நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? (Post No.3867)

Written by S NAGARAJAN

 

Date: 1 May 2017

 

Time uploaded in London:-  6-20 am

 

 

Post No.3867

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

 

விதி விளக்கம் என்னும் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவியவ்ர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்கள். ஏராளமான அருமையான பழைய நூல்களை அவ்வப்பொழுது எனக்கு அவர் அனுப்புவது வழக்கம். அவருக்கு எனது நன்றி.

 

 

நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? : விதி விளக்கம் – 2

ச.நாகராஜன்

 

  1. நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை?

நூலாசிரியர் மிட்டா முனுசாமி நாடி கிர்ந்தங்களைப் பற்றிய தனது ஆராய்ச்சியை முதல் அத்தியாயத்திலேயே தெரிவிக்கிறார். அதன் சாரத்தைக் கீழே பார்ப்போம்.

நவகிரகங்கள் ஓயாது சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அவைகளின் ஓயாத இந்த சர கதியினால் பன்னிரெண்டு ராசிகளிலும் ஒரு காலத்தில் ஒரு ஜாதகத்தில் அவை ஒருவாறு அமைந்துள்ளதாகக் கொள்வோமாகில், அதே நிலையில் “ராசியில்” பின் ஒரு காலத்தில் சர கதியினால் அவை அமையக் கூடும். ஆனால் இந்த நவக்கிரகங்கள் நட்சத்திர நிலையிலாவது  அல்லது அம்ச நிலையிலாவது வருவது அசாத்தியம். இதுவே சிருஷ்டியின் மஹிமை.

இப்படி ஒருவேளை அமையக்கூடும் பட்சத்தில் முன்னொரு காலத்தில் ஜனித்த ஒருவர் மற்றொரு காலத்திலும் தோன்றியதாக ஆகக் கூடும். ஆனால் ஒவ்வொருவருடைய அனுபவத்தின் அடிப்படையிலும் சுருதி, ஸ்மிருதி ஆகியவற்றின் சாட்சியங்களின் அடிப்படையிலும் இவ்வாறு நேரிட்டதாகக் காண முடியவில்லை.

ஆகவே நாடிக் கிரந்தங்கள் ஸ்தூல பலனில் மட்டுமே நமக்குப் பயனளிக்குமே தவிர நித்திய அல்லது மாத ரீதியாக அல்லது வருஷ பலனை அறிய்  இடம் கொடுக்க மாட்டா.

அல்லாமலும் ஒரு மனிதரைப் போல இன்னொரு மனிதர் சகல விதத்திலும் ஒத்தவ்ராகப் பிறத்தல் அரிது.

.    நவக்கிரகங்களும் வேறு வேறு நிலைமையுள்ளனவாகச் சஞ்சரிக்கும் அற்புதம் சிருஷ்டி  மஹிமை. பன்னிரண்டு ராசிகளில் ஒரு வகையில் நவக்கிரகங்கள் ஒரு காலத்தில் அமைந்து அதே நிலையில் மற்றொரு காலத்தில் ராசியிலும் நட்சத்திர நிலையிலும் அமைவதில்லை. அதே நிலையில் பத்தாயிரம் வருடங்கள் சென்றாலும் அமைவது அசாத்தியம்.

இப்படிப்பட்ட சிருஷ்டி அமைப்பு இருப்பதினால், அவரவர்க்கு நித்திய அல்லது மாதத்திய அல்லது வ்ருஷத்திய பலனைத் தெரிந்து கொள்வதற்கு ஜோதிடர் அவசியம். நாடிக் கிரந்தங்கள் முழுமையாகப் பயன்பட மாட்டா. இது திண்ணம்.

அது மட்டுமன்றி அப்போதைக்கப்போது நாளுக்கு நாள் அமையும் நிலைமைக்கும், ஒரு வித சமப்ந்தத்தினால் வேறு வேறு பலன்கள் நடந்து  கொண்டு வருவதை நாம் கண்ணாரக் காண்கிறோம்.

ஆனால் ஜனன கால நிலைக்கும் தற்கால நிலைக்கும் இருக்கும் நிலையை யூகித்துப் பலாபலனைக் கண்ட்றிவதே ஜோதிடர் பணி. ஆகவே ஜோதிடர் அவசியம்.

இன்றைய ஜோதிடர்கள் ஒருவருடைய பலனைத் தீர்க்கமாகக் கண்டறிய முடியாதபடி இருக்கும் காரணம் திதியினால் ஏற்படும் ஜாதக பலாப்லன்கள் இன்னதென்று அவர்களுக்குத் தெரியாததால் தான்.

நம் முன்னோர்கள்  1) ஒரு மனிதர் இறந்தால் திதியையே அனுஷ்டிக்க வேண்டும் 2) விரதாதிகள் அனைத்தும் அநேகமாய் திதியை அனுஷ்டித்தே செய்யப்பட வேண்டும் 3) திதிக்கும் நட்சத்திரத்திற்கும் இருக்கும் பேதத்தில் திதியே முக்கியம் என்று இப்ப்டி திதியின் முக்கியத்துவத்தை அனுஷ்டானத்தில் காட்டியுள்ளனர்.

“ஜனன காலம் முதல் ஆயுளுடன் ஜீவிக்கும் வரையில் நட்சத்திரம் முக்கியம். பெயரிடுவதும் விசேஷ காலங்களும் நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.” என நம் முன்னோர்கள் நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டி விட்டு, இறந்தது  முதல் திதியே பிரதானம் என்று அனுஷ்டான வகையில் காட்டியுள்ளனர்.

ஆனால் திதியினால் ஏற்படும் பலாபலத்தின் விசேஷம் ஜாதகத்தில் அனுஷ்டிப்பதில்லை. திதியைப் பார்த்துப் ப்லன் சொல்ல வேண்டுமென்று சொல்லும் ஜோதிட நூல்களும் இல்லை.

இந்த நிலையைச் சுட்டிக் காட்டி விட்டு திதியே மிக முக்கியமானது என்று மிட்டா முனுசாமி தன் ஆராய்ச்சிகளின் மூலமாகக் கண்டறிந்துள்ளதாக விதி விளக்கம் நூலில் கூறுகிறார்.

இனி பஞ்சாங்கத்தில் வரும் பஞ்ச அம்சங்க்ளான வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகியவை பற்றி நூலாசிரியர் விவரிப்பதை அடுத்துப் பார்ப்போம்.

– தொடரும்

 

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    ஜோதிடம் நமது மத நம்பிக்கையின் ஒரு அம்சமாக இருக்கிறது. வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக அதைச் சொன்னாலும். மாத பலன், நாட்பலன் என்ற ரீதியில் அது போகவில்லை.
    ஜோதிடக் கலை அல்லது விஞ்ஞானம் என்று எப்படிச் சொன்னாலும். அது ஜோதிடர்களின் திறமையைப் பொறுத்துத்தான் அமைகிறது ( நமது இந்திய சாஸ்திரீய ஸங்கீதம் போல- அடிப்படை ஒன்றுதான், ஆனால் ஒரே ராகத்தின் வெளிப்பாடு ஆளுக்குஆள் வேறுபடும் ) கலையைச் சொல்வதா,கலைஞனைச் சொல்வதா?
    இந்த நூலாசிரியர் திதியைப் பற்றிச் சொல்வது சரியாக இருக்கிறது. ராமர், க்ருஷ்ணர், துர்காஷ்டமி, மஹா நவமி, விஜய தசமி என்று எல்லாம் திதியைப் பொறுத்துத்தான் வருகிறது. ஸ்ரீ சங்கர ஜயந்தியும் வைசாக சுத்த பஞ்சமி என்றுதான் கொண்டாடுகிறார்கள். அன்று நக்ஷத்திரம் ம்ருகசீரிஷம்-திருவாதிரை-புனர்பூசம் என்று வரலாம். ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தில்கூட அவரது ஜயந்தியை திதிப்படிதான் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஸ்ரீ ரமணரின் ஜயந்தி நக்ஷத்திரப்படியே (மார்கழி-புனர்பூசம் ) கொண்டாடப்படுகிறது. ஆராதனையை மட்டும் திதிப்படி அனுஷ்டிக்கிறார்கள்.

    பொதுவாக, ஜோதிடத்தின் ஒரு பிரிவைப் பின்பற்றுபவர்கள், பிறவற்றை அப்படியே ஏற்பதில்லை. ஆனால் நமக்கு, எது பலிக்கிறதோ அது போதும் எனத்தோன்றுகிறது. எதுவாவது பலிக்கிறதா என்பதுதான் கேள்வி.

    நாடி பார்ப்பதில் முதல் அம்சம், சரியான ஏட்டை எடுப்பது. இதற்கு அவர்கள் கை (கட்டைவிரல்) ரேகையைத்தான் பார்க்கிறார்கள். பிறகு தந்தை, தாயார் பெயர், தொழில். குடும்ப நிலை. உடன் பிறந்தவர்கள் என்றெல்லாம் நாடியில் வருவதைச் சொல்லி சரிபார்க்கிறார்கள். இதெல்லாம் ஒத்துவந்தால், மேற்கொண்டு கடந்தகால சம்பவங்களைச் சொல்கிறார்கள். இதுவும் சரியென்றால், எதிர்கால பலன் என்று சொல்கிறார்கள். இவ்வளவு தூரம் ஒத்துவருவதே வியக்கத்தக்கது எனத் தோன்றுகிறது. [We are now talking of parallel universes. Will it be a wonder if more than a person answers to the same descriptions?]

    எதிர்காலத்தைப் பற்றி யாரும், எந்த முறையிலும் நூற்றுக்கு நூறு சரியாகச் சொல்லமுடியாது- இதை காலம் சென்ற மேதை B,V. ராமன் தன்பத்திரிகையில் கொள்கையாகவே அறிவித்தார். தற்போது நாம் அறிந்த ஜோதிடம் ‘fragmented /fractured science’ என்பார் ஸ்ரீ அரவிந்தர். சில விஷயங்களில் எதிர்கால பலன் சரியாக இருந்தால் அந்த ஜோசியரின் மீது அதீத நம்பிக்கை வருகிறது. பிறகு ஒவ்வொரு விஷயத்திற்கும் அவர்களை நாடும் நிலைக்கு வருகிறோம். பின்னர் மாக்பெத் Macbeth சொன்னபடி நம்மையே நொந்துகொள்கிறோம்:

    And be these juggling fiends no more believed
    That palter with us in a double sense
    That keep the word of promise to our ear
    And break it to our hope.

    “சகல க்ரஹ பல நீனே சரசிஜாக்ஷ” என்று பாடினார் புரந்தர தாசர்.
    “க்ரஹ பல மேமி, ராமா நின் அனுக்ரஹ பலமே பலமு” என்று பாடினார் ஸ்ரீ த்யாகராஜர்.
    நாளும் கோளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் ஆணையிட்டுச் சொன்னார் சம்பந்தர். ” அரன் நாமம் கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளி, கோளாய நீக்குமவன் கோளிலி எம் பெருமானே” என்றார். “கைவினைசெய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்” என்று நீலகண்டத்தின்மீது ஆணையிட்டுச் சொன்னார் சம்பந்தர்.
    ஜோசியர்களின் வாக்கைவிட, இத்தகைய அருளாளர்களின் அமுத மொழிகளல்லவா நமக்கு தைரியமூட்டுவனவாக இருக்கின்றன!

  2. Santhanam Nagarajan's avatar

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. எனது ஜோதிடம் உண்மையா என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். அதன் முடிவான கருத்து இது தான்: ஜோதிட சாஸ்திரம் உண்மை. ஆனால் இன்றைய ஜோதிடர்களை ஜாக்கிரதையாக அணுகவும். அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம; மணி மந்திர ஔஷதம் உயிர் காக்கும் சாஸ்திரம். விதி விளக்கம் என்ற இந்த பழைய நூல் மிட்டா முனுசாமி செட்டி தன் அனுபவ ரீதியாக ஆய்வு செய்து தன் முடிவுகளைத் தெரிவிக்கும் நூல். இதை சுவாரஸ்யமான நூலாக நான் கண்டேன். ஆகவே அவர் கூறியதை அப்படியே தருகிறேன். அவரே சொல்வது போல உங்கள் அனுபவ ரீதியாக எதையும் அணுகுங்கள் என்பதே நல்ல அணுகு முறையாக இருக்கும். யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு. ச.நாகராஜன்

Leave a comment