
Date:- 22 January 2018
Time uploaded in London- 7-55 am
Compiled by S Nagarajan
Post No.4646
Share it, but with author’s name and blog name; Dont use it without author’s name or blog name; pictures are noot ours; they are mostly from Facebook friends and newspapers. Beware of copy right laws.
பாடல்கள் 188 முதல் 193
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கண்ணதாசன் பாடல்கள்
பாரதியும் பாரதிதாசனும் (தொடர்ச்சி)
பாரதி பாரதி தாசன் – இரு
பைந்தமிழ்ப் பாவலர் தம்மிடை யேயும்
பாரதி பல்லவி சொன்னான் – தாசன்
பாக்கியைப் பாடித்தன் பாட்டை முடித்தான்!
பாரதி பாட மறந்த – ஒரு
பக்கம் திராவிட நாட்டின் எழுச்சி
யாரதைப் பாடிய வீரன்? – வேறு
யாரவன், பாரதி தாசனல் லாமல்!
இன்றைய மாந்தரின் எண்ணம் – நன்(கு)
ஏற்றமு றத்தந்த பாரதி தாசன்
பின்றைய நாளில் தனக்கே ஒரு
பேரிடம் தந்தனன் மூடுதற் கில்லை!
பெண்கள் விடுதலை காதல் – திறம்
பேசுந் தமிழின் கனிரசம், இன்பம்
மண்ணில் அனைவரும் ஒன்றே – என
வாழ்த்தும் புதுக்குரல் வாழ்க்கையின் நீதி!
சாத்திரம் பொய்யெனும் சூது – தண்டச்
சாகசப் பார்ப்பனர் செய்கையின் – மீது
ஆத்திரங் கொள்ளும் குணங்கள் – இவை
யாவிலும் பாரதி மூத்தவன் என்பேன்!
இந்த வகைகளில் ஒன்றை – தாசன்
எப்படிப் பாடி எழில்தந்த போதும்
‘தந்தையர் பாரதி’ என்றால் – அவன்
தாச னுரைத்தது தானிந்த வார்த்தை!
**** (இக்கவிதை முடிந்தது)
தொகுப்பாளர் குறிப்பு: இந்தக் கவிதையில் உள்ள ‘திராவிட எழுச்சி’ மற்றும் ‘பார்ப்பனர் எதிர்ப்பு’ போன்ற கருத்துக்களை பின்னாளில் கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொண்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
‘***