புல்வெளியில் நடப்பதால் ஏற்படும் பலன்கள்! (Post No.5094)

Written by S NAGARAJAN

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  7-14 am  (British Summer Time)

 

Post No. 5094

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர் இதழ். இதில் ஜூன் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் நற்பலன்கள்!

ச.நாகராஜன்

 

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பது மிகப் பெரும் நற்பலன்களைத் தரும். இப்படி நடப்பதை ‘எர்த்திங்’ ( Earthing) என்று சொல்கின்றனர்.

ஆரோக்கிய மேம்பாட்டைத் தரும் இந்த நடைப் பயிற்சி செலவில்லாதது; எல்லோரும் எளிதில் செய்யக் கூடியது!

பூமியானது பல அரிய ஆற்றல்களைக் கொண்டது. இத்துடன் கால் மூலம் நம்மை இணைத்துத் தொடர்பு கொண்டால் மனம், உடல், ஆன்மா ஆகிய அனைத்தும் அளப்பரிய பயனைப் பெறும்.

மனதை ஒருமுகப்படுத்தும்!

வெறும் காலுடன் நடப்பது கீழ்க்கண்ட பலன்களைத் தரும்:

வெறும் காலுடன் அதிகாலை நேரத்தில் புல்வெளி மீது நடக்கும் போது நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டி வரும். கூழாங்கற்கள், முள், கூரிய கற்கள் இல்லாத பகுதியாக நீங்கள் செல்ல வேண்டி வரும்.

அப்போது உங்கள் கவனமும் ஒருமுகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும். உள்மனதுடன் இடைவிடாது நடத்தும் போர்களும், அனாவசிய அரட்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். மனம் அமைதி பெறும். மனதிற்கு – அது ஏங்கும் – நல்ல ஓய்வைத் தரும். கவன சக்தி அதிகரிக்கும்!

நடைப்பயிற்சி யோகம்

வெறுங் காலுடன் நடக்கும் போது தசைகள், தசை நாண், வடம், கணுக்கால் மற்றும் இதர காலின் ஆதாரப் பகுதிகள் (the muscles, ligaments and tendons in the feet, ankles and calves stretch and get strengthened)  ஆகியவை நீட்சிக்கு உட்படுகின்றன. அத்துடன் உங்கள் தோற்ற அமைவை –posture ஐ – அது நிலைப்படுத்தும்.

வர்மப்புள்ளிகள் தரும் சக்தி (Reflexology)

உடலில் அநேக வர்மப் புள்ளிகள் (reflexology points) உண்டு. புல்வெளியில் நடப்பதை தினசரிப் பழக்கமாக ஆக்கிக் கொண்டால் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணர முடியும். ஒரு 30 நிமிட நடையிலேயே ஆரோக்கிய மேம்பாட்டை அறியமுடியும் என்பது அனுபவஸ்தர்களின் கூற்று.

மன அழுத்தம் போகும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் சுத்தமான தூய காற்றை சுவாசத்தில் உள்ளிழுக்கிறீர்கள். சுற்றி வர பறவைகள் இருக்க, செடி கொடிகள் மலர்கள் சூழ்ந்திருக்க ஒரு அமைதியான சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்க முடியும். மன அழுத்தம், மன இறுக்கம் எல்லாம் போக இது வழி வகுக்கும். இன்றையப் பொழுதில் வாழ்வது (living in the present moment) என்ற அரிய பழக்கம் வரும்.

கவலையைக் குறைக்கும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் கவலைகள் 62 சதவிகிதம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நல்ல ஹார்மோன்கள் உடலில் இருப்பதை உணர்த்துகின்றன. எண்டார்பின்களின் அளவும் அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தைத் தரும்

வெறும் காலுடன் புல்வெளியில் நடப்பதானது இன்சோம்னியா மற்றும் தூக்க வியாதிகளைப் போக்கி நல்ல தூக்கத்தைத் தருவதை சிகிச்சை நிலைய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

  • இயற்கையுடன் இணைவீ ர்கள்

நீங்கள் இயற்கை அன்னையுடன் உங்களை இணைத்துக் கொள்ள முடிகிறது. குளுமையான பனித்துளி நிறைந்த புல்லை ஸ்பரிசிப்பதன் மூலமும் மலர்களின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலமும் புலர்காலைப் பொழுதில் எழும் உதய சூரியனின் இனிய கிரணங்களை உடலில் படவைப்பதன் மூலமும் மரங்களினூடே வரும் காற்றை அனுபவிப்பதன் மூலமும் இயற்கையை நன்கு அனுபவித்து ஆனந்திக்க முடிகிறது; அமைதியைப் பெற முடிகிறது.

பூமியின் சக்தியுடன் இணைப்பு

பூமி அபாரமான காந்த புலத்தைக் கொண்டுள்ளது. இத்துடன் வெறுங்காலுடன் நடப்பதால் நீங்கள் இணைக்கப்படுகிறீர்கள். இது  காந்த மற்றும் மின் புலங்களுடன் நீங்கள் இணைக்கப்பட ஏதுவாகிறது. உடலிலிருந்து பூமிக்கும் பூமியிலிருந்து உடலுக்குமான ஆற்றல் பரிமாற்றம் பல்வேறு நலன்களைப் பெற உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள நெகடிவ் எனர்ஜியை நீக்கி ஆரோக்கியத்தைத் தருகிறது.

கண் பார்வை கூர்மை பெறும்

புல்வெளியில் வெறுங்காலுடன் நடக்கும் போது உங்கள் கண் பார்வை மேம்படுகிறது. கால் உடலின் அனைத்துப் பாகங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. இது உங்கள் கண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடக்கும் போது உங்கள் முன்காலில் முதல் இரண்டாம் மூன்றாம் பகுதிகளில் அழுத்தம் தரும் போது இந்த ரெஃபெளக்ஸோலொஜி புள்ளிகளால் கண் பார்வை கூரியதாகிறது; தீர்க்கமாகிறது. இந்தப் புள்ளிகள் மசாஜ் செய்யப்படுவதால் கண்கள் நலம் பெறுகின்றன.

ஆக இப்போது உங்கள் அருகிலுள்ள புல்வெளியை நாடி நல்ல பயன்களைப் பெறலாம் இல்லையா?!

***

Leave a comment

Leave a comment