நேபாளத்தின் அதிசயமான – ‘-கண்ணாடிச் சிறுமி! (Post No.5871)

Written by S Nagarajan


Date: 2 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-43 am


Post No. 5871

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சரிதா பிஸ்தா : நேபாளத்தின் அதிசயமான – ‘GLASS GIRL’ -கண்ணாடிச் சிறுமி!

ச.நாகராஜன்

விஞ்ஞானம் விளக்க முடியாத விந்தைகள் ஏராளம் உண்டு. விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர வளர இந்த விந்தைகளும் கூடிக் கொண்டே தான் போகின்றன!

இப்படிப்பட்ட விந்தைகளுள் ஒன்று தான் நேபாளத்தைச் சேர்ந்த சரிதா பிஸ்தா (Sarita Bista).

2006ஆம் ஆண்டு அவளுக்கு வயது 12.

2006, ஜனவரி,18 ஆம் தேதியன்று அவளது நெற்றியில் ஒரு சின்ன வீக்கம் வந்தது. அவளது பெற்றோர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அது திடீரென்று பிளந்து அதிலிருந்து ஒரு சிறிய கண்ணாடி வெளிப்பட்டது. அது முக்கோண வடிவில் இருந்த ஒரு சில்லு – துண்டு!

பெற்றோர்கள் கவலைப்பட்டனர். எப்படியோ ஒரு கிளாஸ் அவள் நெற்றியில் வந்து இருந்திருக்கிறது போலும் என்று அவர்கள் எண்ணி அத்தோடு விஷயத்தை விட்டு விட்டனர்.

ஆனால் இன்னும் பல கண்ணாடித் துண்டுகள் அவள் நெற்றியிலிருந்து வெளிப்பட ஆரம்பித்தன. முக்கோணக் கண்ணாடித் துண்டுகள் 4 செண்டிமீட்டர் நீளமும் ஒரு மிலிமீட்டர் கனமுமாக இருந்தது.

அவ்வளவு தான், பயந்து போன பெற்றோர் அவளை டாக்டரிடம் கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்தார். சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது. ஆனால் அவளது தோலும், நெற்றிக்கு அடிப்பாகமும் சாதாரணமாகத் தான் இருந்தது.

செய்தி பரவியவுடன் பல டாக்டர்களும் அவளை ஆராய்ந்தனர். ஆனால் காரணம் யாருக்கும் புலப்படவில்லை.

கண்ணாடி வெளிப்படும் போது ஒரு சிறிது ரத்தம் வரும்; ஆனால் அந்த இடம் உடனே ஆறி விடும்.

இது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. பள்ளியில் இந்த விஷயம் ரகசியமாகவே காக்கப்பட்டது. ஆனால் அங்கும் அடிக்கடி கண்ணாடி வரவே அனைவருக்கும் தெரிய வந்தது.

2006 ஆகஸ்ட் மாத வாக்கில் தினமும் ஒரு கண்ணாடித் துண்டு அவள் நெற்றியிலிருவிளந்து வர ஆரம்பிக்கவே செய்தித்தாள்களில் எல்லாம் அவளைப் பற்றிய தலைப்புச் செய்தி வர ஆரம்பித்தது. ஒரு முறை ஒரே நாளில் 12  துண்டுகள் வெளிப்பட்டன.

செப்டம்பரில் அவள் பிரபலமாகி விட்டாள். அப்போது அது வரை வெளிப்பட்ட கண்ணாடித் துண்டுகளின் எண்ணிக்கை 130ஐத் தொட்டது.

டாக்டர்கள் முழு ஆய்வில் இறங்கினர். ஆனால் இந்த நிகழ்வால் அவள்  மன நலமோ உடல் நலமோ பாதிக்கப்படவில்லை.

டாக்டர்கள் காரணம் புரியாமல் திகைக்க அவள் நாளுக்கு நாள் நல்ல முறையில் வளர்ந்தாள்.

இளம் மங்கையாக இன்று வலம் வருகிறாள்.

விஞ்ஞானம் வளர்ந்தாலும் அது விளக்க முடியாத அதிசயங்கள் நிகழவே செய்கின்றன!

***

Leave a comment

Leave a comment