
Date: 4 FEBRUARY 2018
Time uploaded in London- 14-56
Compiled by London swaminathan
Post No. 4701
PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST
WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

லண்டனில் நடைபெற்றுவரும் ஆயுர்வேதக் கண்காட்சியில் நிறைய புதிய தகல்கள் உள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்னர் சுஸ்ருதர் என்ற மாமேதை சம்ஸ்க்ருதத்தில் மருத்துவ நூலை எழுதினார். இதில் உலகம் வியக்கும் இரண்டு விஷயங்கள் இருந்தன. 1.மனிதனுக்கு செயற்கை மூக்கு பொருத்தும் அறுவைச் சிகிச்சையும் 2. நூற்றுக்கணக்கான ஆபரேஷன் (சர்ஜரி= அறுவைச் சிகிச்சை) கருவிகளின் வருணனையும் எல்லா மருத்துவர்களையும் வியப்பில் ஆழ்த்தின. அது சரி! இவை எல்லாம் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதற்கு என்ன சான்று? என்று கேள்வி கேட்போருக்கு லண்டன் வெல்கம் (WELLCOME CENTRE) சென்டர், ஆதாரத்தோடு படங்களை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்தியாவை ஆண்ட காலத்தில் மைசூர் போர் நடந்தது. அதில் ஒருவரின் மூக்கு சேதம் அடைந்துவிட்டது. அவர் கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர். அவரைப் பிடித்த மைசூர் வீரர்கள், அவருடைய மூக்கை அறுத்துவிட்டனர். இது பற்றி 1794-ஆம் ஆண்டில் லண்டன் ஜென்டில்மேன் என்னும் பத்திரிக்கை படத்துடன் செய்தி வெளியிட்டது. அதில் சொல்லப்பட்ட தகவலாவது:- சம்பந்தப்பட்ட ஊழியரின் நெற்றியில் இருந்து கொஞ்சம் சதை வெட்டப்பட்டு அதை மூக்கின் மேல் பதியம் வைத்து செயற்கை மூக்கு உருவாக்கினர். இந்தச் சிகிச்சை நடந்த போது பிரிட்டிஷ் சர்ஜன்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் 1700-ஆம் ஆண்டில் இந்திய சர்ஜரி முறைகள் புத்துயிர் பெற்றன என்று லண்டன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. மேலும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட ஆளின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்வரை நம்மவர்கள் இந்த முறையை நினைவிற்கொண்டு அறுவை செய்ததையும் அதைப் பிரிட்டிஷார் பாராட்டி அதிசய செய்தியாக லண்டன் பத்திரிக்கையில் வெளியீயிட்டதையும் வெல்கம் சென்டர் நமக்குத் தெரி விக்கிறது. இதன் காரணமாக சுஸ்ருதர் சம்ஸ்க்ருத மொழியில் விளக்கிய ஆயுதங்களை இரும்பில் செய்து காட்சிக்கும் வைத்தனர்.
இந்தியச் செல்வங்களை (HENRY WELLCOME) ஹென்றி வெல்கம் சேகரித்ததோடு பழைய ஆயுர்வேத நூல்களை மைக்ரோபில்ம் (MICROFILM) எடுத்து லண்டனில் சேகரித்து வைத்துள்ளார்.

இத்து தவிர டில்லி பார்மஸி (மருந்துக் கடை) ஒன்றில் இருந்த அனுமன் படத்தையும் கண்காட்சியில் காணலாம். இதில் மயங்கிக் கிடக்கும் லெட்சுமணனைக் காப்பாற்ற, அனுமன் மலையுட ன் பெயர்த்தெடுத்து சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்த படம் இது.
ஆயுர் வேத முறைப்படி உடலின் உறுப்புகளையும், இரத்த நாளங்களையும் கா ட் டும் படமும் , அதாவது ஓவியமும் இங்கே உள்ளது. இது குஜராத்தி, சம்ஸ்க்ருதச் சொற்களுடன் இருப்பதால், இந்தியாவின் மேற்குப் பாகத்தில் இருந்து வந்தது தெரிகிறது. சுமார் 300 ஆண்டு பழமையானது இந்த ஓவியம். இது இந்தியர்களுக்கு எந்த அளவுக்கு உடற்கூறு சாஸ்திரம் தெரிந்தது என்பதற்குச் சான்று.

கண்காட்சி ஏப்ரல் 8 வரை உண்டு. ஆனால் திங்கட்கிழமை கண்காட்சி கிடையாது. அனுமதி இலவசம். யூஸ்டன் ஸ்கொயர் ஸ் டேஷனுக்கு அடுத்த கட்டிடம் வெல்கம் சென்டர்.
இன்னும் சில அதிசயங்களை நாளை காண்போம்.
–சுபம்–