
Written by LONDON SWAMINATHAN
Date: 15 JUNE 2018
Time uploaded in London – 7-47 am (British Summer Time)
Post No. 5112
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்தவர் சார்லஸ் ஸ்டெய்ன்மெர்ட்ஸ் ( Charles Steinmetz). அவர் இல்லாமல் கம்பெனி ஓடாது என்று சொல்லும் அளவுக்கு திறமை சாலி. ஆனால் அவரிடம் உள்ள ஒரு தீய பழக்கம் புகை பிடிப்பது- இடைவிடாமல் சிகரெட் பிடிப்பார் அல்லது சுருட்டு புகைப்பார்.
ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனி (GENERAL ELECTRIC) திடீரென ஒரு விதி கொண்டுவந்தது. யாரும் கம்பெனி வளாகத்தில் புகை பிடிக்கக்கூடாது என்று ஆங்காங்கே போர்டு வைத்தனர். ஆயினும் சார்ல்ஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு அதிகாரி வந்தபோதும் இவர் புகை கக்கிக் கொண்டிருந்தார்.
“ஐயா! உங்களுக்கு இந்தக் கம்பெனியில் புகைபிடிக்கக் கூடாது என்ற விதி இருப்பது தெரியாதோ?” என்று கடுமையான குரலில் உரைத்தார். அது சார்ல்ஸின் மனதில் உரைத்தது. ஆயினும் பதில் சொல்லாமல் அதிகாரியை ஏற இறங்க உற்றுப் பார்த்தார்.
அதிகாரியும் இடத்தை விட்டு அகன்றார். மறு நாள் சார்ல்ஸ் ஸ்டெய்ன்மெர்ட்ஸ் வேலைக்கு வரவில்லை. நாள் ஒன்று, இரண்டு, மூன்று என்று உருண்டு ஓடின. எல்லோருக்கும் ஒரே கவலை. அவர் சம்பந்தப்பட்ட துறை வேலை அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. உடனே தேடும் வேலை துவங்கியது.
அவர் வெகு தொலைவில் ஒரு நகரில் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு வழக்கம்போலப் புகை விட்டுக் கொண்டு இருந்தார்.
என்னப்பா, இது? உன்னை உலகமே தேடிக் கொண்டு இருக்கிறது. என விஷயம்?
அவர் சொன்னார்- ஒன்றுமில்லை- கொஞ்சம் சந்தோஷமாக புகைபிடிக்க இங்கு வந்தேன் என்று.
மறுநாள் அவர் வேலைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் தொடர்ந்து ஊதிக்கொண்டுதான் இருந்தார். யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.
அறிவுக்கும் திறமைக்கும் அவ்வளவு மதிப்பு. அதனால்தான் பிராஹ்மணர்களுக்கு பெரிய குற்றம் செய்தாலும் மரண தண்டனை கிடையாது என்று மநு முதலியோர் எழுதி வைத்தனர். புத்தரும் மநுவும் பிராஹ்மணர்கள என்ன செய்தாலும் அவர்களைத் துன்புறுத்தக்கூடாது என்று சொல்லிவைத்தனர் (காண்க தம்ம பதம்)
அரசர்கள் அட்டூழியம் செய்தாலும் அவர்கள் கொல்லப்படமாட்டார்கள்; பிராஹ்மணர்களைப் போல அரசர்களும்; அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்; இப்படி இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து விரட்டப்பட்ட விஜயன்தான் இலங்கையில் ஒரு சிங்கள சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.
ரஷ்ய அரசாங்கத்தை எதிர்த்த எல்லோரும் தொலைதூர சைபீரியாவுக்கு அனுப்பபட்டு தீர்த்துக் கட்டப்பட்டனர். ஆயினும் அந்நாட்டின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்பப்படும் ஷகாரோவை மட்டும் அரசு கொல்ல வில்லை. கம்யூனிஸ்ட் அரசும் கூட அவருடைய அறிவுக்கு மதிப்பு கொடுத்து, வீட்டுச் சிறை (HOUSE ARREST) மட்டுமே வைத்தது. பிற்காலத்தில் விடுதலையும் செய்யப்பட்டார்.
கம்பனுக்கும் சோழனுக்கும் சண்டை வந்த போது கவிச் சக்ரவர்த்தி கம்பன் கோபித்துக் கொண்டு வெளியேறினான்.
கம்பன் சொன்னான் – உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு? ( “எந்த மரமாவது குரங்கை வேண்டாம் என்று சொல்லுமா? நீ இல்லாவிடில் எனக்கு வேறு ஒரு அரசன் ஆதரவு தருவான்” என்று தொனிக்கச் சொல்லி சென்று விட்டார்.
–SUBHAM–
R.Nanjappa (@Nanjundasarma)
/ June 15, 2018சார்லஸ் ஸ்டெய்ன்மெட்ஸ் சிறந்த கணித மேதை. ஹென்ரி ஃஃபோர்டின் நண்பராக இருந்தவர். ஃபோர்டுக்கு இவர் மீது அபார நம்பிக்கை. ஒரு நாள் ஃஃபோர்டு மோட்டார் கம்பெனியில் ஒரு மெஷின் வேலைசெய்யவில்லை. ஃபோர்ட் உடனே ஸ்டெய்ன்மெட்ஸை வரவழைத்து அந்த மெஷினைப் பார்க்கச்சொன்னார். ஸ்டெய்ன்மெட்ஸ் மெக்கானிகல் எஞ்சினீயர் அல்ல; இருந்தாலும் ஃபோர்டுக்கு அவர் மீது நம்பிக்கை! அவரும் வந்து மெஷினை ஓட்டச்சொன்னார்; அதைச் சுற்றி வந்தார்; அதிலிருந்து வரும் ஒலியைக் கூர்ந்து கேட்டார். ஒரு இடத்தில் நின்று , அங்கு சாக்பீஸினால் ஒரு கிராஸ் மார்க் போட்டார். ” இங்கு இருக்கும் பகுதியைப் பார்த்துச் சீர்செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன்படி செய்ததில் மெஷின் சரியாக வேலை செய்யத்தொடங்கியது!
அவரிடம் இதற்கான பில் அனுப்புமாறு ஃபோர்ட் பலமுறை கேட்டும் அவர் பில் ஏதும் அனுப்பவில்லை. ஃபோர்டும் விடவில்லை. கடைசியில் நச்சரிப்புத் தாங்காமல் ஸ்டெய்ன்மெட்ஸ் ஒரு பில் அனுப்பினார். அதில்:
– சாக்பீசினால் கிராஸ் மார்க் போட்டதற்கு ; 1 டாலர்
-எங்கு போடவேண்டுமென்று கண்டுபிடித்ததற்கு: 99 டாலர்
என்று கிறுக்கியிருந்தாராம்!
[ இது 50 வருஷங்களுக்குமுன் ஏதோ ஆங்கிலப் பத்திரிகையில்- ரீடர்ஸ் டைஜெஸ்டாக இருக்கலாம்- படித்த விஷயம். நினைவிலிருந்து எழுதுகிறேன்.]