
WRITTEN BY R. NANJAPPA
Post No.7865
Date uploaded in London – – 22 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 14
லதா மங்கேஷ்கரின் காதல் பாடல்கள்!
R. Nanjappa
காதல் பாடல்கள்-லதா மங்கேஷ்கர்

ஹிந்தி சினிமாவுலகில் லாதா மங்கேஷ்கரின் பங்கு அலாதியானது.1948
முதல் 35 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பாடியவர். எல்லா நாயகிகளுக்கும்
அவர் குரல் பொருந்தியது. எல்லாவிதமான பாடல்களுக்கும் பொருந்தியது.
இது எப்படி சாத்தியமாயிற்று?
லதாவின் குரல் மனிதக் குரல் போன்றதல்ல, அது ஏதோ வாத்யம் போன்றது,
அது தான் அப்படிப் பாட முடிகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா
பத்திரிகையில் 15 வருஷங்களுக்கு முன் சங்கீத அறிஞர் ஒருவர் எழுதினார்.
அதுவே உண்மை போலும்!
ஆனால் 60 வருடங்களாகத் தொடர்ந்து கேட்டு வருபவர்களுக்கு ஒரு
விஷயம் நன்கு புரிகிறது: லதாவின் குரல் 50களில் மிக இனிமையாக
இருந்தது. 60 களில் மாறிவிட்டது. 70களில் சகிக்கவில்லை.
நாம் திரை இசையின் பொற்காலப் பாடல்களைப் பார்த்து வருகிறோம்.
இவற்றில் லதாவின் பாடல்களுக்கு இணையே இல்லை என்பதில் சந்தேகமே
இல்லை, இவர் 50 களில் பாடிய மூன்று பாடல்களைப் பார்ப்போம்.

மன் மே கிஸீ கீ
मन में किसी की प्रीत बसा ले
ओ मतवाले, ओ मतवाले
मन में किसी की प्रीत बसा ले
किसी को मन का मीत बना ले
मीत बना ले
ओ मतवाले, ओ मतवाले
मन में किसी की प्रीत बसा ले
மன் மே கிஸீகி ப்ரீத் பஸாலே
ஓ மத்வாலே, ஓ மத்வாலே
கிசஸீ கோ மன் கா மீத் பனாலே
மீத் பனாலே
ஓ மத்வாலே, ஓ மத்வாலே
பித்துப் பிடித்தவனே!
உன் மனதில் யாருக்காகவாவது அன்பை வளர்த்துக்கொள்!
யாரையாவது மனதிற்கு உகந்தவளாகக்கொள்!
ஓ பித்துப் பிடித்தவனே!
इस दुनियाँ में किसी का हो जा
किसी को कर ले अपना
इस दुनियाँ में किसी का हो जा
किसी को कर ले अपना
प्रीत बना ले ये जीवन को एक सुहाना सपना
एक सुहाना सपना
जीवन में ये ज्योत जगा ले
ओ मतवाले, ओ मतवाले
मन में किसी की प्रीत बसा ले
இஸ் துனியாமே கிஸீ கா ஹோ ஜா
கிஸீ கோ கர் லே அப்னா
ப்ரீத் பனாலே, யே ஜீவன் கோ ஏக் சுஹானீ ஸப்னா
ஏக் ஸுஹானி ஸப்னா
ஜீவன் மே யே ஜ்யோத் ஜகா லே
ஓ மத் வாலே ஓ மத்வாலே
மன் மே கிஸீ கீ ப்ரீத் பஸா லே
இந்த உலகில் யாருக்காவது சொந்தம் என்று ஆகிவிடு!
யாரையாவது உனக்குச் சொந்தமாக்கிக்கொள்!
அன்பை வளர்த்துக் கொள்வது– இது இந்த உலகின் இன்பக் கனவு!
ஆம் ஒரு இன்பக் கனவு
வாழ்க்கையில் இந்த விளக்கை ஏற்று!
ஓ பித்துப் பிடித்தவனே!
மனதில் யாருக்காகிலும் அன்பை வளர்த்துக்கொள்!
प्रीत सताए प्रीत रुलाए
जिया में आग लगाए
प्रीत सताए प्रीत रुलाए
जिया में आग लगाए
जलनेवाला हँसते हँसते फिर भी जलता जाए
फिर भी जलता जाए
प्रीत के हैं अन्दाज़ निराले
ओ मतवाले, ओ मतवाले
ப்ரீத் ஸதாயே ப்ரீத் ருலாயே
ஜியா மே ஆக் லகாயே
ஜல்னேவாலே ஹன்ஸ்தே ஹன்ஸ்தே ஃபிர் பீ ஜல்தா ஜாயே
ஃபிர் பீ ஜல்தா ஜாயே
ப்ரீத் கே ஹை அந்தாஃஜ் நிராலே
ஓ மத்வாலே, ஓ மத்வாலே
அன்பு அலைக்கழிக்கும், அன்பு அழவைக்கும்!
சிந்தையில் நெருப்பை இடும்!
ஆனாலும் என்ன, இந்த நெருப்பில் எரிகிறவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பர்!
ஆம், சிரித்தவாறே இருப்பர்!
அன்பின் இயல்பு அலாதியானது!
ஓ பைத்தியமே!
मन में किसी की प्रीत बसा ले
ओ मतवाले, ओ मतवाले
மன் மே கிஸீ கீ ப்ரீத் பஸா லே
ஓ மத்வாலே, ஓ மத்வாலே
மனதில் யாருக்காக வாவது அன்பை வளார்த்துக்கொள்
ஓ பித்தனே!

Song: Man mein kisi ki Film: Aram 1951 Lyricist: Rajinder Krishan
Music: Anil Biswas Singer: Lata
இதைக் காதல் பாட்டு எனச் சொல்வது சரியா?
சரிதான்–ஏனெனில் இது காதலின் அருமையை, அதன் அவசியத்தை எடுத்துச்
சொல்கிறது!
To belong to someone -to make some one ours- is the foundation of social life.
It dissolves our petty ego, but makes us bigger, better, greater persons!
இது பியானோவை வைத்து பாடும் பாடல். பொதுவாக , இத்தகைய
பாடல்களில் ஹீரோ பியானோ வாசித்துக்கொண்டே பாடுவார்! இது மடமை.
பியானோ பெரிய , வாசிக்கச் சிரமமான வாத்யம். பார்க்காமல் வாசிக்க
இயலாது, வாசித்துக் கொண்டே பாடுவது நடவாது! இந்தப் பாடலில்
பாடுபவர் வேறு, பியானோ வாசிப்பவர் வேறு! இயல்பாகப்
படமாக்கப்பட்டிருக்கிறது!
அனில் பிஸ்வாஸ் நமது மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர்
தான் ஹிந்தி திரை இசையில் முதலில் ஆர்கெஸ்ட்ராவை அறிமுகம்
செய்தவர். இப்பாட்டிற்கு மனதைத்தொடும் விதத்தில் இசை அமைத்திருக்கிறார். சொக்கிப்
போகிறோம்.
எத்தனை எளிய சொற்களில் இனிய கருத்தைச் சொல்கிறார் ராஜேந்த்ர
க்ரிஷன்!
லதாவின் குரலும் பாடிய விதமும் அபாரம்! இது ஒரிஜினல் லதா!
தேன் போல் இனிக்கும் பாடல்!
ஸோகயா ஸாரா ஃஜமானா
सो गया सारा ज़माना नींद क्यों आती नहीं
ऐ हवा जाकर उसे तू साथ क्यों लाती नहीं
चाँद पहले भी निकलता था मगर ऐसा न था
आज ऐसी बात क्यों है ये समझ आती नहीं
चाँदनी कुछ चाँद से कह कर ज़मीं पे आ गई
जाने क्या देखा यहाँ अन लौट कर जाती नहीं
ஸோ கயா ஸாரா ஃஜமானா நீந்த் க்யோ(ன்) ஆதீ நஹீ
யே ஹவா ஜாகர் உஸே தூ ஸாத் க்யோ(ன்) லாதீ நஹீ
உலகம் பூராவும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது
ஏனோ, எனக்கு மட்டும் உறக்கம் வரவில்லை!
யே காற்றே ! நீ போய் ஏன் அவரைக் கையோடு கூட்டிவரக்கூடாதா?
சாந்த் பஹலே பீ நிகல்தா தா மகர் ஐஸா ந தா
ஆஜ் அஸீ பாத் க்யோ(ன்) ஹை
யே ஸமஜ் ஆதீ நஹீ
சந்திரன் முன்பும் தான் வந்துகொண்டிருந்தது
ஆனால் இப்படி இல்லையே!
இன்று அப்படி என்ன ஆகிவிட்டது?
எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
சாந்த்னி குச் சாந்த் ஸே கஹ கர் ஃஜமீன் பே ஆ கயீ
ஜானே க்யா தேகா யஹ(ன்) ஆஜ் லௌட் கர் ஜாதீ நஹீ
சந்திரனின் கிரணங்கள் ஏதோ சந்திரனிடம் சொல்லிவிட்டு
பூமிக்கு வந்து விட்டன!
இங்கு என்ன கண்டனவோ தெரியவில்லை–
திரும்பிப் போக மறுக்கின்றன!
Song: So gaya sara zamana Film:Miss Mary 1957 Lyricist: Rajinder Krishan
Music: Hemant Kumar Singer: Lata

எத்தனை எளிய பாட்டு! எத்தனை இனிய பாட்டு!
எத்தனை எளிய சொற்களில் காதலை விளக்கிவிட்டார்!
உறக்கம் காற்று,, சந்திரன்– இவை காதல் இலக்கியத்தில் நீங்கா இடம்
பெற்றவை. இவற்றை வைத்தே நிலையை விளக்கி விட்டார்.
இதற்கு மனதிற்கினிய விதத்தில் பாஹடி ராகத்தில் இசை அமைத்திருக்கிறார்
ஹேமந்த் குமார்.
இந்த மிஸ் மேரி படம் தமிழ் மிஸ்ஸியம்மாவின் ஹிந்தி வடிவம். இந்தப்
பாட்டு, தமிழில் வரும் “மாயமே நானறியேன்” என்ற இடத்தில் ஹிந்தியில்
வருவது. தமிழில் இசை அமைத்தவர் எஸ்.ராஜேஸ்வர் ராவ். அனைத்தும்
கர்னாடக ராகத்தில் அமைந்தவை. ஹிந்தியிலும் ஹிந்துஸ்தானி ராகங்களில்
அமைந்த பாடல்கள்தான். இந்த இரு மொழிப் பாடல்களை ஒப்பிட்டுப்
பார்க்கலாம்!
லதாவின் இனிய குரல்.
யே ஃஜிந்தகீ உஸீ கீ ஹை
ये ज़िन्दगी उसी की है, जो किसी का हो गया
प्यार ही में खो गया
ये ज़िन्दगी उसी…
யே ஃஜிந்தகீ உஸீ கி ஹை, ஜோ கிஸீ கா ஹோ கயா
ப்யார் ஹீ மே கோ கயா
யே ஃஜிந்தகீ உஸீ கீ ஹை
தன் வாழ்க்கையை வேறு ஒருவருக்கே யார் அர்பணிக்கிறார்களோ,
அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்!
அன்பிலேயே யார் மறைந்து போகிறார்களோ
அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்!
ये बहार, ये समा, कह रहा है प्यार कर
किसी की आरज़ू में अपने दिल को बेक़रार कर
ज़िन्दगी है बेवफ़ा, लूट प्यार का मज़ा
ये ज़िन्दगी उसी की है…
யே பஹார், யே ஸமா, கஹ் ரஹா ஹை ப்யார் கர்
கிஸீ கீ ஆர்ஃஜூ மே அப்னே தில் கோ பேகரார் கர்
ஃஜிந்தகீ ஹை பேவஃபா, லூட் ப்யார் கா மஃஜா
யே ஜிந்தகீ உஸீ கீ ஹை….
இந்த வசந்தம். இந்த இனிய பொழுது–
அன்பு செலுத்து என்று சொல்கிறது!
யாரிடமாவது கொண்ட காதலால் உன் இதயத்தையே
இழந்துவிடு என்று சொல்கிறது!
இந்த வாழ்க்கை– அது விசுவாசமற்றது
அன்பினால் வரும் ஆனந்தத்தை அனுபவி!
அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்.
धड़क रहा है दिल तो क्या, दिल की धड़कनें ना गिन
फिर कहाँ ये फ़ुर्सतें, फिर कहाँ ये रात–दिन
आ रही है ये सदा, मस्तियों में झूम जा
ये ज़िन्दगी उसी की है…
தடக் ரஹா ஹை தில் தோ க்யா, தில் கீ தட்கனே நா கின்
ஃபிர் கஹா(ன்) யே ஃபுர்ஸதே, ஃபிர் கஹா(ன்) யே ராத் தின்
ஆ ரஹீ ஹை யே ஸதா, மஸ்தியோ(ன்) மே டூப் ஜா
யே ஃஜிந்தகீ உஸீ கீ ஹை….
இதயம் படபட வெனத் துடிக்கிறதா?
அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாதே!
இந்தப் பொழுது மீண்டும் வருமா?
இந்த இரவும் பகலும் மீண்டும் வருமா?
இந்த இன்பத்தில் ஆழ்ந்துவிடு–
என்ற குரல் வந்துகொண்டிருக்கிறது!
அவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்!
Song: Ye Zindagi usi ki hai Film: Anarkali 1953 Lyricist: Rajinder
Krishan Music: C.Ramchandra Singer: Lata Mangeshkar

In the annals of Indian cinema, there is no more sublime song. There is no other
song like this. This is the supreme. superlative Ode to Love. A song like this
has not been written again or composed or sung.
There is a heart -touching quality to the lyrics, heart-rending quality in the
melody. One whose heart does not melt on hearing this, probably has no heart!
Though this is sung in a happy mood, it touches us deep down. It tells us how
fleeting is time, how short our life, and so how precious is Love!
Those who wrote this song, composed its melody and sang it- they all must be
Gandharvas, without any doubt.
When we talk of this song, we cannot take another title on our lips at the
same time..
This is the supreme achievement of Hindi Cine Music. This is the tribute to the
heart of India.
A nobler sentiment on Love was never uttered by any other tongue. A more
touching song was never composed. A more touching rendering could not even
be attempted by anyone else.
This song is mainly in the Raag Bhimpalasi, with a mix of Kaafi and Kirwani .
This melody cannot be straight-jacketed. Such melodies happen once in a
lifetime, once in history.
The beautiful Sitar in this piece was played by Ustad Abdul Halim Jaffer Khan.
We bow to all these masters, and feel they have done full justice to the theme
of Love.
This song will live on, as long as people cherish true Love in their hearts.
This song will make us live better as long as we listen to its meaning
and mind its message.
காதலைப் பற்றி இதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது?
இன்று நாம் பார்த்த இந்த மூன்று பாடல்களுமே ராஜேந்த்ர கிரிஷன்
எழுதியவை! இதுவும் தற்செயலாக நிகழ்ந்ததே. யே ஃஜிந்தகீ உஸீ கி ஹை
அவருக்கு அமரத்தன்மை பெற்றுத் தந்துவிட்டது!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 14, லதா , காதல் பாடல்கள்,
xxxxxxx subham xxxx