
Translated by London swaminathan
English article by Vasudev Godbole, United Kingdom
swami_48@yahoo.com
Date: 22 April 2019
British Summer Time uploaded in London – 8-01 am
Post No. 6294
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
லண்டனுக்கு அருகில் வசிக்கும் திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார். இதோ நீண்ட கட்டுரை: part- 2
தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது- part 2
“கல்லறை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் முன்னர் ராஜா மான்சிங்கின் அரண்மனையாக இருந்தது. இப்பொழுது அவருடைய பேரன் ராஜா ஜெய்சிங்கின் வசம் உள்ளது”. பல ஆசிரியர்கள் லதீப் புஸ்தகத்தை மேற்கோள் காட்டிய போதும், இந்த விஷயத்தை மட்டும் காட்டவில்லை. ஆக, இந்த உண்மையையும் வரலாற்று ஆசிரியர்கள் நம்மிடமிருந்து மறைத்து வைத்தனர்.
ஆக்ரா மாவட்ட கெஜட்டை 1905ம் ஆண்டில் எச்.ஆர். நெவில் ஐ.சி.எஸ் தொகுத்து வெளியிட்டார். அதில் ராஜா மான்சிங் அரண்மனை என்பதை, ராஜாமான்சிங்கின் ஒரு துண்டு நிலம் என்று மாற்றினார்.
இதைத் தொடர்ந்து வரலாறு எழுதிய அனைவரும் ராஜா ஜெய்சிங்கின் வசமிருந்த ராஜா மான்சிங்கின் ஒரு துண்டு நிலத்தை ஷாஜஹான் விலைக்கு வாங்கினார் என்று எழுதத் துவங்கினர். இந்த ஏமாற்று வித்தை நூற்றாண்டுக் காலமாக நடந்து வருகிறது.
ஒரு ஆங்கில அதிகாரி ஏன் இப்படிப்பட்ட விஷமச் செயலைச் செய்வதில் ஆர்வம் காட்டினார் என்று சிலர் வினவலாம்.
இதோ அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போருக்குத் தெளிவான பதில் கிடைத்துவிடும்
1901
வைஸ்ராய் கர்சன் பிரபு பஞ்சாபின் சில பகுதிகளைப் பிரித்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு எல்லை மாகாணத்தை உருவாக்கினார். இந்துக்கள் அங்கே சிறுபான்மை மக்கள் ஆயினர். அவர்களுடைய துரதிருஷ்ட காலத்தின் ஆரம்பம் இது.
1903
வங்காளத்தைப் பிரித்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளத்தை அமைக்கப் போவதாக கர்சன் பிரபு அறிவித்தார்.
1905
கர்சன் ராஜினாமா செய்தார். ஆயினும் அவர் திட்டப்படி வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார்.
1906
ஆகாகான் தலைமையிலொரு முஸ்லீம் குழு புதிய வைஸ்ராய் மின்டோ பிரபுவைச் சந்தித்தது. எந்த ஒரு அரசியல் முடிவிலும் தங்களையும் கவனத்திற்கொண்டு தங்களுக்குச் சாதகமாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே தூண்டிவிட்டனர்.
1906 டிசம்பர்- டாக்காவில் முஸ்லீம் லீக் துவக்கப்பட்டது.
1909
மோர்லி- மின்டோ சீர்திருத்தங்களின்படி முஸ்லீம்களுக்கு தனித் தொகுதிகள் அளிக்கப்படன.
மற்றொரு விஷயத்தையும் நினைவிற் கொள்ள வேண்டும். 1873-1914 கால கட்டத்தில் ஆங்கில அதிகாரிகள் சிலர் பாபர் நாமா, ஹுமாயுன்நாமா, அக்பர் நாமா, அயினி அக்பரி, தாஜுக்-இ- ஜஹாங்கிரி ஆகியவற்றை பாரஸீக மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். ஆனால் பாதுஷா நாமாவை மட்டும் தொடவில்லை.

மேற்கூறிய தகவல்களைப் பின்னணியில் வைத்துக்கொண்டு பார்த்தோமானால் 1905ம் ஆண்டில் ஆக்ரா கஜட்டைத் தொகுத்த நெவில் ஏன் விஷமம் செய்தார் என்பது புரியும்.
ராஜா மான்சிங்கிற்குச் சொந்தமான துண்டு நிலத்தை ஷாஜஹான் விலைக்கு வாங்கியதாக ஸர் ஜதுநாத் சர்கார் , மௌல்வி அஹமது சொல்லுவதும் வியப்பை அளிக்கிறது. ஸர் ஜதுநாத் சர்கார் அவுரங்கசீப் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ற நூலை இயற்றியவர்; மௌல்வி அஹமது (தாஜின் வரலாறு, 1905) என்ற நூலை இயற்றியவர்; அவர்கள் பாதுஷா நாமாவிலிருந்து மேற்கோளும் காட்டியுள்ளனர். முதல் தொகுதி,பக்கம் 40 3 என்று. விந்தையிலும் விந்தை; அந்தப் பக்கத்தில் என்ன எழுதி இருக்கிறது எவரும் பார்க்கவே இல்லை.
டில்லியைச் சேர்ந்த பி.என்.ஓக் என்பவருக்கு 1964ஆம் ஆண்டில் தாஜ்மஹால் பற்றி சந்தேகம் எழுந்தது. அது ஒரு காலத்தில் அரண்மனையாக இருந்தது என்ற வாதத்தை முன்வைத்தார். இது விஷயமாக அவர் பல வரலாற்று ஆசிரியர்களுடன் மோத நேரிட்டது. அவர்களில் ஒருவர் காஷ்மீரி பண்டிட். அவர்கள் இருவரும் அரசாங்க ஆவணக் காப்பகத்துக்குச் சென்றார்கள். அங்குள்ள நூலகர் சொன்னபடி அவர் பாதுஷா நாமாவைப் படிக்கத் துவங்கி பக்கம் 403க்கு வந்தார். அதில் ஒரு வரி
‘வா பேஷ் அசீன் மஞ்சில் இ ராஜா மான்சிங் பூத் வடரி வக்த் பா ராஜா ஜெய்சிங்’ என்று இருந்தது. ஷாஜஹான் , மனைவியை அடக்கம் செய்ய ராஜா மான்சிங்கின் அரண்மனையை எடுத்துக்கொண்டார் என்பதை பண்டிட் உடனே ஒப்புக்கொண்டார்.
ஓக் அவர்களை எதிர்த்த அந்த நேர்மையான ஆளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.அவர் பக்கம் 402, 403 ஆகியவற்றிலுள்ள விஷயங்களை வரிக்கு வரி மொழி பெயர்த்தார். அதைத் தொடர்ந்து ‘தாஜ்மஹால் என்பது இந்து அரண்மனையே‘ என்று பி.என்.ஓக் 1968ல் புஸ்தகம் வெளியிட்டார். ஆனால் பி.என். ஓக் அது தனது மொழிபெயர்ப்பு இல்லை என்பதை சொல்லவேயில்லை. ஒரு பாரஸீக மொழி அறிஞர் அவருக்கு மொழி பெயர்த்தார். அது அவருடைய எதிரிகளுக்கு வரப்பிரசாதமாகப் போயிற்று. அவர்கள் அனைவரும் ஓக் அவர்களின் மொழிபெயர்ப்பு தவறு என்று வாதிட்டனர்.
ஓக் எழுதிய புஸ்தகம் 1977ல் எனக்கு லண்டனில் கிடைத்தது. அதை ஓரண்டுக்காலம் படித்தேன்.முதலில் வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதாக வந்த மேற்கோள்களை மட்டும் தேடிப் படித்தேன். நான் இங்கிலாந்தில் வசித்ததால் எனக்கு இது எளிதாகக் கிடைத்தது. ஓக் அவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. எல்லா வரலாற்று ஆசிரியர்களும் தாஜ்மஹால் ஒரு இந்து அரண்மனையே என்றும் அது ஷாஜஹானால் கட்டப்படவில்லை என்றுமே சொல்லியிருக்கிறார்கள்.
1986ம் ஆண்டில், நான் ஒரு சின்ன புஸ்தகம் வெளியிட்டேன்; அதன் தலைப்பு “தாஜ்மஹால்-பெரும் ஏமாற்று வித்தை பற்றிய ஒரு சின்ன ஆராய்ச்சி”. 1981ம் ஆண்டில் பல மேற்கோள்களைப் படித்த போதே எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதாவது பிரிட்டிஷ்காரர்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் வேண்டுமென்றே உண்மையை மறைத்தனர் என்று. இதைத் தொடர்ந்து என் ஆராய்ச்சியை தானேநகர இதிஹாஸ் பத்ரிகா என்னும் காலாண்டு இதழ் பத்து பகுதிகளில் வெளியிட்டது. நான் 1784 முதல் 1984 முடியவுள்ள 200 ஆண்டுக் காலத்தில் தாஜ்மஹால் பற்றி என்ன தகவல்கள் உண்டோ அவைகளைத் தொகுத்து எப்படி பிரிட்டிஷார் அவற்றை மறைத்தனர் அல்லது திரித்தனர் என்று காட்டினேன். என்னுடைய ஆராய்ச்சி தொடர்ந்தது. அதன் விளைவாக 1996ம் ஆண்டில் இன்னொரு புஸ்தகம் வெளியிட்டேன்; அதன் பெயர் ” தாஜ்மஹாலும் பிரிட்டிஷாரின் பெரிய சதியும்.”
To be continued……………………………………………
