
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 4 December 2018
GMT Time uploaded in London – 10-24 AM
Post No. 5733
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பிரபல கண்டு பிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு எதிராக ஒரு பேடன் ட் (PATENT SUIT ABOUT SUB DIVIDING ELECTRIC CURRENT) வழக்கு வந்தது. அயர்லாந்தில் பிறந்து பிரிட்டனில் புகழ் பரப்பிய விஞ்ஞானி ஜான் டிண்டாலை (JOHN TYNDALL) சாட்சியாக அழைத்தனர்.
டிண்டால் சாட்சிக் கூண்டில் நின்றார்.
வாதம் தொடர்ந்தது.
ஐயா, டிண்டால் அவர்களே எடிஸனின் இந்த கண்டு பிடிப்பை நீங்களும் செய்து பார்த்தீரா?
ஆமாம். அது உண்மைதான்.
இதில் நீவீர் எந்த அளவுக்கு முன்னேறினீர்?
நானும் எடிஸனும் கண்டு பிடித்தது ஒன்றேதான். ஆனால்……,,,,, அந்த மின் சக்தியை ‘சப் டிவைட்’ செய்வதில் நான் கடைசி படியை மட்டும்- கடைசி உத்தியை மட்டும் – செய்யவில்லை.
ஐயா, இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்தீர்களே! ஏன் அந்த கடைசி படியை (LAST STEP) நீவீர் செய்யவில்லை?
‘டக்’ கென்று பதில் சொன்னார் டிண்டால்,
“நான் எடிஸன் இல்லையே”.
இந்த வாக்குவாதம் பெரிய உண்மையைப் புலப்படுத்துகிறது. நம்மில் பலருக்கும் பல ஐடியா (IDEAS) க்கள் இருக்கின்றன. ஆனால் நாம் ஏன் புகழ் பெற முடியவில்லை? நாம் இறுதிவரை முயற்சி செய்வதில்லை. அல்லது செயலிலேயே இறங்குவதில்லை. இன்றைய இன்டெர்நெட், ஐ பேட், மொபைல் போன், பேஸ்புக், ஈ மெயில் எல்லாம் யாரோ ஒருவர் சிந்த்தித்து, சிறிய அளவில் துவக்கினர். உலகமே இன்று அதில் மூழ்கி விட்டது. இன்னும் எத்தனை கண்டு பிடிப்புகள் வரப்போகிறதோ யார் அறிவார்?
50 அல்லது 75 ஆண்டுகளுக்கு முன்னர் யாராவது உலகில் இவை வரப்போவதை அறிவித்தனரா? விஞ்ஞான புனைக் (Science Fiction) கதைகளில் எவ்வளவோ விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. அவை எல்லாம் கற்பனையே (Fiction) அன்றி கண்டுபிடிப்புகள் ஆகா. எவன் ஒருவன் செயல்முறையில் கொண்டுவருகிறானோ அவனே கண்டுபிடிப்பாளன் (Inventor).
நமக்கும் எவ்வளவோ கவிதை ஐடியாக்கள், கதை ஐடியாக்கள் பிறக்கின்றன.ஆனால் நாம் ஏன் பாரதியார் ஆக முடியவில்லை? நாம் ஏன் கல்கி ஆக முடியவில்லை?
முதலில் எழுத உட்கார வேண்டும். பின்னர்தான் எப்படித் துவங்குவது? எப்படிமுடிப்பது என்ற திணறல் வரும்? முதலில் எல்லோரும் ஏசுவர்; முயன்றால், பின்னர் எல்லோரும் நம் புகழ் பேசுவர்.
முயற்சி திருவினை ஆக்கும்!
xxxx

கிராம போன் கண்டுபிடித்த கதை!
எடிஸன் கிராமபோன் கண்டுபிடித்த கதையை அவர் சொற்களிலேயே வடித்துத் தருகிறார்:
“நான் டெலிபோன் ஆராய்ச்சித் துறையில் வேலை செய்து வந்தேன். அப்போது கார்பன் பட்டன் ட் ரான்ஸ்மிட்டரை (Carbon Button Transmitter) உருவாக்குவதில் இறங்கியிருந்தேன். எனக்கோ காது சரியாக கேட்காது. எப்படியாவது சப்தம் கேட்கும் வழிமுறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். நான் கண்டுபிடித்த ஒரு கருவியில் ஒரு ஊசியை வைத்து விரலால் அழுத்தினேன். எவ்வளவு அதிர்வுகள் வருகின்றன என்று காட்டியது
திடீரென ஒரு ஐடியா தோன்றியது. இந்த அதிர்வுகளையே ஒலியாக மாற்ற முடியுமா என்று. அதற்கு இடையில் ஒரு பொருளை வைக்க வேண்டும். அதைப் படமாகவும் வரைந்தேன். உடனே என்னிடம் வேலை பார்த்த தலைமை மெக்கானிக் ஜான் க்ரூஸேயை அழைத்தேன். இதோ பார். இப்படி ஒரு எனக்குக் கருவி தேவை. இந்தக் கருவியை செய்து தர எவ்வளவு
பணம் தேவை?.
முப்பது டாலர் கொடுங்கள்.
சரி உடனே வேலையைத் துவக்குங்கள்.
போகிறபோக்கில் எடிஸனைப் பார்த்து ஜான் கேட்டார்.
அது சரி, எதற்காக இந்தக் கருவி?
நான் பேசும் பேச்சை ஒலியாகக் கேட்பதற்குத்தான்.
எடிஸன் ஜோக் அடிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு ஆஹாஹா என்று சித்துக்கொண்டே போய்விட்டார் ஜான் க்ரூஸே. .
பின்னர் அந்தக் கருவியையும் செய்து கொண்டு வநதார். அதை ஜான் க்ரூஸே முன்னிலையிலேயே சரியாக வேலை செய்கிறதா என்று சோதித்தார்
‘மேரி ஹாட் ஏ லிட்டில் லாம்ப் Mary had a Little Lamb’ என்ற நர்சரி பாடலைப் பாடிவிட்டு புதிய கருவியை இயக்கினார்.
அது உடனே அவர் சொன்னதை அப்படியே சொன்னது.
ஜான் க்ரூஸே அதைப் பார்த்துவிட்டு மயக்கமே போட்டுவிட்டார்.
என்னுடைய கண்டுபிடிப்புகளிலேயே முதலிலிருந்து கச்சிதமாக அமைந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. அதை வணிகரீதியில் உற்பத்தி செய்தபோது ஒரு மாற்றமும் தேவைப்படவில்லை- என்றார் எடிஸன்.
இது போனோ கிராப் (Phonograph) என்று அழக்கப்பட்டு கிராம போன் (Gramophone) என்ற உருவத்தில் உலகத்தினரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
இப்போதோ எடிஸனுக்கும் மேலான கில்லாடிகள் பல நூதன உபகரணங்களைக்கண்டுபிடித்து நம்மை வருடந்தோறும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

அலெக்ஸா ALEXA என்ற கருவி வீட்டில் இருந்தால் போதும்; நீங்கள் என்ன கட்டளை இடுகிறீர்களோ அதைச் செய்யும். உங்களுக்கு வேண்டிய பாடலைப் பாடச் சொல்லலாம். இன்றைக்கு மழை பெய்யுமா என்றால்
பெய்யுமா பெய்யாதா என்று சொல்லும். நேரம் கேட்டால் அதையும் செப்பும்.
‘உலகம் போகும் போக்கைப் பார்த்தால் டிங்கிரி டிங்காலே’ என்று பாடலாம், ஆடலாம்.
TAGS– போனோ கிராப், கிராம போன், டிண்டால், முயற்சி திருவினை ஆக்கும், எடிஸன்
-சுபம்–