
Date: MARCH 28, 2018
Time uploaded in London- 5-36 am
Compiled by S NAGARAJAN
Post No. 4857
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
சம்ஸ்கிருதச் சிறப்பு
என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -1
ச.நாகராஜன்
அயர்லாந்து டப்ளினில் உள்ள ஜான் ஸ்காட்ஸ் பள்ளியில் (John Scottus School) சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றும் ரட்கர் கார்டன் ஹார்ஸ்ட் (Rutger Korten Horst) குழந்தைகளின் பெற்றோர்களுடன் ஒரு உரையாடல் நடத்தினார்.
தலைப்பு : என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்?
அந்த உரையாடலின் சில முக்கியப் பகுதிகள் இதோ:-
ஏன் எனது குழந்தை சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்?
அயர்லாந்தில் நமது பள்ளி தான் சம்ஸ்கிருதம் கற்றுத் தரும் ஒரே பள்ளி.
உலகில் உள்ள 80 JSS டைப் பள்ளிகள் இதே முடிவை எடுத்துள்ளன.
அடுத்து சம்ஸ்கிருதம் எப்படி கற்பிக்கப் படுகிறது?
சம்ஸ்கிருத இலக்கணப் பாடல்களை உங்கள் குழந்தைகள் இசைக்கக் கேட்பதை நீங்களும் கேட்டிருப்பீர்கள்.
ஏன் சம்ஸ்கிருதம் வேண்டும்?
அதன் அருமையான அழகினால் தான்!
ஒசையினால் தான்!
உச்சரிப்பில் உள்ள நயத்தினால் தான்!
அந்த மொழி அமைக்கப்பட்ட அமைப்பினால் தான்!
இந்த விதமாக சம்ஸ்கிருதம் மற்ற மொழிகளை விட வேறுபட்டிருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் ஆங்கிலக் கவிதைகளை எடுத்துக் கொள்வோம்.
500 வருடங்களில் அவை எப்படி மாறி உள்ளன?
ஷேக்ஸ்பியர் என்ன சொன்னார் என்று அர்த்தம் கண்டுபிடிக்கத் திணறுகிறோம்.
கிங் ஜேம்ஸ் பைபிளை (King James Bible) எடுத்துக் கொள்வோம். அதை இப்போது படித்துப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறோம்.
கி.பி.700இல் உருவான சாஸரின் பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸை எடுத்துக் கொள்வோம். அதை ஆங்கிலம் என்றே சொல்ல முடியாது! அதை ஆங்க்லோ – சாக்ஸன் என்றே சொல்கிறோம்.
எல்லா மொழிகளும் காலப்போக்கில் உருத் தெரியாமல் மாறுகின்றன.
அவற்றில் ஏன் இப்படிப்பட்ட மாறுதல்கள் எனில் அவை பிழையானவை என்பதால் தான்!
மாறுதல் என்பது உண்மையில் ஊழல் என்றே சொல்லலாம்.
ஒரு ஜெயண்ட் ரெட் மரத்தின் ஆயுளான 700 அல்லது 800 ஆண்டுகளில் அந்த மொழிகள் உருவாகி மடிகின்றன.

ஆனால் ஆச்சரியம் என்னவெனில் சம்ஸ்கிருதம் ஒன்றே இதிலிருந்து மாறுபட்டுள்ளது! என்றும் இறப்பின்றி நிலையாக இருப்பது அது!
ஏனெனில் சம்ஸ்கிருதம் முற்றிலுமாக நன்கு அமைக்கப்பட்ட ஒரு மொழி!
அதன் ஒரு வார்த்தை கூட அதன் இலக்கணத்தில் விடுபட்டதில்லை!
இதன் அர்த்தம் என்னவெனில் அதன் ஒவ்வொரு வார்த்தையும் எப்படி உருவானது அதன் ஒரிஜினல் எனப்படும் மூலம் என்ன என்பதை நாம் காண முடியும் என்பது தான்!
இதனால் அதில் புது வார்த்தைகளே உருவாக முடியாது என்பது அர்த்தமில்லை.
ஆங்கிலத்தில் பழைய கோட்பாடுகளுக்கு கிரேக்க மற்றும் லத்தீனைப் பயன்படுத்திக் கொள்வது போல ஆங்கிலம் பழைய கோட்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.
டெலி விஷன் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.
டெலி – தூரத்தில் விஷன் – காட்சி, பார்ப்பது! அல்லது கணக்கிடுவது!
இப்படி வார்த்தைகள் நவீனமாக உருவாக்கப்படுகின்றன.
சம்ஸ்கிருதம் சிறிய வார்த்தைகளிலிருந்து கூட்டுச் சொற்களை (காம்பவுண்ட் வோர்ட்ஸ்) அமைப்பதில் தனிச் சிறப்பு வாய்ந்தது. சம்ஸ் – கிருதம் என்ற வார்த்தையே “முற்றிலுமாக – அமைக்கப்பட்டது” என்ற பொருளைத் தருகிறது!
ஆக, இப்படிப்பட்ட மாறாத, நிலையான மொழியினால் நமக்கு என்ன ஆதாயம் ஏற்படுகிறது?
என்றுமே மாறாத ஒரு நல்ல நண்பனை எடுத்துக் கொள்ளுங்கள். அவரால் உங்களுக்கு என்ன பயன்? அவர் நம்பகமானவர் என்பது தானே!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத நூலை எடுத்துக் கொள்வோம். அதன் நம்பகத்தன்மை புரியும்!
தனிச் சிறப்பு வாய்ந்த சம்ஸ்கிருதத்தின் அம்சங்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக உலகெங்கும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஆகவே தான் உலகெங்குமுள்ள பல பல்கலைக் கழகங்கள் சம்ஸ்கிருதப் பிரிவைக் கொண்டுள்ளன.
ஹவாயானாலும் சரி, கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், அல்லது டப்ளினில் டிரினிடி காலேஜ், எதை எடுத்துக் கொண்டாலும் சரி, அங்கே சம்ஸ்கிருதப் பிரிவு இருக்கிறது.
-தொடரும்
vanantharaman
/ March 28, 2018Good Morning sir are you still in india?
Thanks
Anantharaman
Sent from my iPhone
Santhanam Nagarajan
/ March 29, 2018i am nagarajan, swami’s brother. he is in london now. left india on 13th march itself
KosmmikRay (@KosmmikRay)
/ April 16, 2018namaskar, shriman nagarajan. I would highly appreciate if you would have this post dated 28th, 2018 March, Post No:4857 into English. Consequently, all other posts which are publish in Tamil. Since, i am not a Tamilian, I am unable to read the knowledgeable contents, unless its written in English by your brother Swaminathan.
Pranams
Tamil and Vedas
/ April 16, 2018We have the English version. I will publish it soon.