தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா 5800 கிலோ!! (Post No.6945)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-42 am

Post No. 6945

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Dasara Elephants

–subham–

Leave a comment

1 Comment

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    மைசூர் தசராவும் யானைகளும் பிரிக்கமுடியாதவை! ஆனால் தசராவிற்குப்பிறகு அந்த யானைகளைப்பற்றி யாரும் கேட்பதில்லை.
    இந்தியாவில் பல கோவில்களில் யானைகள் இருந்தன. அவற்றில் மிகப்புகழ் பெற்றது குருவாயூர் கிருஷ்ணர் கோவில் யானை கேசவன். அதிசயிக்கத்தக்க முறையில் குட்டியாக வந்த இந்தக் கேசவன் கிருஷ்ணரிடம் மட்டுமே ஈடுபாடு கொண்டுவிட்டான். கிருஷ்ணர் சம்பந்தமில்லாத பிற எந்த வேலையையும் செய்யமாட்டான். சிறு வயதிலிருந்தே இவனுக்கு விசேஷ மருந்துகளும் [ஆயுர்வேதம்] உணவுகளும் கொடுத்துப் போஷித்தனர். இந்த மருந்து, உணவு வகைகளின் விவரம் நம்மை பிரமிக்க வைக்கும்.அவ்வளவு விஷயங்கள் யானையைப்பற்றி நமது நாட்டுமருத்துவர்கள் அறிந்திருந்தனர். இந்தவிவரங்களையெல்லாம் கஜராஜன் கேசவன் என்ற புத்தகத்தில் உன்னி க்ருஷ்ணன் புதூர் கொடுத்திருக்கிறார். 50 வருஷங்களுக்கும் மேலாக ஸ்ரீ க்ருஷ்ணருக்குச் சேவை செய்த இந்தக் கேசவன் ஒரு குருவாயூர் ஏகாதசி தினத்தில் [ 2-12-1976] ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் ஸ்ரீ நாராயணீயம் ஸ்லோகங்களைக் கேட்டவாறே அவனடி சேர்ந்தான். ஆம், ஸ்ரீ கேசவ ஆழ்வார்! இந்தப் பேறு எத்தனை மனிதர்களுக்குக் கிடைக்கும்?

    யானையின் தோற்றம் பயம் எழுப்பினாலும் பழகிவிட்டால் அவை மிகவும் சாதுவானதோடு, பழகியவர்களுடன் மிகவும் அன்பு பாராட்டும் குணமுடையவை, நன்றியுடையவை.
    யானையின் மொழியை- அதாவது அவற்றின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும்-புரிந்துகொள்ளக் கூடியவர்கள் இருக்கிறார்கள். யானைகளின் ஒற்றுமை, குடும்பப்பாசம், குட்டிகளைப் பராமரிக்கும் விதம், அவை தங்களிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் விதம், வெகு தூரத்திலிருந்தாலும் அவற்றிடையே நிலவும் அதீதமான தொடர்பு ஆகியவை பற்றி பல தகவல்களை The Elephant Whisperer என்ற புத்தகத்தில் Lawrence Anthony கொடுத்திருக்கிறார்.
    லாரன்ஸ் அந்தோனி இறந்தபோது, அவர் கொலைகாரர்களின் பிடியிலிருந்து காப்பாற்றிய யானைகள் [ இரண்டு கூட்டங்கள்- இவற்றில் பல ‘போக்கிரி” யாகக் கருதப்பட்டவை- Rogues]இரண்டு இடங்களிலிருந்து கிளம்பி 12 மணி நேரத்திற்குமேல் நடந்து, பல மைல்கள் கடந்துவந்து அவருக்கு அஞ்சலி செலுத்தின! இதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் அவர் அவற்றைப் பார்த்திருக்கிறார். அவர் இறந்த விஷயம் அவற்றுக்கு எப்படித் தெரிந்தது? அவை இரண்டு நாட்கள் அவர் பங்களாவைச் சுற்றி நின்று விரதம் காத்து வருத்தம் தெரிவித்தன.
    Elephants are amazing animals.

Leave a comment