
Post No.7827
Date uploaded in London – 14 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இதுவரை அமெரிஷியம், ஆர்செனிக்,பேரியம் ,பிஸ்மத், காட்மியம், குரோமியம், கோபால்ட், க்யூரியம் , ப்ளோரின், அயொடின், லித்தியம், மக்னீஷியம், பொட்டாசியம், ரேடியம், செலீனியம் , தாலியம் , தோரியம், யுரேனியம் , துத்தநாகம், பாதரசம், மாலிப்டினம், நிக்கல் ஆகிய மூலகங்கள் பற்றிய சுவைமிகு செய்திகளை எடுத்துரைத்தேன்.
இன்று பெரில்லியம் (BERYLLIUM) என்னும் மூலகம் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்
பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் வெடிப்பு (Big Bang) ஏற்பட்டது அதிலிருந்து உருவானதுதான் பல நூறு கோடி நட்சத்திர மண்டலங்கள். அதில் ஒன்றான சூரிய மண்டலம், அதற்குள் அடங்கிய பூமி முதலான நவக் கிரஹங்கள்— என்பது விஞ்ஞான புஸ்தகத்தில் உள்ள தகவல்.
‘பிக் பேங்’ (BIG BANG) எனப்படும் மாபெரும் வெடிப்பு ஏற்றப்பட்டபோது தோன்றிய மூலகங்கள் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் மூன்றுதான். அதற்கு அடுத்தபடியாகத் தோன்றிய மூலகங்களில் அதிகம் காணப்படுவது பெரில்லியம் . அதாவது நமது இன்றைய கதையின் கதாநாயகன்!
இதனால் பெரில்லியம் ஒரு விண்வெளி மூலகமாகக் (COSMIC ELEMENT) கருதப்படுகிறது. சூப்பர்நோவா நட்சத்திரங்கள் வெடிக்கும்போது பெரில்லியம் தோன்றியதாக முதலில் கருதினர். ஆனால் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகம் பெரில்லியமிருந்தவுடன் வேறு வழிகளிலும் இது வருமோ என்று விஞ்ஞானிகள் வியப்புற்றனர்.
இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?
பெரில்லியத்தைப் பிரபலப் பாடுத்தியது ஐசக் அஸிமோவ் ( ISSAC ASIMOV IN ‘SUCKER BAIT’, PART OF ‘THE MARTIAN WAY’ , 1950 ) எழுதிய நாவல் ஆகும். ஆகும். அவர் விஞ்ஞான புனைக்கதை மன்னன். அவர் எழுதிய ஒரு கதையில் மனிதர்கள் விண்வெளிப் பயணம் செய்து ஒரு வளமான கிரஹத்தைக் கண்டுபிடிக்கின்றனர் ; சுகமாக வாழ்கின்றனர். ஆனால் மனிதர்கள் மர்ம நோய் கண்டு, திடீர் திடீரென இறந்து போகிறார்கள். கடைசியில் ஆராய்ந்து பார்த்ததில் அங்குள்ள காற்று மண்டலத்தில் பெரில்லியம் அதிகம் என்பதும் அதை சுவாசித்தால் நோய் வரும் என்றும் கண்டுபிடிக்கின்றனர். இதை அவர் 1950-ம் ஆண்டு எழுதினார். 1992-ல் உண்மையையிலேயே பெரில்லியம் அதிகமுள்ள ஆறு நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
அப்படியானால் பெரில்லியம் விஷ உலோகமா?
ஆமாம். இதன் புகையையோ தூசியையோ சுவாசித்தால் நுரையீரல் நோய்களும், மூச்சுத்திணறலும் வரும். இந்த நோய்க்கு ‘பெரில்லியோஸ்’ என்று பெயர். மரணமோ, நிரந்தர சுவாசப் பிரச்ச னையையோ உண்டாக்கலாம்.
நாம் வாழும் உலகத்தில், சிலர் வேறு பிரபல மனிதர் போலவும், தலைவர் போலவும் நடித்து (Impersonation) — ஆள் மாறாட்டம் செய்து – மக்களை ஏமாற்றுவதை பத்திரிகைகளில் படிக்கிறோம். மூலக அட்டவணையில் மக்னீஷியம் என்னும் உலோகமும் பெரில்லியமும் பங்காளிகள். இது மக்னீஷியம் போலவே நடிப்பதால் நமது உடல் இதை அதுதான் என்று நம்பி எடுத்துக் கொண்டு திணறுகிறதாம். இரசாயன உலகில்தான் எவ்வளவு விந்தைகளள் பாருங்கள்! அது மட்டுமல்ல. பெரில்லியம் மூலம் ஏற்படும் விஷம் , ரத்தம் மூலம் எலும்புகளுக்குச் சென்று அங்கு குடித்தனமும் செய்யத் துவங்குவதால் நமக்கு நிரந்தரப் பிரச்ச னை ஏற்படுகிறது.
அதற்காக பெரில்லியம் மீது கோபம் கொள்ளாதீர்கள். ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது


மரகதமும் பச்சசைக் கல்லும் பெரில்லியமே!
ஒரே அளவு வைரம், மரகதம் ஆகிய இரண்டையும் கையில் எடுத்தால் மரகதத்துக்குதான் விலை அதிகம். நவரத்தினங்களில் பச்சை வண்ணத்தில் ஜொலிக்கும் மரகதத்திலும் அதைவிட விலை குறைந்த பெரில் என்னும் பச்சசைக் கல்லிலும் பெரில்லியம் இருப்பதே அந்த வண்ணத்தை அளிக்கிறது. இது பற்றி இரண்டு சுவையான விஷயங்களைச் சொல்கிறேன்.
இதைச் சுவைத்துப் பார்த்தால் இனிப்பாக இருக்குமாம். ஆகையால் முதலில் இதற்கு ‘கிளவ்ஸீனியம் ’ glaucinium என்று பெயர் வைத்தனர். கிரேக்க மொழியில் கிளைகிஸ் glykys என்றால் இனிப்பு. விஞ் ஞான விஷயங்களுக்கு கிரேக்க மொழியில் பெயர் சூட்டுவது வழக்கம். ஏனெனில், உலகமே கிரேக்க நாடு மூலம்தான் நாகரீகம் அடைந்ததாக அரை வேக்காடுகள் நிறைந்த ஐரோப்பா, நம்பியது பின்னர் பச்சை வண்ணத்தைப் பார்த்து பெரில் beryl என்று நாமகரணம் செய்தனர்.
இரண்டவது விஷயம் என்னவென்றால் ஆதிகால எகிப்தியர்கள், யூதர்கள் ரோமானியர்கள் ஆகியோர் இந்த ரத்தினத்தைப் பயன்படுத்தினர். பிளினி (Pliny) என்ற ரோமானிய எழுத்தர் பெரில் , மரகதம் ஆகியன ஒரே வகைதான் என்று அறிந்து செங்கடல் அருகில் பெரில் கிடைப்பதாகவும், மரகதம் இந்தியாவிலிருந்து கிடைப்பதாகவும் எழுதி வைத்து இருக்கிறார்.
ஐரோப்பாவில் CELTS கெல்ட் /செல்ட் இன மக்களும் இதைப் பயன்படுத்தினர் ரத்தினக் கல்லில் உள்ள ஆக்சிஜன் ஐசடோப்பை ஆராய்ந்தால் அது எங்கிருந்து வந்தது என்பது தெரிந்துவிடும். இப்படி ஆராய்ந்ததில் ஐரோப்பாவுக்கு வந்த பச்சைக் கற்கள் ஆஸ்திரியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்தது தெரிகிறது. பிளினி (Pliny) இந்திய மரகதம் பற்றிச் சொன்னது உண்மையே. ஏனெனில் 1947க்கு முன்னர் பாகிஸ்தான் என்ற நாடே கிடையாது. அது எல்லாம் இந்தியாவின் ஒரு பகுதியே.
கொலம்பியா
ஹைதராபாத் நிஜாம் பொக்கிஷத்த்தில் இருந்த மரகத நகைகளை ஆராய்ந்ததில் அவை கொலம்பியா (COLOMBIA IN SOUTH AMERICA) நாட்டில் இருந்து வந்தது தெரிகிறது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மரகதக் கற்கள் கிடைப்பதால், மொகலாயர் ஆடசிக் காலத்தில் இவை ஸ்பானியக் கப்பல்களில் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு வந்து, அவர்கள் நமக்கு விற்று இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது .

அணுகுண்டுப் போர் , பொருளாதார பயன்பாடுகள்
நியூட்ரான் என்ற அணுத்துகளை நமக்கு முதலில் காட்டிக்கொடுத்தது பெரில் லியம்தான் . 1932ல் ஜேம்ஸ் சாட் விக் என்பவர் பெரில் லியம் சாம்பிள் மீது ரேடியத்திருந்து ஆல்பா alpha rays கதிர்களை பாய்சசினார். அதிலிருந்து வந்ததே நியூட்ரான். இதுவரை அறிந்திராத அந்த sub atomic particles சப் அட்டாமிக் பார்ட்டிக்கிளுக்கு நியூட்ரான் neutron என்று பெயர் வைத்தனர்.
பெரில்லியத்துக்கு ஒரு அபூர்வ குணம் உண்டு நியூட்ரான்களை NEUTRON இது ஏற்காது . இதனால் இதை அணு ஆயுதங்களிலும் அணுசக்தித் தொழில்களிலும் பயன்படுத்துகின்றனர் அணுகுண்டுகளில் யுரேனியத்திலிருந்து நியூட்ரான் அலைகளை வீசி சக்தியை உண்டாக்குவர் அதைச் சுற்றி பெரில்லியம் கவசம் இருக்கும். அது அணு ஆயுதத்தின் சக்தியை ஓரிடத்தில் குவியச் செய்ய உதவும்.
பெரில்லியம் கிடைக்கும் இடங்கள்
பிரேசில், அமெரிக்கா , அர்ஜெண்டினா , மடகாஸ்கர், ரஷ்யா, இந்தியா
அமெரிக்காவில் மைனே Maine என்னுமிடத்தில் ஐந்து மீட்டர் நீளம் – 20 டன் எடை கொண்ட பெரிலியம் படிகம் கிடைத்தது.
பெரில் , பெட்ராண்டைட் (BERTRANDITE ) என்ற இரண்டு தாதுக்களாக பெரில்லியம் கிடைக்கிறது
தாமிரத்தையும் நிக்கலையும் பெரிலியம் கலந்து உபயோகிக்கையில் மின் சாரம் கடத்தும் சக்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக மின்சார கருவிகளில் இதன் உபயோகம் அதிகம்.
எக்ஸ் ரே கதிர்களை பெரில்லியம் உறிஞ்ச்சுவதால் எக்ஸ்ரே குழாய்களைச் சுற்றி இதை வைக்கின்றனர்.
பெரில்லியத்தை விமானம் கட்டும் தொழிலில் பயன்படுத்தும் யோசனையும், ராக்கெட்டின் வெடி மருந்தாக உபயோகிக்கும் திட்டமும் கைவிடப்பட்டன.
பெரில் (BERYL) , க்ரைஸோ பெரில் (CHRYSO BERYL) ஆகிய இரண்டுமே அலுமினியம் சிலிகேட் (ALUMINIUM SILICATE) என்னும் இரசாயன உப்பு ஆகும். இவை ரத்தினைக் கல்லின் தரம் உடைத்தாயின் மரகதம் EMERALD என்றும் அலெக்ஸாண்ட்ராய்ட் ALEXANDRITE / CAT’S EYE என்றும் அழைக்கப்படும் . இதில் இரண்டு சதவிகித குரோமியம் இருந்தால் இப்படி பச்சை வண்ணம் கிடைக்கும். குறைவான குரோமியம் இருந்தால் ஆக்வா மரின் (AQUA MARINE) எனும் நீலக் கல்லாகும் .

இரசாயன குணங்கள்
அடையாளக் குறியீடு SYMBOL – Be
அணு எண் ATOMIC NUMBER 4
உ ருகு நிலை MELTING POINT 1278 டிகிரி ஸி DEGREE C
கொதி நிலை BOILING OINT – 2970 டிகிரி ஸி
பெரில்லியம் ஒரு வெள்ளி போன்ற நிறம் உடைய உலோகம் SILVERY, LUSTROUS, SOFT METAL OF ALKALINE GROUP . கார குணம் உடைய உலோகங்களின் அணியில் இது இடம்பெறும். நாம் தோண்டி எடுக்கும் பெரில்லியத்துக்கு ஒரு ஐசடோப் ISOTOPE உண்டு. ஆனால் கதிரியக்கம் இராது
பூமியின் காற்று மண்டலத்தின் மேல் அடுக்கில் பெரில்லியம் பெ – 10 என்ற ஐசடோப் காணப்படுகிறது. இதில் கதிரியக்கம் இருக்கிறது. அதன் அரை வாழ்வு (HALF LIFE) 15 லட்சம் ஆண்டுகள். இதை காஸ்மிக் கிரணங்கள் (COSMIC RAYS) உண்டாக்குகின்றன
நியூட்ரான் பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்த பெரில்லியத்துக்கு ஒரு ஸலாம் ; மரகத்தைத்த நமக்களித்த பெரில்லியத்துக்கு ஒரு ஸல்யூட் .
tags – பெரில்லியம், மரகதம், பச்சைக் கல், பெரில், அணுகுண்டு, நியூட்ரான்
–SUBHAM–