ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் அறிவுரை! – 2 (Post No.4671)

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London- 6-23 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4671

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

ஆயுர்வேத மஹிமை

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை  இரண்டாம் பகுதி.

முதல் பகுதி கட்டுரை எண்  4187 வெளியான தேதி 6-9-2017

 

நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் ஏழு மூன்றுகள் பற்றிய அறிவுரை! – 2

 

ச.நாகராஜன்

 

மூன்று விதமான வியாதிகள் வரும் வழிகள்:

 

  • ஷாகா – புறத்தில் வருவன
  • மர்மாஸ்திசந்தி – முக்கியமான உடல் உறுப்புகள், மூட்டுகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்டவை. இது மத்திம வழி எனப்படுகிறது.
  • கோஷ்டா – உடலின் மைய அமைப்பு

இரத்தம் தோல் உள்ளிட்டவை புறத்தில் அடங்கும்

முக்கிய உறுப்புகள் என்பதில் சிறுநீரகப் பை,இத்யம், தலை உள்ளிட்டவை அடங்கும். மூட்டு இணைப்புகள், இணைந்துள்ள எலும்புகள் ஆகியவையும் இதில் அடங்கும்

மைய அமைப்பு என்பது மஹா ஸ்ரோதா – அதாவது பெரு வழி;

சரீர மத்யம் – உடலின் மையப் பகுதி,

மஹாநிம்ன – உடலில் ஆழ்ந்து உள்ளிருக்கும் பகுதி,

ஆமபக்வஷய – வயிறு மற்றும் குடல்கள் ஆகியவை ஆகும்.

 

மூன்று வகை வியாதிகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

 

 

புறத்தில் வருவன் : பரு, கட்டி, தழுப்பு,  குஷ்ட ரோகம் போன்றவையாகும்

பாரிச வாயு, முக வலிப்பு,மூட்டு வலி,  மத்திம அமைப்பில் வருபவை.

தலை, இதயம், சிறு நீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் வரும் வியாதிகள், ஜ்வரம், இருமல் உள்ளிட்ட பல்வகை வியாதிகள் மைய அமைப்பில் வருபவை.

 

 

மூன்று விதமான வைத்தியர்கள்

 

போலி வைத்தியர்கள்

ஒன்றும் அறியாத வைத்தியர்கள்

நல்ல வைத்தியர்கள்

இப்படி வைத்தியர்கள் மூன்று விதமாக உள்ளனர்.

மருத்துவப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு சில மருத்துவ உபகரணங்களை எடுத்துக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல வரும் ஒன்றும் அறியாத போலிகளை போலி வைத்தியர் எனலாம்.

 

புகழ் பெற்றவர்கள், செல்வந்தர்கள், பண்டிதர்கள் ஆகியோருடன் நெருங்கிப் பழகி அதை மட்டுமே தகுதியாகக் கொண்டு மருத்துவம் பற்றி ஒன்றுமே அறியாத மருத்துவர்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள்.

வியாதிகள், அதைத் தீர்க்கும் முறைகள், மருந்துகள் பற்றிய அறிவையும் அனுபவத்தையும் கொண்டவர்கள் ந்ல்ல வைத்தியர்கள்.

மூன்று விதமான சிகிச்சை முறைகள்

 

இந்த வைத்தியர்கள் ஆன்மீக ரீதியிலான சிகிச்சை, அறிவு சார்ந்த தர்க்க ரீதியிலான சிகிச்சை மற்றும் உ:ளவியல் அடிப்படையிலான சிகிச்சை ஆகிய மூன்று முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

மந்திரம் ஓதுதல், தாயத்து அணிதல், நவரத்தினங்களை அணிதல், விரதம் அனுஷ்டித்தல், பரிகாரங்களைச் செய்தல் தானம் கொடுத்தல், தல யாத்திரைகள் போன்றவை ஆன்மீகத்தின் அடிப்படையில் செய்யப்படுப்வை.

சரியான உணவை உட்கொள்ளச் செய்தல், சரியான

மருந்துகளை அளித்தல் ஆகியவை தர்க்க ரீதியிலான சிகிச்சை முறையாகும்.

 

தீங்கு தருவனவற்றிலிருந்து மனதை விலக்கல் உளவியல் ரீதியிலான சிகிச்சை முறையாகும்.

உடலில் இருக்கும் தோஷங்களின் அடிப்படையில் பொதுவாக மூன்று விதமான சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன.

 

உட்புற சுத்தம்

வெளிப்புற சுத்தம்

அறுவை சிகிச்சை

 

என இப்படி மூன்று வித சிகிச்சை முறைகள் உள்ளன.

முறையற்ற உணவுகளை உட்கொள்ளல் போன்றவற்றால் உடலில் ஏற்படும் வியாதிகளுக்கு உட்புற சுத்தம் தேவை.

மசாஜ், ஒத்தடம் கொடுத்தல்,களிம்பு அல்லது தைலம் தடவுதல், நீரைப் பீய்ச்சி அடித்து காய்ச்சலைக் குறைத்தல், பிசைந்து விடுதல் போன்றவற்றால் வியாதிகள் குறையச் செய்தலை வெளிப்புற சுத்தம் எனலாம்.

அறுவை சிகிச்சை என்பது உட்புறம் அறுத்தல், வெளிப்புறம் அறுத்தல், துளையிடல், தேய்த்து விடுதல் போன்றவையாகும்.

 

மூன்று மூன்றாகச் சொல்லப்பட்ட இந்த அனைத்தையும் ஒருவன் நன்கு அறிந்து கொண்டால் அவன் நீடித்து வாழ முடியும்.

அடிப்படை ஆசைகள்

துணை உதவிகள்

வலிமை

வியாதிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்

வியாதிகள்

அது வரும் வழிகள்

வைத்தியர்கள்

சிகிச்சை முறைகள்

ஆகிய இந்த எட்டு காரணிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

இதைக் கூறியவர் ரிஷி க்ருஷ்ணாத்ரேயர் ஆவார்.

அவர் அறிவாளி.உலக இச்சைகளைத் துறந்தவர்.

புண்ணியம்,செல்வம்,ஆசை ஆகியவை இந்த எட்டு காரணிகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

 

மேற்கூறியவற்றுடன் இந்த அத்தியாயம் முடிகிறது.

இதில் கூறியவற்றை அறிந்தவர்கள் நோயற்ற வாழ்வை அடைவர்.

 

நோயால் பீடிக்கப்படுவோர் அதிலிருந்து நிவாரணம் அடைவர்.

 

“அதாதோ தீர்க ஜீவிதீயம் அத்யாயம் வ்யாக்யாஸ்யாம்:”

தீர்க ஆயுளுடன் வாழ்வது எப்படி என்ற அத்தியாயத்தை இப்போது விவரிக்கிறோம் என்று ஆரம்பிக்கும் சரக சம்ஹிதை அற்புதமாக பல இரகசியங்களை வெளிப்படுத்துகிறது.

 

நூலின் பதினொன்றாம் அத்தியாயத்தில் உள்ள விவரங்களையே நாம் இங்கு பார்த்தோம்.

நூல் முழுவதையும் படித்து சரகரின் நெறியில் நின்று நூறாண்டு வாழ்வோமாக!

**** (இந்தத் தொடர் நிறைவுறுகிறது)

 

Leave a comment

1 Comment

  1. Jagannathanthiruvengadam's avatar

    Jagannathanthiruvengadam

     /  January 28, 2018

    >

Leave a comment