ஒரு பூனைக் கதை சொல்லவா? (Post No.6083)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 16 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 17-29


Post No. 6083

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Leave a comment

1 Comment

  1. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 17, 2019

    ஆனி மாத பூனைக்கதை! வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாயும் பூனையும் முதல் இடத்தைப் பிடித்துவிட்டன. நாய் போன்று பூனையும் நன்றியுள்ள பிராணிதான். உண்மையில் எல்லா பிராணிகளும் நன்றியுள்ளவை தாம்! மனிதன் தான் சற்று வித்தியாசமானவன்! அதனால்தான் வள்ளுவர் குறளில் ‘செய்ந்நன்றி அறிதல்’ ஒரு அதிகாரமே வகுத்தார்! நாம் காட்டு விலங்குகள் எனக்கருதும் சிங்கம், புலி போன்றவையும் நன்றி பாராட்டும் இயல்புடையன. எல்ஸா என்ற சிங்கத்தின் குடும்பத்தைப் பற்றி Joy Adamson எழுதிய மூன்று புத்தகங்கள் உலகப்பிரசித்தி பெற்றவை. [ காட்டுச் சிங்கம் நன்றி பாராட்டிய பொழுதும் மனிதன் மாறவில்லை! ஆடம்சனை மனிதர்கள் கொன்றார்கள்! சிங்கத்தைப் பாதுகாப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை!] அதேபோல் யானைகளும் மிகவும் நன்றி பாராட்டும் இயல்பின. செய்த தீமையையும் மறக்காதவை! ஆப்ரிக்கக் காட்டு யனைகளைப்பற்றி நெஞ்சுருக்கும் பல செய்திகளை The Elephant Whisperer என்ற புத்தகத்தில் Lawrence Anthony தருகிறார். குதிரைகளும் அவ்வாறே! ஹிம்சை செய்யாமல் குதிரைகளைப் பழக்குவது எப்படி , அவை எவ்வளவு விஶ்வாசமாக இருக்கின்றன என்பதை “The Man Who Listens to Horses” என்ற புத்தகத்தில் Monty Roberts எழுதியிருக்கிறார். இதில் விசித்திரம் என்னவெனில், லாரன்ஸ் அந்தோனியும் மான்டி ராபர்ட்ஸும் யானை, குதிரைகளின் பேச்சையும் எண்ணத்தையும் புரிந்துகொள்பவர்கள்! அவையும் அவர்களின் செயலையும் பேச்சையும் எண்ணத்தையும் புரிந்து கொள்ளும்! Two way communication! இப்படி ஒவ்வொரு முருகத்தைப் பற்றியும் சொல்லலாம்!

    வீட்டில் பூனை வளர்ப்பவர்கள் பூனையும் நாய்போன்று நன்றி பாராட்டும் இயல்பினது என்பதை அனுபவத்தில் அறிவார்கள். அதுவும் குட்டியாக இருக்கும்போது அதற்குச் செய்த உதவியை, நன்மையை மறக்கவே மறக்காது! நாய் போன்று தம் அன்பை தாராளமாகவே வெளிப்படுத்தும்! நாம் வெளியில் போய்விட்டுவந்தால் நம்மை வந்து கொஞ்சும்! காலைச் சுற்றிச்சுற்றி வரும். நம் உடல் மீது உராயும். மடியில் வந்து அமர்ந்துகொள்ளும். கையைப்பிடித்து இழுத்து தடவிக்கொடுக்கச் சொல்லும்! ( கழுத்தின் கீழ்ப்பகுதியில் தடவிக்கொடுப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் அடிவயிற்றை தொடக்கூடாது!) பசியாக இருந்தால் நம் வேஷ்டி புடவையைப் பிடித்து கிச்சனுக்குக்கு இழுத்துச் செல்லும் அல்லது பூனை உணவு பெட்டி வைத்திருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லும்! பூனை மிகவும் சுத்தமான பிராணி. சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்கள் வீட்டில் பூனை வளர்ப்பது சிரமம்தான்! பூனை இருக்கும் இடத்தில் அணில், புறா போன்று எது வந்தாலும் பூனை விட்டுவைக்காது! நாயையாவது பழக்கலாம். பூனையிடம் நம் பாச்சா பலிக்காது! பூனையைப் பழக்கவே முடியாது!

    பூனை நமக்கு முற்றும் கட்டுப் பட்டு இருக்காது, நாய் போன்று சொன்னதைக் கேட்காது! அதற்கென ஒரு மனம் உண்டு, சில நேரங்களில் அதன் போக்கிலேயே விட்டுவிடவேண்டும். இரவில் வெளியில் போய் அலைந்துவிட்டுத்தான் வரும்! இங்குதான் நம் கஷ்டங்கள் தொடங்கும்! வளர்ப்பது ஆண்பூனையாக இருந்தால் , சீசனில் பிற ஆண்பூனைகளினால் பிரச்சினை வரும். ஒரு ஏரியாவில் ஒரு ஆண்பூனைதான் இருக்கலாம். அதனால் வெளியில் சுதந்திரமாக உலவும் பூனைகளினால் வளர்ப்புப் பூனைக்கு தீங்கு நேரும். சண்டை போடும். இவை சண்டைபோடுவதும் ஒரு முறையைப் பின்பற்றும் [வெளியில் திரியும் பூனைகள் வளர்ப்புப் பூனைகளைவிட சக்திவாய்ந்தவையாக இருக்கும். வீட்டில் வளரும் பூனைகள் சற்று delicate தான்.] அதனால் வீட்டில் வளரும் பூனைகள் அடிக்கடி கடிபடும்! வெடரினரி டாக்டர்கள் அவற்றை neuter செய்யவேண்டும் என்பார்கள்! பெண்பூனையாக இருந்தால் வருடத்தில் மூன்று முறையாவது குட்டிபோடும்! சாதாரணமாக ஒவ்வொரு முறையும் நான்கு, ஐந்து குட்டிகள்! இவை கண்திறந்து பின் செய்யும் அட்டகாசங்கள் சகிக்கமுடியாதவை! தாய்ப் பூனை குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதம் அற்புதமாக இருக்கும்!அவற்றிற்கு தகுந்த இடம்தேடி ஒப்படைப்பது பெரும்பாடாகிவிடும்!

    உலகெங்கிலும் பூனை வளர்ப்பவர்கள் யூடியூபில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் ஒரு சமீபத்திய அனுபவம். ரஷ்யாவில் Obninsk ஊரில் ஒரு தெருவில் வளர்ந்த மாஷா என்ற பூனை. இது எந்தவீட்டிற்கும் சொந்தமானதல்ல. எல்லோர் வீட்டிலும் அதற்கு உணவளிப்பார்கள். ஒரு நாள் இது இரவு முழுதும் கத்திக்கொண்டே இருந்தது.. தேடிப் பார்த்ததில் ஒரு அதிசயம் தெரியவந்தது.அந்தத்தெருவில் யாரோ ஒருவர் சிறு ஆண் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். இந்தப்பூனை அங்கு சென்று அந்தக் குழந்தையின் உடலுடன் உராய்ந்து இரவுமுழுதும் அந்தக் குளிரில் படுத்திருந்தது! பூனையின் உடல் வெப்பத்தினால் அந்தக்குழந்தை குளிரில் பிழைத்தது! அதைப் பின்னர் ஆஸ்பத்திரிக்கு இட்டுச் சென்றனர்! குழந்தை பிழைத்தது! இதைப் பூனைக்கு யார் சொல்லித் தந்தார்கள்!
    [See:www.independent,co,uk. News/World January 16, 2015 ]
    யாதேவி ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: என்ற ஶ்லோகம் நினைவுக்கு வருகிறது!

    இத்தனை இருந்தும் ஒரு எச்சரிக்கை! பொதுவாகவே செல்லப்பிராணிகளினால் சில நோய்கள் வரும் அபாயம் இருக்கிறது! அதுவும் பூனை வெளியில் திரிந்து விட்டுதான் வரும்! அதனால் சற்று உஷாராகவே இருக்கவேண்டும். இன்னொன்று. பூனைக்குட்டிகளின் கழிவு மிகவும் ஆபத்தானது. பூனை வளர்ப்பவர்கள் வீட்டில் புற்று நோய் வரலாம் என சிலர் யூடியுபில் எழுதியிருக்கிறார்கள். இதை ஒரு வீட்டில் நேரிலும் கண்டோம்! இப்படி யூடியுபில் பல விஷயங்களை அனுபவ ரீதியாக எழுதுகிறார்கள்.
    நமது சம்பிரதாயத்தில் ஆசாரமாக இருப்பவர்கள் வீட்டில் பூனை வளர்க்க மாட்டார்கள், அது பாவம் எனச் சொல்வார்கள்! இதன் அடிப்படை உண்மை என்னவோ, யார் கண்டார்கள்!

Leave a comment