
Written by S NAGARAJAN
Date: 1 JULY 2018
Time uploaded in London – 5-43 AM (British Summer Time)
Post No. 5167
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
இது தான் இந்தியா
கொள்ளைக்காரனைக் காப்பாற்றியவரைக் கண்டித்த மாமனாரும்,
மகனுக்கு நல்வழி காட்டிய தாயாரும்!
ச.நாகராஜன்
இந்தியாவின் கூட்டுக் குடும்ப நெறிமுறையைப் பாராட்டாதவர் இல்லை.
அரிய நற்பண்புகளை வழிவழியாக தலைமுறை தலைமுறையாக உணவோடு “ஊட்டி விடுவது” ஹிந்து வாழ்க்கை முறை.
அதன் மூலம் ஏற்படும் நற்பண்புகள் வியப்பூட்டுபவை.
ஓரிருவர் இதிலிருந்து வழி தவறி நடக்கும் போது குடும்பத் தலைவர் அல்லது வீட்டில் உள்ள பெரியோர் அதைச் சுட்டிக் காட்டுவர்.
பெரும்பாலும் தவறிழைத்தோர் மனம் வருந்தித் திருந்துவர்.
இங்கு இரு சம்பவங்களைப் பார்ப்போம்:
1
60 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடந்த சம்பவம் இது:
ஒரு கிரிமினல் அட்வகேட் கொள்ளைக்காரன் ஒருவனுக்காக அவனது கேஸில் அவன் சார்பில் ஆஜரானார்.
அவரது வாதத் திறமையால் கொள்ளைக்காரன் விடுதலை செய்யப்பட்டான். அதனால் அவருக்குப் பெயரும் புகழும் வந்து சேர்ந்தது.
இந்தச் செய்தியை தனது மாமனாருக்கு அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆனால் இதைக் கேட்ட அந்தக் கணமே அவரது மாமனார் திக்பிரமை பிடித்தவர் போலானார்; உடனே பிரக்ஞையையும் இழந்தார். சுயநினைவு போனது.
சற்று நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்த பின்னர் அவர் வருத்தத்துடன் புலம்பலானார்.
“அடடா! அந்தக் கொள்ளைக்காரன் ஏராளமானோரை இம்சைப் படுத்தி இருப்பான். ஒரு சிலரைக் கொன்றிருக்கவும் கூடும்.அப்படிப்பட்ட மகாபாவிக்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுவித்திருந்தால் பெரிய மாபாவியாக அவனது அட்வகேட் தான் இருந்திருக்க முடியும். படித்த உங்களைப் போல ஒருவர் அப்படிப்பட்ட குற்றங்களை ஆதரித்தால், நீங்கள் நரகத்திற்குத் தான் போவீர்கள். பிராமணராக இருப்பதால் தர்மத்தைத் தான் நீங்கள் அனுஷ்டிக்க வேண்டும். மகான்களையும் பக்தர்களையும் கண்டு அவர்களுக்குத் தான் சேவை செய்ய வேண்டும். ஆனால் நீங்களோ ஒரு கொள்ளைக்கார கிரிமினலுக்கு ஆதரவாக இருந்து அவனுக்குச் சேவை புரிந்திருக்கிறீர்கள். நானுமே ஒரு பாவி தான். அதனால் தான் என் மருமகன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தியுடன் இருந்திருக்கிறார்.”
வருத்தத்துடன் அழ ஆரம்பித்தார் அவர். அவரை யார் தான் தேற்ற முடியும்?
வயதான அந்த பிராமணர் பணத்திற்காகத் தர்மத்தை இழக்க விரும்பவில்லை. அப்படிப்பட்ட அபூர்வமான மனிதர்களைக் கொண்டிருந்தது ஹிந்துக் குடும்பங்கள்.
பணத்திற்காக தர்மத்தை விட்டு விட்டு அதைச் சம்பாதிப்பதை விரும்பாத லட்சக் கணக்கானோர் வாழ்ந்த பூமி பாரதம்.
அந்த தர்மத்தைக் காத்து “வாழும் பூமி பாரதமாக” இன்றைய பாரதத்தை ஆக்க அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவோம்!

2
30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். ஒரு கனவான் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தார். வந்தவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது. அவரது மனைவி, குழந்தைகள், அவரது வயதான தாயார் சொல்லவொண்ணா வருத்தம் கொண்டனர்.
அவரது வயதான தாயாரின் சோகம் எல்லை கடந்து போனது. குடும்பத்தைக் காக்கும் அவரது மூத்த மகன் சாகக் கிடக்கிறார். அவரது பக்கத்தில் உட்கார்ந்து அவருக்கு ஆறுதல் அளித்த வண்ணம் இருந்தார். நேராக துளசி மாடம் சென்று ஆழ்ந்த பிராத்தனையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தார்.
இறுதிக் கணம் நெருங்கியது. வயதான பெண்மணி புலம்பினாள் :” மகனே! கோபால்! கோபால்!! என்னைக் கேட்காமல் எனது அனுமதியைப் பெறாமல் நீ இதுவரை ஒரு காரியத்தையும் செய்ததில்லையே! இப்போதோ நீ சாஸ்வதமா அமைதிக்கு ஆளாகப் போகிறாயே! இதோ, இப்போது உனக்கு அனுமதி தருகிறேன். நீ, போ! எனது அனுமதியுடன் நீ வைகுந்தம் செல். ஸ்ரீ ஹரியே உனக்குத் துணை!”
தாயாரின் ஆசீர்வாதத்துடனும் நாராயணனை ஸ்மரித்த நினைவுடனும்,துளசி தீர்த்தத்துடனும் அவர் இறுதி மூச்சை விட்டார்; நாராயணனின் திருவடியைச் சேர்ந்தார்.
தாயாரோ மனமுடைந்து அழுதார்.
எந்த ஒருவருக்கு மறையும் நேரத்தில் சத் கதிக்கான வழியை எவர் ஒருவர் காண்பிக்கிறாரோ அவரே உண்மை நண்பர். அப்படி வழி காட்டாதோர் உண்மையான உறவினர் இல்லை.
ஏராளமான குடும்பங்களில் இப்படி ஒரு இறப்பு நிகழும் தருணத்தில் இறைவனை ஸ்மரணம் செய்வதும், செல்கின்றவருக்கு நற்கதியை அடைய வழி காட்டுவதும் ஹிந்துக் குடும்பங்கள் காலம் காலமாக அனுஷ்டித்து வரும் ஒரு புனிதமான பழக்கம்.
இது தான் இந்தியா!
***
ஆதாரம் : Truth வார இதழ் 15-6-2018 – தொகுதி 86 இதழ் 9
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : கட்டுரை ஆசி