
WRITTEN BY R. NANJAPPA
Post No.7907
Date uploaded in London – – – 1 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் -23- இரு பாட்டுக்கள் – ஒரே சாயல் (1)
R. Nanjappa
இரு பாட்டுகள் – ஒரே சாயல்
1966. “மம்தா” என்ற படம் வெளிவந்தது. அதில் ஒரு பாட்டு- “ரஹே நா ரஹே ஹம்”- செம ஹிட் ஆனது. இசைஞர் ரோஷன். பாடல் எழுதியவர் கவி மஜ்ரூஹ் ஸுல்தான்புரி. ஒவ்வொரு ரசிகனின் வாயும் இப்பாட்டை
முணுமுணுத்தது!
இசைஞர் எஸ்.டி. பர்மனும் இப்பாட்டை ரசித்தார். ரோஷனுக்கு ஃபோன் செய்து பாராட்டினார். ரோஷனுக்கு வெட்கமாயிற்று.
” அண்ணா (தாதா), இது என்ன? இது உங்கள் பாட்டின் தழுவல் தான்! நான் என்ன சொந்தமாகச் செய்துவிட்டேன்?
“ஓ அப்படியா?”
“ஆமாம். உங்கள் “தண்டீ ஹவாயே(ன்) என்ற ‘ நௌஜவான்’ படத்துப் பாட்டிலிருந்து தான் இதை ‘காப்பி’ அடித்தேன்
‘” அப்பனே, இருப்பது எல்லாம் ஏழு ஸ்வரம் தானே! அதையே தானே நாம் எல்லோரும் இப்படி அப்படி திருப்பிப் போட்டு நம் கடையை விரிக்கிறோம்? பின் எது என்னுடையது, எது உன்னுடையது? நீ இந்தப் பாட்டை நன்றாகவே செய்திருக்கிறாய். அதற்கே இந்தப் பாராட்டு!”
இது கற்பனையல்ல. பர்மன் பாராட்டியதும் ரோஷன் சொன்னதும் உண்மையிலேயே நடந்தவை. அப்போது பம்பாயில் இசை ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம். அப்போதெல்லாம் இசைஞர்கள் இப்படி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வார்கள். பர்மனும் ரோஷனும் நண்பர்களே. இசைஞர்களிடையே போட்டி இருந்தது,
பகைமை இல்லை!
இருந்தாலும் பர்மனிடம் இருந்த பெருந்தன்மையும், ரோஷனிடமிருந்த பணிவும் பண்புள்ள பெரியவர்களிடம் மட்டுமே நாம் காணக் கூடியது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார்கள்..
[இப்போது ‘இப்படி அப்படி’ திருப்பிப் போடுவதற்கு கம்ப்யூடர்கள் பெரிதும் துணைசெய்கின்றன!]
.

இந்த இரண்டு பாடல்களையும் பார்க்கலாமா?
Thandi Hawayen Lehrake Aaye
Ha Ha Ha, Ha Ha Ha Ha Ha la La La La La, Hm Hm Hm Hm Hm
kaise Bulaaye
ठंडी हवाएँ, लहरा के आयें
रुत है जवां
तुमको यहाँ, कैसे बुलाएँ
ठंडी हवाएँ…
தண்டீ ஹவாயே(ன்) லஹராகே ஆயே(ன்)
ருத் ஹை ஜவா(ன்) தும் கோ யஹா(ன்)
கைஸே புலாயே(ன்)
தண்டீ ஹவாயே(ன்)..
.
குளிர் தென்றல்…அலைஅலையாக வீசுகிறது!.
என்னைச் சூழ்ந்து எல்லாமே இளமையில் பொலிகிறது!
உன்னை இங்கு எப்படி அழைப்பது!
அலையாக வீசும் குளிர் தென்றல்..!..
.
चाँद और तारे, हँसते नज़ारे
मिल के सभी, दिल में सखी, जादू जगाये
ठंडी हवाएँ…
சாந்த் ஔர் தாரே, ஹ(ன்)ஸ்தே நஃஜாரே
மில் கே ஸபீ, தில் மே ஸகீ ஜாதூ ஜகாயே
தண்டீ ஹவாயே(ன்)….
நிலவும் தாரகைகளும்… மகிழ்ச்சியில் பொங்கும் காட்சிகள்
ஓ ஸகியே! இவை அனைத்தும் சேர்ந்து மனதில் ஜாலம் செய்கின்றன!.
அலை அலையாக வரும் குளிர் தென்றல் !.…..
कहा भी न जाए, रहा भी न जाए
तुमसे अगर, मिले भी नज़र, हम झेंप जाए
ठंडी हवाएँ…
கஹா பீ ந ஜாயே, ரஹா பீ ந ஜாயே
தும் ஸே அகர், மில் தே நஃஜர், ஹம் ஜோப் ஜாயே
தண்டீ ஹவாயே(ன்)
மனதில் இருப்பதைச் சொல்லவும் வரவில்லை,
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!
உன்னை நேரில் பார்த்தாலும் என்னால் எதுவும் பேச முடியாது!
அலை அலையாக வீசும் குளிர் தென்றல்!
दिल के फ़साने, दिल भी न जाने
तुमको सजन, दिल की लगन, कैसे बताएँ
ठंडी हवाएँ…
தில் கே ஃபஸானே, தில் ஹீ ந ஜானே
தும் கோ ஸஜன்,தில் கீ லகன், கைஸே பதாயே(ன்)
தண்டீ ஹவாயே(ன்)….
மனதின் ரகசியம் மனதிற்கே தெரியாதே!
பின் மனதில் இருப்பதை அன்பரே, உமக்கு எப்படிச் சொல்வது?
அலை அலையாக வரும் குளிர் தென்றல்..
Song: Thandi hawayen Film: Naujavan 1951 Lyrics : Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer:Lata
இந்தப் பாட்டு நாடு முழுவதும் ஒர் அலையைத் தோற்றுவித்தது! அப்படி என்ன இருக்கிறது இப்பாட்டில்?
திருப்பிக் கேட்கலாம்— என்ன இல்லை?
அருமையான மெட்டு– இசையின் இன்ப அலை!
பின்னணியில் வாத்திய ஜாலம்!
அன்றைய லதாவின் மதுரக் குரல்!
இனிய, எளிய சாஹித்யம்!
இந்த சங்கீதம் +சாஹித்யம் நகமும் சதையும் போல இணைந்துதான் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தின!இந்தப் பாட்டுதான் கவி ஸாஹிரைத் தூக்கிவிட்டது!
இந்தக் காதல் கவிதைகளைப் பாருங்கள்–பெரிதாக ஒன்றும் இல்லை! எல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்– இவற்றை வைத்தே கவிதை வலை பின்னுகிறார்கள்! Sweet Nothings என்பார்கள் ஆங்கிலத்தில்!
இந்த மெட்டு, பல இசைஞர்களிடையே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது! பலர் இதையொட்டியே மெட்டமைத்தனர். அவற்றுள் சில::
– தேரா தில் கஹா(ன்) ஹை– சாந்தினி சௌக் 1954 ரோஷன்
–யஹீ ஹை தமன்னா– ஆப்கீ பர்சாயியா(ன்) 1964 மதன் மோஹன்
–ஸாகர் கினாரே– ஸாகர் 1985 ஆர்.டி.பர்மன்
தமிழில் “கொஞ்சும் புறாவே“!
ஆனால் இதன் அதிக சாயல் விழுந்த பாட்டு, ‘மம்தா‘ படப் பாட்டு-1966.

रहें न रहें हम महका करेंगे
बन के कली बन के सबा
बाग-ए-वफा में
रहें न रहें हम…
ரஹே ந ரஹே ஹம், மஹகா கரேங்கே
பன் கே கலீ, பன் கே ஸபா
பாக்–ஏ–வஃபா மே
ரஹே ந ரஹே ஹம்….
நான் இங்கு இருக்கிறேனோ, இல்லையோ,
நம் நம்பிக்கை என்னும் சோலையில் ஒரு மலர் போலும், தென்றல் போலும்
இந்த நறுமணம்..இருந்து கொண்டிருக்கும்!
मौसम कोई हो, इस चमन में, रंग बन के रहेंगे हम खिरामा
चाहत की खुशबू, यूँ ही जुल्फों से उड़ेगी, खिज़ा हो या बहारें
यूँ ही झूमते और खिलते रहेंगे
बन के कली…
மௌஸம் கோயீ ஹோ இஸ் சமன் மே,
ரங்க் பன் கே ரஹேங்கே ஹம் கிராமா
சாஹத் கீ குஷ்பூ, யூ(ன்) ஹீ ஜுல்ஃபோ(ன்) ஸே உடேகீ,
கிஜா ஹோ யா பஹாரே
யூ(ன்) ஹீ ஜூம்தே ஔர் கில்தே ரஹேங்கே !
பன் கே கலீ…..
இந்தச் சோலையில் எந்தப் பருவமானாலும்,
நான் அதை வண்ணமாகப் பூசி நிற்பேன்! ,
இலையுதிர் காலமோ, வஸந்தமோ–எதுவாயினும்–
நம் காதல் என்னும் நறுமணம் என் கூந்தலிலிருந்து பரவி வரும்!
நான் ஒரு மலர் போலும் தென்றல் போலும்
இந்தச் சோலையில் அசைந்து ஆடி நிற்பேன்!
खोये हम ऐसे, क्या है मिलना, क्या बिछडना नहीं है याद हमको
कूचे में दिल के, जब से आये, सिर्फ दिल की ज़मीं है याद हमको
इसी सरज़मीं पे हम तो रहेंगे
बन के कली…
கோயே ஹம் ஐஸே,
க்யா ஹை மில்னா, க்யா பிசட்னா நஹீ ஹை யாத் ஹம்கோ
கூசே மே தில் கே, ஜப் ஸே ஆயே
ஸிர்ஃப் தில் கீ ஜமீன் ஹை யாத் ஹம்கோ
இஸீ ஸர்ஜமீன் பே ஹம் தோ ரஹேங்கே
பன் கே கலீ…..
நான் அன்பில் என்னை மறந்து விட்டேன்!
உடன் இருத்தல்–பிரிவு எதையும் நான் அறியவில்லை!
நீ என் மனதில் வந்தபின், அன்பு என்னும் இந்தப் பூமியை மட்டுமே அறிவேன்!
அந்த உலகிலேயே நான் இருப்பேன்!
ஒரு மலர் போலும் தென்றல் போலும் திகழ்வேன்!
जब हम ना होंगे, जब हमारी खाक पे तुम रुकोगे, चलते–चलते
अश्कों से भीगी, चांदनी में, इक सदा सी सुनोगे, चलते–चलते
वहीं पे कहीं हम तुमसे मिलेंगे
बन के कली…
ஜப் ஹம் நா ஹோங்கே, ஜப் ஹமாரீ காக் பே தும் ருகோகே, சல்தே– சல்தே
அஷ்கோ ஸே பீகீ, சாந்த்னீ மே இக் ஸதா ஸீ ஸுனோகே, சல்தே–சல்தே
வஹீ(ன்) பே கஹீ(ன்) ஹம் தும்ஸே மிலேங்கே
பன் கே கலீ….…
நான் இங்கு இல்லாத போது–
மழை பெய்து ஓய்ந்து , என் கண்ணிரால் நனைக்கப்பட்ட இந்த
என் சாம்பலின் அருகில் நீ நடந்துபோகும் போது சிறிது நிற்க நேர்ந்தால்,
என் குரல் உன் காதில் ஒலிக்கும்!
அங்கு எப்படியோ நாம் இருவரும் சந்தித்துக்கொள்வோம்!
இச் சோலையில் மலர் போலவும் தென்றல் போலவும் இருப்போம்!
Song: Rahe na rahe hum Film: Mamta 1966 Lyricist: Majrooh Sultanpuri
Music: Roshan Singers: Lata, Suman Kalyanpur, Rafi
This is an extraordinary song by any standards. The poetry is simply sublime. It combines two worlds-two realities.
There is the physical world- with its meeting and separation. But there is also that state of unity which is transcendental- beyond the physical dimension, with its limitations of time and space. Life is transient, but it is also eternal- not in the sense of extended, infinite time, but in the sense of Timelessness! Majrooh Sultanpuri traverses the two realms seamlessly! And weaves them together in his imagery! Oh, what an excellent poem! It fills the mind with high thoughts, but also wrenches the heart! We all have to go one day, but the thought that we will be remembered comforts us! This the poet conveys without getting into a sad, sentimental mode! This is extraordinary!

இது சங்ககால அகத்துறைப் பாடல்களை (அகநானூறு, கலித்தொகை) நினைவு படுத்துகிறது. தலைவன்–தலைவி பிரிவு அங்கே பேசப்படுகிறது. எதன் நிமித்தம் இத்தகைய பிரிவு என்பதும், அதனால் தோன்றும் மன நிலைகளும் விரிவாகவே பேசப்படுகின்றன. ஆனால் அத்தகைய பிரிவுகள் அனைத்தும் தாற்காலிகமானவையே. இங்கு மஜ்ரூஹ் நம் எவராலும் தவிர்க்க, தடுக்க இயலாத அந்த இறுதிப் பிரிவையும் பற்றிப் பேசுகிறார். மிக நாசூக்காகச் சொல்கிறார். ஆனால் எந்தப் பிரிவானாலும் வேண்டியவர்களை அன்புடன் நினைக்கிறோம்!. இத்தகைய அன்பில் , மனதில் நிறைந்து நிலவும் நினைவில்– பிரிவு என ஒன்று உண்டா? இல்லை என்கிறார் கவி!
இதன் இசை அபாரமானது. இது ‘தண்டீ ஹவாயேன்” பாட்டை அப்படியே தழுவவில்லை. இந்த மெட்டு எளிதானதல்ல.
இதை முதலில் லதா பாடுகிறார். பின்னர் சில மாற்றங்களுடன், சுமன் கல்யாண்பூர், ரஃபி ஆகியோரின் குரலிலும் கேட்கலாம்.
ஐம்பது வருஷங்களுக்கு மேலாகியும் ஒரு பாட்டு மக்கள் மனதில் நிற்கிறதென்றால், அது மனதைத் தொடுவதாக இருக்கவேண்டும்! இது இசை– கருத்து இரண்டும் இணைவதால் தான் சாத்தியமாகிறது.
ஒரே ராகத்தின் அடிப்படை தான்–ஆனால் பாடல் காட்டும் உணர்ச்சிகள் எப்படி வேறுபடுகின்றன!
Note 1. தண்டீ ஹவாயேன் பாட்டு யமன் ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கருதுகின்றனர்.
ஆனால் இதன் பூர்வீகம் மேற்கு இண்டீஸ் பேண்ட் இசை என்பாரும் உண்டு!
மேற்கத்திய மெட்டை எடுத்தாள்வது அக்காலத்தில் சகஜமே.
2. சில சமயம் ஒரே சாயலில் இரு பாடல்கள் அமைவதும் உண்டு.
****