
Written by london swaminathan
swami_48@yahoo.com
Date: 22 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 14-40
Post No. 6109
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))








Rama Nanjappa
/ February 22, 2019ஏசு கிறிஸ்து மீண்டும் வரப்போகிறார் என்பது இந்த ஆசிரியரின் நம்பிக்கை மட்டுமல்ல; இது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக்கொள்கைகளில் ஒன்றாகும். அவ்வாறு கிறிஸ்து வருவது உலகம் அழியப்போவதன் அறிகுறி.
It is indication of an apocalypse or end times or complete destruction of the world.
பைபிளின் பழைய ஏற்பாட்டின் பல பகுதிகள் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகின்றன. யூதர்களும் இதை நம்புகிறார்கள். [ ஆனால் அவர்கள் இன்னமும் ஒரு தூதருக்காக- Prophet டுக்காகக் காத்திருக்கிறார்கள்- அவர்கள் ஏசு கிறிஸ்துவை கடவுளின் தூதராக அங்கீகரிக்கவில்லை!] ஏசுவின் ஜீவித காலத்தில் அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் ஒருவித அச்சத்தையே தோற்றுவித்தன. ‘பாவம் அதிகரித்து விட்டது, எல்லோரும் மனம் வருந்தி மன்னிப்புக் கோருங்கள்; கடவுள் இறுதித் தீர்ப்பு தரும் வேளை நெருங்கி விட்டது’ என்பதே அவரது முக்கியச் செய்தி.
இதன் அடிப்படையில் தான் கிறிஸ்துவ மதம் ஒரு வேகத்துடன் செயல்பட்டது. கிறிஸ்துவுக்குப்பின உடனே வந்த சர்ச் தலைவர்கள் கிறிஸ்து மீண்டும் வருவார், இது கூடிய விரைவில் நிகழும். இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குள் நடந்துவிடும் என்று உறுதியாக நம்பினர். இது நிகழாமல் போகவே, காலப்போக்கில் தங்கள் கொள்கைகளையும் பிரச்சார அணுகுமுறையையும் மாற்றிக்கொண்டனர். காலக்கெடு தவறிவிட்டதே தவிற, கிறிஸ்துவின் மறு வரவும், உலகின் அழிவும் அவர்களுடைய அடிப்படைக் கொள்கையாக இன்னமும் இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற டாக்டர் ஆல்பர்ட் ஷ்வைட்ஃஜர் ( DR, Albert Schweitzer) மெடிகல் படிப்பு தொடங்குமுன் கிறிஸ்துவின் சரித்திர அம்சங்களை ஆராய்ந்தார். 1906ல் “The Quest of the Historical Jesus” என்ற நூலை ஜெர்மன் மொழியில் எழுதி வெளியிட்டார். இதில், ‘ உலகின் அழிவு நிச்சயம், இது ஒரு தலைமுறைக்குள் நடந்துவிடும்” என்பதே கிறிஸ்துவின் அடைப்படைச் செய்தி. இதை அன்றைய சர்ச் தலைவர்கள் தீவிரமாக ஏற்றுக்கொண்டார்கள், நம்பினார்கள். கிறிஸ்து தன் காலத்தில் உலக சரித்திரம் முடிவுக்கு வந்துவிடும் ( End of History ) என்று தீவிரமாக நம்பினார் என்றே ஷ்வைட்ஃஜர் ஆணித்தரமாக எழுதியிருக்கிறார். இதற்கு பைபிளிலிருந்தே பல மேற்கோள்கள் காட்டியிருக்கிறார். eg Gospel of Matthew records Jesus as promising his rapid return as the Son of Man. It further says: ” Verily, I say unto you,this generation shall not pass till all these things be fulfilled. ” The same is recorded in the Gospel of Mark too (13.30) இதை சர்ச்சுகள் பின்னர் மறைத்துவிட்டன என்றும் எழுதியிருக்கிறார்.
எனவே, 100 வருஷங்களுக்குமுன் இந்த ஆசிரியர் நம்பியது அவ்வளவு தவறல்ல. இன்றும் கூட உலகெங்கிலும் நடக்கும் இயற்கை உத்பாதங்களை வைத்து சில தீவிர கிறிஸ்தவ அமைப்புக்களும் எதிர்காலத்தைக் காணும் திறன் உள்ளவர்களாகக் கருதப்படும் சிலரும் உலகின் அழிவு நெருங்கி வருகிறது என்றே சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். இதற்கென்றே யூடியுபில் சில சேனல்கள் இயங்கிவருகின்றன!
சமீபத்தில் மறைந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாகிங் கூட இந்த உலகம் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் உயிர் வாழ்க்கைக்குத் தகுதியற்றதாகிவிடும், 200 ஆண்டுகளுக்குள் பூமியே அழிந்துவிடும் ( demise of the earth) என்றே சொன்னார்! ஆனால் அவர் மத நம்பிக்கை இல்லாதவர்!
Rama Nanjappa
/ February 23, 2019இந்த ஆத்திரக்காரி அ,ஆ, இ,ஈ அம்மணி எழுதியதுபோல் ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதிய அனுபவம் நம்மில் சிலருக்கும் இருக்கலாம்! இக்கடிதங்கள் நாம் எழுதிய கதை, கவிதை போன்றவற்றைப்பற்றி இருக்காமல், பொதுவானதாக இருந்திருக்கலாம். தினசரிப் பத்திரிகைகளுக்கு சிலர் பல விஷயங்களைப்பற்றிக் கடிதம் எழுதுவார்கள். டாக்டர் ராமபிரசாத் என்பவர் பெருந்துரையிலிருந்து ஹிந்து பத்திரிகைக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார் என்பது நினைவு வருகிறது. இவை ‘கனத்த’ பொருள் பொதிந்த விஷயங்களைப் பற்றி இருக்கும்.
ஆத்திரத்தில்/கோபத்தில் எழுதிய கடிதங்களைப் பற்றிய இரு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. ‘தி ஸ்டேஸ்மன்’ கல்கத்தா/டெல்லியிலிருந்து வரும் புகழ்பெற்ற ஆங்கில தினசரி. இதில் ஒருமுறை கல்கத்தா நகர கார்ப்பொரேஷன் சரியாக இயங்கவில்லை , அதன் கார்ப்பொரேட்டர்கள் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை என்று ஒரு தலையங்கம் எழுதினார்கள். அதன் தலைப்பே சற்றுக் ‘காரமாக’ இருந்தது : ” இந்தத் தறுதலைகளை வெளியேற்றுங்கள்” [ “Send These Loafers Out”]. உடனே வாசகர்களிடமிருந்து கண்டனக் கடிதங்கள் ஆசிரியருக்கு வந்தன. தி ஸ்டேஸ்மன் போன்ற கண்ணியமான பத்திரிகை “Loafer” போன்ற கீழ்த்தரமான சொல்லை (unparliamentary) எப்படித் தலையங்கத்தில் பயன்படுத்தலாம் எனச் சாடினர். இப்படிப் பல கடிதங்கள் வந்த பிறகு, ஆசிரியர் பதில் எழுதினார். LOAFER என்றால் iDLER என்றுதான் பொருளே தவிர இதில் கீழ்த்தரமான தொனியோ கருத்தோ இல்லை என்று எழுதினார், அதற்கு ஆதாரமாக Chambers Twentieth Century dictionaryயிலிருந்து மேற்கோள் காட்டினார்!
கோத்ரெஜ் கம்பெனியின் சின்தால் Cinthol சோப்பு பற்றிய ஒரு விளம்பரம் இதே ஸ்டேஸ்மன் தினசரியில் வெளிவந்தது. அதில் ஒரு பெண்மணி குளியறையிலிருந்து வெளியேவருவது போல ஒரு படம். The USP of Cinthol soap was “day long freshness” based on the chemical Hexaclorophene (G-11) which was both germicidal and deodorant.இந்தப் படத்தின் நடுப்பகுதியில் துண்டு சுற்றியதுபோல ஒரு இடைவெளியிருக்கும். மற்ற பகுதிகள் ( கால், தலை) பிறந்தமேனிதான். இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த பல வாசகர்கள் இத்தகைய மட்டரகமான விளம்பரங்களை ஸ்டேஸ்மன் எப்படி வெளியிடலாம் எனக் கண்டித்து எழுதினர்! இந்த நிகழ்ச்சிகள் 1966 மே மாத வாக்கில் நடந்தன. ( சில காரணங்களினால் இது நினைவில் இருக்கிறது). அப்போது அத்தினசரியின் ஆசிரியர் சார்ல்டன் (Evan Charlton) என்ற ஆங்கிலேயர்.
ஒரு சொந்த அனுபவம். ஒருமுறை Lalit Uniyal என்பவர் ஆதி சங்கரைக் கண்டிக்கும் விதமாக எழுதிய 2/3 கட்டுரைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்தன. இதில் அவர் கூற்றுக்கு ஆதாரமாக ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியவர்களை மேற்கோள் காட்டியிருந்தார். அக்கட்டுரைகள் தற்செயலாக(?) சங்கர ஜயந்தியை ஒட்டி வெளியாயின. (1978/79 ஆக இருக்கலாம்).இதைக்கண்டு கோபமடைந்த நான், உனியல் எழுதியவற்றை மறுத்து அதே விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோர் எழுதியவற்றிலிருந்தே மேற்கோள் காட்டி பதில் எழுதினேன். என் பதில் 5 பக்கம் விரிந்தது. ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிலை அப்படியே பிரசுரித்தது! அது அரைபக்கத்துக்கு வந்தது. அன்று ஆசிரியருக்குக்கடிதம் பகுதியில் அது ஒன்றுதான் வந்தது!
இப்போதெல்லாம் நமது பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களைப்பற்றியோ, பிற விஷயங்களைப்பற்றியோ என்ன எழுதுவது? எது எழுதினாலும் ஆசிரியர்கள் கண்டுகொள்வதில்லை. வேண்டுமென்றே திரித்து எழுதுவதை எப்படிச் சரிசெய்ய முடியும்? ” A truth that’s told with bad intent beats all the lies you can invent” ( William Blake.)
Tamil and Vedas
/ February 23, 2019WILLIAM BLAKE’ S QUOTATION IS VERY TRUE.IT APPLIES TO MANY INDIAN TV BROADCASTS.THANKS FOR SHARING IT.