மனதிற்கு மனம் மூலமாக அனுப்பப்பட்ட புத்தரின் முதல் உபதேசம்! POST6098

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 20 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 5-24 am


Post No. 6098

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Leave a comment

2 Comments

  1. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 20, 2019

    ஆன்மீக உண்மைகளை வாய்மொழியால் விளக்க முடியாது! அதனால் தானே ஆதி குரு தக்ஷிணாமூர்த்தி மவுனமாகவே அமர்ந்து நால்வருக்கு உபதேசித்தார்! இதை ஸ்ரீ சங்கரர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்:

    मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं
    वर्षिष्ठांते वसद् ऋषिगणैः आवृतं ब्रह्मनिष्ठैः ।
    आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं
    स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे ॥१॥
    இதையே பகவான் ஸ்ரீ ரமணர் தமிழிப் பாடலாக அருளினார்:

    மவுனமா முரையாற் காட்டும் மாபிரம வத்து வாலன்
    சிவநிலைத் தவர் சற் சீடர் செறிகுரு வரன் சிற் கையன்
    உவகையோ ருருவன் தன்னுள் உவப்பவன் களிமுகத்தன்
    அவனையான் தென்பான் மூர்த்தி யப்பனை ஏத்துவோமே.

    அரிய ஆன்மீக உண்மைகளை மொழிவாயிலாக விளக்க இயலாது. இதையும் ஸ்ரீ ரமணர் ஒரு பாடலில் சொல்கிறார்:

    கண்டவன் எவனெனக் கருத்தினுள் நாடக்
    கண்டவன் நின்றிட நின்றது கண்டேன்
    கண்டனன் என்றிடக் கருத்தெழ வில்லை
    கண்டிலன் என்றிடக் கருத்தெழு மாறென்
    விண்டிது விளக்கிடு விறலுறு வோனார்
    விண்டிலை பண்டு நீ விளக்கினை யென்றால்
    விண்டிடா துன்னிலை விளக்கிடவென்றே
    விண்டல அசலமாய் விளங்கிட நின்றாய்.
    [ அருணாசல அஷ்டகம்]

    “அவ்வாறறிவார் அறிகின்றதலால்
    எவ்வாரொருவர்க் கிசைவிப்பதுவே”
    என்பார் அருணகிரி நாதர்.

    “உவகையோ ருருவன் தன்னுள் உவப்பவன்” : நன்கமைந்த புத்தர் விக்ரஹத்தையும், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி விக்ரஹத்தையும் கூர்ந்து பார்ப்பவர்கள் ஒரு ஒற்றுமையைக் காண்பார்கள். இருவர் முகத்திலும் ஒரு சாந்தம், புன்னகை! இருவர் கண்களும் மூடியிருக்கும், உள்ளுக்குள்ளேயே ஒரு ஆனந்த நிலையைக் காட்டும் கோலம்!

    இதைப்பற்றி ஒரு ரசமான சம்பவம் ஷிர்டி பாபாவின் வாழ்வில் நடந்தது.ஒரு நாள் அவர் ஓய்வாகச் சாய்ந்திருந்திருந்தார். சந்தோர்கர் என்னும் அடியவர் அருகில் அமர்ந்து பாபாவின் காலை பிடித்துவிட்டுக்கொண்டிருந்தார். ஏதோ ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டிருந்தார். ” என்ன முணுமுணுக்கிறாய்” என்று கேட்டார் பாபா. தான் பகவத் கீதை சுலோகங்களைச் சொல்வதாகச் சொன்னார் சந்தோர்கர்., இப்போது சொல்வது என்ன சுலோகம் என்றார் பாபா. 4ம் அத்தியாயம் 34வது சுலோகம் என்றார் சந்தோர்கர்.. அதை பலமாகச் சொல், நானும் தான் கேட்கிறேனே, அதன் பொருளைச் சொல் என்றார் பாபா! சந்தோர்கர் சுலோகத்தைச் சொன்னார்:

    तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया।
    उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः।।4.34।।
    தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஶ்னேன சேவயா
    உபதேஷ்யன்தி தே ஞானம் ஞானின: தத்வதர்ஶின:

    சந்தோர்கர் பொருளையும் சொன்னார்: ” அந்த ஞானத்தை தத்வதர்சிகளான ஞானிகளை அணுகி அறிந்துகொள். அவர்களை நமஸ்கரிப்பதாலும், சேவை செய்வதாலும், கபடமில்லாமல் நேர்மையாகக கேள்விகேட்பதாலும், பரமாத்ம தத்துவத்தை நன்கு அறிந்துள்ள அந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்”.
    இதுவே பொதுவாகச் சொல்லும் பொருள். பாபா விடவில்லை. “அதெப்படி ஞானத்தை போதிப்பது? ஞானம் என்பது பேச்சில் அடங்குமா? பின் எப்படி அதை உபதேசிப்பது? அஞ்ஞானத்தைத் தான் பேச்சில் விளக்கமுடியும். அஞ்ஞானம் போனபின் என்றும் உள்ள ஞானம் தானே ஒளிரும்! ஞானத்தை அனுபவித்து உணரவேண்டுமே தவிர, அதைப்பற்றி எப்படி வார்த்தையால் விளக்க முடியும்? அஞ்ஞானத்தை முற்றும் விலக்க முயற்சி செய். பிறகு எது நிலைக்கிறதோ அதுவே ஞானம். இதுதான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் சொன்னதன் உள்ளர்த்தம்” என்று பாபா விளக்கினார்!
    [ பார்க்க: ஸ்ரீ சாய் சத் சரித்திரம் : ஆசிரியர்: ஹேமாத் பன்த். ஆங்கில ஆக்கம்: இந்திரா கேர். 1999. அத்யாயம் 39 & 50]
    ஆக, கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை!

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  February 20, 2019

    சூப்பர்
    இந்த ஷீரடி சாயி சம்பவத்தில் பரி ப்ர்ச்ன என்பது பற்றிய சுவையான செய்தியும் உண்டு. ப்ர்ச்ன போதாதா? போதாது! மீண்டும் மீண்டும் ப்ரச்னம் செய்ய வேண்டும். பரி – ப்ரஸ்னேன – அருமையான செய்தி இது. இதைப் பற்றி இந்த சம்பவத்தை உள்ளடக்கி ஞான ஆலயம் இதழில் (சில ஆண்டுகளுக்கு முன்னர்) என் கட்டுரை வெளியானது. அருமையான சம்பவம் நன்றி

Leave a comment