
| ஹிந்தி படப் பாடல்கள் – 46 – இரு கனவுகள்! (Post No.8032) WRITTEN BY R. NANJAPPA Post No. 8032 Date uploaded in London – – – 24 May 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. ஹிந்தி படப் பாடல்கள் – 46 – இரு கனவுகள்! R. Nanjappa இரு கனவுகள்! முன்பெல்லாம் ஒரு சினிமாவில் ஒரு டிசைனில் புடவை வந்தால், அது அதே பெயரில் ஃபேஷனாகி விடும். அதே போல சில வகைப் பாடல்களும் ஒரு போக்காக அமைந்துவிடும்.. பியானோ பாட்டுக்கள், படகில்போகும் பாடல்கள், கிளப் பாட்டுக்கள், பார்ட்டி பாட்டுக்கள் என்று இப்படி ஒரு நடை உருவாகிவிடும்! தமிழ்ப் படங்களுக்கு “ப” வரிசையில் பெயர் வைத்தது போல- அது ஒரு சீஸன்! இசைஞர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்ச முயற்சி செய்ததால், இத்தகைய பாடல்கள் பொதுவாக நன்றாகவே, இனிமையாகவே இருந்தன! பார்ட்டி என்றால் ஏதோ பெரிய கும்பலாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை, பெரிய ஹாலில் தான் நடக்க வேண்டுமென்பதில்லை! சிறு வீட்டில், வேறு இடத்தில் ஒரிருவர் இருந்தலே போதும்! அப்படி இரு பாடல்களைப் பார்க்கலாம். தேரே லியே ஹி ஸாத் ரங்க் கே (1971) मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने सपने, सुरीले सपने कुछ हँसते, कुछ गम के तेरी आँखों के साये चुराए रसीली यादों ने छोटी बातें, छोटी-छोटी बातों की हैं यादें बड़ी भूले नहीं, बीती हुई एक छोटी घड़ी जनम-जनम से आँखे बिछाईं तेरे लिए इन राहों ने मैंने तेरे लिए ही सात… भोले-भाले, भोले-भाले दिल को बहलाते रहे तन्हाई में, तेरे ख्यालों को सजाते रहे कभी-कभी तो आवाज देकर मुझको जगाया ख़्वाबों ने मैंने तेरे लिए ही सात… रूठी रातें रूठी हुयी रातो को जगाया कभी तेरे लिए मीठी सुबह को बुलाया कभी तेरे बिना भी तेरे लिए ही दिए जलाये राहो में मैंने तेरे लिए ही सात रंग के सपने चुने सपने सुरीले सपने. மைனே தேரே லியே ஹீ ஸாத் ரங்க்கே ஸப்னே சுனே, ஸப்னே, சுரீலே ஸப்னே குச் ஹன்ஸ்தே, குச் கம் கே தேரீ ஆன்கோ கே ஸாயே சுராயே ரஸீலீ யாதோ(ன்) நே உனக்காகவென்றே நான் வண்ண வண்ண கனவுகளைத் தேர்ந்தெடுத்தேன்! கனவுகள் – இனிய இசையுடன் கூடிய கனவுகள் ! சில – மகிழ்ச்சியானவை, சில வருத்தத்துடன் கூடியவை இனிய நினைவுகள் உன் கண்ணின் சாயையைக் கொள்ளை கொண்டு விட்டன! சோடீ பாதே(ன்), சோடீ-சோடீ பாதோ(ன்) கீ ஹை யாதே(ன்) படீ பூலே நஹீ, பீதீ ஹுயீ ஏக் சோடீ கடீ ஜனம் ஜனம் ஸே ஆன்கே பிசாயீ தேரே லியே இன் ராஹோ(ன்) நே மைனே தேரே லியே ஹீ…. பேசிய சின்னச் சின்ன விஷயங்கள்- சின்னச் சின்ன விஷயங்கள் பெரிய நினைவுகளத் தந்துவிடுகின்றன! கடந்த காலத்தின் ஒரு கணத்தைக் கூட நான் மறக்கவில்லை! ஜன்மம் ஜன்மமாக நான் இந்தப் பாதையில் உனக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! உனக்காகவே இந்த வண்ணக் கனவுகள்! போலே பாலே- போலே பாலே தில் கோ பஹலாதே ரஹே தந்ஹாயீ மே, தேரே கயாலோ(ன்) கோ ஸஜாதே ரஹே கபீ கபீ தோ ஆவாஃஜ் தேகர் முஜ்கோ ஜகாயா க்வாபோ(ன்) நே மைனே தேரே லியே ஹீ… கள்ளம் கபடில்லாமல் இந்த மனதை விளங்கச் செய்தேன் தனிமையில் உன்னைப் பற்றி நினைத்தேன் எப்பொழுதாவது, குரல் கொடுத்து – கனவுகள் என்னை எழுப்பிவிடும்!.. உனக்காகவே இந்த பல வண்ணக் கனவுகள்! ரூடீ ராதே)ன்) ரூடிஹுயீ ராதோ(ன்) கோ ஜகாயா கபீ தேரே லியே மீடீ ஸுபஹ் கோ புலாயா கபீ தேரே பினாபீ, தேரே லியே ஹீ தியே ஜலாயே ராஹோ(ன்) மே மைனே தேரே லியே ஹீ… மனதிற்கு வருத்தம் தரும் இரவுகள்- சில சமயம் சமாதானம் செய்தேன் உனக்காக இனிய காலை நேரத்தை சில சமயம் திரும்ப அழைத்தேன் நீ இல்லாவிட்டாலும் உனக்காகவே வழியில் விளக்குகளை ஏற்றி வைத்தேன்! உனக்காகவே இந்த வண்ண வண்ணக் கனவுகள்..! Song: Tere liye hi saat rang ke Film: Anand 1971. Lyricist: Gulzar Music: Salil Chowdhury Singer : Mukesh ![]() எத்தனை அருமையான பாட்டு! உருக்கமாகப் பாடியிருக்கிறார் முகேஷ்- அவர் குரலில் இயற்கையாக இருக்கும் தன்மை இது-இந்தப் பாட்டிற்கும் இந்தப் பாத்திரத்திற்கும், சூழ்நிலைக்கும் மிக நன்றாகப் பொருந்துகிறது. சலில் சவுத்ரியின் இசை இங்கு எளிமையாக இருக்கிறது- மெட்டு அழகிய நதிபோல் நேராகப் போகிறது. குல்ஃஜாரின் கவிதை ஒருமாதிரி இருக்கும்- கற்பனை, உருவகங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு – அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. சிலவற்றை ஊகித்துக் கொள்ள வேண்டும்! இந்தப் படத்திற்கு லதா மங்கேஷ்கரை இசைஅமைக்கச் சொன்னார் ரிஷிகேஷ் முகர்ஜி. லதா பாடுவதற்கே சம்மதித்தார்! அச்சமயத்தில் ராஜேஷ் கன்னாவுக்கு பின்னணி பாடியவர் கிஷோர்குமார், ஆனாலும் இந்தப் படத்தில் முகேஷ், மன்னா டே பாடினார்கள். பொருத்தமாக அமைந்துவிட்டது. பாட்டிற்கேற்ற பாடகரைத் தேர்ந்தெடுப்பதில் இசைஞரின் தனித் திறமை பளிச்சிடுகிறது. இந்தப் பாட்டில் மூன்று சரணங்கள் இருக்கின்றன. எந்த வீடியோவிலும், ரெகார்டிலும் மூன்றும் இல்லை! இது பழைய நாட்களில் 78 rpm இருந்த போது நடக்கும். இப்போது தொழில் நுட்பம் வளார்ந்த பிறகும் ஏன் இப்படி? நமது இசை, காசுப் பிசாசுகளிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது! ஆனந்த் படத்தைப் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவும். பாட்டுகளை இன்னும் ரசிக்கலாம். இன்னொரு சூழ் நிலையில் மற்றொரு பாடல் அஜீப் தாஸ்தான் ஹை யே (1960) अजीब दास्ताँ है ये कहाँ शुरू कहाँ ख़तम ये मंज़िलें है कौन सी न वो समझ सके न हम अजीब दास्ताँ है ये… ये रौशनी के साथ क्यूँ धुआं उठा चिराग से ये ख्वाब देखती हूँ मैं के जग पड़ी हूँ ख्वाब से अजीब दास्ताँ है ये… मुबारकें तुम्हें के तुम किसी के नूर हो गए किसी के इतने पास हो के सबसे दूर हो गए अजीब दास्ताँ है ये… किसी का प्यार ले के तुम नया जहां बसाओगे ये शाम जब भी आएगी तुम हमको याद आओगे अजीब दास्ताँ है ये… அஜீப் தாஸ்தான் ஹை யே கஹா(ன்) ஷுரூ கஹா(ன்) கதம் யே மன்ஃஜிலே(ன்) ஹை கௌன்ஸீ ந வோ ஸமஜ் ஸகே ந ஹம் அஜீப் தாஸ்தான் ஹை யே. . ![]() இது ஒரு வினோதமான கதை எங்கே ஆரம்பம், எங்கே முடிவு- இதன் இலக்கு என்ன? அவருக்கும் தெரியவில்லை, எனக்கும் தெரியவில்லை இது வினோதமான கதை! . யே ரோஷனீ கே ஸாத் க்யூ(ன்) துவா உடா சிராக் ஸே யே க்வாப் தேக் தீ ஹூ(ன்) மை கே ஜக் படீ ஹை க்வாப் ஸே அஜீப் தாஸ்தான் ஹை யே... இந்த ஓளியுடன் ஏன் புகையும் இந்த விளக்கிலிருந்து கிளம்புகிறது? நான் ஏதேனும் கனவு காண்கிறேனா அல்லது கனவிலிருந்து விழித்துகொண்டு விட்டேனா? இது வினோதமான கதை…. முபாரகே(ன்) தும்ஹே கே தும் கிஸீகா நூர் ஹோ கயே கிஸீ கே இத்னே பாஸ் ஹோ கே ஸப்ஸே தூர் ஹோகயே அஜீப் தாஸ்தான் ஹை யே. நீ ஒருவருடைய வாழ்வில் ஒளியாகிவிட்டாய். உனக்கு வாழ்த்துக்கள். ஒருவருக்கு இவ்வளவு நெருங்கி வந்து விட்டாய்- அதனால் மற்ற அனைவரிடமிருந்தும் விலகிவிட்டாய்!.. இது விநோதமான கதை! கிஸீ கா ப்யார் லேகே தும் நயா ஜகஹ் பஸாவோகே யே ஷாம் ஜப் பீ ஆயேகீ தும் ஹம்கோ யாத் ஆவோகே அஜீப் தாஸ்தான் ஹை யே ஒருவருடைய அன்பைப் பெற்று நீ புதிய உலகைத் தொடங்குவாய் இந்த மாலைப் பொழுது வரும்போதெல்லாம் உன் நினைவு எனக்கு வரும். இது வினோதமான கதை! Song: Ajeeb dastan hai ye Film: Dil Apna aur Preet parai 1960 Lyrics: Shailendra Music: Shanker Jaikishan Singer: Lata Mangeshkar & chorus What a beautiful melody this is! 60 வருஷங்களுக்குப் பிறகும் மங்காமல் இருக்கிறது! இது கதையுடன் தொடர்புடைய பாடல்- ஆனாலும் சில பொது விஷயங்களைச் சொல்கிறார் ஷைலேந்த்ரா! ஒளியுடன் புகையும் ஏன் வருகிறது? ஒருவருக்கு நெருங்கிப் போனால் மற்றவர்களிடமிருந்து விலகிப் போகவேண்டுமா? யோசிக்கவேண்டிய விஷயம்! முதல் பத்தியை வாழ்க்கைக்கே உருவகமாகக் கொள்ளலாம். வாழ்க்கை என்ற நதியில் விதி என்ற படகில் போகிறோம்! இதன் இலக்கு என்ன? இது தெரிந்தால் வாழ்க்கை என்னும் புதிர் அவிழ்ந்துவிடும்! “நீர் வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ” என்பது புறநானூறு. 1960-ஷங்கர் ஜெய்கிஷனின் இசையில் இனிமை ஆட்சிபுரிந்தது! இந்தப் படத்தின் இசைக்கு அவர்களுக்கு ஃபிலிம்ஃபேர் அவார்டு கிடைத்தது- ஆனால் இது விவாதத்தைக் கிளப்பிவிட்டது. (தோற்றது- நௌஷத்தின் முகல்-ஏ-ஆஃஜம்!) இரண்டு பாடல்களும் கனவு பற்றிப் பேசுகின்றன! கனவு காண்கிறேனா, விழித்துக்கொண்டு விட்டேனா? ![]() இது சீன தத்துவ அறிஞர் Zhuangzi கூறியதை நினைவு படுத்துகிறது: Once upon a time, I, Chuang Chou, dreamt I was a butterfly, fluttering hither and thither, to all intents and purposes a butterfly. I was conscious only of my happiness as a butterfly, unaware that I was Chou. Soon I awaked, and there I was, veritably myself again. Now I do not know whether I was then a man dreaming I was a butterfly, or whether I am now a butterfly, dreaming I am a man. tags — ஹிந்தி படப் பாடல்கள் – 46 *** |


