தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி? (Post No.4121)

 

 

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 15-54
Post No. 4121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கும்  , குமரிக்  கண்ட மறைவுக்கும்   கிரேக்க எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு?

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா – பகுதி 2 (முதல் பகுதி நேற்று வெளியானது)

 

 

 

சான்டோரினி (Santorini Islands) தீவு அழகான பிரமிப்பூட்டும் காட்சிக்கு மட்டும் பெயர்போன இடம் என்று எண்ணிவிடக்கூடாது. அந்த மண்ணில் நின்றபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஏன் என்றால் நான் சிந்து/ சரஸ்வதி நதிச் சமவெளி நாகரீகம் பற்றி எழுதிய 20, 25 கட்டுரைகளுக்கும், ஆரிய- திராவிட ‘புருடா’, ‘கப்ஸா’, ‘பொய் பித்தலாட்டம்’ பற்றி எழுதிய 20, 30 கட்டுரைகளுக்கும் எனது தேரா (Thera/ Santorini சாண்டோரினி) தீவு விஜயத்துக்கும் தொடர்பு உண்டு.

வரலாற்றையே மாற்றிய ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பு கி.மு 1630ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். அதற்கு முன்னரும் பின்னரும் இந்த தேரா/ சாண்டோரினி எரிமலை பல முறை சீறி இருக்கிறது.

 

எரிமலை வெடித்து அதற்குள் ஏற்படும் பள்ளங்களில்  நீர் நிரம்பி ஏற்படும் சமுத்திரப் பகுதிகளை கால்டெரா எனபர். அப்படிப்பட்ட கால்டெரா (Caldera) வில்தான் நான் நின்றேன்.

 

இந்த பிரம்மாண்ட தேரா வெடிப்பு பற்றி பல மர்மங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம் குமரிக் கண்டம் மறைந்தது பற்றி எப்படி அங்கலாய்க்கிறோமோ அதே போல கிரேக்க நாட்டு எழுத்தாளர்களும் புலவர்களும் அட்லாண்டீஸ் (Atlantis) என்னும் மர்ம கண்டம் முழுகியது பற்றி நிறைய எழுதி வைத்துள்ளனர். அதை ஏற்காதோரும் இந்த எரிமலை வெடிப்பால் மினோவன் (Minoan Civilization) நாகரீகம் அழிந்ததை ஒப்புக் கொள்வர். இந்த எரிமலை சீற்றத்துக்கும் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன ஆட்சிக் குழப்பத்துக்கும், எகிப்திய ஆட்சிக் குழப்பத்துக்கும் (கி.மு.1600) இதுவே காரணம் என்பது வரலாற்றாய்வா ளர்களின் ஊகம். இதை எல்லாம் பார்க்கும் போது நமது குமரிக் கண்டம் மறைந்ததற்கும் சிந்து / சரஸ்வதி நதி தீர நாகரீகம் க்ஷீணம் அடைந்து படிப்படியாக மறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் கணிப்பு. ஆகையால்தான் நான் இந்த மண்ணில் நின்றபோது ஒரு பிரமிப்பு, ஆனந்தக் களிப்பு!

2000 தீவுகள் உடைய நாடு!!

 

கிரேக்க நாட்டுக்குச் சொந்தமாக 2000க்கும் மேலான தீவுகள் உள்ளன.

கடலிடையே உள்ள சிறிய குன்றுகளையும் கணக்கில் சேர்த்தால் 6000 தீவுகள் என்றும் சொல்லுவர்.

 

இவ்வளவு தீவுகள் இருந்தாலும் (Crete) க்ரீட் எனப்படும் மினோவன் நாகரீக தலைமையிடமும் இந்த சாண்டோரினி தீவும்தான் முக்கியமானவை.

 

சாண்டோரினி தீவின் தலை நகர் Fபிரா. (Fira)–இயா என்னும் கிராமத்தில் (Oia) சூரிய அஸ்தமனத்தைக் காண ஏராளமானோர் வருவர். கழுதையில் சுற்றிப் பார்க்கவும் வசதி உண்டு. எல்லாவற்றுக்கும் கட்டணம்தான். ஏதன்ஸ் நகரை விட உணவும் உறைவிடமும் அதிக செலவு பிடிக்கும் இடங்கள்.

 

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகை ஒயின் (Wine) செய்வதற்கும் பெயர் பெற்ற இடம். ஆகையால் பழங்காலத்தில் எப்படி ஒயின் செய்தனர் என்பதைக் காட்டும் மியூசியமும் (Winery Museum)  உள்ளது.

அக்ரோதிரி (Akrotiri) என்னும் இடத்தில் தொல்பொருட் துறையினர் மினோவன் நாகரீக தடயங்களைக் கண்டு எடுத்துள்ளனர். அங்கு ஒரு காட்சி சாலையும் இருக்கிறது.

கருப்பு நிற மணல் கடற்கரையும் சிவப்பு மணல் கடற்கரையும் ஒரே தீவில் இருப்பது இயற்கை அதிசயமே.

 

நாங்கள் இயா (oia) கிராமத்தில் கடைத் தெருவில் நின்றபோது நம் ஊரில் மார்கழி மாத பஜனை கோஷ்டி வருவது போல ஒரு கோஷ்டி இசை முழக்கத்துடன் சென்றது. தினமும் நடக்கும் கிரேக்க இசை நடன ஷோவுக்கு விளம்பரம் தேடி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துச் சென்றனர்.

 

ஒரு பழங்கால மொனாஸ்ட்ரிக்கும் (Monastery) சென்று வந்தோம். கிரேக்க நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் வகுப்பினர் (Greek Orthodox) அதிகம். இது பிராடெஸ்டண்ட், கதோலிக்கத்திலிருந்து வேறுபட்டது.

 

சுற்றுலா வரும்படியை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிரேக்க நாடு சலவைக் கல் எனப்படும் மார்பிள் (marble) கற்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இவர்களுடையதே. கிரேக்கர்களுக்கு என்று சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. நாங்கள் கிரீக் சாலட் (Greek salad) முதலிய வெஜிட்டேரியன் வகைகளை மட்டும் சுவைத்தோம்.

 

அடுத்த கட்டுரையில் ஏதென்ஸ் அதிசயங்களை எழுதுகிறேன்.

TAGS:- தேரா மினோவன், சிந்துவெளி, குமரிக்கண்டம்

–சுபம்–

Leave a comment

1 Comment

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    சரித்திரம் என்று இன்று நாம் சொல்வதற்கும் பழங்காலத்தில் சரித்திரம் என்று வழங்கியதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இதிஹாசம்= இதி-ஹ -ஆஸ என்பது சரித்திரமேதான். ஆனால் இது இன்றைய மரபுப்படி வெறும் காலவாரியாக ( chronological)இல்லாமல் மிகவும் முக்கியமான அரசர்கள்/ நிகழ்ச்சிகளை மட்டுமே குறிப்பிடுவதாக இருக்கிறது. [ இதைப்பற்றி காந்திஜி ஹிந்த் ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.] அக்குறிப்புகளும் இலக்கிய வடிவம் பெற்று, இலக்கியமாகவே பயிற்றுவிக்கப்பட்டன. இந்த முறைப்படி,
    பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
    குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
    என்று வருவதை நல்ல வரலாற்றுச் சான்றாகவே கொள்ளலாம்.
    அந்த குமரிக்கண்டம் எவ்வளவு விரிந்திருந்தது என்பது தெரியாது. (சிலர் அது அவ்வளவு பெரிய பகுதியல்ல என்கின்றனர்.] அது நிகழ்ந்திருக்கக்கூடிய காலம் பற்றி ஒரு துப்பு இருக்கிறது.

    த்வாரகையை கடல் கொண்டது என்பது பாகவதத்தில் வருகிறது. த்வாரகை முழுகியதும் க்ருஷ்ணர் பூவுலகைவிட்டு நீங்கி விடுகிறார். உடனே கலியுகம் தொடங்குகிறது, நமது புராதன கணக்குப்படி, கலியுகம் தொடங்கியது கி.மு.3102ல் [ இந்த கணக்குப்படி, ஸ்ரீமத் நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்திரி, கலியுகத்தின் எத்தனையாவது ஆண்டில், நாளில் தான் இக்காவியத்தை நிறைவுசெய்தார் என்பதை சூக்ஷ்மமாக கடைசி ஶ்லோகத்தில் எழுதிவைத்திருக்கிறார். இதை ராமக்ருஷ்ண மடத்தின் ஸ்வாமி தபஸ்யானந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.] Dr.S.R. Rao தலைமையில் த்வாரகை கடல் பகுதிகளில் நடந்த marine archaeology ஆராய்ச்சிகள் வாயிலாக இந்த கடல்கோள் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது; கடலில் மூழ்கிய பகுதிகளை புகைப்படமெடுத்திருக்கின்றனர். Carbon dating ஆராய்ச்சியின் படி, காலமும் ஏறத்தாழ ஒத்துவருகிறது. இது கிரீஸில் நிகழ்ந்த சுனாமிக்கு முற்பட்டது! ஆகவே, குமரிக்கண்டம் மூழ்கியது கிமு 3100க்கும் 1600க்கும் இடைப்பட்ட பகுதி எனக் கொள்ளலாம்.
    மேலும், குஜராத்திலிருந்து சில யாதவர்களை ஒரு தமிழ்ப்புலவர் அழைத்துவந்தார் என்ற குறிப்பும் சங்க இலக்கியத்தில் வருகிறது. இது கடல்கோளுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம்! தெரியவில்லை.
    ஹோமர் எழுதிய ட்ராய் நகரம் கற்பனை என்றார்கள். ஆராய்ச்சியில் அது இருந்தது உறுதிசெய்யப்பட்டு விட்டது! அதுபோல் த்வாரகையும் உறுதிசெய்யப்பட்டு விட்டது. இப்படி ( அரசியல் கலக்காத ) ஆராய்ச்சி நோக்குடன் பார்த்தால் குமரிக்கண்டத்தின் உண்மையும் புலப்படும்!
    ஸரஸ்வதி நதி வற்றிய விஷயத்தை Michel Danino, “The Lost River ” என்னும் புத்தகத்தில் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். சாட்டிலைட் புகைப்படம் வாயிலாக அந்த நதியின் போக்கும் ஓரளவு ஊர்ஜிதமாகியிருக்கிறது. ஏனோ இவற்றை மூடி மறைக்கிறார்கள்!

Leave a comment