
Post No.7817
Date uploaded in London – 12 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
எதிரிகளுக்கு ரத்தினச் சுருக்கமான கடிதம்

அமெரிக்காவில் கார்னிலியஸ் வா ண்டர்பில்ட் (CORNELIUS VANDERBILT) என்ற பழங்கால வணிகரை அறியாதோர் யாருமிலர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் பாதை போட்டு ரயில் விடுவது, கடலில் வணிகக் கப்பல் விடுவது முதலிய தொழில்களைச் செய்து ஏராளமாகப் பொருள் ஈட்டினார்.
திருவள்ளுவன் ரத்தினச் சுருக்கமாக தமிழ் வேதம் எனப் புகழப்படும் திருக்குறளை எழுதி புகழ் பெற்றார் . அதைவிட ரத்தினச் சுருக்கமாக அவருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாணினி (700 BCE) என்பவர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை சம்ஸ்கிருதத்தில் சுருக்கமாக எழுதி (அஷ்டாத்யாயி) உலகையே வியக்கச் செய்தார் .
கடிதம் எழுதும் கலையில் அவர்களை மிஞ்சிவிட்டார் கார்னிலியஸ் வாண்டர்பில்ட் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவருடைய நண்பர்கள் அவருக்கு ‘பிசினஸ்’ஸில் (BUSINESS) துரோகம் இழைத்தனர். அவருக்கு அதி பயங்கர கோபம்.
அந்தக் காலத்தில் டெலிபோன் கிடையாது . அதனால் போன் மூலம் வசைமாரி பொழிய வாய்ப்பில்லை.
நாமாக இருந்தால்,
“அட நீ நாசமாகப் போ; உங்க குடும்பம் வேரோடு அழிஞ்சு போகட்டும்; நீ கட்டைல போ ; உங்க அப்பன், ஆத்தா ………………………….. என்று குழாய் அடியில் பெண்கள் சொல்லும் ‘அன் பார்லிமெண்டரி’ (UN PARLIAMENTARY WORDS) சொற்களைப் பிரயோகித்து வசை பாடி இருப்போம். ஆனால் வாண்டர்பில்ட் என்ன செய்தார் தெரியுமா?
இறகுப் பேனாவை எடுத்தார். பாட்டில் மை (bottle ink) யில் நனைத்தார் . பேப்பரில் எழுதினார் ……………… tamilandvedas.com, swamiindology.blogspot.com
“கனவான்களே!
நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் ; நான் உங்கள் மீது வழக்கு தொடுக்கமாட்டேன் ; ஏன் என்றால் கோர்ட்டுக்குப் போனால் அது நீண்ட காலம் எடுக்கும். ஆனால் உங்களை வேரோடு அழிக்கப் போகிறேன்.
உண்மையும் விசுவாசமும் மிக்க,
கார்னிலியஸ் வாண்டர்பில்ட் “
நம்ம ஊர் மாதிரி, ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று போனால் நாம் சாவதற்குள் தீர்ப்பு வராது என்பது அந்த அமெரிக்கருக்கும் தெரியும். ஆகையால் சாம , தான, பேத , தண்ட சதுர்வித உபாயங்களில் ‘தண்ட’ உபாயம் பிரயோகிக்கத் தீர்மானித்தார் .
Gentlemen,
You have undertaken to cheat me. I will not sue you, for law takes too long. I will ruin you.
Sincerely yours
Cornelius Vanderbilt
XXXX

மகனே ! உன் அப்பனைக் கூட நம்பாதே !
ராஜாவே அடக்க முடியாத முரட்டுப் பிள்ளைகளுக்கு விஷ்ணு சர்மன் என்ற பிராஹ்மணன் எப்படி மிருகங்களைக் கொண்டு பாடம் புகட்டினான் என்பதை நாம் சிறு வயதிலேயே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ என்ற சம்ஸ்கிருத நூலில் படித்து இருக்கிறோம். மேலை நாட்டில் ஒரு ராஜா தன் மகன்— இளவரசனுக்கு —- வேறுவகையாகப் பாடம் புகட்டிய சுவையான கதை இதோ!
லண்டன் போன்ற நகரங்களில் அந்தக் காலத்தில் குளிர் காய்வதற்காக ஒவ்வொரு வீட்டிலும் கணப்பை உண்டாக்க கரிகளைப் போட்டு எரிக்கும் அமைப்பு உண்டு . அந்தப் புகையைக் கொண்டு செல்ல எல்லோர் வீட்டிலும் புகை போக்கி (CHIMNEY) இருக்கும். இப்போதும் அதை அகற்றாமல் அதை வேறு வகையில் மாற்றி அலங்காரம் செய்து வைத்துள்ளோம் கரிக்குப் பதிலாக சென்ட்ரல் ஹீ ட்டிங் (central heating) மூலம் எங்களுக்கு கணப்பு/ சூடு கிடைத்துவிடும். tamilandvedas.com, swamiindology.blogspot.com
கரி எரிக்கும் (Fire Place) பைர் பிளேஸ் மேல், மாடம் போலக் கட்டியிருப்பர். அந்த இடத்துக்கு மான்டில்பீஸ் (Mantelpiece or Mantlepiece) என்று பெயர். ஒரு ராஜா தன்னுடைய அன்பு மகனைக் குட்டிப் பையனை அதில் உட்கார வைத்து, கைகளை அகல விரித்து ‘மகனே குதி’ (jump) என்றார் . அந்தச் சிறுவன் பல முறை தயங்கினான். ‘உனக்கு சாக்லேட் தருவேன், பிஸ்கட் தருவேன்’ என்று ஆசை வார்த்தைகளைச் சொல்லி குதிக்க வைக்கிறார். மகனும் குதித்தவுடன் பாராட்டு மழை பொழிந்து
‘வெரி குட் ! இன்னும் ஒரு முறை செய்’ என்றார் . அந்தச் சிறுவனும் இப்போது முன்னைவிட நம்பிக்கையோடு குதித்தான் . அந்தச் சிறுவன் இப்பொழு து பயமில்லாமல் குதிப்பதை அறிந்த ராஜா, “மகனே! இன்னும் ஒரு முறை தாவி என் கையில் குதி! இதுதான் கடைசி முறை” என்றார் . அந்தச் சிறுவன் குதிக்கையில் திடீரென்று பின்னால் சென்று அந்தப் பையனை ‘அம்போ’ என்று விட்டு விட்டார் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
அந்தப் பையன் கீழே விழுந்து அடிபட்டுக் ‘கோ’ வென்று கதறி அழுதான். அவனை சாக்லெட் , பிஸ்கட், பொம்மைகளைக் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டு “இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டாய் ?” என்று வினவினார். அந்தப் பையனோ பேந்தப் பேந்த விழித்தான். பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைதானே!
ராஜா சொன்னார்!
“அரசாட்சியில் (அரசியலில்) உன் அப்பனைக்கூட நம்பக்கூடாது. புரிந்ததா? என்று கணீர் குரலில் சப்தித்தார் .
அந்த இளவரசனும் ‘சரி அப்பா’ என்று அழுதுகொண்டே சொல்லி தலை அசைத்தான்.
–subham–
tags– சுருக்கமான, கடிதம், அப்பனை, நம்பாதே, கார்னிலியஸ்