண்டு செல்லுவார்கள். தமிழ் நாட்டில் பெரும்பாலான  கோவில்களில் இது நடைபெற்றாலும் ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி நகரின் ஜகந்நாத் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றுவிட்டது;  உலகிலுள்ள பெரிய நகரங்களில்  இதே போல ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் ஜகந்நாதர்பலபத்ரா, சுபத்ரா ஆகியோரை மூன்று தேர்தல்களில் இழுத்துச் செல்வதால் எல்லோருக்கும் இது தெரிந்துவிட்டது.

பூரி நகரில் நடைபெறும் விழாவில் ஆண்டுதோறும் புதிய சிலைகளைச் செய்வதும் பழங்குடி மக்களுக்கு அதில் பங்கு கொடுப்பதும் அதை ஒப்பற்றதாக்கி விட்டது. அந்த விழா ஒன்பது நாட்களுக்கு  நடைபெறும்.  ஐந்து நாட்களுக்குத் தேர் ஓரிடத்தில் நின்றுவிட்டு பின்னர் கோவிலுக்குத் திரும்பும் ; வழி நெடுகிலும் மக்கள் இறைவனை வணங்கி காணிக்கைகளை சமப்ப்பிப்பார்கள்

ஆங்கிலத்தில் ஜக்கர் நாட் என்ற சொல் ஜெகன்நாத் என்ற இறைவனின் பெயரிலிருந்து வந்தது; அதே போல ரத என்ற சொல்லிலிருந்து தேர் என்ற தமிழ்ச் சொல் தேர் வந்தது. ரத என்பதைக் கண்ணாடியில் காட்டினால் தேர் என்று வரும்; இதை மொழியியல் வல்லுநர்கள் மிர்ரர் இமேஜ் MIRROR IMAGE என்பார்கள்

பூரி ரதங்களின் சக்கரங்களின் எண்ணிக்கையும் அளவும் பெரியவை; நாடு முழுதுமுள்ள விஷ்ணு பக்தர்கள் லட்சக் கணக்கில் அங்கே கூடுவதாலும் அது சிறப்பிடம் பெறுகிறது. 

TO BE CONTINUED…………………………………

Tags- ரத யாத்திரை- தேர்த் திருவிழா , ராமகிருஷ்ண பரமஹம்சர், ராகவேந்திரர், ரமண மஹரிஷி, ராதா HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 84; இந்து மத கலைச்சொல் அகராதி-84

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 82; இந்து மத கலைச்சொல் அகராதி-82 (Post.15,995)

Written by London Swaminathan

Post No. 15,995

Date uploaded in London – 19 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Ra என்று துவங்கும் சொற்கள்

ராகம்  – சாயம் அல்லது வண்ணம் ஏற்றுதல் என்பது பொதுப்பொருள்; உணர்ச்சி, ஆசை, அன்பு , மகிழ்ச்சி, ஆர்வம் என்ற பொருள்களும் உண்டு. சங்கீதத்தில் பல வகையான மெட்டுகளில் பாடுதல். எடுத்துக் காட்டு- மோகன ராகம், தோடி ராகம்; தமிழில் பண் என்பார்கள் .

***

ராஜ – வேந்தன்; தமிழில் உள்ள அரசன் ஆங்கிலத்தில் உள்ள ரீகல், ராயல் என்பன சம்ஸ்க்ருத மொழியிலிருந்து பிறந்தவை.

***

ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன்

ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய மகன்  ராஜேந்திர சோழன்  ஆகிய இருவரும் பிற்காலச் சோழ மன்னர் வரிசையில் சிறப்பிடம் பெற்றார்கள் ; அவர்கள் வட இந்தியாவின் சில பகுதிகள் , இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆடசியைப் பரப்பி சைவ சமயத்தையும் பரப்பினார்கள் ; தந்தை கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலைப் போல மகனும் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய சிவன் கோவிலை எழுப்பினார் ; இவர்களது காலத்தில் இலக்கியம், ஓவியம்  மற்றும் இசை ஆகிய கலைகள் வளர்ந்தன ; 400 நடனமாதர்களின் அழகிய பெயர்களுடன் உள்ள தஞ்சாவூர் கல்வெட்டு நடனம் போற்றப்பட்டதையும் காட்டுகிறது.

ராஜராஜான்  – 985 CE to 1014.

ராஜேந்திரன்  – 1012 to 1044 CE.

***

ரகுவம்சம்

காளிதாசன் எழுதிய ஏழு நூல்களில் மிகவும் நீண்ட காவியம் இது; சுமார் 1570 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்

19 சர்க்கங்களாக/ காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; இதைப் பின்பற்றி பல காவியங்கள் எழுந்தன; இவர் விக்ரமாத்தித்தான் என்ற மன்னரின் அவைப்புலவர்; அவர் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர்.  குமாரதாஸ என்ற இலங்கைப் புலவர், தமிழில் ராமாயணம் இயற்றிய கம்பன் ஆகியோரும் இவரது செய்யுட்களை பின்பற்றினார்கள்; ரகு வம்ச காவியத்துக்கு நிறைய உரைகள் தோன்றியது இந்த நூலின் சிறப்பினைக் காட்டுகிறது .ஆதி கவி வால்மீகியைச் சில இடங்களில் குறிப்பிடும் காளிதாசன் காவியத்தால் தெரியவரும் மிகப்பெரிய உண்மை, வால்மீகியின் பால காண்டக் செய்திகள், உத்தர காண்டச் செய்திகள் சரியானதே என்பதாகும். ஆறு காண்டங்களில் ராமாயணத்தை, ரகு வம்சம் சுறுக்கித் தருகிறது . ராமனுக்கு முன்னாலும் பின்னாலும் ஆட்சி செய்த்மன்னர்களின் வரலாறும் உள்ளது. 1,250 உவமைகளும் 29 சூரிய வம்ச அரசர்களின் வரலாறும் இந்த நூலில் இருக்கின்றன

***

ராஜசூய யக்ஞம்

தர்மன் என்னும் யுதிஷ்டிரன் , அவருக்கு முன்னால் ஹரிச்சந்திரன், சங்ககாலத்தில் சோழ மன்னன் பெருநற்கிள்ளி ஆகியோர் செய்த வேள்வி இது; தங்களை  முழுநிலப்பரப்புக்கும்  சக்ரவர்த்தி என்று அறிவித்து அதை எல்லா மன்னர்களும் ஏற்கச் செய்யும் யாகம் இது . அப்போது ஏனைய மன்னர்கள் அனைவரும் கப்பம் செலுத்துவார்கள் ;யுதிஷ்டிரன் நடத்திய வேள்வியில் கிருஷ்ணரை அவமத்தித்த சிசுபாலன் தலையைக் கிருஷ்ணர் துண்டித்த நிகழ்ச்சி ராஜசூயத்தில் நடந்தது. சங்க காலத்தில் பாண்டிய, சேர மன்னர்கள் இருவரும் சோழ மன்னரின் ராஜசூயத்தில் கலந்து கொண்டதைப் பாராட்டி அவ்வையார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளது .

***

ரஜோ குணம் / ராஜஸம் 

மனிதனுக்கு மூன்று வகையான குணங்கள் இருப்பதாக பகவத் கீதை முதலான நூல்கள் செப்பும்; சத்வ, ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களில் நடுவில் உள்ளது ரஜஸ் அல்லது ராஜஸ குணம் ஆகும் ; பகவத் கீதையில் 3 குணங்களையும் விளக்கும் ஸ்லோகங்கள் ஒரே அத்தியாயத்தில் விரிவாக உள்ளன ; ஆசை, அதிகமான செயல்பாடு, சுயநல வேலைகள் , பந்த பாசம் ஆகியன ரஜோ குணம் மேலுக்கு வரும்போது காணப்படும்

கீதையில் ரஜோ குண ஸ்லோகங்கள்

1. ரஜோ குணத்தின் இயல்பு (அத்தியாயம் 14, ஸ்லோகம் 7)

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா-ஸங்க-ஸமுத்பவம் |

தன்னிபத்நாதி கௌந்தேய கர்ம-ஸங்கேன தேஹினம் ||

பொருள்: அர்ஜுனா, அளவற்ற ஆசை மற்றும் பற்றுதலின் வடிவமாக ரஜோ குணம் உள்ளது என்பதை அறிவாயாக. இதுவே உலகாயத ஆசைகளைத் தூண்டி, ஆன்மாவை செயல் (கர்ம) பற்றுதல்களோடு பிணைக்கிறது.

2. ரஜோ குணத்தால் தூண்டப்படும் செயல்கள் (அத்தியாயம் 14, ஸ்லோகம் 12)

லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸமோ ஸ்ப்ருஹா |

ரஜஸ் ஏதானி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப ||

பொருள்: பரத குலத்தில் தோன்றிய அர்ஜுனா, ரஜோ குணம் அதிகரிக்கும்போது பேராசை, செயல்களில் தீவிரமான ஈடுபாடு, புதிய முயற்சிகள், அமைதியற்ற தன்மை மற்றும் பற்றுமிக்க ஆசைகள் ஆகியவை உண்டாகின்றன.

3. ரஜோ குணத்தின் பலன் (அத்தியாயம் 14, ஸ்லோகம் 16)

கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்விகம் நிர்மலம் பலம் |

ரஜஸஸ்து பலம் து:கம் அஜ்ஞானம் தமஸ: பலம் ||

பொருள்: நற்செயல்களின் (ஸாத்விகம்) பலன் தூய்மையானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், ரஜோ குணத்தால் செய்யப்படும் செயல்களின் பலன் நிலையான துன்பமும், முடிவில்லா அலைச்சலுமே ஆகும்.

***

இராமலிங்க ஸ்வாமிகள்/ அருட்பிரகாச வள்ளலார்

சர்ச்சைக்குரிய இந்த சுவாமிகளை இன்றுவரை சைவ மடங்களும் ஆதீனங்களும் அங்கீகரிக்கவில்லை ; இவரைப் பற்றி நான் கு சர்ச்சைகள் சந்தேகங்கள் இருக்கின்றன .கருணையே வடிவானவர் , சிவ பெருமானையும் முருகனையும் அற்புதமான, எளிய தமிழ்ப்படல்களில் போற்றியவர் , வள்ளுவர் போல வெஜிட்டேரியன் உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியவர்; ஜாதி மத பேதங்களை வெறுத்தவர் என்பதை பொதுமக்கள் ஏற்கின்றனர் . 1823 ஆம் ஆண்டில் மருதூரில் பிறந்தார். வடலூரில் ஆஸ்ரமத்தை அமைத்தார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்; விளக்கில் தெரியும் ஜோதியை இறைவனாக வழிபடலாம் என்றார் ; இவர் பாடிய கவிகள் திருவருட்பா நூலில் இடம்பெற்றுள்ளன . வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற இவரது வாசகம் உயிர்கள் அனைத்திலும் இவர் ஒரே விதமான கருணை உடையவர் என்பதை விளக்கும் .

1874 ஆம் ஆண்டில் வடலூருக்கு அருகிலுள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில் ஒரு அறையில் நுழை ந்து கட்தவைப் பூட்டச் சொன்னார் ; அவரது அன்பர்களும் அப்படியே செய்தனர்; பல நாட்களுக்கு வெளியே வராததால் அதிகாரிகள் வந்து கதவை உடைத்துத் திறந்தபோது அவர் அங்கு இல்லை! அவர் ஜோதி வடிவாகி மறைந்ததாக அன்பர்கள் சொல்லுவார்கள்; தைப்பூச ஜோதித் திருநாள் இன்று வரை பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது . இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றுவரை வருவோருக்கு 24 மணி நேரமும் அமுது படைத்து வருகிறது; ஏழு திரைகள் கொண்ட புதுமையான ஜோதி தரிசனக் கோவிலையும் வடலூரில் தாபித்தார்

நான்கு சந்தேககங்கள், சர்ச்சைகள் என்ன ?

1

துவக்க காலத்தில் இவர் தன்னுடைய பாடல்களைத் திருமுறைகள் என்று செப்பி அப்பர், சம்பந்தர் போல சம அந்தஸ்து கொண்டாடினார் ; இப்படிச் சொல்லக் கூடாதென்று  இலங்கை சைவ அறிஞர் ஆறுமுக நாவலர் தலைமையில் போர்க்கொடி தூக்கினர் ; ராமலிங்கம் பின்வாங்காததால் வழக்கு கோர்ட் வரை என்றது ; இதனால் இவரை தீவிர சைவர்கள் ஏற்பதில்லை .

2

இரண்டாவது சர்ச்சை இவர் மாயமாக மறைந்தது பற்றியது. பூட்டிய அறையில் இவர் ஜோதி மயமாகவில்லை ; யாருக்கும் தெரியாமல்,  நண்பர்கள் கதவைத் திறந்தவுடன் இவர் பயந்து ஓடிவிட்டார் என்பது ஒரு வாதம்; ஏனெனில் அவரே கடைவிரித்தோம் கொள்வாரில்லை என்று சொல்லி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது எதிர்த் தரப்பினரின் கூற்று.

3

மூன்றாவது விஷயம் விபூதி இல்லாத விகாரமான , அசிங்கமான வள்ளலார் படம் பற்றியது; ஐம்பது , அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் படத்தையும் வள்ளலார் படத்தையும் விபூதி இல்லாமல் பார்க்கமுடியாது ; இப்போது வள்ளுவர் படங்களில் விபூதியை அழித்த திராவிடர்கள், இவரையும் விபூதி இல்லாமல் காட்டிவருகின்றனர் ; அதாவது இவரை இந்து மதத்திலிலிருந்து விலகியவர் போலாக் காட்டுவது ; இந்த வேலையைக்  கடவுளை எதிர்க்கும் திராவிட  அரசியல்வாதிகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் செய்துவருகின்றன ; விபூதி இல்லாத வள்ளலார் படத்தை வெளியிடும் கும்பலை எளிதில் இனம் காணலாம் .

4

வள்ளலாரின் ஆஸ்ரமம்,  சபை  உள்ள இடம் பெரிய மைதானம் கொண்டது ; இதைக் கமர்ஷியல் வளாகமாக மாற்றி பணத்தைச் சுருட்ட ஒரு கும்பல் கிளம்பியுள்ளது ; இதற்கும் திராவிட அரசியல்வாதிகள் அமோக ஆதரவு தெரிவித்தனர்.

இவைகளால் வள்ளலாரின் பேர் , ரிப்பேர் ஆகிவிட்டது. இந்துக்கள் விழித்துக்கொண்டு வள்ளலாரைக் காப்பாற்றாவிட்டால் திருவருட்பாவிலுள்ள முருகன், சிவன் துதிகளை இசைக்காவிட்டால் , விபூதி இல்லாத திராவிட பூச்சாண்டியாக வள்ளலார் காட்சி தருவார் ; எப்படியும் இவரை சைவ மடங்கள் ஏற்கப்போவதில்லை .

***

ராமானுஜர் Sri Ramanujacharya (1017–1137 CE)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராமானுஜர்  விசிஷ்டாத்வைதம் என்னும் வைணவக்  கொள்கையைப்  பரப்பினார் . அவர் தமிழ் நாட்டின் ஸ்ரீபெரும்புதுரில் பிறந்து 120 ஆண்டுகள் வாழ்ந்தார்; ஆயினும் தமிழ் நாட்டில் அவரது எதிரிகள் தொல்லை கொடுக்கவே கர்நாடகத்துக்குச் சென்று இறுதிக் காலத்தைக் கழித்தார்; ஜாதிகுல வேறுபாடுகளைத் தகர்த்து அனைவரையும் வைணவர்களாக்கினார்; ஆனால் இவர் வைணவ குடும்பத்தில் பிறக்கவில்லை ! தென்கலை வைணவர்கள் போற்றும் அவர் பல நூல்களைச் செய்தார் ; பகவத் கீதைக்குப் பாஷ்யமும் செய்தார் .  திருக்கோஷ்டியூரில்  நம்பி என்னும் குருவிடம் உபதேசம் பெற்றார் ;அதை யாருக்கும் சொல்லக்கூடாது; சொன்னால் நரகத்துப் போவாய் என்று சொல்லியும் அவர் உபதேசித்த ஓம் நமோ நாராயணா மந்திரத்தைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து பிரகடனம் செய்ததாக வரலாறு உண்டு  யாதவப்பிரகாசர் என்பவர் இவர் மீது பொறாமை கொண்டு இவருக்கு எதிர்ப்பினை உசுப்பிவிட்டார் ; கிருமிகண்ட சோழன் என்பவன் இவரை சைவ சமயத்துக்குத் திரும்பும்படி வலியுறுத்தி தொல்லை கொடுத்ததால் இவர் கருநாடகத்துக்கு ஓடி ஹோய்சாள மன்னரின் ஆதரவினில் வாழ்ந்தார் .

***

ராமாயணம்

காலத்தால் அழியாத காவியம் ராமாயணம்  ; சுமார் 3000 இடங்களில்  நூலாகவும் நாட்டுப்புறப் பாடலாகவும் , கவிதைகளாகவும், கிருதிகளாகவும் நாடகங்களாகவும் சினிமாப்பாடல்களாகவும், பொம்மலாட்டங்களாகவும் , நாட்டிய நடனங்களாவும், புறநானூறு, அகநானுற்றுப் பாடல்களாகவும், ஆழ்வார் பாசுரங்களாகவும் ராமன் போற்றப்படுகிறார் ; இதற்கெல்லாம் மூல காரணம் வால்மீகி முனிவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய மூல ராமாயணம் ஆகும் ; அதற்குப்பின்னர் கம்பன் போல, பல மொழிகளில் எழுதிய ராமாயணங்கள் இந்தோனேஷியா, தாய்லாந்துவரை கிடைக்கின்றன . கைகேயி என்ற சிற்றன்னை 14 ஆண்டுக் காலத்துக்கு நாடு கடத்தியபோது ராவணன் என்ற அரக்கன் சீதா தேவியைக் கடத்த அனுமன் என்னும் வானர தலைவன் மூலம் இலங்கைக்குப் பாலம் கட்டி ராவணனைக்கொன்று சீதையை மீட்ட கதை  ஏழு கண்டங்களாக ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்களில் பாடப்பட்டுள்ளன . ராமாயணம் மஹாபாரதம் ஆகிய இரண்டும் இந்து இதிகாசங்கள் ஆகும் .

***

ரம்பா

Rambhā (रम्भा).—தேவலோக அப்சரஸ் அழகிகளில் ஒருத்தி ஊர்வசி திலோத்தமா, மேனகா ஆகியோருடன் பேசப்படும் பேரழகி ; சம்ஸ்க்ருதத்தில் வாழை மரம் வாழைத் தண்டுக்கும் இதே சொல்தான். ஆடல் பாடல்களில் சிறந்த அவள், விசுவாமித்திரர் சாபத்தால் ஒரு பிராமணர் மூலம் விமோசனம் கிடைக்கும் வரை பூமியில் வாழந்தாள்.  ராமாயணக் கதைப்படி, ராவணனால் மானபங்கம்  செய்யப்பட்டாள்; அப்போது பிரம்மா கொடுத்த சாபத்தால் இராவணன் வேறு எந்தப் பெண்ணையும்  தொட்டால் தலைவெடித்துவிடும் என்ற நிலை ஏற்பட்டது

கதாசரித்சாகரம் என்னும் கதைக்கடல் நூலிலும் ஒரு கதை உள்ளது.

To be continued………………………..

Tags- ராமா, ரம்பா, ராஜராஜ, ராமானுஜ, இராமலிங்க ஸ்வாமிகள், HINDU DICTIONARY, part 82;இந்து மத கலைச்சொல் அகராதி-82, ரகுவம்சம்1

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 77; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 (Post.15,945)

Written by London Swaminathan

Post No. 15,945

Date uploaded in London – 4 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

WORDS BEGINNING WITH “P”

பைலர் – வேத வியாசரின் நான்கு சீடர்களில் ஒருவர் பைலர்; இவருக்கு ரிக்வேதத்தைக் கற்பித்து அதைப் பரப்பும் பொறுப்பினை வேத வியாசர் வழங்கினார் . ஏனைய மூன்று சீடர்கள் சுமந்து, ஜைமினி, வைஸம்பாயான ஆவர்.  பைலர்  (पैल) ரிக் வேதத்தை,  இந்திரப்ரமதி, பாஸ்கலயென்ற இருவருக்கு ஓதுவித்தார்;    யுதிஷ்த்திரர் நடத்திய ராஜ சூய யாகத்துக்குப் பைலர் வந்த செய்தியை மஹாபாரதம் நமக்குத் தெரிவிக்கிறது .

***

பாஞ்சாலம் – தற்போது பஞ்சாப்என்று  பெயர் ; பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் ஓடும் பிரதேசம் என்று பொருள் .

***

பாஞ்சாலி – திரௌபதியின் பெயர் ;  பாஞ்சாலத்தை ஆண்ட துருபதனின் புதல்வி என்பதால் திரௌபதி என்றும் அழைக்கப்பட்டாள் ; அவள் பேரழகி , ஆனால் கறுப்பி; அதனால் கிருஷ்ணா என்றும் பெயர் .

***

பஞ்சதந்திரம்  – விஷ்ணு சர்மா என்ற பிராமணன், சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நூல் பஞ்சதந்திரம் ஆகும் . பறவைகளையும் விலங்குகளையும் பயன்படுத்தி அரசிளங்குமாரர்களுக்கு நீதி நெறிகளையும், ஆட்சி செய்யும் முறையையும் விளக்கிய நூல் இது சுலோகத்துக்கு சுலோகம் ஆயிரக்கணக்கான பொன்மொழிகள் நிறைந்தது .2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நூலை பாரசீக மொழியில்1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்ததால் உலகம் முழுதும் பரவியது.

ஐந்து தந்திரங்கள் பெயர்களும் அர்த்தமும் :

1.மித்ர-பேதம்  – நண்பர்களுக்கு இடையே  சண்டையை உருவாக்குதல் ;

2.மித்ர-லாபம் – நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுதல்;

3.காகோலுகியம்– காகம் + உலூகம்= காகத்துக்கு ஆந்தைக்கும் இடையே வளர்ந்த பகைமை ;  

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது- 471 என்று வள்ளுவரும் இதை மொழிபெயர்த்துள்ளார்.

4.லப்தப்பிரநாசம் –  கிடைத்ததை இழத்தல்;

5.அபரீக்ஷிதாகாரகம் –  பதறாத காரியம் சிதறாது

பல குறள்கள், பஞ்ச தந்திரக் கதைகளின் எதிரொலி என்பதை எனது ஆராய்ச்சிக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

***

பாண்டவர்கள் பாண்டுவின் ஐந்து (பஞ்ச) புதல்வர்கள் ; யுதிஷ்டிரன் , பீமன், அர்ஜுனன் என்ற முதல் மூவர் குந்தி மூலமும் நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர் மாத்ரி மூலமும் பிறந்தார்கள். 13 ஆண்டு வனவாசத்துக்குப் பின்னர் கெளரவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று ஹஸ்தினாபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்தார்கள் ; இதை உலகப் புகழ்பெற்ற மஹாபாரதம் சம்ஸ்க்ருத மொழியில் ஒரு லட்சம் ஸ்லோகங்களில் வருணிக்கிறது.

***

பாண்டியர்:  தென் தமிழ் நாட்டினை 2300 ஆண்டுகளுக்கு முன் ஆளத்  துவங்கினார்கள். மதுரையை முஸ்லிம்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் கைப்பற்றியதோடு  பாண்டியர்கள் மறைந்தனர் ; பின்னர் விஜய நகரப்பேரரசர்கள் மதுரையைக் கைப்பற்றி இந்து ஆட்சியை நிறுவினார்கள் .  அகஸ்திய மஹரிஷியோடு தொடர்புபடுத்தி, காளிதாசன் குறிப்பிட்ட ஒரே தமிழ் மன்னர் பாண்டியர்தான்! இவர்களிலு    மிகப்  பழைய  மன்னரான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (மீனாட்சி சுந்தரேஸ்வரர் ) கோவிலை வலம் வந்ததை புறநானூறு பாடுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவி தமிழை வளர்த்தார்கள். முத்துக்கள் மூலமும் தமிழ் மொழி மூலமும் உலகப் புகழ்பெற்றார்கள்.

***

பாண்டு: பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் என்ற மன்னர் இறந்த பின்னர் அவருடைய மனைவி அம்பாலிகா மூலம் வியாஸருக்குப் பிள்ளையாகப் பிறந்தார் ; அந்தக்காலத்தில் ஆட்சி செய்ய முறையான அரச குமாரன் இல்லாவிடில் ஒரு ரிஷி மூலம்  குழந்தையைப் பெறும் முறை இருந்ததால் அம்பாலிகாவும் வியாசரும் இணைந்தனர் ; பிறக்கும் போதே பாண்டு ரோகத்துடன் பிறந்தார்; அவருடைய அண்ணன் திருத்த ராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால்  ஹஸ்தினாபுரத்தின் அரசுக் கட்டில் ஏறினார் ; குந்தி, மாத்ரி என்ற இரண்டு அரசிளங் குமரிகளை மணந்தார். 

ஒரு முறை பாண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்; இரண்டு மான்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டபோது அதன் மீது அம்புகளை எய்தார்; ஆனால் அவை மான்கள் அல்ல; மான் தோல் போர்த்திய கிண்டம ரிஷியும் அவருடைய மனைவியும் ஆவர்; சாகும்போது கிண்டம ரிஷி ஒரு சாபம் போட்டார்; நீ கலவி இன்பத்தில் ஈடுபட்டால் அன்றே உனக்கு மரணம் சம்பவிக்கும் என்று சாபம்  கொடுத்தார் ; ஆண்டுகள் பல உருண்டோடின ; ஒரு வசந்த காலத்தில் காம உணர்வு மேம்படவே மாத்ரி யை நெருங்கினார் பாண்டு; மாரடைப்பில் இறந்தார்; தன்னால்தானே இந்த மரணம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வு மேம்படவே மாத்ரி, தனது இரண்டு புதல்வர்களைக் குந்தி தேவியிடம் ஒப்படைத்துவிட்டுத் தீப்பாய்ந்து உயிர்விட்டார்  (இதே போல பூதப் பாண்டியன் தேவியும் தீப்பாய்ந்து கணவன் சிதையில் எரிந்த செய்தி புறநானுற்றில் உள்ளது.

***

பண்டிட்/ பண்டிதர்

சம்ஸ்க்ருத மொழி அல்லது அதிலுள்ள நூல்களைக் கற்ற சான்றோனுக்கு பண்டிட் என்று பொருள் ; காஷமீர் மாநிலத்தில் பிராமணர்களை பண்டிட் என்பார்கள் ; இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் பண்டிட் வம்சத்தில் பிறந்தவர் ; ஆயினும் பிராமணராக வாழவில்லை .

***

பாணினி- உலகத்தின் முதல் இலக்கண புஸ்தகத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதி அஷ்டாத்யாயி – எட்டு அத்தியாயங்கள் – என்று பெயர் சூட்டினார் ; உலகம் வியக்கும் வண்ணம், மிகச் சுருக்கமாக நாலாயிரம் சூத்திரங்களில் இலக்கணத்தைச் செப்பினார் ; இவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கோட்ஸ்டக்கர் என்ற அறிஞர் காரணங்களுடன் அற்புதமாக விளக்கினார் ; அவருடைய நூலில்  புத்த மதச் சுவடே இல்லை என்பதால் புத்தர் காலத்துக்கு முந்தியவர் என்பது தெளிவு ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற சூத்திர முறை இவரால் பரவியது .தற்கால பாக்கிஸ்தானில்  உள்ள சாலத்துராவில் பிறந்தார் இவருக்குப் பல நூற்றாண்டு களுக்குப் பின்னர் வந்த பதஞ்சலி முனிவர் மஹாபாஷ்யம் என்ற விரிவுரை எழுதி – வியாக்கியானம் செய்து-  பாணினியின் புகழைப் பரப்பினார். ஒரு மொழியை விஞ்ஞான முறையில் அணுகிய முதல்வர் பாணினி . இவர்கள் இருவருக்குமிடையே வாழ்ந்த காத்யாயன வரருசி என்பவர் சில குறிப்புகளை எழுதியதால் மூவரையும் முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்று அறிஞர்கள் போற்றுவர்

வாக்யகாரம் வரருசிம், பாஷ்யகாரம் பதஞ்சலிம்

பாணிணீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மீ முனித்ரயம்

–என்று துதித்து சம்ஸ்க்ருத மாணவர்கள் பாடத்தைத் துவங்குவார்கள்;  பாணினி தனக்கு முன்னர் வாழ்ந்த பல இலக்கண கர்த்தாக்களைக் குறிப்பிடுகிறார்; அவர்களது நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை இலக்கியமின்றேல் இலக்கணமில்லை என்பது தமிழ்ச் சான்றோர்களின் கண்டுபிடிப்பு; ஆகையால் பாணினிக்கு முன்னர் பிரமாண்டமான சம்ஸ்க்ருத இலக்கியம் இருந்திருக்க வேண்டும்! அத்தனையும் அழிந்து போயிற்று ; அவர் வேத கால இலக்கியத்துக்கும் தமது கால இலக்கியத்துக்கும் உள்ள வேறு பாடுகளையும் சுட்டிக்காட்டுவதால் புத்தரின் காலத்துக்கு முன்னர் மிகப்பெரிய சம்ஸ்க்ருத நூல்கள் இருந்தன என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.

உபவர்ஷ, பராசர்ய, கரமாண்ட, சாகடயான, அபிதலி , சாகல்ய   முதலிய இலக்கண வித்தகர்களின் பெயர்களை பாணினி குறிப்பிடுவதால் அவருக்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்ததை அறிய முடிகிறது.

அஷ்டாத்யாயி நூலினை நன்றாகக் கற்ற ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பொற்காசுகளைத் தருவதாக காஷ்மீர் மன்னர் அறிவித்தைதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நமக்கு எடுத்துரைக்கிறது .

***

பராசரர்

(पराशर) முனிவர் பராசரர், சக்தி என்பவரின் புதல்வர்; வசிஷ்டர்-அருந்ததி ஆகியோரின் பேரர்;  பராசரரின் தாயாருக்கு அத்ருச்யந்தி, மத்ஸ்யவதி/ மீனவச்சி, , சத்யவதி என்று பல பெயர்கள் உள்ளன.

லட்சக் கணக்கான இந்துக்கள் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்கிறார்கள்; இந்துக்கள் ஜீனியாலஜி GENEOLOGY எனப்படும் வம்ச பரம்பரை இயலில் வல்லவர்கள் என்பதால் தினமும் வியாசரின் வம்ச பரம்பரையைச் சொல்வர் ; பராசரரின் புதல்வர் வியாசர் .

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம் பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம். ( வசிஷ்டரின் கொள்ளு பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் புதல்வரும், சுகரின் தந்தையுமான வியாசரை வணங்குகிறேன்.)

***

பாரிஜாத மலர்

நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.

அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .

நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார்

நாரதர் சொன்னார்: ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம 

சத்யபாமா சொன்னார்: அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார். சத்யபாமா கோபமாக இருப்பதை அறிந்த கிருஷ்ணன், காரணத்தை விசாரித்து அறிந்தார். பாரிஜாத மரத்தைக்கொண்டு   வருவதாக வாக்கு கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்

இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.

கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார் இந்திரன்,   .

கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.

கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.

இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள  மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)

****

பரீக்ஷித் மன்னர்

அபிமன்யு இறந்த பின்னர் அவருக்குப் பிறந்தவர் பரீக்ஷித் ; உத்தராவின் கர்ப்பத்தில் பரீக்ஷித் இருந்தபோது அஸ்வத்தாமா, பிரம்மாஸ்திரம் என்னும் அணு ஆயுதத்தை ஏவினார்; இது உத்தராவின் கர்ப்பத்தைத் தாக்காமல் இருப்பதற்கு கிருஷ்ணர் ஏற்பாடு செய்தார் ; பின்னர் பிறந்த பரீட்சித் பாண்டவ வம்ச ஆட்சியை நீடித்தார்

பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.

பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.

பிராமணர் சமாதான உடன்பாடு

அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.

விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!

***

இதற்கு முன் நடந்த சம்பவமே நாகர்- யாதவர் மோதலுக்கு காரணமாக அமைந்தது ; அந்தக் கதை பின் வருமாறு:

நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர்.

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.

மய தானவன் தென் அமெரிக்காவுக்குள் குடியேறி மாயா நாகரீகத்தை ஸ்தாபித்தான்.

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 76; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 , பரீக்ஷித், பைலர், பஞ்சதந்திரம், பாணினி, பாரிஜாத மலர்

–subham—