
Written by SNagarajan
Date: 3 DECEMBER 2018
GMT Time uploaded in London –9- 51 am
Post No. 5727
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஹிந்தி பக்தி இலக்கியம்
லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!!
ச.நாகராஜன்
பாரதம் கண்ட பெரும் பக்தர்களுள் ஒருவர் கபீர்தாஸ்!
கபீர்தாஸரின் தோஹாக்கள் மிக அற்புதமானவை! பெருங் கருத்துக்களைக் குறள் போல இரு வரிகளில் அவர் அடக்கிச் சொல்லும் விதம் அற்புதம்! அத்துடன் அவரது சொல் விளையாட்டும் மிக பிரமாதமாக இருக்கும்.
அவரது சிறந்த பாடல்களில் ஒன்று இது.
லாலி மேரே லால் கி, ஜித தேகூ தித லால் |
லாலி தேகன் மை கயி, மை பீ ஹோ கயி லால் ||
Laali meri laal ki, jit dekhu tit laal
Laali dekhan mein gayi, mein bhi ho gayi laal
लाली मेरे लाल की, जित देखू तित लाल |
लाली देखन में गयी, में भी हो गयी लाल ||
எனது அன்பிற்குரிய சிவப்பைப் பார்க்கப் போனேன்!
எங்கு நோக்கினும் செக்கச் சிவப்பு!
செக்கச் சிவந்த சிவப்பைப் பார்க்கப் போனேனா?
நானும் சிவப்பாகவே மாறி விட்டேனே!
The redness (illumination)of my beloved is everywhere
When I went to see the redness I also became illuminated
MEANING
When a devoteerealizes God, he sees illumination of God all over the world. He also mergesinto God’s love in such a way that all the differences between him and Goddisappears. He realizes

இதன் பொருள் ஆழ்ந்த இறை உணர்வு கொண்ட பொருள் ஆகும்.
இறைவனைப் பார்க்கப் போகிறார் கபீர். மிக ஒளி பொருந்திய சிவப்பு வண்ணமாக செஞ்ஜோதியாக பிரகாசிக்கிறது இறைவனின் ஒளி வெள்ளம்! அது அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒளிர்கிறது.
ஆசையுடன் செஞ்ஜோதியைப் பார்க்கப் போன கபீர்
செக்கச் சிவந்த ஜோதியுடன் ஒன்றாகவே கலந்து விட்டார்.
அடடா! என்ன அற்புதம்!
திருஞான சம்பந்தர் தனக்கு விருப்பமில்லாமல் இறைவனின் ஆணைப்படி தனது திருமணத்தை முடித்தவுடன் இறைவனை வேண்ட ஒளி வெள்ளம் பிரகாசிக்கிறது. அதற்குள் தன்னுடன் இருந்தவர்களுடன் உள்ளே செல்கிறார்.
அருட்பெருஞ்ஜோதி, ஒரு தனிப் பெரும் கருணை அல்லவா!
ஜோதி வெள்ளத்தைக் கண்ட வள்ளலார் அதற்குள் செல்கிறார், நம்மையும் வா, வா என்று அழைக்கிறார்!
அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்பது தெளிந்த பின் சிவம் எனும் ஜோதியை தியானிக்க ஆரம்பித்த திருமூலர் சிவமாகவே அமர்ந்திருக்கும் கதை தான்!
நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் மாபெரும் இரகசியம் ஒன்றை விளக்குகிறார். பக்தியில் கரை கண்டவர் அல்லவா அவர்! மக்கள் உய்ய வேண்டி,பெரும் ரகசியத்தைத் தனது சூத்திரத்தில் சொல்கிறார்.
55வது சூத்ரம் இது:
தத் ப்ராப்ய ததேவாவலோக்யதி, ததேவ ஸ்ருணோதி, ததேவ பாஷ்யதி, ததேவ சிந்தயதி
Thad prapya thadevaavalokayathi, thadeva srunothi, thadeva bhashayathi, thadeva chinthayadhi.
One who possesses this love of “devotion”, is able to only see Him everywhere, is able to only hear of Him always, is able to only talk about Him always and always thinks about iHim .
தத் சிந்தனம்
தத் வாக்யம்
தத் ஆவலோக்யம்
தத் பரம்
பரம்பொருளின் மீது பக்தி கொண்ட ஒருவன் அதைப் பற்றியே சிந்திக்கிறான் (தத் சிந்தனம்) ;அதைப் பற்றியே பேசுகிறான் (தத் வாக்யம்) ; அதை மட்டுமே எங்கும் பார்க்கிறான்(தத் ஆவலோக்யம்)!
கடைசியில் அதாகவே ஆகிறான்.(தத் பரம்)
கபீர்தாஸரின் பக்தி அனுபவமும் இது தான் என உணர முடிகிறது.
லாலி தேகன் மை கயி (செஞ்ஜோதியைப் பார்க்கப் போனேன்)
ஜித தேகூ தித லால் (எங்கு பார்க்கினும் செம்மை தான்)
மை பீ ஹோ கயி லால்! (அதில் கலந்து நானும் சிவப்பாகிப் போனேன்)
பக்தரின் வெற்றிகரமான பயணம் இது; இரண்டற இறைவனுடன் ஒன்றாக ஆகிய அற்புத, புனிதப் பயணம்!
கபீர் தாஸரின் தோஹா ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கும்!
TAGS– லாலி தேகன் மை கயி,
கபீர்
***
R.Nanjappa (@Nanjundasarma)
/ December 3, 2018கபீர் தாஸர் உலகத்தின் விசித்திரப்போக்கைக் கண்டு வருந்தும் ஒரு தோஹா:
रंगी को नारंगी कहे , बने दूध को खोया .
चलती को गाड़ी कहे , देख कबीरा रोया
Rangi Ko Narangi Kahe, Bane Doodh Ko Khoya
Chalti Ko Gadi Kahe. Dekh Kabira Roya
ஆரஞ்சுப் பழம் நல்ல கலர் உள்ளது, (ரங்கீ) ஆனால் அதற்கு ஹிந்தியில் எதிர்மறையான பெயர்-நாரங்கீ!
பாலைச் சுண்டக்காய்ச்சி வருவது பால்கோவா (கோயா) ஆனால் கோயா என்றால் தொலைந்து போனது என்று பொருள்.
வண்டி (காடி) எங்கும் போகும் ஒரு மெஷின் மாதிரி. ஆனால் ஹிந்தியில் (ஒரு பிரதேசத்தில் ) காடி என்பதற்கு சலனமில்லாதது என்று பொருள்.
இப்படி உலகில் பொருள்களுக்கு எதிர்மறையான பெயர் இருப்பதைக்கண்டு கபீருக்கு அழுகை வருகிறது என்று பாடுகிறார் !
Santhanam Nagarajan
/ December 3, 2018super doha. we will see some more interesting dohas. thanks for your input.