பேராசை பெரு நஷ்டம் : மூன்று சுபாஷிதங்கள்! (Post No.7477)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7477

Date uploaded in London – 21 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

லோபம் என்னும் பேராசை மனிதனை வீழ்த்தி விடும் ஒரு அபாயகரமான விஷயம்.

அதிலோபோ ந கர்தவ்ய: கர்தவ்யஸ்து ப்ரமாணத: |

அதிலோபஜதோஷேண ஜம்புகோ நிதனம் பத: ||

ஒருவன் பேராசைப் படக் கூடாது. ஆசை என்பது ஒரு அளவோடு இருக்க வேண்டும்.  பேராசையினால் ஒரு நரி மரணம் அடைந்தது!

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு : (By A.R.R.)

One should not be excessively greedy; but desire should be exercised in moderation. A fox met with his death due to the fault of excessive greed.

பஞ்சதந்திரக் கதையில் வரும் நரியின் பேராசையும் அதனால் அது மரணம் அடைந்ததும் அனைவரும் அறிந்ததே!

அதிலோபோ ந கர்தவ்யோ லோபம் நைவ பரித்யஜேத் |

அதிலோபாபிபூதஸ்ய சக்ரம் ப்ரமதி மஸ்தகே ||

பேராசைப் படாதே. பேராசைப் பட்ட ஒருவன் தன் தலையில் சக்கரம் சுழல்வதைக் கண்டான்.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு : (By A.W.Ryder)

Indulge in no excessive greed

A little help in time of need

A greedy fellow in the world

Found on his head a wheel that whirld.

இன்னொரு சுபாஷிதம்:

அதிலௌத்யப்ரஸக்தானாம் விபத்தினைவ தூரத: |

ஜீவம் நஷ்யதி லோபேன மீனஸ்யாமிஷதர்ஷனே ||

பேராசைப்படுபவர்களுக்கு அபாயம் வெகு தூரத்தில் இல்லை. ஒரு மாமிசத் துண்டிற்காக மீன் தனது உயிரை இழக்கிறது.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு :

For those who are exceptionally greedy, danger is not far off. The fish loses its life by its greed for the piece of flesh  (in the angler’s hook).

நாலடியாரில் வரும் பாடல் இது:

மெய்வாய்கண் மூக்குச் செவியெஅனப் பேர்பெற்ற

வைவாய வேட்கை யவாவினைக் – கைவாய்க்

கலங்காமற் காத்துய்க்கு மாற்ற லுடையான்

விலங்காது வீடு பெறும் (பாடல் 59)

அருஞ்சொற்பொருள் :

வேட்கை – பொருள்களின் மேல் தோன்றும் பற்றுள்ளம்

அவா – அப்பொருள்களைப் பெற வேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை (மனத்தால் வரும் ஆசை என்றும் கொள்ளலாம்)

ஐவாய வேட்கை – ஐம்புலன் ஆசை

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று பெயர் பெற்ற ஐந்து புலன்களால் பொருள்களின் மேல் தோன்றும் பற்றை கைக்கொள்ளாமல் காக்கும் ஆற்றல் உடையவன் தவறாமல் முக்தி அடைவான்.

ஏராளமான தமிழ்ப் பாடல்களும் பழமொழிகளும் பேராசை பெரு நஷ்டம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

***

tags பேராசை, பெரு நஷ்டம்,  சுபாஷிதங்கள்

Leave a comment

Leave a comment