
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 12 May 2019
British Summer Time uploaded in London –10-13 am
Post No. 6376
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))






R.Nanjappa (@Nanjundasarma)
/ May 12, 2019உலகில் மேலை நாடுகளில் மக்கள் சைவ உணவிற்கும் பல படிகள் சென்றுவிட்டனர். பால் சைவ உணவாகக் கருதப்பட்டாலும் பசுக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டும். அவற்றின் தீனியில் கலக்கும் ரசாயனப் பொருள்களின் தீய விளைவுகளைக்கண்டும் பால் பொருட்களையும் நீக்கிய VEGAN உணவிற்கு வந்துவிட்டனர். காய்கறிகளிலும் செயற்கை உரமோ, பிற ரசாயனங்களோ கலவாத இயற்கை காய்கறி பழங்களையே விரும்புகின்றனர். எதிலும் ORGANIC என்ற முத்திரை உத்திரவாதம் தேவை.
உடையிலும் இயற்கையான பருத்தி, கம்பளி ஆடைகளையே நாடுகின்றனர்.
இயற்கை விதைகளைக் கெடுத்துச் செய்யும் Genetically modified விதைகளுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கமே நடந்து வருகிறது. Monsanto போன்ற ரசாயன உர/விதைக் கம்பெனிகளுக்கு எதிராக பெரும் போராட்டமே நடக்கிறது.
ஆனால் இந்தியாவிலோ இதற்கு நேர் எதிரிடையான நிலைதான் நிலவுகிறது. நமது அரசும், மீடியாவும் பத்திரிகைகளும் அன்னிய கெமிகல் கம்பெனிகளின் கைப்பாவைகளாகவே இயங்கிவருகின்றன. இயற்கை விவசாயமும் இயற்கை உணவும் பொருள்களும் அருகிவருகின்றன. குடிக்கும் தண்ணீர் கூட விலைக்கு வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பால் கறப்பது என்றபெயரில் நடந்த கொடுமைகளை எதிர்த்து அன்றே காந்திஜி எழுதினார். அதனால் பசுவின் பால் சாப்பிடுவதையும் நிறுத்தினார். இன்று யார் இதை நினைத்துப் பார்க்கிறார்கள்? பசுவுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்தே வருகின்றன.
நமது பண்டிகை பருவங்களிலேயே பல பொது அம்சங்கள் வருகின்றன. ஹோலிப்பண்டிகை இன்று மேல் நாட்டு மோக வக்கிரங்கள் அடிக்கும் Valentine’s Day வைவிட ரசமானது. நம் பொங்கலின் போது ஒரு நாள் ( [ கன்னுப் பொங்கல்] பெண்கள் சகோதர்களின் நன்மைகோரி கொண்டாடுகிறார்கள். வட நாட்டில் இதை தீபாவளியின்போது “பாய் பீஜ்” ( bhai bhij) என்று கொண்டாடுகிறார்கள். ராக்கி பண்டிகையும் உண்டு. எந்த ஒரு நல்ல நாளிலும் புத்தாடை அணியும் போதும் நாம் தாய் தந்தையையும் பெரியவர்களையும் வணங்குகிறோம். குரு பவுர்ணமியின் போது வியாசர் முதல் எல்லா குருமார்களையும் நினைத்து வணங்குகிறோம். இது Teachers Day தமாஷா இல்லை. ஆனால் இவற்றை வணிகமயமாகச் செய்யவில்லை. இப்படி பல விஷயங்கள் சொல்லலாம். [ அக்ஷய திருதியையின்போது தங்கம் வாங்குவது நமது வக்கிர வியாபார தந்திரம்!]
இன்று இந்தியா அடிமையின் மோகத்திற்கு மீண்டும் ஆளாகிறது. இளைய தலைமுறையினர் இதற்கு இலக்காகின்றனர். இதையெல்லாம் எந்த ஹிந்துமதத்தலைவரும் கண்டுகொள்வதில்லை. அரசியல் வாதிகளும் இரட்டை வேடம் போடுகிறார்கள். கல்வித்துறையிலும் மீடியாவிலும் இடது சாரிகளும் வெளி நாட்டு சக்திகளும் ஊடுருவியிருப்பதால் தேசீயவிரோதப்போக்கே மேலோங்கி இருக்கிறது. They are spreading mob psychology based on foreign commercial interests.
இன்று வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என்று சொல்வதைக்கூட நமது செக்யூலர் அரசியல் வாதிகள் எதிர்க்கின்றனர். இவர்களா இந்தியாவின் லட்சியங்களை கண்டுகொள்ளப் போகிறார்கள்.
Santhanam Nagarajan
/ May 12, 2019அருமையான கருத்துக்கள். அக்ஷய திருதியை தங்கம் வாங்கும் பண்டிகை அல்ல. அன்று நிறையக் கொடுக்க வேண்டும். ஆனால் வியாபாரிகள் இதை மாற்றி தங்கத்தை வாங்கும் பண்டிகையாக மாற்றி விட்டார்கள். எதை எடுத்தாலும் திரித்து வணிக நோக்கில் வக்கிரப் பார்வை வந்து விடுகிறது. மீடியாக்கள் தான் இதற்குக் காரணம். மல்டி நேஷனல் கம்பெனிகள் திட்டமிட்டு நமது அடி வேரை – ஆணி வேரைப் – பிடுங்கப் பார்க்கின்றன. ஆனால் பண்பாட்டில் ஊறிய லக்ஷோப லக்ஷம் கிராம மக்கள் இருக்கும் வரை இவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. என்றாலும் அடிக்கடி நீங்கள் கூறிய கருத்துக்களை இளைய தலைமுறையினருக்குத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்வோம்.வெல்வோம். தங்களின் அற்புதமான கருத்துக்களுக்கு வழக்கம் போல நன்றி சொல்கிறேன். ச.நாகராஜன்