சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2 (Post No.4832)

Date: MARCH 20, 2018

 

 

Time uploaded in London- 5-05 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4841

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

சூரியன் சொல்லத் தொடங்கினார்:

“இவர் அக்னி அல்லர். அசுரனும் அல்லர். உஞ்சவிருத்தி விரதத்தில் சித்தி பெற்ற இந்த முனிவர் சுவர்க்கத்தை அடைந்தார். கனிகளையும் ஜலத்தையும் காற்றை அருந்துபவருமான இவர் சமாதியில் இருந்தார்.

சுவர்க்கம் அடைவதற்குக் காரணமான ஈஸ்வரரை வேத சம்ஹிதைகளால் துதித்தார்.

இந்த வேதியர் ஆசையற்றவர். உஞ்ச சீலத்தை ஆகாரமாக உடைய இவர் அனைத்துப் பிராணிகளின் நலத்திலும் அக்கறை உள்ளவர்.

இப்படிப்பட்டவர்கள் அடையும் உத்தம கதியை அவர் அடைந்தார்.

 

இதைக் கேட்ட நாகன் தன்னிடம் வந்த பிராம்மணரிடம் தான் கண்டதைக் கூறியதோடு, “ஓ! அந்தணரே!அந்த சூரிய மண்டலத்தில் இவ்விதமாக இந்த ஆச்சரியம் என்னால் பார்க்கப்பட்டது. அவர் சூரியனோடு சேர்ந்து சூரியனுடன் சுற்றி வருகிறார்.” என்றான்.

 

இதைக் கேட்ட அந்தணர் நாகனிடம், “சந்தோஷம்! நான் போகிறேன். நான் எதை நினைத்து வந்தேனோ அதை உன்னால் அடைந்து விட்டேன். நான் உஞ்சவிருத்தி விரதத்தை அனுஷ்டிப்பேன். உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்.” என்று கூறிக் கிளம்பினார்.

அவர் உடனடியாக சியவன மஹரிஷியை அணுகினார்.

சியவனரால் ஜனக மன்னனின் இல்லத்தில் நாரதருக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டது.

நாரதர் இதை இந்திரனுக்குக் கூறினார்.

இந்திரன் அனைத்து வேதியர்களுக்கும் இதைக் கூறினான்.

 

இந்த வரலாற்றால் உந்தப்பட்ட நாகனைச் சந்தித்த அந்த அந்தணர் உஞ்சசீலத்தை ஆகாரமாக உடையவராகி வனத்தினுள் சென்றார்.

மிகச் சுருக்கமாக சூரியனைப் பற்றிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றில் சூரியனுடைய ஆச்சரியங்களை நாம் காண்கிறோம்.

பல கோடி ஆண்டுகளாக பல கோடி ஜீவராசிகளுக்கு அனைத்தையும் நல்கும் சூரிய சக்தியை அறிவியல் வியக்கிறது.

அறிவியலில் சூரியனின் ஆற்றலைப் பல்லாயிரம் பக்கங்களில் விவரிக்கக் காணலாம்.

ஆனால் சூரிய கிரணங்களில் கிளைகளில் இருக்கும் பட்சிகள் போலச் சித்தர்கள் இருப்பதையும், சூரியனோடு சுற்றும் அந்தணரையும் நாம் அறிவியலில் படிக்க முடியாது.

அதற்கு மஹாபாரதமே துணை!

சூரியனைக் குறித்துப் பல நூறு துதிகள் உள்ளன. ஏன் என்பதற்கான காரணம் சூரியனின் அளவிலா ஆச்சரியங்களே காரணம்!

(ஆதாரம்: மஹாபாரதம், ம.வீ.இராமானுஜாசாரியாரால் பதிக்கப்பெற்றது)

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

***

 

Leave a comment

Leave a comment