ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்! (Post No.5392)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 4 September 2018

 

Time uploaded in London – 6-34 am (British Summer Time)

 

Post No. 5392

 

TAMIL WORDS IN THE RIG VEDA

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். கி.மு 1700 முதல் கி.மு.6000 வரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்ட நூல். இந்துக்களைப் பொறுத்தமட்டில் இதன் பழமைக்காக மதிக்கவில்லை. வேதம் இன்றி இந்து மதம் இல்லை. இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. மொழியியல் விதிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மறைந்திருக்கும் மேலும் பல தமிழ்ச் சொற்கள் மேலுக்கு வரும்.

 

எதற்காக இந்த ஆராய்ச்சி?

 

நிறைய பேர் ரிக் வேத ஸம்ஸ்க்ருதம் பழமையானது என்றும் அதற்குப் பின்னர் வந்த பாணினி-காளிதாசன் கால ஸம்ஸ்க்ருதம் வேறு என்றும் சொல்லுவர். ஓரளவுக்கு அது உண்மைதான். இது எல்லாப் பழைய மொழிகளுக்கும் பொருந்தும். பழங்கால தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியின் பழைய இலக்கணமும் வேறு; சொற்களின் பொருளும் வேறு.

இவ்வளவு பழமை வாந்த நூலில் உள்ள சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துவது வியப்புக்குரிய விஷயம்!

 

இதோ சில தமிழ்ச் சொற்கள்:-

எண்கள் பற்றி:-

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.

 

உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)

கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)

காகம்பிர- காகம் (6-48-17)

மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)

சிம்ஹ- சிங்கம் (5-44-1)

உட்ச- ஊற்று (2-16-7)

கூப – கூவம்/ கிணறு 1-105-17

குல்யா – குளம் , கால்வாய்

நீர் – நீர்

பூமி-புவி 2-14-7

யூப – 5-2-7 சங்கத் தமிழ்

புஷ்ப/ பூ – அதர்வ 8-712

பலி- 1-70-9

மது- தேன் 1-90-6

மத்ஸ்ய/ மச்ச – 10-68-8

ரத்ன- 1-20-7

ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8

ராஜசூயம்- அதர்வ – 4-8-1

புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது

சங்கு- அதர்வ 4-10-1

களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)

XXXX

 

சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:

 

ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்

வாரணம் (யானை) – ஆண்டாள் வாரணம் ஆயிரம்

கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)

கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் சிலப்பதிகாரம்

xxx

இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.

ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent

ம்ருக (மான்) – மிருகம்

மேஷ- மேட ராசி/ மேஷராசி

வராக – வராஹ அவதாரம்

ஹம்ச- அன்னம் (2-34-5)

ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்

பாச (கயிறு)- 2-27-16)

பஹு அன்ன – நிறைய உணவு

 

(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)

அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்

அங்குச- அங்குசம் (8-17-10)

 

கச (கசையடி)- (5-83-3)

தண்ட – தடி (8-33-6)

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி

 

பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்

தான்ய – தானியம் (5-53-13)

பீஜ – விதை (ப=வ) (5-53-13)

சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)

வது/ பெண்5-37-3

ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10

வசனம், வாக்கியம், வார்த்தை

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.

நிற்க

 

நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியைஉலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

 

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

 

 

அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்க்ருதம்!!

 

–subham–

 

 

 

Leave a comment

2 Comments

 1. வேதங்களே ஹிந்துமதத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் ஆதாரமானவை. இது பொதுவாக தற்கால ஹிந்துக்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்த ஹிந்துக்களுக்கும் வேதத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது, அப்படித் தெரிந்ததும். அவற்றின் மந்திரங்கள் சடங்குகளுக்குப் பயன்படுகின்றன என்பதுதான்.
  சம்பிரதாய வழியில் வருபவர்கள் வேதத்தின் அனாதிப் பழமையைப் போற்றினாலும், அதை முக்கியமாக சடங்குகளுடன் சம்பந்தப்படுத்தியே விளக்குகின்றனர். இதற்குக் காரணம் இவர்கள் சாயணருடைய உரையைப் பின்பற்றுவதே ஆகும். இந்த சாயணர் சுமார் 700 வருஷங்களுக்குமுன் விஜய நகர சாம்ராஜ்ய காலத்தில் இருந்தவர். [இவரை வித்யாரண்யரின் சகோதரராகவும் சொல்வார்கள்.] .இவர் வேதங்களுக்கு சடங்குகள் சம்பந்தமாகவே உரை எழுதியிருக்கிறார். அனாதிகாலமாக வழங்கி வந்த வேதங்களுக்கு சுமார் 700 வருஷங்களுக்கு முன் வந்த ஒருவர் எழுதிய உரை முற்றிலும் சரியானது எனச் சொல்லமுடியாது. இவர் பல சொற்களுக்கு மனம்போன போக்கில், ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகையான பொருள் கூறி இருக்கிறார். வேதத்தின் நுண்மையான கருத்துக்களைக் கோட்டைவிட்டார்.
  இதைப் படித்த வெள்ளைத்தோல் அரை வேக்காடுகள், ஒரு பக்கம் சாயணர் உரையைப் பின்பற்றினர்; மறு பக்கம் வேதத்தில் சமூக, அரசியல், வரலாற்று அம்சங்களைத் தேடி தம் கற்பனைப் போக்கில் கண்டதையும் எழுதிவைத்தனர்.
  இப்படி இவர்கள் செய்ததில் சில முக்கியக் குளறுபடிகள்:

  – ரிக் வேதமே மிகப் பழமையானது. ( இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேதம் ஒன்றுதான். இதை கலியுகத்தின் சிறுமையையும், மனிதனின் ஆற்றல் குறைந்த தன்மையையும் கருதி வ்யாஸர் நான்காகப் பிரித்து நான்கு சீடர்களுக்கு உபதேசித்தார்.)
  – ரிக் வேதத்தின் காலம் பற்றிய அபத்தமான ஹேஷ்யங்கள். (இதை யாரும் கணக்கிட முடியாது.- மிகப் பழங்காலத்தவை என்பதைத் தவிர எதுவும் சொல்ல இயலாது.)
  – உபனிஷதங்கள் பிற் சேர்க்கைகள்.( இது சுத்த அபத்தம் என்பது தெளிவு)
  -ஆரிய, திராவிட மொழி பற்றிய ஹேஷ்யங்கள்.
  இருந்தாலும் ஆங்கிலம் தெரிந்தவர்களிடையே இக் கருத்துக்கள் இன்றும் நிலவிவருகின்றன. நம்மவர்கள் என்ன எழுதினாலும் வெள்ளைத்தோல் காரர்களின் தாக்கம் இருக்கவே செய்கிறது.
  இந்த நிலையில், சாயணரின் கருத்தை ஏற்காமல், வெள்ளைக் காரர்களின் அபத்தக் கொள்கைகளையும் ஏற்காமல். வேதத்தை அவற்றின் உள்ளார்ந்த கருத்துப்படி ஆராய்ந்தவர் ஸ்ரீ அரவிந்தர் ஒருவரே. இவர் முடிவுகளை “The Secret of the Veda”, ‘Hymns to the Mystic Fire” என்ற இரு புத்தகங்களில் தொகுத்து வெளியிட்டிருக்கின்றனர். நமது வேதங்களின் உண்மையான விளக்கங்களை அறிய விரும்புபவர்கள் அவசியம் இவ்விரண்டு நூல்களையும் நன்கு கற்றறிய வேண்டும். Sri Aurobindo has pointed out the absurd inconsistencies in the interpretation of Sayana, and shown how a unified and uniformly consistent interpretation of the words gives us the spiritual mystical and the exalted inner meaning of the Vedic mantras which are much more than mere ritualistic formulations.
  இக்கட்டுரை ரிக்வேதத்தில் தமிழ்சொற்கள் பற்றி இருப்பதால், இதைப்பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதியதை மட்டும் கீழே தருகிறேன்:
  “…on examining the vocables of the Tamil language, in appearance so foreign to the Sanskritic form and character, I yet found myself continually guided by words or families of words supposed to be pure Tamil in establishing new relations between Sanskrit and its distant sister, Latin, and occasionally, between the Greek and the Sanskrit. Sometimes the Tamil vocable not only suggested the connection, but proved the missing link in a family of connected words. And it was through this Dravidian language that I first came to perceive what seems to me now the true law , origins, and, as it were, the embryology of the Aryan tongues…… it certainly seems to me that the original connection between the Dravidian and Aryan tongues was far closer and more extensive than is usually supposed and the possibility suggests itself that they may even have been two divergent families derived from one lost primitive tongue.” [ The Secret of the Veda, Chapter IV]

  Unfortunately, so called Indian scholars seem unable to shrug off the silly theories and senseless misinterpretations of foreigners and undertake truly independent study and research. This is mainly because most of them do not know Sanskrit well, and have not studied (learnt) the Veda properly.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: