தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1532020 (Post No.7699)

Written by London Swaminathan

Post No.7699

Date uploaded in London – 15 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. (8)- வடக்கிருந்து உயிர் நீத்த சோழன்;பிசிராந்தையாரின் நண்பன்

4. 5)வலமிருந்து இடம் செல்க – வ மையில் வாடுபவர்

4. –(4)- காயவைத்து, பொறித்து, சித்ரான்னத்துடன் சாப்பிடுவர்

5. –(4)- தோள் அணி; யானைத் தந்தம், உலக்கையின் பூண்

6. –(5)- பாகற்காய், பெண்களின் பெயர்; திருநெல்வேலி செப்பறை அருகிலுள்ள ஊர்

7.–(8)/வலமிருந்து இடம் செல்க — பள்ளிக்குப் பின்னர் படிக்கப் போகும் இடம் ; அதில் படிப்பவர்

8. –(5)- உலகத்திலேயே பெரிய விழா; 12 ஆண்டுக்கு ஒருமுறை கங்கை நதிக்கரையில் நடக்கும்

கீழே

1. (6)- நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி மோதலின்போது அறிவுரை வழங்கிப் பாடிய புலவர்

2. –(7)- 63 நாயன்மார்களின் அற்புத சரிதத்தைத் தரும் நூல்

3.–(5) – ஜாதகக்கட்டுக்கு விளக்கம் சொல்ல பயன்படும் புஸ்தகம்

9. –(5)/கீழிருந்து மேலே செல்க- பரம்பரைச் சொத்து இருந்தால் கிடைக்கும் வாழ்வு.

Leave a comment

Leave a comment