
Written by London Swaminathan
Date: 22 MARCH 2018
Time uploaded in London – 13-23
Post No. 4840
Pictures shown here are taken by london swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

நாங்கள் மதுராந்தகம், வடலூர், திருக்கோவிலூர், வைதீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு இடங்களைக் காண திட்டம் இட்டோம்; அது நிறைவேறியது; அத்தோடு போனஸாக மேலும் சில இடங்கள் கிடைத்தன (March 7 to 11, 2018)
சில நண்பர்களின் ஆலோசனைப்படி சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டோம்; எல்லா இடங்களிலும் இறையருள் கிடைக்கப் பெற்றோம்.
‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’
அருணகிரிநாதரின் பாடல் (திருப்புகழ்) பெற்ற தலம் மயிலம். இது திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது; ‘கார்’கள் கோவிலின் வாசல் வரை செல்லும். பல படிகள் ஏறி சந்நிதியை அடையலாம். நாங்கள் சென்றபோது கூட்டம் இருந்தது.
மயிலம் என்பது மயில் என்னும் பறவையின் காரணமாகத் தோன்றியது. முருகனிடம் தோற்ற சூரபத்மன் முருகனின் வாஹனமான மயிலாகத் தன்னை ஏற்றுக்கொள்ள தவம் செய்த இடம் என்பது ஒரு வரலாறு.

மயில் வடிவத்தில் தோன்றும் மலை என்பதால் மயிலம் என்று பெயர் பெற்றது என்பது மற்றொரு வரலாறு.
மயிலம் கோவில் சுவரில் நல்ல ஓவியங்கள் (தற்காலத், தவை) இருந்தன. ஆனால் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லததால் எடுக்கவில்லை. ஒரு அழகிய சிலயை மட்டும் படம் எடுத்தேன்.
இது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்
மயிலம் வரலாறு, பொம்மபுர ஆதீன வீர சைவ மடத்தின் வரலாறு ,இங்கு இருந்த பாலசித்தர் வரலாறு, பரம்பரையாக வந்த ஆதீனகர்த்தர் வரலாறு ஆகியவற்றைக் கூறும் விஷயங்கள் விக்கி பீடியாவில் உள்ளது .
இங்கு முருகன், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் காட்சி தருகிறார். வெளியில் ஒரு கடையில் தேனும்- தினை மாவும் கிடைக்கும் என்று எழுதி இருந்தது பழங்காலக் கதைகளை நினைவுபடுத்தியது. ஒரே பகற் பொழுதில் பல கோவில்களைக் குறிவைத்ததால் ஆழ்ந்து ஆராய முடியவில்லை.

திருப்புகழ் பாடல் 546 ( மயிலம் )
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா …… தனதான
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ …… எனுமானார்
குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா …… விதமாகி
உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னுடே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா …… லழிவேனோ
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா …… ளருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா …… யிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் …… வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானு டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் …… குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் …… பெருமாளே.
(Thiruppugaz from tamilvu)




–SUBHAM–
naraayanan1983
/ March 23, 2018Dear author
your presentations are good and keep ahead….
*Thanks and Regards,Lakshmi Narayanan.S*
2018-03-22 18:53 GMT+05:30 Tamil and Vedas :
> Tamil and Vedas posted: ” Written by London Swaminathan Date: 22
> MARCH 2018 Time uploaded in London – 13-23 Post No. 4840 Pictures
> shown here are taken by london swaminathan WARNING: PLEASE SHARE MY
> ARTICLES; BUT DON’”
>