

பாணினி, பதஞ்சலி சொல்லும் மின்னல் ரஹஸியம்; கொத்தமல்லி அதிசயம்! (Post No.8008)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8008
Date uploaded in London – 20 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பாணினி, பதஞ்சலி சொல்லும் மின்னல் ரஹஸியம்; கொத்தமல்லி அதிசயம்! (Post No.8008)

பாணினி எழுதிய பாணினீயம்’ என்னும் இலக்கண நூலில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. பாணினி எழுதிய உலகத்தின் முதல் இலக்கண புஸ்தகத்துக்கு ‘அஷ்டாத்யாயீ’ என்றும் பெயர். இதன் பொருள் எட்டு அத்தியாயங்கள். இதன் மேல் பிரம்மாண்டமான உரை எழுதியவர் பதஞ்சலி . அந்த புஸ்தகத்துக்கு ‘மஹா பாஷ்யம்’ , அதாவது ‘பேருரை’ என்று பெயர் வைத்தது பொருத்தமே . இவையெல்லாம் போதாது என்று ஏழாம் நூற்றாண்டில் ஜயாதித்ய -வாமன என்ற இருவர் ‘காசிகா’ என்ற உரை வேறு எழுதினார்கள். இவைகளை எல்லாம் வெறும் இலக்கண நூல்கள் என்று ஒதுக்கி விடக்கூடாது . இதில் அதிசய , ரஹஸ்ய விஷயங்கள் இருக்கின்றன. இன்று சில அ திசயங்களைச் சொல்லுவேன்.
கலர், கலர் மின்னல்
அஷ்டாத்யாயியில் ஒரு சூத்திரம்
2-3-13 சதுர்த்தீ ஸம்ப்ரதானே
இது நாலாம் வேற்றுமையின் உபயோகம் பற்றியது ;
இதன் தொடர்ச்சியில் ‘வா: உத்பாதேன க்ஞாப்யமானே சதுர்த்தீ வக்தவ்யா’
என்கிறார் . இதை முனைவர் கு. மீனாட்சி அழகாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; அதில் உரைகாரர்களின் விளக்க உரை வருகிறது
அதில் வண்ண, வண்ண மின்னல் அதிசயம் பற்றிப் பேசுகிறார்.
மின்னல் சிவப்பாக இருந்தால் சூறாவளி க் காற்றையும்,
மின்னல் மிகவும் சிவப்பாக இருந்தால் சூட்டையும் ,
மின்னல் மஞ்சளாக இருந்தால் மழையையும் ,
மின்னல் வெள்ளையாக இருந்தால் பஞ்சத்தையும் அறிகுறியாக உணர்த்தும் என்கிறார்.
இதோ ஸம்ஸ்க்ருதத்தில் —
வாதா ய (4) கபிலா வித்யுத்
அதபாய (4) அதிலோஹினி
பீதா வர்ஷாய (4) விக்ஞேயா
துர்பிக்ஷாய (4) ஸிதா பவேத்
பஞ்சம் என்பது வெள்ளை ஆகும்
எண் (4)– நாலாவது வேற்றுமையைக் குறிக்கும்.
மின்னல் வகைகளை உற்பத்தியாகும் இடத்தைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கின்றனர் பருவ நிலை ஆராய்ச்சியாளர்கள் ; ஆனால் வர்ணத்தை வைத்துப் பிரிக்கவில்லை. எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் இந்துக்கள் சொன்னது சரியென்று நிரூபிக்கக்கூடும்
****

கொத்தமல்லி ரஹஸ்யம்
குஸ்தும்பு ரூணி ஜாதி -6.1.143
பாணினி 6-1-143-ல் கொத்தமல்லிச் செடியை (Coriandrum sativum) ‘குஸ்தாம்புரு’ என்று சொல்கிறார்.. தென்னிந்திய மொழிகளில் இது
கொத்தமல்லி-தமிழ், கொடிமிரி – தெலுங்கு, கோதம்பரி – கன்னடம் முதலிய சொற்களால் அழைக்கப்படுகிறது . இது பிற மொழியிலிருந்து சம்ஸ்க்ருதம் கடன் வாங்கிய சொல் என்று பாணி னீயத்தை ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ். அக்ரவாலா கூறுகிறார்.
அவர் ஊகிப்பது போல இது தெ ன்னிந்தியாவிலிருந்து போயிருந்தால் 2700 ஆண்டுகாலுக்கு முன்னரே பாணிணிக்கு தமிழ்நாடு தெரியும் என்பது புலனாகிறது . ஏற்கனவே அவர் மிளகு பற்றி சொன்னதையும் அவருக்கு முந்தைய யாஸ்கர் பெண்ணுக்கு விலை கொடுக்கும் தமிழ் வழக்கத்தைக் குறிப்பிடுவதையும் எழுதிவிட்டேன். கொத்தமல்லியும் தெற்கிலிருந்துதான் வந்தது என்று நம்பினால் தென்னிந்தியாவுடனான உறவு மேலும் நிரூபிக்கப்படுகிறது .
ஆயினும் இதை மேலும் ஆராய்ந்தால் ‘தனியா’, கொத்தமல்லி என்பதெல்லாம் கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. மைசீனியன், மினோவன் கிரேக்க நாகரீகங்களில் (Mycenaen and Minoan Civilizations of Greece) கொரிஜதன – கொரியதான என்று எழுதப்பட்ட கிரேக்க கல்வெட்டுகள் இருப்பதாகவும் மூட்டைப்பூச்சி மணம் இதற்கு இருந்தததால் இப்படிப் பெயரிட்டிருக்கலாம் என்றும் விக்கிபீடியா கூறுகிறது . இந்த வாதத்தை ஏற்றால் இது கிரேக்க மொழி மூலமாகவே தமிழுக்கு வந்திருக்க வேண்டும்.

அலெக்ஸ்சாண்டருக்கு முன்னரே கிரேக்க- இந்திய தொடர்பு இருந்திருக்கலாம். . ஆனால் மிக வியப்பான விஷயம் சங்கத் தமிழிலோ தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலோ, பதினெண் கணக்கு நூல்களிலோ ‘கொத்துமல்லியும் இல்லை; மல்லியும் இல்லை’ ‘தனியா’வும் இல்லை !
ஆக மிளகாய், காப்பி, கோகோ போல இதுவும் இறக்குமதி பொருள்தான் போலும் ஆயினும் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே இதை பாணினி குறிப்பிடுவதை மறந்து விடக்கூடாது.
Ko-ri-ja-da-na – Mycenean Greek
Koriyadana – Minoan Greek/ Linear B script.
Coriandrum – Latin
Coriandre – Old French
Coriander – English (from 14th Century)
Tags — கொத்தமல்லி, மின்னல், ரஹஸியம், அதிசயம், பாணினி, பதஞ்சலி

Xxxx Subham Xxxx