உயரத் தூக்கும் தியானம்! (Post No.5808)

Written by S Nagarajan

Date: 21 DECEMBER 2018


GMT Time uploaded in London –6 -45 am


Post No. 5808

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்த உயரத் தூக்கும் தியானம் பற்றி ச. நாகராஜன் ஆங்கிலத்தில்ஆற்றும் உரையை  காணொளிக் காட்சியாகக் காணலாம். இது யூ டியூபில் A Sacred Secret என்று புதிதாக சந்தானம் நாகராஜனால் துவங்கப்பட்ட சேனலில் இடம் பெற்றுள்ளது. இதற்கான தொடுப்பு  https://www.youtube.com/watch?v=WqdoxY673qk

இந்த சேனலில் Subscribe செய்ய வேண்டுகிறேன். அதில் உள்ள சப்ஸ்க்ரைப் என்ற வார்த்தையை அமுக்கினால் போதும், (இலவசம் தான்) உங்களுக்கு சேனலில் இடம் பெற்ற, பெறப் போகும் அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும். உங்களது like and comments-ஐயும் அங்கு பதிவு செய்யலாம். நண்பர்களையும் சேரச் சொல்லலாம். 19-12-2018 முடிய இடம் பெற்றுள்ள காணொலிக் காட்சிகள் மொத்தம் 11.

அன்பன் ச.நாகராஜன்

A Sacred Secret Channel is launched now! Today.

go to

உயரத் தூக்கும் தியானம்!


ச.நாகராஜன்

தியானத்தின் உச்ச கட்ட ஆச்சரியங்களில் ஒன்று தான் உயிருடன் புதைக்கப்பட்டு மீண்டு வருதல்! பாரதத்தின் உயரிய யோகிகள், அற்புதமான கற்பனைக்கும் அப்பாற்பட்ட சூப்பர் செயல்களைச் செய்து காண்பித்தவர்கள்! இவர்களின் அதிமானுடச் செயல்கள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விஞ்ஞான ரீதியாகவும் சரி பார்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளன!

அப்படிப்பட்ட ஒரு அதி மானுட செயல் தான் உயிருடன் ஒரு நாளோ அல்லது பல நாட்களோ புதைக்கப்படும் ஒரு செயல்.இப்படிப் புதைக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிருடன் வருவர்!  

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் ஹரிதாஸ் இப்படிப் புதைக்கப்பட்டு மீண்டும் எழுந்து வந்த அதிசய மஹாபுருஷர் ஆவார்.

‘திபெதியன் யோகா அண்ட் சீக்ரட் டாக்ட்ரின்ஸ் (Tibetan Yoga and Secret Doctrines)  என்ற புத்தகம் ஹரிதாஸ் பற்றிய ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறது. மகான் ஹரிதால் உயிருடன் நான்கு மாதங்கள் புதைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரைக் குழியிலிருந்து வெளியில் எடுத்தனர். இது லாகூரை ஆண்டு வந்த பிரசித்தி பெற்ற மஹாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையிலும் பிரிட்டிஷ் ஜெனரல் சர் க்ளாட் வேட் (Sir Claude Wade) முன்னிலையிலும் நடை பெற்ற சம்பவமாகும்.



மஹாராஜாவின் ராஜ முத்திரை ஹரிதாஸ் உயிருடன் வைக்கப்பட்டு மூடப்பட்ட பெட்டியின் மீது இடப்பட, சுற்றி சுவர் எழுப்பப்பட்டு காவலர்களால் இடைவிடாது கண்காணிக்கப்பட்டது. அந்த இடத்தில் பார்லி விதையும் புதைக்கப்பட்டது. சரியாக குறிக்கப்பட்ட தேதியில் அவர் எழுப்பப்பட்டார். ஒரு பெரிய அதிசயம், புதை குழியில் வைக்கப்பட்ட போது எப்படி அவர் முக க்ஷவரத்தைச் செய்து கொண்டு அழகிய முகத்துடன் இருந்தாரோ அதே போல முக க்ஷவரம் செய்து கொண்ட அதே நிலையிலேயே அவர் எடுக்கப்பட்ட போதும் காணப்பட்டார்.

1986ஆம் ஆண்டு ஆர்மி ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் (Army Research Institute) , இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக் கழகத்தைச் (University of Hull) சேர்ந்த ப்ரெனர் மற்றும் கன்னாலி (Brener and Connally) ஆகிய இரு ஆய்வாளர்களை ஆய்வுக்கென ஒரு குழுவாக அமைத்து ஆய்வு செய்யப் பணித்தது. அவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையில் குழியில் புதைத்தல் போன்ற நிகழ்வுகள் தியானத்தின் விளைவு என்றும் அல்லது metabolism எனப்படும் வளர்சிதை மாற்றத்தின் மீது ஆழ்ந்த ஓய்வை ஏற்படுத்தும் விளைவு என்றும் கூறினர். இப்படி வளர்சிதை மாற்றத்தைக் குறைத்தால் குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருக்கும் நிலையிலும் கூட உயிருடன் இருக்க முடியும் என்று அவர்கள் கூறினர். வளர்சிதை மாற்றத்தின் மீதான விளைவுகள் யோகிகள் கடைப்பிடிக்கும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் வழியால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

லெவிடேஷன் எனக் கூறப்படும் பூமியிலிருந்து உயர எழுதலும் கூட யோகிகளின்  மூச்சைக் கட்டுப்படுத்தும் பிராணாயாமத்தின் ஒரு சக்தி தான்! இந்த சித்தி அதனால் அடையப்படுவது தான்!



பாரிஸில் 1927ஆம் ஆண்டு பன்னாட்டு அதீத உளவியல் மாநாடு (International Psychical Congress) ஒன்று நடந்தது. அங்கு மூனிச் பல்கலைக் கழக உளவியல் பேராசிரியரான புரபஸர் வான் ஷ்ரெங்க் நாட்ஸிங் (Professor Von Schrenck Notzing, Professor of Psychology, University of Munich) ஒரு ஆய்வுப் பேப்பரை சமர்ப்பித்தார். அதில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் யோக சித்தியால் ஒரு இளைஞன் அந்தரத்தில் மிதப்பதை 27 முறை செய்து காண்பித்ததைக் குறிப்பிட்டார்.



கடந்த சில ஆண்டுகளாக யோகா மூலம் அடையப்படும் நன்மைகளைப் பற்றி   உலகெங்கும் ஏராளமான அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.



தியானத்தை இடைவிடாமல் செய்து வந்தால் உயரிய மனோசக்தியை அடைய முடியும். இந்த சக்தி மூலம் உடலையும் மனதையும் உயரிய நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை யோகிகள் நிரூபித்த வண்ணம் இருக்கின்றனர்.

உயரத் தூக்கும் தியானம் உன்னதமான வழி!


TAGS– தியானம்,ச. நாகராஜன் ,A Sacred Secret

««««««« 

Leave a comment

Leave a comment