மந்திரங்களின் மகிமை! – 3 (Post No.7227)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 18 NOVEMBER 2019

Time  in London – 6-38 AM

Post No. 7227

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மனிதன் வாழ்வில் பெறுவதற்கு அரிய முக்தி அடைவதற்கான மந்திரங்களும் உண்டு.

இந்த மந்திரங்களைச் சொல்வதற்கான ஏராளமான விதிகள் உண்டு.

அவற்றை நிச்சயமாக குரு மூலமாகத் தெரிந்து கொண்ட பின்னரே ஓத வேண்டும்.

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் என்பது தீர்க்க ஆயுளைப் பெறுவதற்கான மந்திரம். தீர்க்க முடியாத வியாதிகளையும் தீர்க்கும் மந்திரம் இது.

ஓம்

த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் |

உருவாருகமிவ பந்தனாத் மிருத்யோர் முக்ஷீயமாம்ருதாத் ||

Leave a comment

1 Comment

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    மந்திர சாஸ்திரம் ஒரு பெரிய கடல். அதில் நீந்தி வருவது கடினம். மந்திரத்தை ஓதுபவர்களுக்கும் கற்பவர்களுக்கும் உள்ள விதிமுறைகள் அனந்தம். தற்காலத்தில் இவற்றைச் சரியான முறையில் கடைப்பித்தொழுகுவது சாத்தியமே இல்லை.
    தமிழ் நாட்டில் பெரும்பாலோருக்கு உச்சரிப்பே சரியில்லை. மந்திரம் என்பதே தவறு- மன்த்ரம் என்பது தான் சரியானது. ஆனால் நமது கோவில்களில் பாருங்கள்- 90% அர்ச்சகர்களுக்குக்கூட உச்சரிப்பு சரியில்லை. நாம அர்ச்சனையிலேயே இப்படித் தடுமாறினால் இன்னும் பெரிய மன்த்ரங்களில் என்ன செய்வார்கள்?
    நமது வைதீக பண்டிதர்களைப் பாருங்கள். ஒவ்வொருவர் கையிலும் செல்ஃபோன். ருத்ர ஜபம் செய்யும் போதுகூட , இடையே செல்ஃபோன் மீது ஒருகண். மன்த்ரத்தில் மனம் ஒன்றுமா? இவர்கள் இயந்திர கதியில் சொல்லும் ‘மந்திரங்களூ’க்குப் பலன் இருக்குமா?
    மன்த்ரங்கள் உரிய பலன் தரவேண்டுமானால் ஓதுபவர்கள் அதில் ‘சித்தி’ பெற்றிருக்கவேண்டும். இத்தகையோரிடம் முறைப்படி கற்பதுதான் உரிய பலனைத் தரும். வைதீக முறை, தான்திரீகமுறை ஆகிய எந்த வகையில் வந்தாலும் அததற்குரிய நியம நிஷ்டைகளுடன் அவற்றைக் கற்று ஓதவேண்டும்.
    இன்று தமிழ் நாட்டில் ஜோசியப் பைத்தியம் தலைவிரித்தாடுகிறது. பரிகாரம் என்ற பெயரில் பல மந்திரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப் படுகின்றன. அவை அனேகமாக அனைத்தும் பிழை நிறைந்தவையே.
    மன்த்ரம் என்பது மிகவும் சூக்ஷ்மமானது. இதையே ரகசியம் என்பார்கள். இது சந்தைக்கு வரும் சமாசாரமல்ல. தவறாக ஓதினால் பலன் விபரீதமாகும்.
    இந்தக் கலிகாலத்தில் மன்த்ரங்களை ஓதுவதற்குரிய சூழ் நிலை இல்லை. அதனால் த்யானம், யஜ்ஞம்ஆகியவற்றுக்குப் பதிலாக பகவன் நாம சங்கீர்த்தனமே தகுந்த உபாயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சென்ற 1000 வருஷங்களில் பாரதத்தில் உதித்த மஹான்கள் அனைவரும் இதைத்தான் வற்புறுத்திச் சென்றனர்.
    இத்தகைய பகவன் நாமங்கள் அடங்கிய ஸ்தோத்ரங்கள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. இவற்றைச் சொல்லித் துதிப்பதே பல தொல்லைகளுக்கும் தகுந்த பரிகாரமாக இருக்கிறது. “வாயினால் பாடி மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாடுகிறார் ஆண்டாள் அம்மையார்.
    இப்படி வழிவழியாக நம் பெரியவர்கள் பின்பற்றிய சில முக்கியமான ஸ்தோத்ரங்கள் இவை:
    – ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம் : வால்மீகி ராமாயணத்தில் வருவது, ஸ்ரீ ராமருக்கு அகஸ்திய ரிஷி அருளியது.
    – ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்து ஸ்ரீ க்ருஷ்ணரின் சன்னிதியில் தர்மருக்கு உபதேசித்தது. இதுவே எல்லாத் தர்மங்களிலும் மேலானது, இதையே த்யானிக்கவேண்டும், ஸ்தோத்திரம் செய்யவேண்டும்,, இதைச்சொல்லி நமஸ்கரிக்கவேண்டும் [ த்யாயன், ஸ்துவன் நமஸ்யஞ்ச]
    – ஸ்ரீ நாம ராமாயணம். இதை இயற்றிய மஹான் பெயர் தெரியாது. இதைப் பாராயணம் செய்வது ஸ்ரீமத் ராமாயணம் முழுதையும் பாராயணம் செய்த பலனைத் தரும்.
    -தேவாரம், திருப்புகழ், திவ்யப் பிரபந்தம்; இவை தினசரி உரியவர்களால் ஓதப்படவேண்டியவை.
    – அவரவர் குலதெய்வத்திற்கான துதிகள். ஆயிரம் பெரியவர்களை உபசரித்தாலும் சொந்த தாய் தந்தையரை பட்டினிபோடலாமா? குல தெய்வ உபாசனையை மறக்கலாகாது.
    -ஸ்ரீ ஹனுமார் துதிகள். ஸ்ரீ ஆஞ்சனேயரின் மஹிமை எல்லை யில்லாதது. ஸகல விதமான கஷ்டங்களிலிருந்தும் விடுவிப்பவர். ஹிந்தி தெரிந்தவர்கள் துளசி தாசரின் ஹனுமான் சாலிசாவையும், சங்கட மோசன ஹனுமான் அஷ்டகத்தையும் பாராயணம் செய்யலாம். ஹனுமான் அஷ்டோத்ரத்தையும் பாராயணம் செய்யலாம்.
    வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் கஷ்டம் அனுபவிக்காதவர்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். கஷ்டத்திலிருந்து விமோசனம் தேடுவதும் சகஜமே. இதற்காக மந்திரம் தந்திரம் என்று ஓடாமல் கடவுளை நாடித்துதிப்பது சாத்வீகமானது, உத்தமமானது. கஷ்டத்திற்குப் பரிகாரம் வேண்டி பகவானிடம் பக்தி செய்பவர்களும் பக்தர்களே, அவர்களும் உயர்ந்தவர்களே என்று பகவான் கீதையில் சொல்கிறார்.[ 7.16]
    தற்காலத்தில் அனைவருக்கும் ஏற்ற வகையில் பரிகாரங்களைத் தரும் ஸ்தோத்திர, வழிபாட்டுமுறைகளை அடக்கிய ஒரு தொகுப்பை ” ஸ்ரீஜய மங்கள ஸ்தோத்ரம்” என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கிறார் அமரர் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர்.
    மந்திரங்கள் அரிய அற்புத ஆற்றல்கள் கொண்டவை. ஆனால் அதற்குரிய தகுதியோ, வசதியோ இல்லாதவர்கள் தளர்வடையத் தேவையில்லை. ஸ்தோத்திரங்களூம் அதே பலனைப் பெற்றுத்தரும் என்பது அனுபவ உண்மை.
    நாலான வேத நூலாக மாதி
    நானோதினேனும் இலைவீணே
    நாள் போய் விடாமல் ஆறாறுமீதில்
    ஞானோபதேச மருள்வாயே………
    …..செவ்வேளே சுரேசர் பெருமாளே ( அருணகிரி நாதர்)

Leave a comment