
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 9 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 18-57
Post No. 6054
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))









MY OLD ARTICLES ON ASOKAN
மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135). சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை …
அசோகனுக்கு ஒரே நாளில் 84,000 …
28 Sep 2014 – அசோகன் காலத்தில் பிரம்மாண்டமான கடிதப் போக்கு வரத்து நடந்தது. இந்த எழுத்துக் கலை ராமாயண, மஹாபாரத காலத்திலேயே …
அசோகன் மனைவி | Tamil and Vedas
மகாவம்சத்தின் 18, 19 ஆவது அத்தியாயம் முழுதும் போதிமரப் புகழ்ச்சி (அரச மரம், அஸ்வத்த மரம்) இருக்கிறது. அசோகன், போதி மரத்தை கடவுள் …
மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் …
13 Sep 2014 – 1)“தர்ம: அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் …
இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் …
18 Sep 2014 – Ganges is everywhere in Sri Lanka! கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1295; தேதி: 18 செப்டம்பர் 2014 This is already …
அசோகன் மனைவி செய்த அக்கிரமம் …
3 Oct 2014 – அசோகன், போதி மரத்தை கடவுள் போல வழிபட்டதையும் மூன்று … Labels: அசோகன்மனைவி புத்த கயா போதி மரம் மந்திர மாங்கனி …
—சுபம்–

R.Nanjappa (@Nanjundasarma)
/ February 10, 2019உலகில் எவ்வளவோ சாம்ராஜ்யங்கள் தோன்றி மறைந்து விட்டன, எத்தனையோ, சக்ரவர்த்திகள் தோன்றி மறைந்துவிட்டனர். அனேகமாக எந்தப் பெரிய சக்ரவர்த்தியும் நிம்மதியாக உயிர்விட்டது இல்லை. சக்ரவர்த்தியாக இருந்தபோதும் நிம்மதியாக இருந்ததில்லை. பல அரச வம்சங்களில் சிம்மாசனத்திற்காக குழப்பம், போட்டி, கொலை தான், இதை முகலாய சாம்ராஜ்யம் வரையில் பார்க்கிறோம்.
ஹிந்து அரசர்கள் மட்டுமே இதற்கு விலக்காக இருந்தவர்கள். க்ஷத்ரிய அரசர்கள் வயதான காலத்தில் அரசாட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு வானபிரஸ்தம் போய்விடுவார்கள் என்று புராணத்தில் படிக்கிறோம். இது உண்மையாகவே ஒவ்வொரு அரசன் விஷயத்திலும் நடந்திருக்காவிட்டாலும் , இது ஒரு முன்மாதிரி- பல குழப்பங்களையும் தீய விளைவுகளையும் தடுக்கும் உத்தியாகவாவது இருக்கிறது. தசரதன் ஒரு நிலையில் ராமனுக்கு முடிசூட்டிவிட்டு தான் அரசாட்சியிலிருந்து விலக நினைத்தான். ராமன் அரசுக்குப் பதிலாக ஆனந்தமாக வனம் ஏகினான். ஆனான் தனக்கு முறைதவறி வந்த ஆட்சியைப் பெற பரதன் மறுத்தான், இந்த விசித்திரத்தை நாம் உலகில் வேறு எங்கும் பார்க்கவில்லை. கம்பன் வியந்து பாடுகிறான்:
தாயுரைகொண்டு தாதையுதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்றபோழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் ராமர் நின்கேள் ஆவரோ தெரியினம்மா!
இதற்கு நேர்மாறான நிலையை மஹாபாரதத்தில் பார்க்கிறோம்! போரெல்லாம் முடிந்து யுதிஷ்டிரர் சக்ரவர்த்தியானதும் திருதராஷ்டிரனை மரியாதையாகவே உரிய கவுரவத்துடன் நடத்துகிறார்கள். ஆனாலும் விதுரர் வந்து திருதராஷ்டிரரைக் கடிந்துகொள்கிறார். “உன் மகன் பீமனுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்றான், இன்று அந்த பீமன் கையால் போடும் சோறை வெட்கமின்றி நாய் போல் தின்கிறாயே” என்று சொல்கிறார். இதன் பிறகுதான் திருதராஷ்டிரர் அரன்மனையைத் துறந்து காடு போகிறார்!
ஆக நமது இரண்டு இதிஹாசங்களும் இருவேறு துருவங்களைச் சித்தரிக்கின்றன, இதற்குள் பிறவெல்லாம் அடங்கிவிடும்!
சரித்திர காலத்தில் உலகில் தோன்றிய பெரிய சாம்ராஜ்யம் ரோமானியர்களது. இதில் பல நிலைகளைக் காண்கிறோம், நல்ல சக்ரவர்த்திகள்-பொல்லாதவர்கள் என இருவகையினரையும் பார்க்கிறோம். சக்ரவர்த்தியாவதற்கு நடந்த சதி, கொலைகளையும் பார்க்கிறோம். சக்ரவர்த்தியாக இருந்து போரில் ஈடுபட்ட சமயங்களில்கூட ஆத்ம சிந்தனையிலேயே மூழ்கி இருந்தவர் மார்கஸ் அரேலியஸ். நிலையாமையை நன்கு உணர்ந்தவர். இவரது தியான எண்ணங்கள் Meditations உலகப் புகழ் பெற்றவை இதை ராஜாஜி பல வருஷங்களுக்கு முன்பே “ஆத்ம சிந்தனை” என்று தமிழில் மொழிபெயர்த்தார்.
ரோம சாம்ராஜ்ய சரித்திரத்தில் இன்னொரு கோணத்தைப் பார்க்கிறோம். அங்கு அரசர்களே அல்லாமல் பிரபுக்களும் பெரிய பதவியில் இருந்தவர்களுமே நிம்மதியாக இருந்ததில்லை! அனீசியஸ் மேன்லியஸ் போதியஸ் Anicius Manlius Boethius செனேடராகவும் பிற உயர்பதவிகளிலும் இருந்தவர். இவர் தனக்கெதிராகச் சதியில் ஈடுபட்டார் எனக் கருதி தியோடொரிக் என்ற அரசன் இவரைச் சிறையிலிட்டு பின்னர் கொலைசெய்தான், சிறையில் இருக்கும்போது Consolation of Philosophy என்ற புத்தகத்தை போதியஸ் எழுதினார். உயர்பதவி, சிறந்த வாழ்க்கை, மரணம் ஆகியவை குறித்த சிந்தனைகள் அடங்கிய இப்புத்தகமும் நிலையாமையையே விளக்குகிறது. போதியஸுக்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ரோமன் இலக்கிய உலகில் மிகப்புகழ் பெற்ற சிசிரோ Cicero வுக்கும் இதே கதிதான் நேர்ந்தது! ஜூலியஸ் ஸீஸருக்குப் பின் வந்த மார்க் அந்தோனியை இவர் எதிர்த்து, பழைய ரிபப்ளிகன் முறையே திரும்பி வரவேண்டுமென தீவிரப்பிரச்சாரம் செய்தார். அதனால் இவர் வேண்டத்தகாதவரானர். இவர் தப்பி ஓடும்போது இவரைக் கைது செய்து கையையும் தலையையும் வேட்டி ரோம் நகரில் பார்வைக்கு வைத்தனர்! இன்று இவர் இலக்கியப் படைப்புக்கள் ரோம நாகரிகத்தின் சிறந்த படைப்புக்களாகவும் , கிரேக்க-ரோமானிய நாகரிகங்களின் இணைப்புப் பாலமாகவும் கருதப்படுகின்றன,
ரோம சாம்ராஜ்யத்தின் தலை சிறந்த தத்துவ அறிஞரான செனகா Seneca வின் நிலையும் இதுதான், சதியில் ஈடுபட்டதாகக் கருதி நீரோ சக்ரவர்த்தி இவரைத் தற்கொலை செய்துகொள்ள ஆணையிட்டான். செனகாவும் சாக்ரடீஸ் போன்று சிறிதும் தயக்கமில்லாமல் தன் உயிரைத் தியாகம்செய்தார். இவருடைய எழுத்துக்களும் ஆன்மீக, தார்மீக சிந்தனைகள் பொதிந்தவை.
ஆக, அரசியல் என்று வந்தால் பெரிய சக்ரவர்த்திகளே மட்டுமின்றி உயர் நிலை யெய்திய பலரும் நிம்மதியின்றியே இருக்கின்றனர்.
நாங்கள் அறுபது ஆண்டுகளுக்குமுன் வரலாறு பாடம் தொடங்கும்போது முதல் பாடமாக எங்கள் புரொஃபஸர் சொன்னது ” Empires rise only to fall- this is the lesson of history.”. ‘Uneasy lies the head that wears a Crown” என்பார் ஷேக்ஸ்பியர். ‘அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோதான் ” என்று தமிழில் சொல்கிறோம். ( சொன்னது கம்பர் என்று நினைவு.) Paths of glory lead but to the grave” என்று Elegy Written in a Country Churchyard ல் Thomas Gray.எழுதுகிறார்.
DEATH THE LEVELLER
The glories of our blood and state
Are shadows, not substantial things;
There is no armour against Fate;
Death lays his icy hand on kings:
Sceptre and Crown
Must tumble down,
And in the dust be equal made
With the poor crookèd scythe and spade.
……..
The garlands wither on your brow,
Then boast no more your mighty deeds!
Upon Death’s purple altar now
See where the victor-victim bleeds.
Your heads must come
To the cold tomb:
Only the actions of the just
Smell sweet and blossom in their dust.
பதவியில் இருப்போர்கள் பணிவுடன் இருக்கவேண்டும், “பெருக்கத்து வேண்டும் பணிவு”. ஆனால் ஜனநாயகம் என்று கூப்பாடு போடும் இக்காலத்தில் குட்டிப் பேட்டைத் தலைவர்களும் தலை தெறித்து ஆடுகிறார்கள்!
R.Nanjappa (@Nanjundasarma)
/ February 11, 2019Death the Leveller கவிதை James Shirley (1596-1666) எழுதியது.
Tamil and Vedas
/ February 11, 2019Thanks.