குரு க்ஷேத்திரப் போர் அல்ல! தமிழ் க்ஷேத்திரப் போர்! (Post No.5760)

Written by S Nagarajan

Date: 10 DECEMBER 2018


GMT Time uploaded in London –6- 27 am


Post No. 5760

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நாட்டு நடப்பு! கேலிச் சித்திரம்!! நையாண்டிக் கட்டுரை தான் இது!

குரு க்ஷேத்திரப் போர் அல்ல! தமிழ் க்ஷேத்திரப் போர்!

ச.நாகராஜன்

குரு க்ஷேத்திரமும் உண்மை இல்லை; அந்தக் கண்ணனும் உண்மை இல்லை; அவன் கூறிய பகவத் கீதையும் பாதை காட்டும்  நூல் இல்லை; விரட்டு பார்ப்பனனை!

ஒருவழியாக விரட்டியாகி விட்டது பார்ப்பனனை!

அவன் என்ன செய்வான்? அவனை வரவேற்க 200 நாடுகள் துடித்தன! கூப்பிட்ட இடமெல்லாம் சென்றான். வெற்றிக் கொடி நாட்டினான்;

தொழில்நுட்பத்தின் உச்சியில் ஏறினான்; அந்த நிறுவனங்கள் கொடுத்த பதவியின் உச்சாணிக் கொப்பில் ஏறி அமர்ந்தான்.

அவன் ஒரு விரலை அமுக்கினால் போதும்; விரட்டியவர்களின் ஊழல் பட்டியல் உலகெங்கும் தெரியும்; அவன் தொழில்நுட்பம் அப்படிப்பட்டது.

டாட்டா கலெக் ஷன்!

ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை; செய்யவும் மாட்டான் – அவன் வந்த வழி அப்படி!

அப்படியானால் விரட்டி அடிக்கப்பட்ட மண் அவனது சொந்த பூமி தானே! அரக்கரின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கும் அவனது இதர சகோதரர்களை அவன் காப்பாற்ற மாட்டானா; காப்பாற்றத்தான் மனமில்லையா!

இல்லை; தன் சொந்த மண் மட்டுமல்ல; உலகனைத்தும் தன் பூமி என்றவன் அவன்!

பாவிகள் தன் தலையில் ஏற்றிக் கொள்ளும் பாவச் சுமையைக் கண்டு அவன் திடுக்கிட்டான்!

அட 50 எடைப் பாரம் தாங்க முடியாத தன் தலையில் 5000 எடைப்பாரம் ஏற்றிக் கொள்வதோடு தன் கும்பல் ஒவ்வொருவன் தலையிலும் 5000 எடைப்பாரம் ஏற்றுகிறானே! பாவச்சுமையைத் தாங்கிக் கொள்ள முடியுமா என்று நினைத்தான்.

இந்தப் பாவச் சுமையால் மொத்தக் கூட்டமும் அழியும் நிலையில் இதரர்கள் தாமே வலுவாய்ப் பிழைத்து விடுவார்கள்; தர்ம சக்கரம் விளைவிக்கும் கர்ம சக்கரம் இது என்று அவன் உணர்ந்தான்;

பாவச் சுமை விழும் நாள் நோக்கிக் காத்திருந்தான்; பார்த்திருந்தான்!

****

தாடி வைத்த தலைவர் சமூக நீதி கேட்டார் என்பது போய் அந்தக் கெட்ட பயல் ஒரு கன்னடன்; அவன் தமிழைக் காட்டிமிராண்டி மொழி என்று சொன்னான் என்று ஒருவன் கூச்சலிட, ஐயையோ! தமிழா!! அப்படிச் சொல்லாதே அவர் வைக்கம் வீரர் என்றான் ஆட்சித் தமிழன்.

அட போடா! நீயா தமிழன்! நான் தானடா தமிழன்! வைக்கம் போராட்டத்தை நடத்தியது காங்கிரஸ்; அதில் கலந்து கொண்ட பலரில் அவனும் ஒருவன்; அவன் ஒரு கன்னடன்! நீ வீட்டில் பேசுவது தெலுங்கு; நீ ஒரு தெலுங்கன்; உன்னிடம் கணக்குக் கேட்டவன் ஒரு மலையாளி! ஆக கன்னடர், தெலுங்கர்,மலையாளி கூட்டத்தை ஆள விட மாட்டோம்; நான் சங்கத் தமிழ் கூறும் பாணனடா! நான் தான் தமிழன் என்றான் புதிதாக வந்தவன்.

அட நாம் திராவிடர்; ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையடா என்றான் ஆட்சித் தமிழன்.

‘அட போடா! இந்த திராவிட வாதத்தை மலையாளம், கன்னடம், தெலுங்கு தேசத்தில் என்றாவது வைத்திருக்கிறாயா! அங்கு போய் திராவிடம் பேசு. முதலில் எங்களிடம் அடித்த சொத்தைத் திருப்பிக் கொடு; உன் சேனல்கள் உட்பட’ என்றான் சங்கத் தமிழன்.

ஐயையோ! திராவிடம், அதன் முன்னேற்றம், அதன் மறுமலர்ச்சி, அதன் அனைத்திந்திய வடிவம் அனைத்திற்கும் உலை வைக்கிறானே இந்த ஆதித் தமிழன் என்று கொந்தளிப்போர் கொந்தளிக்க சங்கத் தமிழனோ நடிகர் சங்கத் தெலுங்கர் வெளியேற வேண்டும்; வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கர் வெளியேற வேண்டும்;உண்மைத் தமிழருக்குத் தான் இங்கு இடம் என்றான்!

அட, இவனை விரட்ட நம் சேனல்களை முடுக்கி விடு என்றான் ஆட்சித் தமிழன்.

அந்தக் காலம் மலையேறிப் போச்சு; இப்போது சோஷியல் மீடியா என்று நாளைக்கு ஒரு புது வீடியோ மீடியா! நம் சேனலை எவன் பார்க்கிறான்; எல்லாம் போச்சு என்று சேனல் கூலிகள் அலற, புது யுக்தி வகுக்க நினைத்தான் ஆட்சித் தமிழன்.

‘சரி, பாதிரிகளிடம் பணம் வாங்கு; தீவிரவாதிகளை இறக்கி விடு; அவனை ஒழித்துக் கட்டு’ என்றான் ஆட்சித் தமிழன்.

ஐயையோ! அவன் முந்திக் கொண்டு அவர்களின் ஆதரவை நாடி விட்டானே என்றனர் சேனல் கூலிகள்.

சரி! சரி! போர், போர், அகநானூறே அள்ளி வா! புற நானூறே பொங்கி வா என்றான் ஆட்சித் தமிழன்.

“அண்ணே! அந்தக் காலமெல்லாம் போச்சு. இப்ப புறநானூறும் அகநானூறும் அவனுடையது என்கிறான். அவன் தான் தங்கத் தமிழனாம்! சங்கத் தமிழனாம்.

நாம் பிழைக்க வந்த நாதாரிகளாம்; நம் வீட்டில் பேசும் மொழியை எல்லாம் பிட்டுப் பிட்டு வைக்கிறான்; நம் சரித்திரத்தின் ஆதிக்கே போய் அலசுகிறான் அவன்!”

‘அப்படியானால்?’

‘குரு க்ஷேத்திரப் போர் உண்மை இல்லை என்றோமே; இப்போது தமிழ் க்ஷேத்திரப் போர் நிஜமாகவே வந்து விட்டது; நாம் ஒழிந்தோம்’ என்றனர் கொள்ளையடித்து வயிறு வளர்த்த கூலிகள்

நடக்கப்போவது என்ன என்பது நாளை தெரியும்!

*

இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை. சோஷியல் மீடியா என்ற ஊடகங்களில் ஒரு மணிக்கு ஒரு வீடியோ! ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊடகத்தின் பிறப்பு!

அதில் நடக்கும் அடிதடிகள்! அடடா!! பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி!

தன் வினை தன்னைச் சுடும்!

எதை எதையெல்லாம் வைத்து பிரிவினை விதைகளை வித்திட்டு மரமாக்கி கனிகளை அனுபவித்தார்களோ அதே விதைகள் இன்னொரு மரத்தை உருவாக்கி முதல் மரத்தைப் பட்டுப் போகச் செய்ய முனைகிறது.

கட்டபொம்மு நாயக்கர்! தெலுங்கு பேசும் செட்டியார்; தமிழ் பேசும் செட்டியார்! நாயுடு; ரெட்டி, இன்னும் இன்ன பிற!

சாதி வேண்டாம் என்று சொல்லி ஆளவந்தவர்கள் சாதியின் பேரைச் சொல்லிச் சொல்லி அழிய ஆரம்பித்து விட்டனர்.

தலித் ஆட்சிக்கு வரக் கூடாதா – ஒரு சேனலன் (சேனலை நெறிப்படுத்துபவர் சேனலன்) கேட்க தெலுங்குத் தமிழர் மலர்ச்சி போய், கோபமடைந்து, ‘அட போ! பேட்டி முடிந்தது’ என்று சொல்கிறார்.

இலவசமாக மணிக்கு ஒரு கூத்து!

முற்றிலும் இலவசம்!

பார்ப்பனன் காட்சியில் இல்லாத- பார்ப்பன சூழ்ச்சியற்ற- இலவசம்!

குரு க்ஷேத்திரம் பார்க்கவில்லையே, என்று உலகோரே வருத்தப்பட வேண்டாம்; இதோ தமிழ் க்ஷேத்திரப் போர் ஆரம்பித்து விட்டது!

இது ஒரு புதுமையான போர்!

என்ன புதுமை?

இது அறத்திற்கும் மறத்திற்குமான போர் அல்ல;

மறத்திற்கும் மறத்திற்குமான போர்!

அடடா! போர் எனில் இது போர்!

ரிஸல்ட்?!

காலத்தின் கையில்!!!

tags-தமிழ் க்ஷேத்திரப் போர்

****

Leave a comment

1 Comment

  1. கடம்பூரன்'s avatar

    பார்ப்பன வெறுப்பை விதைத்து விளைச்சல் கண்டவர்கள் இன்று வேர்பிடுங்கப்படுமா என்று அச்சத்தில்!

Leave a comment