
Post No.7736
Date uploaded in London – 24 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
நரியிடம் ஏமாந்த பேய் – இது ஒரு கிராமப்புற கதை
ஒரு காட்டில் ஒரு நரி வசித்தது. ஒரு நாள் அதற்கு ரொம்பப் பசித்தது . ஆனால் அதன் துரதிருஷ்டம் ஒரு இரை கூட சிக்கவில்லை. ஒரு மரத்தடியில் யாரோ விறகு வெட்டி விட்டுச் சென்ற இரண்டு பழைய தோல் செருப்புகள் கிடந்தன. அவை பல ஆண்டு பெய்த மழையில் தோய்ந்து நனைந்து மாமிசம் போல காணப்பட்டன . நரிக்கு நாக்கில் உமிழ் நீர் சுரந்தது . அதைச் சாப்பிட ஆசை. ஒருவேளை அதன் சொந்தக்காரன் அருகில் இருப்பானோ என்று tamilandvedas.com, swamiindology.blogspot.com எண்ணி உரத்த குரலில் சொன்னது:-

“ஏய், இந்தச் செருப்பில் நான் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன் . என்னிடம் ஒரு தங்கக் காசு இருக்கிறது . காட்டு வழியே போன வணிகன் எனக்கு கொடுத்தான். அதை நான் செருப்புக்கு விலை யாகத் தருவேன்” .
அந்த மரத்தின் மீது வசித்த பேய் இதைக் கேட்டு , “சரி , எடுத்துக்கொள் ; சாப்பிட்டு முடித்தவுடன் தங்கக் காஸைக் கொடு” என்றது. நரியும் சுவைத்துச் சுவைத்து உண்டது. தின்று முடித்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்தது. ஆஹா , ஒரு ஆளும் இல்லை; ஒரே ஓட்டமாக ஒடி விடுவோம் என்று ஓடியது . நீண்ட தூரம் போனவுடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஒரு புதருக்கு அடியில் tamilandvedas.com, swamiindology.blogspot.com ஒளிந்து கொண்டது.
திடீரென்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது —
“ஏ நரியாரே ! எங்கே தங்கக் காசு?”
இதைக்கேட்ட நரி சிட்டாகப் பறந்து ஓடியது. பாறை, மரக்கிளை, முட்புதர் எல்லாவற்றிலும் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் ஒரு புதரில் மறைந்து கொண்டது. காலில் அடி; முகத்தில் அடி ;ரத்தம் சொட்டியது.

எங்கிருந்தோ மீண்டும் ஒரு குரல் கேட்டது —
“ஏ நரியாரே ! எங்கே தங்கக் காசு?”
இபோது நரி , தனது வழக்கமான தந்திர குணத்தைப் பயன்படுத்தியது .”ஏய் யாரது ? என்ன தங்கக் காசு ?”
உடனே மரத்தின் மீதிருந்த பேய் சொன்னது.:
“செருப்பை சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு காசு தருவதாகச் சொல்லிவிட்டு tamilandvedas.com, swamiindology.blogspot.com சாப்பிட்டாயே !”
“சீ , அது நான் அல்ல.காட்டில் எவ்வளவோ நரிகள் இருக்கின்றன. நீ பார்த்த நரிக்கு கால்களில், முகத்தில் அடிபட்டிருந்ததா? முகத்தில் ரத்தம் சொட்டியதா?” என்று நரி அதட்டியது.
“இல்லை. அந்த நரிக்கு ஒரு அடியும் இல்லை ; ரத்தத்தையும் பார்க்கவில்லை” என்று பேய் சொன்னது.
“அப்படியானால் அந்த நரியைத்
தேடிக் கண்டுபிடித்துக் கேள் ; நான் அதைப்பார்த்தாலும் உன்னிடம் அனுப்பி வைக்கிறேன்” என்று கூறியது.
ஏமாந்த பேயும் தன்னிடம் போய்ச் சேர்ந்தது.
நரியின் tamilandvedas.com, swamiindology.blogspot.com தந்திரம் பேயையும் ஏமாற்றிவிடும் !!
Xxxxx

பேயும் விவசாயியும்
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் எள் பயிரிட எண்ணினான். ஊருக்கு வெளியே இருந்த ஒரு புளிய மரத்தை வெட்டப்போனான். கோடரியால் ஒரு போடு போட்டான். மேலேயிருந்த ஒரு tamilandvedas.com, swamiindology.blogspot.comபேய் குரல் கொடுத்தது.
“ஏய், விவசாயி, நான் இங்கே நீண்டகாலமாக வசித்து வருகிறேன். எதற்காக இதை வெட்டுகிறாய்? “ என்று வினவியது.
அவன் செப்பினான்- “நான் எள் பயிரிடப் போகிறேன். அதற்கு நிலத்தைப் பண்படுத்தி, உழுவதற்கு ஒரு கலப்பை தேவை. அதற்காக புளியமரத்தை tamilandvedas.com, swamiindology.blogspot.comவெட்டுகிறேன்”.
பேய் புகன்றது-
“வெட்டாதே . நானே உனக்கு ஆண்டுக்கு ஆயிரம் கிலோ எள் கொண்டுவந்து தருகிறேன்.
விவசாயியும் மகிழ்ந்து போய் சரி நான் வெட்ட மாட்டேன்” என்று பகர்ந்து வீடு ஏகினான்.
பல ஆண்டுகளுக்கு இது நீடித்தது. புளிய மரப் பேய்களைச் சந்திக்க ஒரு அசலூர் பேய் வந்தது.
“எல்லோரும் சவுக்கியம்தானே ! ஏன் இப்படி பேய் அடித்த மாதிரி முகம் எல்லாம் வெளிறிக் கிடக்கிறது?” tamilandvedas.com, swamiindology.blogspot.com என்று வினவியது.
“அதை ஏன் கேட்கிறாய் போ! நாங்கள் எல்லோரும் இந்த ஊர் விவசாயிக்குக் கடன் பட்டு விட்டோம்; 1000 கிலோ எள் தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டோம்” என்று புளியமரப் பேய்கள் புலம்பின.
அயலூர் பேய் ஒரு அதிக பிரசங்கி.

“அட ச் சீ ! போ! மனிதனை கண்டு பேய் பயப்படுவதா? நான் போய் அந்த மனிதனைத் தீர்த்துக்கட்டிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டது. விவசாயி வீட்டு மாட்டுக் கொட்டிலில் மறைந்து நின்றது .
அந்த விவசாயி ஒரு புதிய மாடு வாங்கி இருந்தான். அது கட்டுக்கடங்காது ஆடி ஒடித் திரிந்ததால் அதற்குப் “புதுப் பேய்” என்று tamilandvedas.com, swamiindology.blogspot.com நாமகரணம் செய்திருந்தான்.
மாடுகளுக்கு விவசாயிகள் சூடு போடுவது வழக்கம். ஆகையால் மனைவியை நோக்கி ஒரு சத்தம் கொடுத்தான்:–
அடியே! நீலாம்பிகை! “அந்தப் “புதுப் பேயை” என்னிடம் இழுத்து வா.
ஒரு சூடு போடுகிறேன்.”
பேய்களுக்கு தீ என்றால் ரொம்ப பயம்.
இதைக் கேட்டவுடன், புதுப் பேய் தன்னைத்தான் விவசாயி கண்டுகொண்டுவிட்டான் என்று எண்ணி பயந்து கொண்டு வெளியே வந்து அவன் காலடியில் விழுந்து ஒரு கும்பிடு போட்டது.
“யார் நீ?” என்றான். “நான்தான் புதுப் பேய். எனக்கு சூடு போட்டு விடாதே . உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன்” என்றது.
அது சரி, நீ எங்கிருந்து வருகிறாய்? ஏன் இங்கு வந்தாய்? என்று கேள்விக்கணை தொடுத்தான்.

பேய் விளம்பியது- “உனக்கு 1000 கிலோ எள் சப்ளை செய்யும் புளியமர பேய்கள் tamilandvedas.com, swamiindology.blogspot.com என்னை இங்கே அனுப்பின. உனக்கு எள் வேண்டுமா ? அல்லது எண்ணையாகவே சப்ளை (supply) செய்யலாமா?” என்று கேட்டுவருவதற்கு என்னை இங்கே அனுப்பின .
விவசாயி உரைத்தான்–
“பேஷ் , பேஷ் ! எண்ணெயாகவே வாங்கிக் கொள்வதில் எனக்கு ஒரு ஆக்ஷேபமும் இல்லை. இனி எண்ணையாகக் கொடுக்கச் சொல்” என்று கட்டளை இட்டான் .பேயும் சிட்டாகப் பறந்து சென்றது .
புளியமரப் பேய்கள் ஆவலோடு வினவின—“என்ன ஆயிற்று? விவசாயி செத்தானா ?” என்றன.
அசலூர் பேய் முகத்தில் அசடு வழிய ‘புதிய ஒப்பந்தம்’ (New Agreement) பற்றி விளக்கியது .
எல்லாப் பேய்களும் தலையில் அடித்துக் கொண்டன.
இனி ‘நுணலும் வாயால் கெடும்’ என்ற தமிழ்ப் பழமொழியை “பேயும் வாயால் கெடும்” என்று மாற்றுவதற்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றின. “யாகா ராயினும் நா காக்க” என்ற வள்ளுவன் வாக்கை எல்லாப் பேய்களுக்கும் ஆரம்பப் பாடசாலையில் கற்பிக்கவும் முடிவு செய்தன.
“முட்டாள்கள் நண்பனாக இருந்தால் வேறு எதிரியே தேவை இல்லை” என்று எழுதி போர்டு (board) tamilandvedas.com, swamiindology.blogspot.com வைத்தன. அசலூர் பேய் குதிங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடித்தது.
Tags பேய் விவசாயி, கலப்பை, எள் , நாரி, செருப்பு, தங்கக் காசு
xxxxxxx