
Written by London Swaminathan
Date:18 October 2017
Time uploaded in London- 18-18
Post No. 4312
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
முதல் பகுதி நேற்று வெளியானது
வேதம் என்றால் அறிவு; ரிக் என்றால் போற்றி; புகழ்ச்சி; துதி பாடுதல்
மொத்த மந்திரங்கள் 10,662;
பிற்சேர்க்கையை விட்டால் 10 402 மந்திரங்கள்.
Syllables சில்லபிள்ஸ்/ அசை 4,32,000
இது யுகக் கணக்குடன் தொடர்புடைய எண்; அதிலும் ஒரு அற்புதம்
உலகிலேயே முதல் முதலில் பொருளடக்கம் contents , இன்டெக்ஸ் Index முதலியன போடுவது இந்தியாவில்தான் தோன்றியது; இதே போல அகராதி Dictionary , என்சைக்ளோபீடியா Encyclopaedia , திசாரஸ்/ நிகண்டு Thesaurus, இலக்கணம் Grammar முதலிய புத்தகங்களும் இந்தியாவில் — சம்ஸ்கிருதத்தில் தான் தோன்றின.
உலக மஹா அறிவாளிகள் உடைய நாடு பாரதம்; உலகில் ஐரோப்பியர்கள் கோமணத்துடன் நடமாடியபோது, ஹோமர் கிரேக்க மொழியில் காவியம் இயற்றுமுன் இலக்கணம், மொழி இயல், கவி பாடுதலில் முதலில் நின்றது இந்தியா.
காத்யாயனர் என்பவர் கி.மு 600 க்கு முன் வேதங்களுக்கு பொருள் அடக்கம், இன்டெக்ஸ் போட்டுவிட்டார்! மந்திரங்களின் துவக்க வரிகள், அவற்றிலுள்ள மந்திரங்கள், துதிகள், சொற்களின் எண்ணிக்கையை எழுதிவிட்டார்.
பாரத நாகரீகம் எல்லோருக்கும் முந்தைய நாகரீகம் என்பதற்கு இதுவே சான்று.
உலகில் சம்ஸ்கிருதம் தவிர வேறு எந்த மொழியும் இலக்கணம், மொழியியலை பாடதிட்டத்தில் சேர்க்கவில்லை. இது மற்றொரு உலக அதிசயம்.
அறிவாளிகள், மேதாவிகள், மஹா புத்தி சாலிகள்; அவர்கள் எழுதாத பொருளே இல்லை!!

அதிசய 432,000!!!!!!!!!!!!!!
வெள்ளைக்கார அரைவேக்காடுகளும், மார்கஸீயவாந்திகளும், திராவிட அசிங்கங்களும் எழுதிய புத்தகங்களைப் படித்தால், பழைய சம்ஸ்கிருத புத்தகங்களில் யுகங்கள் பற்றிய பெரிய எண்ணிக்கை இல்லை என்றும், இது பிற்காலத்தில் எழுதப்பட்ட கதை என்றும் கதைத்திருப்பார்கள். ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன் வேத அசைச் சொற்களை 432,000 என்று காத்யாயனர் கணக்கிட்டுள்ளார்.
இந்த எண்ணின் சிறப்பு என்ன?
கலியுகத்தின் ஆண்டுகள் 432,000; மற்ற யுகங்கள் இதன் மடங்குகளில் வரும்; எடுத்துக் காட்டாக துவாபர யுகம் இதனைப் போல இரு மடங்கு; எதனைக் கூட்டினாலும் ஒன்பது வரும்; இதையே தேவர்களின் ஆண்டுகளில் சொன்னால் குறைவான எண்ணிக்கை வரும்; இதையெல்லாம் அறிந்தே கிருதயுகத்தில் அணுக்ரமணி தயாரித்த காத்யாயனர் 432,000 என்று கணக்கிட்டார் என்று கொள்ளலாம்.; பிராமண நூல்களில் பிரம்மாண்டமான எண்கள் வருகின்றன.; அவை கி.மு .1000ல் உருவானவை என்று வெள்ளைத் தோல்களும் ஒப்புக்கொள்கின்றன. காத்யாயனருக்கு அவர்கள் சொன்ன வருடத்தைத் தான் நான் எழுதி இருக்கிறேன். நமது கணக்குப்படி பார்த்தால் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் முந்திச் செல்லும்.
இந்துக்களுக்கு ஒரு நல்ல/கெட்ட பழக்கம் உண்டு. எல்லா நூல்களையும் UPDATE அப்டேட் செய்துகொண்டே இருப்பார்கள்; இப்படி புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், அரைவேக்காடுகள் அதிலுள்ள கடைசி தேதியை மட்டும் எடுத்துக்கொள்ளும். ஆனால் நூலை முழுவதும் வாசிப்போருக்கு எந்த இடம் புதுப்பிக்கப்பட்ட இடம் என்று தெரியும்.

எட்டாவது மண்டல அதிசயம்
ரிக்வேதத்தின் எட்டாவது மண்டலம் நிறைய புதிர்கள் நிறைந்த மண்டலம்; ஈரானுடன் அதிக தொடர்புடைய மண்டலம் என்று பலர் கருதுவர். ரிஷி முனிவர்களுக்கு நிறைய ஒட்டகப் பரிசுகள் கிடைத்த தான (நன்கொதடை/ தட்சிணை) துதிகள் இதில் உள்ளன. 92 துதிகளும் வெவ்வேறு ரிஷி முனிவர்களின் பெயர்களில் உள்ளன.
ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானப் பெருமை பேசுபவன.
முதல் மண்டலத்தில் ஒவ்வொரு ரிஷிகள் கவிதைத் தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளன; முதல் தொகுப்பு கவிகள்/ துதிகள் வைஸ்வாமித்ர மதுச்சந்தஸ் என்னும் புலவர் கண்டுபிடித்த (இயற்றியது அல்ல) கவிகள். இது போல 11 தொகுப்புகள் உள்ளன. அவைகள் பாடிய தெய்வ வரிசையும், குடும்ப மண்டலங்களில் காணப்படும் அதே வரிசைக் கிரமத்தில் இருக்கும்; எங்கும் ஒழுங்கு; எதிலும் ஒழுங்கு; அவியல் ‘பிஸினஸ்’ கிடையவே கிடையாது.
பத்தாவது மண்டலத்திலும் ஒரு அழகு உண்டு.
முதல் பகுதியில் சின்ன மந்திரங்களும், இரண்டாவது பகுதியில் போகப் போக சிறிதாகிக்கொண்டே வரும் துதிகளும் அழகாக வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இதை எல்லாம் செய்ய வியாசருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்; பேனா, பென்ஸிலால் எழுதவும் கூடாது; கம்ப்யூட்டரும் இல்லை; இன்டெர்நெட், GOOGLE கூகுளும் கிடையாது; எப்படித்தான் செய்தாரோ!! அதைவிட அத்தனை — 20,000 — மந்திரங்களையும் இன்று வரை வாய்மொழி மூலமாகப் பாதுகாத்தார்களே அந்தப் பிராமணர்களை அதிசயப் பிறவிகள் — உலக மஹா அதிசயப் பிறவிகள் என்றே சொல்ல வேண்டும்; உலகில் இவ்வளவு பிரம்மாண்ட இலக்கியம் எந்த மொழியிலும் கிடையாது (கி.மு.1000 வாக்கில்); அதை இப்படி வாய் மொழியாகப் பாதுகாத்ததும் கிடையாது.
யஜூர் வேதத்துக்கு மூன்று அனுக்ரமணிகளும் சாம, அதர்வண வேதங்களுக்கு தலா ஒரு அனுக்ரமனியும் உள்ளன.
எவ்வளவு விஷயங்களைப் பாடி யிருக்கிறார்கள்!!!! கி.மு 800 வாக்கில் பொருள் காண முயன்ற யாஸ்கருக்கே 600 சொற்களின் பொருள் தெரியவில்லை என்று அரவிந்தர் செப்புகிறார். அப்படி இருக்கையில் நேற்று வந்த “அறிஞர்கள்” எம்மாத்திரம்?
வேதங்களை கூடியமட்டிலும் நம்மவர்கள் மொழி பெயர்ப்புகளில் பயிலுதல் நலம்; வெளிநாட்டினர் மொழிபெயர்ப்புகளில் திரிசமன்கள் அதிகம். நயவஞ்சகப் பூனைகள் அவர்கள்.
இந்தியிலும் மராத்தியிலும் குஜராத்தியிலும் நம்மவர்கள் நிறைய ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்க றை ளையும் எழுதியுள்ளனர். அவைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்தல் வேண்டும். வெளிநாட்டினர் கக்கிய விஷங்களை அகற்ற அத்தகைய அமிர்தம் தேவை!
ரிக் வேதத்தில் சுவையான கதைகள் உண்டு;
புரூருவஸ்- ஊர்வஸி உரையாடல் (ரிக் 10-95)
யமா- யமீ உரையாடல் (10-10)
அகஸ்த்ய- லோபாமுத்ரா கதை (1-179)
உலகம் தோன்றியது எப்படி? (படைப்பு பற்றிய இக்கவிதை பற்றி முன்னரே எழுதியுள்ளேன்).
‘க’ என்னும் எழுத்தில் சிலேடைக் கவிதை இப்படி ஏராளம்
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக. கடைசி பாடல் (10-191) “நாம் எல்லோரும் ஒன்றாக சிந்திப்போம் , ஒன்றாகப் பிராத்திப்போம், ஒன்றாக இணைவோம் ஒரே உள்ளத்துடன் செயல்படுவோம் என்று முடிகிறது.
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே- மஹாகவி பாரதி
TAGS: ரிக்வேத அமைப்பு, காத்யாயனர், அனுக்ரமணி, வேத இன்டெக்ஸ்
-சுபம்–
Raghavan Narayanasamy
/ October 18, 2017Eppadi anna ungalal mattum Ippadiyellam arayichi panni yezudha mudikirathu
. SS is always great
On Wed, Oct 18, 2017 at 10:50 PM Tamil and Vedas wrote:
> Tamil and Vedas posted: ” Written by London Swaminathan Date:18 October
> 2017 Time uploaded in London- 18-18 Post No. 4312 Pictures shown here
> are taken from various sources such as Facebook friends, Books, Google and
> newspapers; thanks.  ”
>