
WRITTEN by London swaminathan
Date: 19 JULY 2018
Time uploaded in London – 8-37 am (British Summer Time)
Post No. 5236
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
மநு நீதி நூல்- Part 23
மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி
3-150 முதல் உள்ள 3-182 வரை உள்ள ஸ்லோகங்களில்
யார் யாரை சிராத்தத்துக்குச் சாப்பிட அழைக்கக்கூடாது என்றும் சிரார்த்தச் சாப்பாட்டுக்கு தவறானவரை அழைத்தால் என்ன பாவம் நேரிடும் என்றும் குண்டன், கோளகன் என்ற இரு வகைப் புதல்வர்கள் யார் என்றும், சிரார்த்தச் சாப்பாடு சாப்பிடுவோரைத் தகாதவர்கள் கண்டால் என்ன நேரிடும் என்றும் மநு விளக்குகிறார்.
இதில் வியாதிக்காரர்கள் முதலியோருடன் டாக்டர்கள், சோதிடர்கள் ஆகியோரையும் மநு சேர்த்திருப்பது அக்காலத்தில் உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் இது மூன்று வருணத்தார் செய்யும் சிரார்த்தம் ஆதலால் பல தொழில்துறையினரின் பெயர்கள் இதில் வருகின்றன. குண்டன், கோளகன் என்பதன் விளக்கம் சுவையானது.
அண்ணன் இருக்கையில் தம்பி கல்யாணம் செய்து கொள்வதையும் மநு எதிர்க்கிறார்.
இப்போது யாரும் மநு தர்ம சாஸ்திரத்தைப் பின்பற்றுவதில்லை; இப்பொழுது அம்பேத்கர் தலைமையில் வந்த இந்திய அரசியல் சாசன சட்டப் புத்தகத்தையே, அதற்குப் பின்னர் இயற்றப்பட்ட, திருத்தப் பட்ட சட்டங்களையே பின்பற்றுகிறோம்.
அமெரிக்கா முதலிய நாடுகளிலும் கூட மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு சட் டங்கள் உள; ஒரு மாநிலத்தில் கொலை செய்தால் மரண தண்டனை; இன்னொரு மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது.
அயர்லாந்து போன்ற கிறிஸ்தவ தேசங்களும் ஒரு இந்துப் பெண்மணி கொடூரமாக இறக்க நேரிட்டவுடன் சட்டத்தை அண்மையில் திருத்திவிட்டது.
மநு முதல் அதிகாரத்தில் சொன்னதைப் போல சட்டம் என்பது கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்தது; அதற்கும் மேல் சந்தேகம் வந்தால் அப்போதைய பெரியோர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சட்டம் என்கிறார்.
அது மட்டுமல்ல மநு தர்ம சாஸ்திரத்தைப் பின்பற்றி கீழ் ஜாதியினர் தண்டிக்கப்பட்டத்தாக உள்ள சான்றுகள் மிகக் மிகக் குறைவு; அத்தகைய பிழைகள் எந்த நாட்டிலும் எக்காலத்திலும் நடைபெறுகின்றன. கிரேக்க நாட்டில் ஊருக்கு ஊர் வேறு வேறு சட்டங்களும் அடிமைகளுக்கு எதிராக வேறு சட்டங்களும் இருந்ததை வரலாறு படித்தோர் அறிவர். இந்தியாவுக்கும் பின்னரே பெண்களுக்கு பிரிட்டன் வோட்டுரிமை அளித்தது என்பதையும் நினைவிற்கொண்டால் சிலர் மநு தர்மத்தை எதிர்த்து அவ்வப்போது போராடுவது அரசியல் பித்தலாட்டம் என்பது தெள்ளிதின் விளங்கும்.
அவர்கள் செத்த பாம்பை அடிக்கும் வீரர்களே! மநு சொன்ன பல நூறு விஷயங்களை பிராஹ்மணர்களே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்டுவிட்டனர்!!!
ஆட்டாங்கொடி
சோம பானம் தரும் சோம லதையை 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்டாங்கொடி என்று மொழி பெயர்த்து இருப்பதும் சுவையானது. வெள்ளைக்கார்கள் உளறிக்கொட்டியது போல போதை தரும் காளான் (mushroom) அல்ல சோம லதை என்பதை கொடி (creeper) என்ற சொல்லே விளக்கும். உண்மையில் வெள்ளைக்கார்கள் சோம லதையை அடையாளம் கண்டிருந்தால் இவ்வளவு காலம் அதைப் புட்டியிலும் டப்பாவிலும் அடைத்து விற்பனை செய்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து இருப்பர்!
சிரார்த்தத்து அழைக்கக்கூடாத பட்டியல் பற்றி பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. பிரஹ்மணர்களில் இவ்வளவு தொழில் செய்தவர்கள் இருந்தனரா? அல்லது மூ வருணத்தார் சிரார்த்தம் பற்றி மநு உரைப்பதால் இவ்வளவு தொழில் செய்வோர் பெயர்கள் வருகின்றனவா? மநு தர்ம சாஸ்திரத்துக்குப் பல வியாக்கியானங்கள் உண்டு கற்றறிந்தோர் கண்டு கொள்க!






–subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 19, 2018சட்டம், சமுதாயப் பழக்க வழக்கங்கள் காலதேச வர்த்தமானத்துக் குட்பட்டவையே. இருந்தாலும் சில சட்டங்களும் வழக்கங்களும் எக்காலத்துக்கும் பொருந்தும்.
வைத்தியர்கள், ஜோசியர்கள், நடிகர்கள் ஆகியோரை ஏன் மநு விலக்கிவைக்கவேண்டும்? இதற்கான காரணத்தை நாம் யூகிக்கத்தான் முடியு,ம், பொதுவாக வைத்தியர்களூம் ஜோசியர்களும் பிறருடைய கர்ம வினையில் தலையிடுகிறார்கள்.;அதனால் தங்கள் கர்ம வினையை ஏற்றிக் கொள்கிறார்கள்! தக்க பரிகாரம் செய்துகொள்வதில்லை; இன்று இத்துறைகள் தொழிலாக மட்டுமின்றி வியாபாரமாகவே ஆகிவிட்டன! அதனால் எந்தக் கட்டுப்பாடுமின்றிச் செயல்படுகின்றன. நடிகர்களோ, காசுக்காக எந்த வேஷமும் போடுவார்கள்! [ ஹாலிவுட் நடிகர் சார்ல்டன் ஹெஸ்டன் Ten Commandments படத்தில் மோஸஸாக நடித்தார். இந்தப் பாத்திரம் அவர் மன நிலையே மாற்றிவிட்டது! அதற்குப்பின், அவர் பிற ஹாலிவுட் ஹீரோக்களைப் போன்ற பாத்திரங்களை ஏற்க மறுத்து விட்டார்!] ஆகவே இவர்கள் சிராத்தம் போன்ற சடங்குகளுக்கு அழைக்கத் தகுதியானவர்கள் இல்லை எனலாம்.
இன்று இந்தப் பட்டியலில் வக்கீல்கள், அக்கவுன்டன்டுகள் , சில வகை எஞ்சினீயர்கள் ஆகியவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். வக்கீல்கள் தெரிந்த போக்கிரிகளுக்கும் காசுக்காக ஆஜராவார்கள். இது professional ethics என்பார்கள்.உண்மையையும் திரிப்பார்கள். அக்கவுன்டன்டுகளோ ஒரு தொழிலின் நிதி நிலையையே புரட்டிக்காட்டுவார்கள், ஊழல்களுக்குத் துணைபோவார்கள். [பல அமெரிக்க நிறுவனங்கள் இவர்களாலல்லவோ பாழ்பட்டன!] சில எஞ்சினீயர்கள் இயற்கை வசதிகளைப் பாழ்படுத்துவார்கள். ஆக இம்மூவகையினரும் விலக்கவேண்டியவர்களே!
இதைப் பெரியோர்கள் வாழ்விலும் வாக்கிலும் பார்க்கலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வைத்தியர்களிடமிருந்தும் வக்கீல்களிடமிருந்தும் எதையும் பெறமாட்டார். இவர்கள் பிறருடைய கஷ்டத்தில் பொருள் சம்பாதிக்கிறார்கள், அவர்களிடமிருந்து எதையும் பெறுவது பாவம் என்பது அவருடைய கருத்து! ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு [ அவர் காலத்திய நாடக] நடிக- நடிகைகளின் மேல் ஒருவித பரிவும் அனுதாபமும் இருந்தது, அது அவர்கள் நடித்த பக்தி நாடகங்களினால் விளைந்ததாக இருக்கலாம். ஆனால், ஒரு நடிகர் நாடகத்தில் கூட போக்கிரி-பொல்லாதவன் பாத்திரம் ஏற்கக்கூடாது என்பார். இன்று வில்லன் இல்லாத படமோ நாடகமோ ஏது!
ஒருவன் சிராத்தத்தில் சோர்ந்து வந்த ஒரு வழிப்போக்கனுக்குச் சோறு போட்டானம். அவன் சிராத்த உணவு சாப்பிட்டபின், ஒரு பசுவை கசாப்புக்கடைக்கு ஓட்டிச்சென்றானாம்; இதனால் வந்த பாபம் அந்த சிராத்தம் செய்தவனுக்கும் சேர்ந்தது என்று இந்தக் கதையையும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார்! ஆக, சிராத்தத்தில் யார் சாப்பிடுகிறார்கள் என்பது முக்கியம்தான்!
காந்தியடிகள் 1909ல் எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்” புத்தகத்தில் இந்தியா சுதந்திரமிழந்ததற்கு காரணகர்த்தாக்களில் வக்கில்களையும் வைத்தியர்களையும் சேர்த்துக்கொள்கிறார். இந்தியா தன் தேசீயத் தன்மையை இழந்ததற்கு இவர்களும் காரணம் என்கிறார். இவை ஏதோ மதிப்புமிக்க தொழில்கள் என்ற ஒரு மாயையைத் தோற்றுவித்து பொருள் ஈட்டுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.
நெருப்புடன் புகை சூழ்ந்திருப்பது போல எந்தத் தொழிலிலும் ஏதோ தோஷம் இருக்கத்தான் செய்கிறது; மனத் தூய்மைதான் முக்கியம்; ஒருவன் புதிய தொழிலில் இறங்காமல் தன் இயல்பான தொழிலிலேயே ஈடுபவேண்டும் என கீதையில் பகவான் சொல்கிறார். “யத் லபஸே நிஜ கர்மோபாத்தம் வித்தம் தேன வினோதய சித்தம்” = ஒருவன் தன் சொந்தத் தொழிலில் ஈடுபட்டு அதனால் வரும் பொருளால் திருப்தியடையவேண்டும் என்று ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார். இன்று நிஜத்தொழிலும் இல்லை; மனத்திருப்தியும் இல்லை!
பாவம் மநு ! இன்று அவர் என்ன எழுதுவாரோ! யாரை விலக்குவது என்பதல்ல- யாரைச் சேர்த்துக்கொள்வது என்பதுதான் இன்று அவர் பிர்ச்சினையாக இருக்கும்!