
WRITTEN BY R. NANJAPPA
Post No.7939
Date uploaded in London – – – 8 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 30 – இனிக்கும் பாடல்கள்!
R. Nanjappa
இனிக்கும் பாடல்கள்!
நினைவில் நிற்கும் நல்ல பாட்டென்றால் அது சோகம் கலந்ததாகத் தான் இருக்கவேண்டுமா?
ஆங்கிலக் கவி ஷெல்லி கூறியதை ஒரு ஹிந்திப் பாட்டில் எழுதினார் ஷைலேந்த்ரா:
हैं सबसे मधुर वो गीत जिन्हें
हम दर्द के सुर में गाते हैं
ஹை ஸப்சே மதுர் வோ கீத் ஜின்ஹே
ஹம் தர்த்கே ஸுர் மே காதே ஹை
துன்பம் என்னும் ஸ்வரத்தில் நாம் இசைக்கிறோமே,
அந்தப் பாடல்களே அனைத்திலும் இனிமையாக இருக்கின்றன!
ஆனால் நம் கவி இத்துடன் நிறுத்தவில்லை! மேலும் சொன்னார்:
जब ग़म का अन्धेरा घिर आये
समझो के सवेरा दूर नहीं
हर रात का है पैगाम यही
तारे भी यही दोहराते हैं
ஜப் கம் கா அந்தேரா கிர் ஆயே
ஸம்ஜோ கே ஸவேரா தூர் நஹி
ஹர் ராத் கா ஹை பைகாம் யஹீ
தாரே பீ யஹீ தோஹராதே ஹை
துன்பம் என்னும் இருள் கவியத் தொடங்கினால்,
சூரிய உதயம் அதிக தூரத்தில் இல்லை என்று தெரிந்துகொள்.
ஒவ்வொரு இரவின் செய்தியும் இதுதான்
தாரகைகளும் இதையே மீண்டும் மீண்டும் காட்டுகின்றன!
இடுக்கண் வருங்கால் நகுக-அதனை
அடுத்து ஊர்வது அஃதொப்பதில் குறள் 621
இப்பாட்டை “பதீதா” என்ற படத்தில் 1953 தலத் மெஹ்மூத் பாடினார்.
சந்தோஷம் தரும் இனிய பாட்டுக்களும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன.

உஸ் பார் ஸாஜன்
को: ओ टिम का टिमा टिम्भा तारे करें अचम्भा
ओ टिम का टिमा टिम्भा
उस पार साजन इस पार धारे
ले चल ओ माँझी किनारे किनारे
ले चल ओ माँझी किनारे -2
को: ओ कोड़ीया कोड़ीया कवलानी कवलानी -2
दूर यहाँ से गाँव पिया का
हाल न पूछे कोई जिया का -2
गहरा सागर और मैं अकेली
सूझें न कोई सहारे सहारे
ले चल ओ माँझी …
को: ओ टिम का टिमा टिम्भा …
लहरें देखूँ दिल लहराए -2
जल दरपन में पी मुस्काए -2
प्यासी अँखियाँ दोनों ये सखियाँ
हरदम करे हैं इशारे इशारे
ले चल ओ माँझी …
को: ओ टिम का टिमा टिम्भा …
ஓ டிம் கா டிமா டிம்பா தாரே கரே அசம்பா.
ஓ டிம் கா டிமா டிம்பா…
உஸ்பார் ஸாஜன் இஸ் பார் தாரே
லேசல் ஓ மா(ன்)ஜீ கினாரே கினாரே
லேசல் ஓ மா(ன்)ஜீ கினாரே..
ஓ இந்தத் தாரகைகள் மின்னி மின்னி
ஜாலம் காட்டுகின்றன!
என் அன்பர் அந்தக் கரையில்-
இப்பக்கம் நீர்ப்பெருக்கு!
ஓடக்காரா! என்னை சற்று அந்தக் கரைக்கு கூட்டிச்செல்வாயா?
ஓ கோடீயா கோடீயா கவ்லானீ கவ்லானீ..
தூர் யஹா(ன்) ஸே கா(ன்)வ் பியா கா
ஹால் ந பூசே கோயீ ஜியா கா
கஹ்ரா ஸாகர், ஔர் மை அகேலீ
ஸூஜே ந கோயீ ஸஹாரா ஸஹாரா
லே சல் ஓ மாஜீ கினாரே
என் அன்பரின் வீடு இங்கிருந்து வெகு தொலைவு!
என் மனதின் நிலை பற்றி எதுவும் கேட்டுவிடாதீர்கள்!
ஆழம் மிகுந்த கடல், நானோ தனிமையில்!
துணை யாரும் தெரியவில்லை!
ஓடக்காரா, என்னை அக்கரை சேர்த்துவிடு!
லஹரே தேகூ(ன்) தில் லஹராயே
ஜல் தர்பன் மே பீ முஸ்காயே
ப்யாஸீ அ(ன்)கியா தோனோ யே ஸகியா(ன்)
ஹர்தம் கரே ஹை இஷாரே இஷாரே
லே சல் ஓ மா(ன்)ஜீ கினாரே…
இந்த அலைகளைக் கண்டு என் மனமும் துள்ளுகிறது
அன்பரின் முகம் இந்த நீர்க்கண்ணாடியில் முறுவலிக்கிறது!
இந்த கண்கள் ஜோடியாக ஏதோ ஸமிக்ஞை செய்கின்றன!
ஓடக்காரா, என்னை அக்கரை சேர்த்துவிடு!
Song: Us paar sajan Film: Chori Chori 1956 Lyrics: Hasrat Jaipuri
Music: Shankar Jaikishan Singers: Lata & chorus
இந்தப் பாட்டின் இனிமையை சொல்லிமுடியாது! காதில் தேனாகப் பாய்கிறது. அழகிய சிறு கவிதை.
இந்தப் பாட்டு கதா நாயகி பாடுவது அல்ல! ஓடத்தில் போகிறவர் பாடுவது- ஆனால் நாயகியின் நிலைக்கு பொருந்துவது! இத்தகைய பாடல்களை
Surrogate songs என்பர்.
இந்தப் பாட்டில் சில சொற்கள் வெற்று ஒலிக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றன. நம் கவிஞர் எழுதிய ‘ஜாலினோ ஜிம்கானா’ , லகரியோ பகரியாமா, போல என்று சொல்லலாம்!
கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இந்தப் பாடலை கவனித்துக் கேளுங்கள்! இதுவே ஒரு பிரார்த்தனை மாதிரி ஆகிவிடும்! வாழ்க்கை-சம்சாரம் என்னும் கடல், நம் எஜமானர்-இறைவன்-இதைத்தாண்டி இருக்கிறார்! அங்கே நம்மைக் கொண்டு சேர்க்க ஓடம்-ஓடக்காரன் தேவை! இந்தக் கருத்து வருகிறதா இல்லையா பாருங்கள்!
இது நம் சமய நூல்களில் வரும் ஒரு முக்கிய கருத்து! வேதத்தில் துர்கா ஸூக்தத்தில் முதலிலேயே வருகிறது; மன்த்ரபுஷ்பத்திலும் வருகிறது கடவுள் நாமம், அவரைப் பற்றிய சிந்தனை-அதுவே ஓடம்.
இக்கருத்து 1943ல் வந்த ‘கிஸ்மத்” படத்தில் ஒரு பாட்டில் வெளிப்படையாக வருகிறது:
अब तेरे सिवा कौन मेरा कृष्ण कन्हैया
भगवान किनारे स लगा दे मेरी नैया
அப் தேரே சிவா கௌன் மேரா க்ருஷ்ண கன்னையா
பகவான் கினாரே ஸ லகாதே மேரி நையா!
பகவானே, கிருஷ்ணா! எனக்கு உன்னைத்தவிர யார் இருக்கிறார்கள்?
என் (வாழ்க்கையாகிய ) ஓடத்தை கரை சேர்த்து விடு.
கவி ப்ரதீப் எழுதி, அனில் பிஸ்வாஸ் இசையில் இதைப் பாடியது அமீர்பாய் கர்னாடகி! அக்காலத்தில் மிகப் பிரபலமான பாடல் [எங்கள் தாயாரும் இதை எங்களுக்குப் பாடித் தூங்க வைப்பார்!]
நம் பண்பட்டின் சில அடிப்படைக் கருத்துக்கள் நம் திரைக் கவிகளுக்கு எப்படியோ வந்துவிடுகின்றன!
இனி இந்த உயரத்திலிருந்து சற்றுக் கீழே இறங்கி வருவோம்! இளமைக் காலத்தை வீணாக்காமல் மகிழ்சியாக வாழுங்கள் என்று சொல்கிறார் கவி ஸாஹிர் லுதியான்வி!

தில் ஸே மிலா கே தில்
दिल से मिला के दिल, प्यार कीजिये कोई सुहाना इक़रार कीजिये १) शरमाना कैसा, घबराना कैसा जीने से पहले, मर जाना कैसा फ़ासलों की छाँव में रस भरी फ़िज़ाओं में इस ज़िन्दगी को गुलज़ार कीजिये, दिल से … २) आती बहारें, जाती बहारें कब से खड़ी हैं, बांधी कतारें छा रही है बेखुदी कह रही है ज़िन्दगी दिल की उमंगें बेदाद कीजिये, दिल से … ३) दिल से भुला के, रुसवाइयों को जन्नत बना लें, तनहाइयों को आरज़ू जवान है वक़्त मेहरबान है दिल खो न जाए खुशी यार कीजिये, दिल से …
தில் சே மிலா கே தில் ப்யார் கீஜியே
கோயி ஸுஹானா இக்ரார் கீஜீயே
பிறருடன் மனம் சேர்ந்து அன்புடன் இருங்கள்
வரும் நல்ல, இனிய விஷயங்களை அங்கீகரியுங்கள்
ஷர்மான கைஸா, கப்ரானா கைஸா
ஜீனே கே பஹலே மர்ஜானா கைஸா
ஃபாஸ்லோ(ன்) கீ சாவ்(ன்) மே, ரஸ்பரீ ஃபிஃஜாவோ
(ன்) மே
இஸ் ஃஜிந்தகீ கோ குல்ஃஜார் கீஜியே
தில் ஸே மிலாகே தில்….
ஏன் கூச்சப்படவேண்டும், ஏன் அச்சப்படவேண்டும்?
வாழ்வதற்குமுன் ஏன் மரணம் பற்றி நினைக்கவேண்டும்?
இங்கிருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப் பார்த்து
இந்த வாழ்க்கையையே ஒரு சோலையாக மாற்றுங்கள்!
ஆதி பஹாரே(ன்), ஜாதீ பஹாரே(ன்)
கப்ஸே கடீ ஹை பாந்தீ கதாரே(ன்)
சா ரஹீ ஹை பேகுதீ, கஹ் ரஹீஹை ஃஜிந்தகீ
தில் கீ உமங்கே பேதாத் கீஜியே
தில் ஸே மிலாகே தில்
இந்த வஸந்தம் வருகிறது, போகிறது!
காலக் கட்டில் இந்த வரிசை தானே நடக்கிறது!
(காலம் வீணில் கழிகிறது)
சொரணை கெட்ட நிலை போகிறது!
மனதின் ஆசைகளை பூர்த்திசெய்து கொள்ளுங்கள்
என வாழ்க்கை சொல்கிறது
தில் ஸே புலாகே, ருஸ்வாயியோ(ன்) கோ
ஜன்னத் பனாலே தன்ஹாயியோ(ன்) கோ
ஆர்ஃஜூ ஜவான் ஹை, வக்த் மெஹர்பான் ஹை
தில் கோ ந ஜாயே, குஷீ யார் கீஜியே
தில் ஸே மிலா கே தில்…..
சிறுமைகளை மனதிலிருந்து அகற்றிவிடுங்கள்
தனிமையை சொர்க்கமாக (இனிமையாக) செய்துகொள்ளுங்கள்
ஆசைகள் எழுகின்றன, காலம் அனுகூலமாக இருக்கிறது
மனம் தன் நிலையிழந்து விடப்போகிறது,
மகிழ்ச்சியுடன் உறவாடுங்கள்!
பிறருடன் சேர்ந்து அன்பாக இருங்கள்!
Song: Dil se milake dil Film: Taxi Driver 1954 Lyricist: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer: Lata Mangeshkar

இது அருமையான கவிதை. பல அரிய உருதுச் சொற்கள் கொண்டது. நேரடியாக பொருள் சொல்ல முடியாது.
இது ஒரு ‘கிளப்’ பாடலாக அமைந்தது, ஆனால் எத்தனை நல்ல விஷயங்களைச் சொல்கிறார்! மெட்டில் என்ன இனிமை! பின்னணி இசையும் அருமை!
வாழ்க்கையில் நல்ல தருணங்கள் இருக்கின்றன, நல்ல அம்சங்கள் இருக்கின்றன. அவற்றையும் தகுந்த முறையில் எற்றுக்கொள்ள வேண்டும்.
All work and no play makes Jack a dull boy என்பார்கள்.
Take time to love and be loved.
It is God given en
It is the road to happiness.
Take time to laugh.
It is the music of the soul.
Martin Greyford
***