
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 October 2018
Time uploaded in London – 7-15 AM
(British Summer Time)
Post No. 5593
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
இந்தியாவின் புகழ்பெற்ற நூறு பெண்களைத் தெரியுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-
1.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாக்ஞவல்கிய ரிஷியுடன் தத்துவ விவாதம் நடத்திய வித்தகி யார்?
2.கிரேக்கர்களும், தமிழர்களும், ரோமானியர்களும் புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால்,ஜனகன் சபையில், ஒரு பெரிய முனிவரைக் கேள்வி கேட்ட உலகின் முதல் புத்திசாலிப் பெண் யார்?
3.அழகு, இளமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அஸ்வினி தேவர்களிடம் பெற்ற வேத காலக் கவிதாமணி யார்?
4.பல பிராணிகளின் அழகிய உறுப்புகளைச் சேர்த்து அகஸ்திய முனிவர் படைத்த பேரழகி யார்?
5.கற்பின் சின்னம்-புதுமணத் தம்பதியர், தேன் நிலவு அறைக்குள் நுழைவதற்கு முன் வானத்தில் பார்த்த, சங்கத் தமிழ் இலக்கியம் போற்றும் பெண் யார்?
6.அழகிய மிதிலை நகரின் பெயரைத் தாங்கும் பெண்மணி?
7.எம (யமன்) தருமனையும் தனது புத்திசாலித்தனத்தால் மடக்கி, கணவனை மீட்டு வந்த புகழ்மிகு, அருள் மிகு, திரு மிகு பெண் யாரோ? செப்பு
8.ராமபிரானுக்கு சுட்ட பழம் கொடுத்த கிழவி யார்?
9.மஹாராஷ்டிரத்தில் அபங்கம் பாடி, புகழ்பெற்ற பக்தை– ஞானேஸ்வரின் சகோதரி– யார்?
10.சீதையின் அழகு காட்டில் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காக முகப் பூச்சு ‘க்ரீம்’ கொடுத்தவர் எவர்?

11.துருபதனின் மகள்- மஹாபாரத வீராங்கனை- நினைவு இருக்கிறதா?
12.ஒரு தவற்றுக்காக கல்லாகி, ராமன் காலடி பெற்று, உயிர்பெற்ற உத்தமி பெயரைச் சொல்லுங்கள்
13.மயனின் மகள்- இலங்கை வாசி- எல்லோரும் காலையில் நினைவுகூறும் ஐவரில் ஒருவர்– அவர் யாரோ? செப்பு
14.வாலியின் மனைவி– காலையில் பெண்கள் போற்றும் பஞ்ச கன்யைகளில் ஒருவர்– தெரியுமா பெயர்?
15.அவள் பெயர் ப்ருதா; அவளின்றி பாண்டவர் இல்லை; யார்? யார்?
16.காதல் கடிதம் கொடுத்து அனுப்ப அன்னப் பறவையை தூதுவிட்ட அழகியைத் தெரியுமா?
17.கானக அழகி- உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்குப் புகழ் ஈட்டிய நாடகத்தின் வனிதாமணி– புனிதை- அவள் பெயர்?
18.கடல் தந்த அமுதம்– விஸ்வாமித்திரனை வசீகரிக்கச் சென்று அவர் சாபத்தில் கல்லான கன்னிகை; அவள் யாரோ?
19.பஜனை என்றால் இவள் பாட்டு இல்லாமல் இல்லை- கிரிதர நாகர என்ற முத்திரையுடன் முடியும் ஆயிரத்துக்கும் மேலான கிருஷ்ண கானம் பாடிய புனிதவதி யார்?
20.வங்கதேசத்தில் பிறந்து, டேராடூனில் சமாதி அடைந்த, ஹரித்வாரில் ஆஸ்ரமம் உடைய, பெண் சந்யாஸினி யார்?

இதோ விடைகள்:
1.மைத்ரேயி, 2.கார்கி வாசக்னவி, 3.கோஷா, 4.லோபாமுத்ரா, 5.அருந்ததி, 6.மைதிலி (சீதை), 7.சாவித்ரி 8.சபரி, 9.முக்தாபாய் 10.அநசுயா, 11.திரவுபதி, 12.அஹல்யா 13.மண்டோதரி, 14.தாரா, 15.குந்தி, 16.தமயந்தி, 17.சகுந்தலை 18.ரம்பா, 19.மீரா பாய், 20. மா ஆநந்த மயீ
–SUBHAM–