
WRITTEN BY R.NANJAPPA
Post No.7834
Date uploaded in London – – 16 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 8 – குறை நிறைந்த உலகம்!
R.Nanjappa
உலகம் அதன் போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. அதில் வாழ்பவர்கள், அதைப் பற்றிச் சிந்திப்பவர்கள் வெவ்வேறு விதத்தில் அதை அனுபவிக்கிறார்கள், உணர்கிறார்கள், கருதுகிறார்கள்.
பலருக்கு இந்த உலகம் பிடிப்பதில்லை. சொந்தக் காரணமாக இருக்கலாம், தொழிலில் நஷ்டமாக இருக்கலாம், குடும்பச் சூழ்நிலை சரியாக இல்லாமலிருக்கலாம்– ஏதோ காரணம், உலகம் பிடிக்கவில்லை. ஒர் ஊர் பிடிக்காவிட்டால் வேறு ஊருக்குப் போகலாம், வீட்டை மாற்றலாம், வேறு தொழில் செய்யலாம், வேறு வேலை தேடிக்கொள்ளலாம். “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகிலே” என்று நம் கவிஞர் பாடினார். வீட்டு நிலை சரியில்லை என்றால் என்ன செய்வது? ஔவையார் சொல்கிறார்:
பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.
ஆனால் இந்த உலகமே பிடிக்கவில்லையென்றால்? யோசிக்கிறார் கவிஞர்.
பிடிக்காத இடத்தில் இருக்காதே
दुखी मन मेरे, सुन मेरा कहना
जहाँ नहीं चैना, वहाँ नहीं रहना
दुखी मन मेरे…
துகி மன் மேரே, சுன் மேரா கஹனா
ஜஹா(ன்) நஹீ சைனா, வஹா(ன்) நஹீ ரஹனா
துக்கப்படும் மனமே, நான் சொல்வதைக் கேள்
எங்கு உனக்கு சாந்தி இல்லையோ அங்கு வசிக்காதே
दर्द हमारा कोई न जाने
अपनी गरज के सब हैं दीवाने
किसके आगे रोना रोएं
देस पराया, लोग बेगाने
दुखी मन मेरे..
தர்த் ஹமாரா கோயீ ந ஜானே
அப்னீ கரஜ் கே ஸப் ஹை தீவானே
கிஸ்கே ஆகே ரோனா ரோயே(ன்)
தேஸ் பராயா, லோக் பேகானே .
என் வருத்ததை யாரும் அறிய மாட்டார்கள்
ஒவ்வொருவரும் தங்கள் வேலையிலேயே குறியாக இருக்கிறார்கள்
இவர்களுக்கு எதிரில் எவ்வளவு அழுதால் தான் என்ன ?
இது அன்னியர் தேசம், இந்த மக்கள் அன்னியர்கள்
लाख यहाँ झोली फैला ले
कुछ नहीं देंगे इस जग वाले
पत्थर के दिल मोम न होंगे
चाहे जितना नीर बहाले
दुखी मन मेरे…
லாக் யஹா(ன்) ஜோலீ ஃபைலாலே
குச் நஹீ தேங்கே இஸ் ஜக வாலே
பத்தர் கே தில் மோம் ந ஹோங்கே
சாஹே ஜித்னா நீர் பஹாலே
நீ எவ்வளவு துணியை விரித்துப் போட்டு பிச்சை கேட்டால் தான் என்ன?
இந்த இடத்து வாசிகள் ஒன்றும் தரமாட்டார்கள்.
இவர்கள் கல் மனது எதற்கும் கறையாது–
நீ எவ்வளவு கண்ணீஈர் விட்டும் பயனில்லை.
अपने लिये कब हैं ये मेले
हम हैं हर इक मेले में अकेले
क्या पाएगा उसमें रहकर
जो दुनिया जीवन से खेले
दुखी मन मेरे…
அப்னே லியே ஹை கப் யே மேலே
ஹம் ஹை ஹர் இக் மேலே மே அகேலே
க்யா பாயேகா உஸ் மே ரஹகர்
ஜோதுனியா ஜீவன் ஸே கேலே
துகி மன் மேரே……
எனக்காக இந்தக் கொண்டாட்டங்கள் எப்போது நிகழும்?
எந்தக் கொண்டாட்டத்திலும் நான் தனித்தே இருக்கிறேன்!
எந்த உலகம் உன் வாழ்க்கையுடன் விளையாடுகிறதோ–
அந்த உலகில் இருந்து நீ என்ன லாபம் அடையப்போகிறாய்?
Song: Dukhi man mere Film: Funtoosh 1956 Lyricist: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer : KIshore Kumar

[இது கிஷோர்குமாரின் iconic, landmark பாடல்களில் ஒன்று.இதன் பின்னனியில் இரு ‘புராணங்கள்‘ உண்டு. இது சோகப்பாடல்– இதைப் பாடுவது சரிவராது என்று கிஷோர் நினைத்தார். ஆனால் பர்மன் தாதா விடவில்லை. கட்டாயமாகப் பாடவைத்தார்–பாட்டு படு ஹிட் ஆனது.
இன்னொரு விஷயம். கிஷோருக்குப் பெரிய பாடகனாக ஆசை. நடிக்கச் சான்ஸ் வந்ததே தவிர, அதிகம் பாடக் கிடைக்கவில்லை. 1956 வாக்கில் பம்பாயை விட்டுப் போக நினைத்தார். அந்தச் சமயத்தில் தான் பர்மன் இவரை அழைத்தார். ” தாதா, நான் பாடவெல்லாம் வரமாட்டேன் ” என்றார் கிஷோர். தாதா விடவில்லை. ” மடையா, உனக்கு என்னடா பாட வரும், நீ சாப்பிட வா” என்றார். { Gaane ko nahi, khaane ko aa] [ பர்மனுக்கு கிஷோரை சிறு வயது முதல் தெரியும்.]வந்த கிஷோர் சாப்பிட்ட பிறகு. ரிஹர்சல் ரூமிற்கு கைப்பிடியாக இழுத்துச் சென்று இந்தப் பாடலைப் பாடவைத்தார். ” எங்கு சாந்தியில்லையோ அங்கு இருக்காதே” என்ற வரி கிஷோர் மனதைத் தொட்டிருக்கவேண்டும். இப்பாட்டு மிகுந்த உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.]
ஒரு குறிப்பு: இந்த Funtoosh படம் பின்னர் ‘பலே பாண்டியா” என்ற பெயரில் தமிழில் வந்தது.அதில் வந்த பாட்டுதான் “வாழ நினைத்தால் வாழலாம்“.
இந்தப் பாடல் ஒரு மனிதனின் சொந்த அனுபவம். சிலர் உலக நடப்புகளையே பொதுவாக விமர்சிக்கின்றனர். நமது இடதுசாரிகள் இதில் தேர்ந்தவர்கள்.[ பணக்காரர்களைத் திட்டுவார்கள், ஏழைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் பல இடது சாரிகள் பணக்காரர்களாக இருக்கிறார்கள்- யாரும் தங்கள் பணத்தையோ, சொத்தையோ ஏழைகளுடன் பகிர்ந்துகொண்டதாக சரித்திரம் இல்லை!] கவிஞர் ஸாஹிர் லுதியான்வி பக்கா இடதுசாரி, பல பாடல்களில்
உலகின் குறைகளைப் பாடியிருக்கிறார். அதில் ‘ப்யாஸா” படத்தில் வந்த ஒரு சீரியஸ் பாட்டில் சில வரிகள்:
கண்ணை உறுத்தும் , மனதை வருத்தும் காட்சிகள்
ये कूचे, ये नीलामघर दिलकशी के
ये लुटते हुए कारवाँ ज़िन्दगी के
कहाँ हैं, कहाँ है, मुहाफ़िज़ ख़ुदी के
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं
யே கூசே கே நீலாம்கர் தில்கஷீ கே
யே லுட்தே ஹுயே கார்வான் ஜிந்தகீ கே
கஹா(ன்) ஹை, கஹா(ன்) ஹை, முஹாஃபிஃஜ் ஸுதீகே
ஜிநே நாஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை
இந்தச் சந்துபொந்துகள்– இந்தக் கவரும் பரத்தையர் வீடுகள்
கொள்ளையடிக்கப்பட வாழ்க்கையின் இந்த நடப்பு
நம் கௌரவத்தைக் காப்பவர்கள்–அவர்கள் எங்கே?
கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படும் அவர்கள்–
அவர்கள் எங்கே ? அவர்கள் எங்கே ?
ये पुरपेच गलियाँ, ये बदनाम बाज़ार
ये ग़ुमनाम राही, ये सिक्कों की झन्कार
ये इस्मत के सौदे, ये सौदों पे तकरार
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं
யே புர்பேச் கலியா(ன்), யே பத்னாம் பாஃஜார்
யே கும்னாம் ராஹீ, யே சிக்கோ கீ ஃஜங்கார்
யே இஸ்மத் கே ஸௌதே, ,யே ஸௌதே பே தக்ரார்
ஜிநே நாஃஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை
வளைந்து போகும் இந்தச் சந்துகள், பெயர் கெட்ட இந்த பஜார்,
இந்த அனாமதேய பயணி, நாணயங்களின் இந்த சப்தம்,
இங்கு நடக்கும் “மதிப்பு” மிக்க வியாபாரம், அதன் விலை மீது எழும் தகராறு–
கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படுகிறார்களே–
அவர்கள் எங்கே? அவர்கள் எங்கே?
ये सदियों से बेख्वाब, सहमी सी गलियाँ
ये मसली हुई अधखिली ज़र्द कलियाँ
ये बिकती हुई खोखली रंग–रलियाँ
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं
யே ஸதியோ(ன்) ஸே பேக்வாப், சஹமீ ஸீ கலியா(ன்)
யே மஸலீ ஹுயீ அத்கிலீ ஃஜர்த் கலியா(ன்)
யே பிக்தீ ஹுயீ கொகலீ ரங் –ரலியா(ன்)
ஜிநே நாஃஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை
வளந்துபோகும் இந்தச் சந்துகள், நூற்றாண்டுகளாக சரிசெய்யப்படாதவை,
இந்த கசங்கிய, வெளிறிய பாதி விரிந்த மொட்டுக்கள்
இப்படி விலைபோகும் இந்தக் குழிவிழுந்த ‘களியாட்டங்கள்–
கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படும் அவர்கள்–
அவர்கள் எங்கே, அவர்கள் எங்கே?
(இது நீண்ட பாடல். 3 சரணங்களே இங்கு தந்திருக்கிறேன் )
Song: Jinhe naaz hai Hind par Film: Pyaasa 1957 Lyricist: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer: Mohammad Rafi

இது உருது கவிதையின் உச்சம், கருத்திலும் காட்டம்! இதைப் படத்தில் பார்த்தால்தான் இதன் முழு உலகைப் பரிமாணம் விளங்கும்.
ஹீரோ ஒரு ஏழைக் கவி. இன்னமும் பெயர் எடுக்கவில்லை. லக்னௌ வீதியில் ( சந்துகளில்) நடந்து போகிறான் அது சிவப்பு விளக்குப் பகுதி. அங்கு பார்ப்பதை விவரிப்பது இந்தப் பாடல்.
வேறு யார் என்ன சொன்னாலும் தமிழ்ச் சங்க இலக்கியம் சிறிதாவது படித்த நாம் நிதானிக்கவேண்டும். சங்க இலக்கியத்தில் பரத்தையரைப் பற்றி வரவில்லையா? அருணகிரிநாதர் ( 15ம் நூற்றாண்டு) எழுதவில்லையா? வள்ளுவர் “வரைவின் மகளிர்” என்று ஒரு அதிகாரமே வகுக்க வில்லையா?
ஸாஹிர் லுதியான்வி புதிதாக ஒன்றும் எழுதிவிட வில்லை! No need to pretend we are shocked.
இவர் எழுதிய இந்த விஷயங்கள் சோஷலிச நாடுகளில் இல்லையா? இடதுசாரிகள் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த மேற்குவங்காளத்தில் மறைந்துவிட்டதா? இதுவேதான் முழு உலகமுமா?
இதை வைத்தே உலகை வைவது சரியா?
உலகைத் தாக்க ஏதோ ஒரு சாக்கு வேண்டும் இந்தக் கவிக்கு இது கிடைத்தது!
இதே ரீதியில் இன்னொரு பெரிய கவிதை அதே படத்திற்கு எழுதினார்.
வேண்டாம் இந்த உலகம்!
ये महलों, ये तख्तों, ये ताजों की दुनिया,
ये इंसान के दुश्मन समाजों की दुनिया,
ये दौलत के भूखे रवाजों की दुनिया,
ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .
யே மெஹ்லோ(ன்) யே தக்தோ(ன்) யே தாஃஜோ கீ துனியா,
யே இன்சான் கே துஷ்மன் சமாஜோ(ன்) கீ துனியா,
யே தௌலத் கே பூகே ரவாஃஜோ கீ துனியா,
யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யாஹை
அரண்மனைகள், சிம்மாசனங்கள், கிரீடங்கள் நிறைந்த இந்த உலகம்
மனிதனுக்கு எதிரியான சமாஜங்கள் நிறைந்த இந்த உலகம்,
கட்டுப்பாடுகள் நிறைந்த, செல்வத்திற்கு ஏங்கும் இந்த உலகம்–
இந்த உலகமே எனக்குக் கிடைத்துவிட்டாலும் அதனால் ஆவதென்ன?
हर इक जिस्म घायल, हर इक रूह प्यासी
निगाहों में उलझन, दिलों में उदासी
ये दुनिया है या आलम–ए–बदहवासी
ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .
ஹர் இக் ஜிஸ்ம் காயல், ஹர் இக் ருஹ் ப்யாஸீ
நிகாஹோ(ன்) மே உல்ஜன், திலோ(ன்) மே உதாஸீ,
யே துனியா ஹை யா ஆலம்–ஏ– பத்ஹவாஸீ
யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ கயாஹை
ஒவ்வொரு உடலும் காயம் பட்டது, ஒவ்வொரு மனதிலும் ஒரு தாகம்,
அலையும் கண்கள், வெற்றிடமான மனது,
வக்கரித்து, தூய்மையிழந்த காற்று வீசும் இந்த உலகம்–
இந்த உலகமே எனக்குக் கிடைத்து விட்டாலும் அதனால் என்ன?
यहाँ इक खिलौना है इसां की हस्ती
ये बस्ती हैं मुर्दा परस्तों की बस्ती
यहाँ पर तो जीवन से है मौत सस्ती
ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .
யஹா(ன்) இக் கிலோனா ஹை இன்ஸான் கீ ஹஸ்தீ
யே பஸ்தீ ஹை முர்தா பரஸ்தீ கீ பஸ்தீ
யஹா(ன்) பர் தோ ஜீவன் ஸே ஹை மௌத் ஸஸ்தி
யே துனியா அகர் மில் பீஈ ஜாயே தோ க்யா ஹை
இங்கே மனிதன் ஒரு பொம்மை தான்
செத்தவர்களைக் கொண்டாடும் மக்கள் உள்ள இடம் இது
இங்கு உயிருடன் இருப்பதைவிட மரணமே சல்லிசு
இந்த உலகமே கிடைத்து விட்டாலும் அதனால் ஆவதென்ன?
जवानी भटकती हैं बदकार बन कर
जवान जिस्म सजते है बाज़ार बन कर
यहाँ प्यार होता है व्योपार बन कर
ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .
ஜவானீ படக்தீ ஹை பத்கார் பன் கர்
ஜவான் ஜிஸ்ம் ஸஜதே ஹை பாஃஜார் பன் கர்
யஹா(ன்) ப்யார் ஹோதா ஹை வ்யோபார் பன் கர்
யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை
இளமை பாவத்தில் கிடந்து அலைகிறது
இளம் உடல்கள் சந்தைக்கடை போல் அலங்கரிக்கப்படுகின்றன
இங்கே அன்பு என்பதும் வியாபாரமாகி விட்டது
இந்த உலகமே கிடைத்து விட்டாலும் அதனால் என்ன லாபம்?
ये दुनिया जहाँ आदमी कुछ नहीं है
वफ़ा कुछ नहीं, दोस्ती कुछ नहीं है
जहाँ प्यार की कद्र कुछ नहीं है
ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .
யே துனியா ஜஹா(ன்) ஆத்மீ குச் நஹீ ஹை
வஃபா குச் நஹீ, தோஸ்தீ குச் ந ஹீஹை
ஜஹா(ன்) ப்யார் கீ கத்ர் குச் நஹீ ஹை
யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை
இந்த உலகம்–இதில் மனிதனுக்கு மதிப்பில்லை,
நம்பிக்கைக்கு மதிப்பில்லை, நட்புக்கு மதிப்பில்லை
இங்கு அன்புக்கு மதிப்பில்லை, அதைக் கருதுவார் இல்லை
இந்த உலகம் கிடைத்தாலும் அதனால் என்ன ஆகிவிடும்?
जला दो इसे फूक डालो ये दुनिया
जला दो, जला दो, जला दो
जला दो इसे फूक डालो ये दुनिया
मेरे सामने से हटा लो ये दुनिया
तुम्हारी है तुम ही संभालो ये दुनिया
ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .
ஜலாதோ இஸே பூங்க் டாலோ யே துனியா
ஜலாதோ, ஜலாதோ, ஜலாதோ
ஜலாதோ இஸே பூங்க் டாலோ யே துனியா
மேரே ஸாம்னே ஸே ஹடா லோ யே துனியா
தும்ஹாரீ ஹை தும் ஜஹீ ஸ்ம்பாலோ யே துனியா
யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை
இந்த உலகத்தைக் கொளுத்தி விடு, ஊதி ஒன்றுமில்லாமல் செய்துவிடு
கொளுத்திவிடு, கொளுத்திவிடு, கொளுத்திவிடு
இந்த உலகத்தைக் கொளுத்திவிடு, ஊதி இல்லாமல் செய்துவிடு
என் கண்ணெதிரிலிருந்து இதை அகற்றிவிடு
இது உங்கள் உலகம்– நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள்!
இந்த உலகம் கிடைத்தாலும் அதனால் ஆவதென்ன?
Song: Ye mehlon, ye takhton Film: Pyaasa, 1957
Lyricist: Sahir Sudhianvi Music: S.D.Burman
Singer: Mohammad Rafi.

இசை, சாஹித்யம், பாடியவர் குரல் சிறப்பு, படமாக்கிய விதம் ஆகிய எல்லா வகையிலும் இது நமது சினிமாவில் ஒரு உன்னத இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்றும் இது Classic தான்.
[ இவ்விரண்டு பாடல்களும் இலக்கிய வாதிகளால் இன்றும் கொண்டாடப்படுகின்றன. திரை இசை வரலாற்றிலேயே ஒரு மைல் கல்லாக, உச்சகட்ட சாதனையாகக் கருதப்படுவது. அதனால் இவற்றை இங்கே பார்த்தோம்.]
இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாயின. ஸாஹிர் லுதியான்வி இதற்கு தன் சாஹித்யம் தான் காரணம், எஸ்.டி பர்மனின் இசையல்ல என்று வெளிப்படையாகவே சொன்னார்.. அதனால் இசையமைப்பாளரைவிட தனக்கு அதிகப் பணம் தரவேண்டும் என்று கேட்கத்தொடங்கினார். ஒரு ரூபாயாவது அதிகம் தரவேண்டும் என்றார்!
“தவ்லத் கே பூகே ரவாஃஜோ கீ துனியா“- இந்த உலகம் அதிகச்செல்வத்திற்காக ஏங்குகிறது என்று இப்பாடலில் எழுதிய சோஷலிசக் கவிஞர் அதிகக் காசு கேட்டு நின்றார்! இந்த நிலைப்பாடு முன்னணி இசையமைப்பாளர்களுக்குச் சம்மதமில்லை.அதனால் அவர்கள் ஸாஹிருடன் பணிசெய்ய இசையவில்லை.
ஸாஹிர் பிரபல மடைய எஸ்.டி. பர்மன் 1951ல் இசையமைத்த “நௌஜவான்” என்ற படத்தில் வந்த “தண்டீ ஹவாயே(ன்)” என்ற பாட்டுதான் காரணமானது. அதுமுதல் 1957ல் ப்யாஸா வரை இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பர்மன் இவருடன் தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
[லதா மங்கேஷ்கர் பாடிய இந்த தண்டீ ஹவாயே(ன்) பாட்டு நாடுமுழுதும் பிரபலமடைந்தது. இதன் மெட்டில் தமிழில் “கொஞ்சும் புறாவே” என்று எம்.எல்.வசந்தகுமாரி பாடிய தமிழ்ப் பாடலும் ஹிட் ஆனது! இது நாகையாவின் “தாய் உள்ளம்” படத்தில் இடம்பெற்றது, இதன் இசையும் நாகையாவே அமைத்தார். இரவல் மெட்டாக இருந்தாலும் தமிழ் வடிவமும் சிறந்ததே எம்.எல் வி குரலும் இதற்கு வயலின் பின்னணி இசையும் அபாரம். பல முறை கேட்டு ரசிக்கலாம்.]



இந்தப் பாடல் முதல்பாடலை விடச் சிறப்பானது. பொதுவில் மனித நேயம், மனிதப் பண்புகள் குறைந்திருப்பதைச் சொல்கிறார். உலகம் வியாபார மயமாகி வருவதைச் சொல்கிறார். இதை 18ம் நூற்றண்டிலிருந்து கவிஞர்கள், கலைஞர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர். கோல்ட்ஸ்மித் 1770ல் எழுதினார்:
“If to the city sped—What waits him there?
To see profusion that he must not share;
To see ten thousand baneful arts combined
To pamper luxury, and thin mankind.
[ Oliver Goldsmith: The Deserted Village]
To thin mankind–
மனித நேயம் குறைந்துதான் வருகிறது!
நம் கவிஞர் குறைகளைக் கண்டார்–
ஆனால் தீர்வு சொல்ல வில்லை! உலகைக் கொளுத்துவது தீர்வாகுமா?
தலைவலி வந்தால் தலையையே வெட்டுவார்களா?
இந்த உலகம் பிரச்சினைகள் நிறைந்தது தான், குற்றம் குறைகள் உள்ளது தான். பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்துவருவதுதான்.It takes all sorts to make the world.
இது பழங்காலத்திலிருந்து நாம் பார்த்துவருவது.
ஆனால் நாம் காணும் குறைகள், குற்றங்கள் நாம் பார்க்கும் இடத்தைப் பொறுத்தது, நம் பார்வையைப் பொறுத்தது. சில சமயம் காலத்தைப் பொறுத்தது.Place and Time.
சமயம், அரசியல், சீர்திருத்தம், புரட்சி, பொருளாதாரம் , இப்போது விஞ்ஞானம் என்று எத்தனையோ வழிகளில் இதற்குத் திர்வு காண முயல்கின்றனர். இதுவரை வெற்றி பெறவில்லை.
இந்திய ஆன்மீகம் இதற்கு ஒரு வழி கண்டது. நீ உன் பார்வையை மாற்றிக்கொள் என்றது. இந்த உலகம் துக்கம் நிறைந்தது தான், அதை மாற்ற உன்னால் முடியாது, நீ உன்னை மாற்றிக்கொள் என்பது கீதை முதல் புத்தர் வரை வற்புறுத்திய விஷயம். உலகத்தையே ஒழித்துவிடு என்று சொல்லவில்லை!
We cannot control the events in the world, we can only control our reaction. This is also the essence of the Greek Stoic philosophy which reflects Indian (Hindu-Buddhist) thoughts.
ஆனால் உலகில் நல்ல விஷயங்களே இல்லையா? நல்ல இடங்களே இல்லையா? இதையும் திரைக் கவிஞர்கள் வழியில் பார்ப்போம்!
tags – ஹிந்தி படப் பாடல்கள் – 8 , funtoosh, Pyasa, S D Burman, Dev anand, Guru dutt
****