
Written by London Swaminathan
Date: 5 September 2017
Time uploaded in London- 14-36
Post No. 4185
Pictures are taken from various sources; thanks.
தாலி பற்றி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் ஒரு முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது தலைதூக்கும் என்பது கம்பனுக்கும் கூட ஞான திருஷ்டியில் தெரிந்துள்ளது. ஒரு அழகான பாடல் சுந்தர காண்டத்தில் வருகிறது:
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டுக் கட்டினார்
-பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்
அனுமன் வாலில் பிரம்மாஸ்திரம் இருக்கும்போது தீ வைப்பது முறையன்று என்று எண்ணி, அனுமனை பிரம்மாஸ்திரத்தினில் இருந்து விடுவித்தான் இந்திரஜித். அப்போது வரும் பாடல் இது:–

பொருள்:
“இராவணன் நிலவுலகில் திக்விஜயம் மேற்கொண்டபோது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், எண்ணமுடியாத அசுரர் முத்லியவர்களோடு போரிட்டுப் பெற்று வந்த கயிறுகள், இன்னும் இவ்வாறான கண்ணில் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டுவந்து அனுமானைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கயிற்றில் அவர்கள் கட்டியிருந்த தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவரப்படாமல் தப்பித் தங்கின”
இதிலிருந்து தெரிவதென்ன?
இராக்கத பெண்களுக்கும் தாலிக் கயிறுகள் உண்டு:
அது புனிதமானதால், அசுரர்களும் அதை மதித்துப் போற்றினர்.
அனுமானைக் கட்ட உலகிலுள்ள எல்லாக் கயிறுகளும் பயன்படுத்தப்பட்டன; ஆனால் தாலிக் கயிறு பயன்படுத்தப் படவில்லை.
தமிழ்நாட்டில் சில போலி சக்திகள் அவ்வப்போது தலைவிரித்தாடி ஆடி ஓய்ந்து விடும் என்பது கம்பனுக்கும் தெரியும்.
தமிழகத்தில் சில போலித் தமிழர்கள் பிறப்பர்; அவர்களுக்குச் செமை அடி கொடுக்க வேண்டும் என்று சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய பாடல் இது.
இராக்கதர்களுக்குக் கூடத் தெரிந்த தாலியின் புனிதம், சில அந்தகர்களுக்குத் தெரியாதது வருந்தத்தக்கது.
–சுபம்–