
Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 NOVEMBER 2019
Time in London – 8-25 am
Post No. 7177
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1992ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி நான் எழுதிய கட்டுரை-ஆஸ்கர் பரிசுகளின் தரம் குறைந்துவிட்டதா?






–SUBHAM–
R.Nanjappa (@Nanjundasarma)
/ November 4, 2019எந்தத் துறையிலும் விருது என்று வரும்போது தில்லுமுல்லுகளும்
நுழைந்துவிடுகின்றன. நாளடைவில் தரமும் குறைந்துதான் போகிறது, நமது ஜனாதிபதி விருதுகளிலும் இதுதான் நிலைமை. நாட்டின் தலையாய விருது “பாரத ரத்னா” சினிமா நடிகருக்கும் விளையாட்டுக்காரருக்கும் வழங்கப்பட்டது. நேருவுக்கும் இந்திரா காந்திக்கும் அவர்கள் பதவியிலிருக்கும்போதே இந்த விருது வழங்கப்பட்டது- அதாவது அவர்கள் பெயரை அவர்களே சிபாரிசுசெய்து கொண்டார்கள்! மானங்கெட்ட செயலாக இல்லை? 547 சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் சேர்த்து இந்திய ஆட்சியின் பரப்பை 40% விஸ்தரித்த ஸர்தார் படேலுக்கு நேரு குடும்ப ஆட்சியில் பாரத ரத்னா விருது வழங்கப் படவில்லை!
நமது சென்னை மியூசிக் அகாடெமி சங்கீத கலாநிதி சமாசாரமும் இப்படிப்பட்டதுதான். ஒரு விதத்தில் பார்த்தால் கர்னாடக இசையின் தரமே குறைந்துதான் வருகிறது – 50 வருஷங்களுக்கு மேலாகக் கச்சேரி கேட்டுவரும் ரசிகர்களுக்கு இதில் சந்தேகமே இல்லை.
இந்த ஆஸ்கார் விவகாரத்தில் சில விதிகள் இருக்கின்றன. படத்தை நாமினேஷன் செய்வதிலிருந்து சிக்கல்கள்தான். ஒரு துறையைச் சார்ந்த அகாடமி மெம்பர்கள்தான் அந்தத்துறையில் நாமினேட் செய்யமுடியும்- டைரக்டர்கள் டைரக்டர்களை, நடிகர்கள் நடிகர்களை , என்று இப்படி! இப்படி நாமினேஷன் படிவங்கள் வந்ததும் அதன் மீது அகாடமி மெம்பர்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். நாமினேஷன், வாக்கெடுப்பு என்ற இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு பெரிய ஆடிட்டர் நிறுவனம் மிக ரகசியமாகச் செயல்படுகிறது. இருந்தாலும் அமெரிக்கா ஆயிற்றே- அவரவர்களும் மில்லியன் டாலர் கணக்கில் செலவுசெய்து ஆதரவு தேடுவதும் நடப்பதுதான்.
இந்த ஆடிட்டர் நிறுவனம் வாக்குகளை மிகவும் ரகசியமாகப் பரிசீலனை செய்து முடிவை கவரில் சீல் வைத்து அகாடமியிடம் அளித்துவிடுகிறது. இதுவரை ஒரே ஒரு முறைதான்- 2017ல் தான்- தவறான படத்தின் பெயர்கொண்ட கவர் தரப்பட்டது! என்ன இருந்தாலும் அந்தந்த துறையைச் சார்ந்தவர்களே விருதுக்குத் தகுதி பெறுபவர்களை நாமினேஷன் செய்வதால் இந்த விருதுகள் ஒருவித சிறப்பைப் பெறுகின்றன. Peer Recognition.
நம் நாட்டில் ஃபிலிம்ஃபேர் அவார்டுதான். இது ரசிகர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. கவர்ச்சி அம்சங்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனக்குத் தெரிந்தவரை இதில் திரை இசைக்குத் தரும் பரிசுகளில் தில்லுமுல்லுகள் இருந்திருக்கின்றன, 1960-61ல் Mughal E Azam படத்திற்கு நௌஷாத் மிகச்சிறந்த இசை அமைத்திருந்தார், ஆனால் Dil Apna Aur Preet Parai என்ற படத்தின் இசைக்காக சங்கர்-ஜெய்கிஷன் ஜோடிக்கு விருது கிடைத்தது! இது இசை ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்துடன் கோபத்தையும் கிளறியது. ஆனால் நிர்வாகிகளின் சார்பில், ‘ முகல் ஏ ஆஜம் படத்தில் இருந்தது வெறும் சாஸ்திரிய இசைதான்- தில் அப்னாவில் இருந்ததோ Creative film music என்று சமாதானம் சொன்னார்கள். அதேபோல் 1965-66ல் Guide படத்திற்கு எஸ்.டி.பர்மன் அபாரமாக இசை அமைத்திருந்தார். ஆனால் Suraj படத்தின் இசைக்கு சங்கர் ஜெய்கிஷனுக்கே விருது கிடைத்தது. இதுவும் இசை ரசிகர்களால் ஜீரணிக்க இயலாத முடிவாகியது. இதை ஆராய்ந்த போது இதன் பின்னணியில் தில்லுமுல்லு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த விருதுகள் ரசிகர்களின் வாக்கெடுப்பின்மீது அளிக்கப்படுபவை. இந்த வாக்குச்சீட்டுகள் ஃபிலிம்ஃபேர் பத்திரிகையில் வரும். சில இசையமைப்பாளரின் ஆதரவாளிகள் ஆயிரக்கணக்கில் இந்தப் பத்திரிகை இதழ்களை வாங்கி, வாக்குச் சீட்டுக்கூபன் களை எடுத்து தங்கள் பக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்! [ கூப்பன் நீக்கிய பத்திரிகை இதழ்கள் மும்பை ஹாஜிஅலி கடலில் மிதக்கும்!] இப்படித்தான் சங்கர் ஜெய்கிஷன் விருதைக் கைப்பற்றினார்கள்! இன்று நமது திரை இருக்கும் லட்சணத்தில் அவார்டு ஒரு கேடா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
Tamil and Vedas
/ November 4, 2019EVEN NOBEL COMMITTEE REJECTED MAHATMA GANDHI’S NAME THREE TIMES.