
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 8 May 2019
British Summer Time uploaded in London – 10-32 am
Post No. 6359
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))










R.Nanjappa (@Nanjundasarma)
/ May 8, 2019டாக்டரும் வக்கீலும்—-
காந்திஜி எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்” புத்தகத்தில் (1909) இருவரைப் பற்றியும் காட்டமாக விமர்சித்திருக்கிறார். அதுவும் அவர் குறிப்பிடுவது அல்லோபதி டாக்டர்கள். ஒருவன் ஏன் டாக்டர் தொழிலுக்கும் வக்கீல் தொழிலுக்கும் வருகிறான்? சேவைக்காக அல்ல; அதிலிருக்கும் பணத்திற்காகவும் மதிப்புக்காகவும் தான், வக்கீல்கள் ஆங்கிலேயருக்கு அடிமைகளாக இருந்து ஆங்கிலேய முறைகளைப் பரப்பினார்கள், ஆங்கிலேய அரசு நிலைபெற உதவினார்கள்,, ஆங்கிலேயரின் பிடியை இறுகச்செய்தார்கள் மக்களிடையே சச்சரவுகளைப் பெரிதுபடுத்தினார்கள். ஏதாவது வக்கீல் நல்லது செய்திருந்தால் அது அவர் வக்கீல் என்பதால் அல்ல, அவருக்கு ஏதோ சிறிதாவது மனிதத்தன்மை இருக்கிறது என்பதால் என்று எழுதினார்,
அல்லோபதி டாக்டர்களும் பணத்திற்காகவும் பெருமைக்குமாகவே அத்தொழிலுக்கு வருகிறார்கள். நோயின் காரணத்தையும் நோயாளியின் பழக்கவழக்கங்களையும் பொருட்படுத்தாமல் மருந்து கொடுக்கிறார்கள். வியாதி ஒருவன் அக்கறையின்மையாலும், அளவுக்கு மீறிப்போவதாலும் வருகிறது. டாக்டர்கள் இதையெல்லாம் கவனிப்பதில்லை. மருந்துகளின் விளைவுகளைக் கண்டறிய ஆயிரக்கணக்கான மிருகங்களைக் கொல்கிறார்கள். மருந்து இருக்கும் தைரியத்தில் நோயாளி தன் குற்றம்குறைகளை உணர்வதில்லை; தவறுகளைத் திருத்திக்கொள்வதில்லை மேலும் மேலும் தவறு செய்கிறான்.
இந்த வக்கீல்களும் டாக்டர்களும் இந்தியா தன் சுதந்திரத்தை இழக்க முக்கிய காரணம் என்று எழுதியிருக்கிறார். ( அத்தியாயம் 11, 12 )
இன்று உலகம் முழுவதிலும் மருந்துகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிராக ஒரு இயக்கமே தோன்றிவிட்டது. பல மருந்துகளில் ‘மிருகங்களின் மீது பரீட்சிக்க வில்லை’ என்ற விளக்கம் தேவைப்படுகிறது.
வக்கீல்களோ, சுதந்திரத்திற்குப் பிறகும் கூட நம் காலை வாரி விட்டார்கள். நமது அரசியல் நிர்ணயச் சட்டம் வகுக்க நியமிக்கப்பட்ட கமிட்டியில் இருந்தவர்கள் அனேகமாக அனைவரும் வக்கீல் படிப்பு படித்து அத்தொழிலில் ஈடுபட்டவர்களே, அவர்களில் கே.எம். முன்ஷியைத்தவிர வேறு யாரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை,, ஆனால் அவர் இக்கமிட்டியின் கூட்டங்களில் சரியாகப் பங்குபெறவில்லை. டாக்டர் அம்பேத்கர் சுதந்திர இயக்கத்திற்கு எதிராக, காந்திஜிக்கு எதிராக வேலை செய்தவர். இவர்கள் எல்லோருமே ஆங்கில சட்டவிதிமுறைகளின் ஆழ்ந்த அனுதாபிகள். [ lovers of Anglo-Saxon jurisprudence.) சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயச் சட்டம் இவர்களால் முடிவுசெய்யப்பட்டது! இவர்கள் உலகில் பல நாடுகளின் அரசியல் சட்ட விதிமுறைகளை அராய்ந்து அவற்றிலிருந்து பலவற்றை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இதில் இந்தியாவின் சொந்தக் கருத்தையோ சரித்திர அனுபவங்களையோ பிரதிபலிக்கும் எந்த அம்சமும் இல்லை! “பாரத்” என்ற ஒரு சொல் தான் இந்திய அம்சம்.
ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் இன்னும் ஒருபடி மேலே போனார். டாக்டர்களும் வக்கீல்களும் மக்களின் துன்பத்தின்மீது பணம் ஈட்டுகிறார்கள் அது பாவம் என்பது அவர் கொள்கை, அதனால் அவர் டாக்டர்களிடமிருந்தும் வக்கில்களிடமிருந்தும் எதையும் பெறமாட்டார்!
Tamil and Vedas
/ May 8, 2019good assessment about both the professions; Gandhiji and RK Paramahamsa are right; there may be few exceptions.