
Written by S.NAGARAJAN
Date: 27 September 2017
Time uploaded in London- 4-41 am
Post No. 4248
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நண்பரா, கைக்கூலியா!
மாக்ஸ்முல்லர் மர்மம்! – 3
ச.நாகராஜன்
4
மாக்ஸ்முல்லரின் முழுப் பெயர் ஃப்ரெடெரிக் மாக்ஸிமில்லன் மாக்ஸ்முல்லர் (Friedrich Maximillan Max Muller)
பெரும்பாலானோர் நினைப்பது போல அவர் ஒரு பிரிட்டிஷ்காரர் அல்ல. அவர் ஒரு ஜெர்மானியர். பின்னால் பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்றார். 50 தொகுதிகள் அடங்கிய The Sacred Books of the East என்ற நூல் தொகுதியை அவர் பதிப்பித்தார்.
அவருக்கு ஜெர்மனியில் வேலை கிடைக்கவில்லை. ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது.
ஆகவே அவர் லண்டனில் குடியேற நேர்ந்தது.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் அவர் எந்த ஒரு தேர்வையும் எழுதவில்லை என்று டாக்டர் ப்ரொதோஷ் ஐச் (Dr Prodosh Aich) அடித்துக் கூறுகிறார்.
Lies with Long Legs என்ற அவரது ஆய்வு நூல் படித்துச் சிந்திக்க வேண்டிய ஒன்று.
“தன்னை அவரே மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (Master of Arts) என்று சொல்லிக் கொண்டார்.அவரது மனைவி அவரை டாக்டர் ஆஃப் பிலாஸபி என்று கூறிக் கொண்டார். அவரது மனைவி அவரை லெய்ப்ஜிக் பல்கலைக்கழகத்தில் (leipzig University) படித்ததாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரமாக எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை” என்கிறார் ஐச்.
அவர் ஒரு பொழுதும் இந்தியா வந்ததில்லை என்பது உண்மை.
ஆகவே அவர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவில் கற்கவில்லை என்பது தெளிவாகிறது. அப்பொது அவர் சம்ஸ்கிருதத்தை ஐரோப்பாவில் தான் கற்றிருக்க வேண்டும். அப்படியானால் அவருக்கு அதைச் சொல்லிக் கொடுத்தது யார்? எந்தப் பண்டிதர்?
எந்தப் பண்டிதருமில்லை.
ஒரு 18 வயதுப் பையன் இந்தியாவைச் சுற்றிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சம்ஸ்கிருத அகரவரிசை அதாவது 51 எழுத்துக்கள் தெரியும்
அவனது பெயர் அலெக்ஸாண்டர் ஹாமில்டன் (Alexander Hamilton0. தனக்குத் தெரிந்த எழுத்துக்களை அவன் தான் மாக்ஸ்முல்லருக்குக் கற்றுக் கொடுத்தான்.
ஏராளமான பணம் கொடுத்து இந்தியாவில் பல பண்டிதர்களை நியமித்து வேதத்தை மொழி பெயர்த்தார் மாக்ஸ்முல்லர்.
பணம் கிடைத்ததால் தங்களுத் தெரிந்த வரை தெரிந்ததை அவர்கள் மொழி பெயர்த்தனர்.
இது தான் வேத மொழிபெயர்ப்பின் உண்மை வரலாறு.
5
லார்ட் மெக்காலே இந்திய நாட்டை கிறிஸ்தவ மயமாக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.
அவன் போட்ட திட்டப்படி ரிக் வேதத்தை ஹிந்து மதத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார் மாக்ஸ்முல்லர்.
மெக்காலே திட்டத்திற்கு இரையானவர்களில் கல்கத்தா சான்ஸ்கிரீட் காலேஜை செற்ந்த சான்ஸ்கிரீட் புரபஸரான பண்டிட் தாராநாத் முக்கியமானவர்.
அவர் வாசஸ்பத்யம் என்ற ஒரு சம்ஸ்கிருத அகராதியைத் தொகுத்தார்.
அதில் வேண்டுமென்றே பல வார்த்தைகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. 1863ஆம் ஆண்டு செய்யப்பட்ட அந்தப் பணி முக்கியமான ஹிந்து மத – வேத மத எதிர்ப்பு அகராதியாக அமைந்தது.
லார்ட் மெக்காலேயின் வேத மத ஒழிப்புத் திட்டம் மிக ஆழமான ஒன்று.
அவன் எழுதிய வார்த்தைகள் இவை:
We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern: a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect.
“I have no knowledge of either Sanskrit or Arabic. But I have done what I could to form a correct estimate of their value….. I have never found one among them (Sanskrit or Arabic Scholars) who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia.”
லார்ட் மெக்காலேயின் உண்மை முகம் இது தான். ஒரு குருடன் விழி இருக்கும் அனைவரையும் குருடனாக்கத் திட்டமிட்டதைப் போல பழம் பெரும் நாகரிகமான ஹிந்து நாகரிகத்தை அதற்கு அருகில் கூட வர முடியாத கிறிஸ்தவத்தால் அழிக்க அவன் திட்டமிட்டான்.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆனார் மாக்ஸ்முல்லர்.
அது எப்படி? அதற்கு ஆதாரம் இருக்கிறதா?
அடுத்துப் பார்ப்போம்.
***